கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2016
00:00

கேள்வி: ஆய்வுக் கட்டுரைகளை வேர்ட் செயலியில் டைப் செய்து தந்து வருகிறேன். இதில் சிலர், தங்கள் டெக்ஸ்ட்டில் உள்ள பாராக்கள், பக்கங்களில் முடியும் போது, ஒன்றிரண்டு வரிகளே இருப்பின், அடுத்த பக்கத்திற்குச் செல்லக் கூடாது என்று கேட்கின்றனர். இதனை எப்படி நிறைவேற்ற முடியும். அதற்கு வழி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், யாருக்கும் தெரியவில்லை. உதவவும்.
என். சம்பத் குமார், கோவை.
பதில்:
வேர்ட் செயலியில், அதன் பாராக்கள், இடையே பிரிந்து அடுத்த பக்கத்திற்குச் செல்லாமல், இணைந்தே இருப்பதற்கு வழி ஒன்றைக் கொண்டுள்ளது. கீழே விரிவாக அதனைத் தருகிறேன்.
முதலில் எந்த பாரா பிரிக்கப்படாமல் இருக்க விரும்புகிறீர்களோ, அதில் கர்சரைக் கொண்டு செல்லவும். வேர்ட் மெனுவில், ஹோம் ரிப்பன் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கட்டும். இங்கு பாராகிராப் குரூப்பில், அதன் வலது ஓரமாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இப்போது பாராகிராப் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Line and Page Breaks என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Keep Lines Together என்ற செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தி, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, குறிப்பிட்ட பாரா பக்கங்களுக்கிடையே பிரிக்கப்பட மாட்டாது.

கேள்வி: நான் பல ஆண்டுகளாக ஜிமெயில் பயன்படுத்தி வருகிறேன். சில வாரங்களாக, என் ஜிமெயில் அக்கவுண்ட்டிலிருந்து, இந்த தளத்தில் உள்ள மின் அஞ்சல் முகவரிகளுக்கு, பலவகையான மெயில் கடிதங்கள் செல்வதாக, என் நண்பர்கள் கூறுகின்றனர். எப்படி ஜிமெயிலை மட்டும் வைரஸ் தாக்கும். அல்லது இது விஷமி ஒருவரின் வேலையா? இதனை எப்படி சரி செய்வது? சில வேளைகளில் என்னாலும் வழக்கம்போல் ஜிமெயிலை இயக்க முடிகிறது. அஞ்சல்கள் அனுப்ப முடிகிறது.
ஜி. ராமநாதன், காரைக்குடி.
பதில்
: உங்கள் ஜிமெயிலின் பாஸ்வேர்டை வேறு ஒருவர் அறிந்து கொண்டு, அதனைக் கைப்பற்றி இந்த மோசமான வேலையைச் செய்கிறார் என்று தெரிகிறது. இந்த வகையில், வேறு ஒருவர் கட்டுப்பாட்டிற்குச் சென்றுவிட்ட ஜிமெயில் அக்கவுண்ட்டினை மீட்டெடுக்க, கூகுள் சில வழிகளை நமக்குத் தருகிறது.
உங்கள் அக்கவுண்ட்டில் தற்போது சில வேளைகளில் நுழைய முடிகிறது என்று கூறியுள்ளீர்கள். எனவே, இந்த இரண்டு வழிகளையும் முயற்சிக்கலாம். நீங்கள் வழக்கமாக ஜிமெயில் பார்க்கும் கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாமல், வேறு சாதனங்கள் வழியாக, ஐ.பி. முகவரி வழியாக உங்கள் அக்கவுண்ட் பார்க்கப்பட்டிருந்தால், அதனை நீங்கள் கண்டறியலாம் (Recently Used Devices / your last account activity). உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டில் நுழைந்து செயல்பட முடிந்தால், உடனே அதன் பாஸ்வேர்டை மாற்றவும். Gmail security settings சென்று, அதனை two-step verification என்ற இரு வழிப் பாதுகாப்பு வழிக்கு மாற்றவும். இந்த இரு வழிப் பாதுகாப்பு வழியில், உங்கள் பாஸ்வேர்ட் மற்றும் நீங்கள் குறிப்பிடும் எண் கொண்ட ஸ்மார்ட் போனுக்கு வரும் எண் கொடுத்தால் மட்டுமே, உங்கள் அக்கவுண்ட்டைத் திறந்து பயன்படுத்த முடியும். கூடுதல் பாதுகாப்பு வழிகளுக்கு https://support.google.com/mail/checklist/2986618 என்ற கூகுள் தளம் சென்று பார்க்கவும். அவற்றில் உங்களுக்கு நன்கு புரிந்தவற்றைப் பயன்படுத்தவும்.
உங்கள் அக்கவுண்ட்டில் நுழைய முடியவில்லை என்றால், ஜிமெயில் ஹெல்ப் பக்கத்தில், கிடைக்கும் account recovery formல் கேட்டுள்ள தகவல்களை நிரப்பவும். மீண்டும் உங்களுக்கு அக்கவுண்ட் கிடைக்க சற்று அதிக நேரம் ஆகலாம். ஆனால், கிடைத்தவுடன், மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகளை மேற்கொள்ளவும். உங்கள் தொடர்பு முகவரிகளை இந்த வகையில் தொலைக்காமல் இருக்க, எப்போதும் முகவரிகளை ஒரு பேக் அப் பைலில் பதிந்து வைக்கவும். எப்படி இந்த பேக் அப் பைலை உருவாக்கலாம் என முன்பு கம்ப்யூட்டர் மலரில் கட்டுரை தரப்பட்டது. அல்லது https://support.google.com/mail/answer/24911?hl=en என்ற முகவரியில் அதற்கான வழிகளைக் காணலாம்.

