இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2016
00:00

பெண் பார்க்க போகிறீர்களா...
ஓர் ஆண்டுக்கு முன், என் நண்பனுக்கு திருமணம் நிச்சயம் ஆனது. திருமணத்திற்கு முதல் நாள் இரவு, தன் காதலனுடன், ஊரை விட்டு ஓடி விட்டாள் மணமகள். திருமணம் நின்று போன விரக்தியில், நொந்து நூலாகி, இன்று வரை, பெண் பார்க்க மறுத்து வருகிறான், நண்பன்.
ஓடிப்போன அப்பெண்ணை, சமீபத்தில், ஒரு பொது இடத்தில், தற்செயலாக பார்த்துள்ளான், நண்பன். தனியாக வந்திருந்த அவளிடம், 'உனக்கு என்ன பாவம் செய்தேன்... ஏன் இப்படி என்னையும், என் குடும்பத்தாரையும் அவமானப்படுத்தினே... உன் வீட்ல எல்லார்கிட்டயும் கேட்டு தானே, திருமணத்துக்கு ஏற்பாடு செய்தோம். ஏன் இப்படி எல்லார் முகத்துலயும் கரியை பூசுன...' என்று ஆதங்கத்தோடு கேட்டுள்ளான்.
அதற்கு அவள், 'எங்க வீட்ல எங்கப்பா, அம்மா, அண்ணன், சித்தப்பா, சித்தின்னு எல்லார்கிட்டயும் சம்மதம் கேட்டீங்க... வாழப் போற என்கிட்ட நீங்களோ, உங்க பெற்றோரோ ஒரு வார்த்தை கேட்டீங்களா... அப்படி கேட்டிருந்தால், என் கண்ணீரைக் காட்டி, சூசகமாகவாவது என் நிலையை உணர்த்தியிருப்பேனே..' என்று கூலாக சொல்லி, போய் விட்டாள்.
அதன்பின் தான், அவனுக்கு தன் தவறு உறைத்துள்ளது. பெண் பார்க்க செல்வோர், இதை கவனத்தில் கொள்வது அவசியம்!
— ஆர்.பிரபு, கோவை.

அடிக்கடி, 'சிம்' மாற்றினால் ஆபத்து!
மொபைல்போன் எண்ணை அடிக்கடி மாற்றும் பழக்கம் உடையவர், என் நண்பர். ஒவ்வொரு கம்பெனியும், 'மூன்றிலிருந்து, ஆறு மாதங்கள் இலவசமாக பேசலாம் அல்லது 'ரேட் கட்டர்' இல்லாமலேயே, குறைந்த கட்டணத்தில் பேசலாம்...' என, சலுகை தருவதை பயன்படுத்தி, மொபைல் எண்களை மாற்றுவார். குறிப்பிட்ட கால அளவு முடிந்ததும், அதை, எறிந்து விடுவர்.
சமீபத்தில், இவரின் குழந்தைக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே, தகவல் தெரிவிக்க, நண்பரை தொடர்பு கொண்ட போது, தொடர்பு கிடைக்கவில்லை. காரணம், அதற்கு முதல் நாள் தான், புதிய எண்ணுக்கு மாறி இருந்தார். வீட்டில் யாருக்கும் புதிய எண் தெரியவில்லை. பின், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உதவியுடன், அக்குழந்தை காப்பாற்றப்பட்டது.
நீண்ட நேரம் கழித்து, நடந்த விஷயம் எதுவும் தெரியாததால், யாருடனோ போனில் சிரித்து பேசியபடி, வீட்டுக்கு வந்த நண்பருக்கு, மனைவி மற்றும் உறவினர்கள் என, அனைவரும் அர்ச்சனை செய்ய, அப்போது தான் தன் தவறை உணர்ந்தார்.
இப்படி சலுகையை பயன்படுத்தும் நபர்கள், எப்போதும் நிலையான ஒரு எண்ணுடன் இருப்பது அவசியம்.
தற்போது, சாதாரண விலையில் கிடைக்கும் மொபைல்போனில் கூட, இரண்டு, 'சிம்' பொருத்திக் கொள்ளும் வசதி உள்ளது. ஒரு, 'சிம்' சலுகைக்கும், மற்றொரு, 'சிம்' நிரந்தரமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்; அவசரத்துக்கு பயன்படும்!
— எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

