கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
00:00

கேள்வி: எனக்கு மின் அஞ்சல் வழி வந்த டாகுமெண்ட் ஒன்றை, வேர்டில் திறந்த போது, முதலில் எழுத்துகள் காட்டப்பட்டு, பின் சில நொடிகளில் அனைத்து எழுத்துகளும் சிறிய கட்டங்களாகவே காட்சி அளிக்கின்றன. மேலாக மெனுவில் பார்க்கையில், குறிப்பிட்ட ஒரு எழுத்து பயன்படுத்தப்பட்டதாகக் காட்சி அளிக்கிறது. அதன் அளவும் காட்டப்படுகிறது. ஆனால், எந்த எழுத்தும் தெரியவில்லை. இதற்கான தீர்வு என்ன?
ஆ. ராகவன், சத்திரம் கருப்பூர்.
பதில்:
இது எந்த டாகுமெண்ட்டிலும் ஏற்படலாம். குறிப்பிட்ட எழுத்து வகை, உங்களின் கம்ப்யூட்டரில் இல்லாமல் இருக்கலாம். அந்த எழுத்து வகை குறித்த தகவல்கள், வேர்ட் புரோகிராமிற்குச் சரியாகச் சொல்லப்பட்டால் தான், அவை காட்டப்படும். சில நொடிகள் எழுத்து காட்டப்பட்டு, பின் கட்டங்கள் ஆகின்றன என்றால், எழுத்து குறித்த தகவல்கள், வேர்ட் புரோகிராமிற்குத் தரப்படவில்லை என்பதே பொருள்.
இந்த டாகுமெண்ட் டெக்ஸ்ட் முழுவதையும் தேர்ந்தெடுத்து (Ctrl+A) பின், எழுத்துக்களை ஒவ்வொன்றாக அணுகவும். பயன்படுத்தப்பட்ட எழுத்தின் கட்டமைப்பில் உள்ள இன்னொரு எழுத்து வகையில், டெக்ஸ்ட் எழுத்துகள் காட்டப்படும். அதனையே அமைத்து சேவ் செய்து கொள்ளலாம்.
டாகுமெண்ட் அமைந்த எழுத்து வகை ஏதோ ஒரு காரணத்தினால், அல்லது காரணம் இல்லாமல், நீங்கள் அறியாமலேயே நீக்கப்பட்டிருக்கலாம். குறிப்பிட்ட அந்த எழுத்து வகையினை, இன்னொரு கம்ப்யூட்டர் அல்லது இணையத்திலிருந்து காப்பி செய்து, Fonts போல்டரில் பதிந்து கொண்டால், பயன்படுத்தப்பட்ட எழுத்திலேயே டெக்ஸ்ட் காட்டப்படும்.
எந்த வழிக்கும் டெக்ஸ்ட் காட்டப்படவில்லை என்றால், பைலை காப்பி செய்து, இன்னொரு கம்ப்யூட்டரில் வேர்ட் புரோகிராமில் பார்க்கவும். அங்கும் தெரியவில்லை என்றால், அந்த பைல் கரப்ட் ஆகி உள்ளது என்று பொருள். அதனைச் சரி செய்திடும் வழிகளைப் பார்க்க வேண்டும்.