கேள்வி: அண்மையில், விண்டோஸ் 7 இயங்கிய என் பெர்சனல் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்தேன். இதில் ஸ்டார்ட் மெனுவுடன் இணைந்து All Apps என்னும் பிரிவு உள்ளது. மொபைல் போனில் தானே, Apps இருக்கும். இங்கு இந்த சொல் எதனைக் குறிக்கிறது. இதுவரை All Programs என்றுதானே மெனு தரப்பட்டு வந்தது. இதன் மூலம் நாம் பெறுவது என்ன?
என்.அபிலாஷா, திருச்சி.
பதில்:
App என்பது Application என்பதின் சுருக்கம். அப்ளிகேஷன் என்பது ஒரு புரோகிராம். புரோகிராம் என்பது ஓர் அப்ளிகேஷன். இரண்டும் ஒன்றேதான். விண்டோஸ் ஸ்டார்ட் மெனுவில் All Apps என்பது இருப்பதனைக் காணலாம். உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் / அப்ளிகேஷன்கள் அனைத்தும் அகர வரிசைப்படி பட்டியலிடப்படும்.
அப்ளிகேஷன்களை இரு வகைகளாகப் பார்க்கலாம். அவை ~ Apps and Desktop Apps ஆகியவை ஆகும். Desktop Apps என்பவை பெர்சனல் கம்ப்யூட்டரில் மட்டுமே, விண்டோஸ் 10 சிஸ்டத்தின் கம்ப்யூட்டிங் சக்தியுடன் இயங்குபவை ஆகும். இதில் வர்த்தக நிறுவனங்களுக்கான சாப்ட்வேர் மற்றும் அடோப் போட்டோஷாப் அல்லது அடோப் பிரிமியர் போன்றவை அடங்கும்.
மற்ற அப்ளிகேஷன்கள், மற்ற கட்டமைப்பிலும் இயங்கும். விண்டோஸ் 10 பெர்சனல் கம்ப்யூட்டர், விண்டோஸ் டேப்ளட், விண்டோஸ் போன், ஏன் எக்ஸ் பாக்ஸ் ஒன் சாதனத்தில் கூட இயங்கும்.
நீங்கள் உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டரை, அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் புதுப்பித்தால், பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து அப்ளிகேஷன்களும் நீக்கப்படும். ஆனால், விண்டோஸ் இயக்கத்துடன் வரும் மைக்ரோசாப்ட் பெயிண்ட், போட்டோ ஆப், குரூவ் மியூசிக், வேர்ட் பேட், நோட்பேட் மற்றும் விண்டோஸ் பிளேயர் ஆகியவை உடன் பதியப்பட்டே இருக்கும். மற்றவற்றை, நீங்கள் பணம் செலுத்தி வாங்கியவை மற்றும் விண்டோஸ் ஸ்டோரிலிருந்து பெற்று இன்ஸ்டால் செய்தவற்றை, நீங்கள் மீண்டும் இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். இந்த அப்ளிகேஷன்களை நீங்கள் கட்டணம் செலுத்தி வாங்கியிருந்தால், அவற்றிற்கான 'ப்ராடக்ட் கீ' என்ற உரிம அனுமதியினை வைத்திருக்க வேண்டும்.

