அனைவருக்கும் கட்டுபடியாகும் விலையில் பல மாடல் ஸ்மார்ட் போன்களை வெளியிடும் லாவா நிறுவனம் அண்மையில் ஏ 76 என்ற பெயரில், புதிய ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் இயங்கும் இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். இதன் கெபாசிடிவ் டச் ஸ்கிரின் திரை 4.5 அங்குல அளவில் உள்ளது. மல்ட்டி டச் வசதி தரப்பட்டுள்ளது. எம்பி3 மற்றும் எம்பி 4 பிளேயர்கள், பலவகை பார்மட்களில் இயங்கும் பைல்களை இயக்கும் வகையில் தரப்பட்டுள்ளன. டாகுமெண்ட் வியூவர் வசதியும் கிடைக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் லாலிபாப் 5.1.இதனை மார்ஷ் மாலோ சிஸ்டத்திற்கு மேம்படுத்திக் கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மற்றும் இமெயில்கள் வசதிகள் தரப்பட்டுள்ளன. எச்.டி.எம்.எல். பிரவுசர் தரப்பட்டுள்ளது. லவுட் ஸ்பீக்கர் மற்றும் ஆடியோ 3.5 மிமீ ஜாக்கெட் கிடைக்கின்றன. எப்.எம். ரேடியோ மற்றும் அக்ஸிலரோமீட்டர் சென்சார் இயங்குகின்றன.
2ஜி, 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் அமைப்புகளை இதில் செயல்படுத்தலாம். இதன் ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை 32 ஜி.பி. வரை உயர்த்தலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், வை பி, புளுடூத், ஜி.பி.எஸ், 3ஜி மற்றும் 4ஜி ஆகிய தொழில் நுட்பங்கள் தரப்பட்டுள்ளன. பின்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும், முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் பேட்டரி 1,850 mAh திறன் கொண்டது. இதன் அதிகபட்ச விலை ரூ. 4,950 என அறிவிக்கப்பட்டுள்ளது.