தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் கிளரிகல் பணியிடங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2010
00:00

இந்தியாவில் இயங்கும் தனியார் வங்கிகளில் கிட்டத்தட்ட 89 ஆண்டுகளுக்கு முன்னரே துவங்கப்பட்டு இன்றும் வெற்றிகரமாக இயங்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மிகவும் புகழ் பெற்றது. தனியார் துறை வங்கிகளில் முதலிடத்தைப் பெற்றிருக்கும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி சிறந்த வாடிக்கையாளர் சேவை, நவீனமயமாக்கப்பட்ட செயல்பாடுகள், நாடுதழுவிய கிளைகள் போன்றவற்றிற்காக அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் கிளரிகல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வயது வரம்பு :  தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 30.09.2010 அன்று பட்டதாரியாக இருந்தால் அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டவராகவும், முது நிலைப் பட்டதாரியாக இருந்தால் அதிகபட்சம் 26 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உச்ச பட்ச வயதில் எம்.பி.சி., பி.சி., பிரிவினருக்கு இரண்டு வருடங்களும், எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் சலுகை உள்ளது. முழு விபரங்
களறிய இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
கல்வித் தகுதி : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முழு நேரப் படிப்பாக பட்டப்படிப்போ அல்லது முதுநிலை பட்டப்படிப்பையோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறனும் கூடுதலாகத் தேவைப்படும்.
தேர்ச்சி முறை : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் சென்னை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, சேலம் ஆகிய மையங்களில் நடத்தப்படும். முழு விபரங்களுக்கு இந்த வங்கியின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை : தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் கிளரிகல் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க  ரூ.200/-க்கான டி.டி.,யை  "Tamilnad MercantileBank Ltd. "" என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பித்த பின் கிடைக்கும் பிரின்ட் அவுட்டுடன் தேவைப்படும் சான்றிதழ் நகல்களை இணைத்து 27.12.2010க்குள் கிடைக்குமாறு பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்-லைனில் விண்ணப்பிப்பதால் உங்களுக்கான உபயோகத்திலுள்ள ஒரு இ-மெயில் முகவரி இருப்பதனை உத்திரவாதப்படுத்தவும். விண்ணப்பிப்பது குறித்த முழு விபரங்களை தமிழ் நாடு மெர்க்கன்டைல் வங்கியில் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி
The General Manager,
Human Resources Development Department,
Tamilnad Mercantile Bank Ltd. Head Office, # 57, V. E. Road,
Thoothukudi 628 002.
ஆன்-லைனில் விண்ணப்பிக்க இறுதி நாள் : 20.12.2010
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 27.12.2010
இணைய தள முகவரி :
"www.tmb.in"

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sivasankar - coimbatore,இந்தியா
24-டிச-201016:42:38 IST Report Abuse
sivasankar sir I appreciate Dinamalar's effort in brining out the genuine issues affecting the public with social concern. Likewise I request Dinamalar to again bring out the massive destruction of valankulam and other tanks within the city. Recently mindless people are dumping building waste by the side of the road passing through valankulam from GH and the useless corporation people are levelling it into the tank by using buldozers and widening the encroachment. Further by the side of the sungam by pass road near sungam junction permenant roadside tiffen stalls are actively functioning. The high ways people are sleeping now and later they have to run up to the court to vacate them and corporation health department is not bothered about these hotels functioning in the middle of the filthy tank bank and further making worst of that area. Please come up with a special issue on this damaging aspect.
Rate this:
Share this comment
Cancel
Gopalakrishnan.P - Rajapalayam,இந்தியா
21-டிச-201018:54:32 IST Report Abuse
Gopalakrishnan.P Dinamalar Newspaper all matter like Headlines , Doubght Dhanabalu , Pakkavathiam , Tea Kadai Benchu , Sports , World News , City Capital News etc.. is very Excellent. this Newspaper is using improve the knowledge and get latest news . Keep it up and continue your valuable Social work. Thanks & Regards Gopalakrishnan.p
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X