கேள்வி: விண்டோஸ் 10 பயன்படுத்தி வருகிறேன். பொதுவாகவே, மவுஸ் பாய்ண்ட்டர் மிக மெல்லிதாக இருப்பதால், திரையில் எங்கு உள்ளது என்று எளிதாகத் தெரியாது. முன்பு வந்த விண்டோஸ் இயக்கங்களில், கண்ட்ரோல் கீயை அழுத்தினால், சிறிய வட்டம் ஒன்று உருவாகி மறையும். அந்த இடத்தில் கர்சர் இருப்பது தெரிய வரும். ஆனால், விண்டோஸ் 10க்கு மாறிய பின்னர், அந்த வசதி இல்லை. இப்போது வேறு கீ அழுத்தினால், வட்டம் மூலம் காட்டப்படுமா? அந்த கீ என்ன?
ஆர். கண்ணபிரான், திருவாரூர்.
பதில்:
விண்டோஸ் 10லும் இந்த வசதி உள்ளது. ஆனால், அதனை இயக்கத்தில் கொண்டு வர சில செட்டிங்ஸ் அமைப்புகளை அமைக்க வேண்டும்.
முதலில் கண்ட்ரோல் பேனலைத் திறக்கவும். Mouse என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். Mouse Properties விண்டோ திறக்கப்படும். அதில் உள்ள Pointer என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். இங்கு Show location of pointer when I press Ctrl key என்று உள்ள இடத்தில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். அதன் பின்னர், Apply மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இதன் பின்னர், நீங்கள் கேட்டுக் கொண்டபடி கண்ட்ரோல் கீ கிளிக் செய்திடுகையில், மவுஸ் பாய்ண்டர் உள்ள இடம் காட்டப்படும்.

கேள்வி: விண்டோஸ் 10க்கு இரண்டு நாட்களுக்கு முன் மாறினேன். மிக எளிதாக மாற்றம் நிகழ்ந்தது. இன்று காலை பார்க்கையில், அதில் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் இல்லை. இதனை எப்படி உருவாக்குவது? அல்லது விண் 10ல் இதற்குப் பதிலாக வேறு தரப்பட்டுள்ளதா? இதற்கான டிப்ஸ் தரவும்.
கே. தமிழரசன், திருநின்றவூர்.
பதில்:
இதே போல மேலும் சில வாசகர்கள் கேட்டுள்ளனர். விண்டோஸ் 10 ஐ இயக்கி, அதன் தேடல் கட்டத்தில், “Show common desktop icons” என்று டைப் செய்திடவும். கிடைக்கும் விடைகளில் முதல் விடையில் கிளிக் செய்திடவும். நீங்கள் “Recycle Bin” என்று டைப் செய்தாலும், இதே விடை கிடைக்கும். இப்போது, Desktop Icons Settings என்ற விண்டோ திறக்கப்படும். உங்களுடைய டெஸ்க்டாப் விண்டோவில் நீங்கள் பார்க்க விரும்பும் அனைத்து ஐகான்களும் காட்டப்படும். இவற்றிலிருந்து Computer, User Files, Network மற்றும் நீங்கள் தேடும் Recycle bin ஆகிய ஐகான்கள் கிடைக்கும். இதிலிருந்து நீங்கள் விரும்பும் ஐகானைத் தேர்ந்தெடுத்து, டெஸ்க்டாப்பில் அமைக்கலாம்.

