பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பணி வாய்ப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2010
00:00

பாரத் எலக்ட்ரானிக்ஸ் என்ற பி.இ.எல்., நிறுவனம் இந்தியாவின் நவரத்னா பொதுத்துறை நிறுவனங்களுள் ஒன்றாகும். இந்த நிறுவனம் பெங்களூருவைத் தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஆரம்பத்தில் இந்தியாவின் ராணுவப் பணிகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் தேவைகளுக்காக இந்த நிறுவனம் துவங்கபட்டாலும் தற்போது பல்வேறு பிரிவுகளில் எலக்ட்ரானிக்ஸ் சேவைகளை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் டெக்னீசியன், டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலிப் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
என்னென்ன பிரிவுகள் : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 5 பிரிவுகளில் காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி, டெக்னீசியன்'சி', கிளர்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், பார்மஸிஸ்ட் 'சி', இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி (மெக்கானிகல்) ஆகிய பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும்.
என்ன தகுதி ?  : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 46 காலியிடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 6 காலியிடங்களும், மெக்கானிகல் பிரிவில் 34 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க மூன்றாண்டு காலம் முழு நேரப் படிப்பாகப் படிக்கக் கூடிய இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் டெக்னீசியன் 'சி' பிரிவில் இ.எம்., பிரிவில் 40 காலியிடங்களும், பிட்டர் பிரிவில் 18 காலியிடங்களும், எலக்ட்ரிகல் பிரிவில் 5 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க ஐ.டி.ஐ., யுடன் ஒரு வருட அப்ரன்டிஸ் படிப்பு அல்லது மூன்றாண்டு கால நேஷனல் அப்ரன்டிஸ் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.  பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் கிளர்க் கம் கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர் பிரிவில் பி.பி.எம்., படிப்பு முடித்தவர்களுக்கு 20 இடங்களும், பி.காம்., பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு 6 இடங்களும், பி.எஸ்.சி., எலக்ட்ரானிஸ் பட்டப் படிப்பு முடித்தவர்களுக்கு 2 இடங் களும் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக முழு நேரப் படிப்பாக இந்தப் படிப்பை முடித்திருக்க வேண்டும். பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பார்மஸிஸ்ட் 'சி' பதவிக்கு விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி., யுடன் பார்மஸியில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பார்மஸிஸ்ட் ஆகப் பதிவு செய்திருப்பதும், மருத்துவமனையில் பணியாற்றிய அனுபவமும் கூடுதல் தேவைகளாகும்.  பாரத் எலக்ட்ரானிஸ் நிறுவனத்தின் இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் டிரெய்னி மெக்கானிகல் பிரிவுக்கு விண்ணப்பிக்க மூன்றாண்டு கால இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.01.2011 அன்று உச்ச பட்ச வயது 28 க்குள் இருக்க வேண்டும். பார்மஸிஸ்ட் பிரிவுக்கு மட்டும் அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : பி.இ.எல்., நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற அடிப்படையில் இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தப் பதவிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட படிவ மாதிரியில் மட்டுமே அனுப்ப வேண்டும். முழு விபரங்களறிய இந்த நிறுவனத்தின் இணைய தளத்தைப் பார்க்கவும். விண்ணப்பங்களைப் பின்வரும் முகவரிக்கு மட்டுமே அனுப்ப வேண்டும்.
முகவரி
DGM (HR/Central),
Bharat Electronics Ltd.,
Jalahalli, Bangalore & 560 013
விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள் : 30.12.2010
இணையதள முகவரி
http://www.belindia.com

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X