பஸ் ஸ்டாப் அறிவிப்பு!
சமீபத்தில், தனியார் பேருந்தில், பழநிக்கு சென்றேன். பேருந்தில், 'டிவி'யில் படம் ஓடியது. திடீரென படத்தை நிறுத்தி, 'ரெட்டியார் சத்திரம் இறங்கும் பயணிகள் தயாராகவும்...' என்ற அறிவிப்பை ஒலிபரப்பினர். அதேபோன்றே, ஆங்காங்கே, ஒவ்வொரு பஸ் ஸ்டாப்பின் பெயர்களை குறிப்பிட்டதுடன், 'பயணிகள் டிக்கெட்களை கேட்டு வாங்கவும், படியில் நின்று பயணிக்க வேண்டாம்...' என்பது போன்ற அறிவிப்புகளையும், ஒலிபரப்பினர். இது, பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பயணத்தின் போது, சிலர் தூங்கியபடியும், மற்றும் சிலர் அந்த வழித்தடத்தில், புதிதாக பயணிப்பவர்களாகவும் இருப்பர். இத்தகைய அறிவிப்புகள் இவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.
இதுபோன்ற முயற்சியை மற்ற தனியார் மற்றும் அரசு பேருந்துகளிலும், முக்கியமாக ரயில்களில் செய்தால், மிகவும் பயனுள்ளதாக இருக்குமே செய்வார்களா?
— எம்.ஆர்.ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.

திறமையுள்ள திருநங்கை!
சமீபத்தில், என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த போது, பக்கத்து அப்பார்ட்மென்டில் வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம் போட்டவரை பார்த்து, ஆச்சரியமடைந்தேன். காரணம், அவர் திருநங்கை!
அதுபற்றி அவரிடம் விசாரித்த போது, 'தினமும் கடை கடையாக ஏறி, இறங்கி, காசு வசூல் செய்ய, மனம் இடம் தரவில்லை. வேலை பார்த்து, கவுரவமாக பிழைக்கலாம் என்று எண்ணி, ஒருவரிடம் வேலை கேட்டேன். அவர், அப்பார்ட்மென்ட் மற்றும் கடைகளின் வாசலை பெருக்கி, சுத்தம் செய்யும் வேலையை வாங்கி கொடுத்தார். சில வீடுகளில், கார் கழுவுதல், செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற வேலைகளையும் செய்து சம்பாதிக்கிறேன்...' என்றார்.
இக்காலத்தில், வேலை செய்வதை சுமையாக கருதும் ஆண்கள் - பெண்களுக்கு மத்தியில், உழைத்து வாழ நினைக்கும் திருநங்கையை, அப்பகுதி மக்கள் பாராட்டி, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருகின்றனர். திருநங்கை மீது அக்கறை கொண்டு, கவுரவமாக வாழ வழிவகை செய்த அந்த நல்ல மனதை, எவ்வளவு பாராட்டினாலும் தகும்!
கே.முருகேஸ்வரி, காரைக்குடி.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (14)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
govin - TRICHY,இந்தியா
13-ஜூலை-201623:36:37 IST Report Abuse
govin இப்போது இவைகளெல்லாம் சகஜம் ஆகி விட்டது. யாரையும் குறை கூற முடியாது. நல்ல வேளை திருமணம் ஆவதற்கு முன்பே ஆயிற்று. அதுவும் ஒருவிதத்தில் நல்லதுதான்.
Rate this:
Cancel
ARUL - chennai,இந்தியா
11-ஜூலை-201617:45:28 IST Report Abuse
ARUL திருமணத்திற்கு முதல் நாள் இரவு ஓடிப்போகத் தெரிந்த பெண் , பத்து பதினைந்து நாட்கள் முன்பே ஓடிப் போயிருக்க வேண்டியது தானே ? அப்படிச் செய்யாமல் முதல் நாள் வரை காத்திருந்து ஓடிய காரணம் , திருமணத்திற்கு வாங்கிய நகைகளோடு ஓடிப் போக வேண்டும் என்ற வஞ்சகத் திட்டம் நெஞ்சில் இருந்ததால் தானே. இது நடந்து ஓராண்டு தான் ஆகியிருக்கிறது. இந்தக் காலப் பெண்ணான இவரிடம் செல்போன் கூட இல்லையா? அதன் மூலம் தனது சம்மதமின்மையைத் தெரிவித்திருக்கலாமே . இவரைப் பாராட்டுபவர்களைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. அவமானம் தனக்கு வரும்போது தான் யாருக்கும் அதன் வலி புரியும்.
Rate this:
Sicario - La Jolla,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201605:56:38 IST Report Abuse
Sicarioஉண்மை. இங்கு பின்னூட்டமிட்டுள்ள பல பேருக்கு விஷயம் என்ன என்றே புரிவதில்லை. Ignorant people always believe in "I am the victim" cry by the girls....
Rate this:
Cancel
Giridharan Srinivasan - Chennai,இந்தியா
11-ஜூலை-201613:55:33 IST Report Abuse
Giridharan Srinivasan ஆர்.பிரபு, கோவை. எழுதி உள்ளதில், அந்த பெண் தன் தாய் - தந்தை இடம் தன் விருப்பமின்மையை தெரிவித்து இருக்கலாம். இது பெண் சுதந்திரம் அல்ல. அந்த பெண் செய்தது, சம்பந்தப்பட்ட ஆணை மட்டும் அல்ல தன் பெற்றோரையும் கேவலப்படுத்தி உள்ளார். அந்த பெண் தான் செய்தது சரி என்பது போல் நடந்து உள்ளது அயோக்கியத்தனம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X