கேள்வி: பயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தி வருகிறேன். இதில் நான் தரவிறக்கம் செய்திடும் பைல்கள், நான் விரும்பும் போல்டரில் பிரித்து சேவ் செய்யப்பட வேண்டும். ஆனால், Downloads போல்டரிலேயே சேவ் ஆகின்றன. மாற்றி சேவ் செய்திடும் வகையில் செட் செய்திட என்ன செய்திட வேண்டும்? டிப்ஸ் தரவும்.
என். ஆராவமுதன், சிவகாசி.
பதில்:
மாறா நிலையில், அனைத்து டவுண்லோட் பைல்களும், Downloads போல்டரிலேயே சேவ் செய்யப்படும். பயர்பாக்ஸ் மட்டுமின்றி, குரோம் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களிலும் இதே வழிமுறை மாறாநிலையில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எளிதாக மாற்றலாம். நீங்கள் கேட்டுள்ள பயர்பாக்ஸ் பிரவுசரில், “Open menu” பட்டனில் அழுத்தவும். இது டூல் பாரில், வலது பக்கம் கிடைக்கும். இங்கு கிடைக்கும் கீழ்விரி மெனுவில், “Options” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், “General” பக்கம் செல்லவும். இதில், “Downloads” பிரிவில் உள்ள அமைப்பு வழிகளைப் பார்க்கவும். இங்கு, நீங்கள் எந்த ட்ரைவில், அதன் எந்த போல்டரில் தரவிறக்கம் செய்திட வேண்டும் என்பதற்கேற்ப வழியினை (Directory Path), “Save files to” என்று இருக்கும் இடத்தில் எதிரான கட்டத்தில் அமைக்கவும். அல்லது “Browse” என்பதில் கிளிக் செய்து, குறிப்பிட்ட போல்டரில் கிளிக் செய்திடவும். தானாக வழி அமைக்கப்படும். ஒவ்வொரு பைலையும் அதன் தன்மைக்கேற்ப, வெவ்வேறு போல்டர்களில் சேவ் செய்திட விரும்பினால், “Always ask me where to save files” என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். இதனைத் தேர்ந்தெடுத்தால், இணையத்திலிருந்து எதனை நீங்கள் தரவிறக்கம் செய்தாலும், ஒவ்வொரு முறையும், பயர்பாக்ஸ், இறுதியாக சேவ் செய்த போல்டரைக் காட்டி, Save As டயலாக் பாக்ஸைக் காட்டும். அப்போது, நீங்கள் விரும்பும் பைல் போல்டரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

கேள்வி: விண்டோஸ் 10ல் தேடல் கட்டத்தில் டைப் செய்து தேடினால், எல்லாம் கிடைக்கும் என்று எழுதுகிறீர்கள். ஆனால், தேடல் கட்டமே இல்லையே. என் கம்ப்யூட்டரில் மட்டுமல்ல. பல விண்டோஸ் 10 கம்ப்யூட்டர்களில் தேடிவிட்டேன். எங்கு பிரச்னை உள்ளது என்றும் புரியவில்லை. வழி காட்டவும்.
ஆர். ஸ்ரீதேவி பரமானந்தம், திண்டுக்கல்.
பதில்
: விண்டோஸ் 10 இயக்கத்தில் தேடல் கட்டத்திற்காக, மிகவும் கஷ்டப்பட வேண்டாம். அது எப்போதும் அங்கு உள்ளது. ஸ்டார்ட் மெனுவின் இடது ஓரத்தில் டாஸ்க் பாரில் உள்ளது. நீங்கள் ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, நீங்கள் எது குறித்து தேட வேண்டுமோ, அதனை டைப் செய்திடவும். உடனே ஒரு கட்டத்தில் உங்கள் தேடல் டெக்ஸ்ட் காட்டப்படும். முதலில் உங்கள் கம்ப்யூட்டரிலும், பின்னர் இணையத்திலும், தேடப்பட்டு முடிவுகள் காட்டப்படும். நீங்கள் கார்டனா டூலை இயக்கி வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன் எஸ் கீயை அழுத்தவும். கார்டனா இயக்கப்பட்டு அதன் தேடல் கட்டமும் கிடைக்கும். நீங்கள் தேவையானதைப் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X