கேள்வி: எனக்கு அனுப்பப்பட்டுள்ள, டாகுமெண்ட்டில், விலை வாசி உயர்வு, தாழ்வு குறித்த ஒரு சார்ட் உள்ளது. இதில் சிறிய அளவில் கட்டங்களில் டெக்ஸ்ட் அமைக்கப்பட்டுள்ளது. இதனை அச்செடுத்தால், இந்தப் படம் முழுமையாகக் கிடைக்க மறுக்கிறது. சில நேரங்களில், அதில் உள்ள சொற்கள் மட்டும் அங்கும் இங்குமாக அச்சாகிறது. இதற்கு என்ன காரணம்? இதனை எப்படி நிவர்த்திக்கலாம்?
ஆர். தனுஷ்கோடி, கோவை.
பதில்:
வேர்டில் இந்தப் பிரச்னை உண்டு. ஆனால், தீர்க்கும் வழிகளையும் வேர்ட் கொண்டுள்ளது. வேர்ட் புரோகிராம், நம் டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட்டுடன் இணைக்கப்பட்டிருப்பவற்றில், எவற்றை அச்சிடலாம், எவற்றை அச்சிடக் கூடாது என வரையறை செய்து வைக்கிறது. இருப்பினும், நீங்கள் விரும்பும் கிராபிக்ஸ் படங்களை அப்படியே அச்சில் கிடைக்க வேண்டும் என விரும்பினாலும், அதனை அச்சிடும் வசதி உள்ளது. அதற்கான செட்டிங்ஸ் அமைப்பினை இங்கு தருகிறேன்.
1. முதலில் Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கமாக உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இதில் Print என்று இருக்கும் பகுதி வரை ஸ்குரோல் செய்து செல்லவும்.
4. இங்கு Use Draft Quality என்பதை நீக்கி வைக்கவும்.
5. பின்னர் இடது புறம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
6. அடுத்து Print Drawings Created in Word என்பதில் உள்ள செக் பாக்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இதே போல Print Background Colors and Images என்பதையும் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி உங்கள் டாகுமெண்ட்டில் உள்ள இமேஜ், கிராபிக்ஸ் இமேஜ் ஆகியவை அழகாக அச்சிடப்படுவதனைக் காணலாம்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க் ஷீட்களின் செல்களில், நாம் நிரப்பும் மதிப்புக்கேற்றபடி, தானாக வண்ணம் அமைக்கும் வழி இருப்பதாகப் படித்தேன். சில மாடல் ஒர்க் ஷீட்களையும் பார்த்தேன். ஆனால், அதனை எப்படி அமைப்பது என்று தெரியவில்லை. அதற்கான டிப்ஸ் குறிப்புகளைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
என். ஆசீர்வாதம், செங்கல்பட்டு.
பதில்
: எக்ஸெல் புரோகிராமில் உள்ள வண்ணம் அமைத்திடும் டூல் இதற்கு உதவும். இந்த புரோகிராமில் Fill Color என்ற ஒரு டூல் தரப்பட்டுள்ளது. இது ரிப்பனில் ஹோம் டேப்பில் கிடைக்கும். சிறிய வாளி மற்றும் வண்ணம் தெரியும் வகையில் இதன் படம் இருக்கும். இந்த டூலில் இரண்டு செயல்பாட்டிற்கான பகுதிகள் உண்டு. நீங்கள் இடதுபுறம் கிளிக் செய்தால், அதில் கிடைக்கும் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்தால், செல்லில் அந்த வண்ணம் அமைக்கப்படும். இதில் ஒன்றைக் கவனிக்க வேண்டும். செல்லில் உள்ள எழுத்தின் வண்ணம் மாற்றப்படாது. பின்புல வண்ணம் மட்டுமே அமைக்கப்படும். இந்த டூலின் வலதுபுறம் உள்ளதைக் கிளிக் செய்தால், வண்ணங்கள் அடங்கிய கட்டம் காட்டப்படும். மவுஸ் மூலம் விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். எழுத்தின் வண்ணம் மாறும். இதில் தேர்ந்தெடுக்கப்படும் வண்ணம் Fill Color டூலிலும் காட்டப்படும்.
வண்ணம் மாற்ற இன்னொரு வழியும் உள்ளது. எந்த செல்களின் வண்ணத்தினை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Ctrl+Shift+F அழுத்தவும். இப்போது எக்ஸெல், Format Cells டயலாக் பாக்ஸினைக் காட்டும். Fill டேப் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் இந்த டயலாக் பாக்ஸை அமைக்கவும். இந்த டயலாக் பாக்ஸில் காட்டப்படும் வண்ணக் கட்டங்களிலிருந்து, பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் வண்ண்ங்களில் திருப்தி இல்லை எனில், More Colors என்பதை அழுத்தி, கிடைக்கும் வண்ணங்களைப் பார்த்து தேர்ந்தெடுக்கவும். பின், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் 10க்கு மாறிவிட்டேன். இதில் எனக்குப் பிடித்த ஸ்டார்ட் மெனு, மிகவும் சிறியதாக உள்ளது. இது விண்டோஸ் 10 ன் குறிப்பிட்ட பதிப்பினாலா? அல்லது இதனை நாம் விரும்பும்படி அமைக்கலாமா? அதற்கான வழிகள் என்ன? கூகுளில் தேடிப் பார்த்துவிட்டேன். சரியான பதில் கிடைக்கவில்லை.
என். மதியழகி, திருப்பூர்.
பதில்:
விண்டோஸ் 10 தொகுப்பிற்கு மாறியது குறித்து நீங்கள் எழுதியுள்ளதைப் படித்தேன். புதிய சிஸ்டத்தின் வசதிகளை முழுமையாக அனுபவிக்க விரும்புவது உங்கள் கடிதத்தில் தெரிகிறது. இனி, உங்கள் கேள்விக்கான பதிலைத் தருகிறேன்.
1. ஸ்டார்ட் மெனுவின் மேல்புறமாகக் கர்சரைக் கொண்டு சென்று, அதில் வைத்து, கர்சரை இழுத்து, ஸ்டார்ட் மெனுவின் பரப்பினைச் சுருக்கலாம், நீட்டிக்கலாம். டைல்ஸ் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்து, அவற்றை ஸ்டார்ட் மெனுவில் பின் செய்திடலாம். அல்லது பின் செய்ததிலிருந்து நீக்கலாம்.
2. டைல்ஸ்களின் அளவினைக் குறைக்கலாம். அதன் மீது ரைட் கிளிக் செய்து Resize தேர்ந்தெடுக்க வேண்டும். சிமிட்டும் டைல்ஸ்கள் உங்களுக்கு எரிச்சலைத் தருவதாக இருந்தால், அவற்றின் மீது ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Turn live tile off” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இது போல பல வசதிகள் டெஸ்க்டாப்பில் உள்ளன. முயற்சித்துப் பார்க்கவும்.

கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தி வருகிறேன். இதில் பிரச்னைகள் ஏற்படுகையில், எனக்குத் தெரிந்த கம்ப்யூட்டர் டெக்னீஷியன்களிடம் நடந்ததைக் கூறி, விளக்கமும் தீர்வும் பெறுகிறேன். ஆனால், என்னால், என்ன நடந்தது எனத் தெளிவாகக் கூற இயலவில்லை. பின் நோக்கிச் சென்று பார்ப்பது எப்படி? அது முடியுமா?
ஆர். தென்னரசு, காரைக்குடி.
பதில்:
நீங்கள் விளக்கியுள்ள சூழ்நிலை பலருக்கு ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். பல வாசகர்களும் இது குறித்து கேட்டுள்ளனர். இதற்கான தீர்வு விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் உள்ளது. இதற்கான டூலின் பெயர் Problem Steps Recorder. இதனைப் பெற, ஸ்டார்ட் மெனுவில் கிளிக் செய்து, தேடல் கட்டத்தில் “Problem Record” என டைப் செய்து எண்டர் தட்டவும். அடுத்து, Record steps to reproduce a problem என்பதில் கிளிக் செய்திடவும். இது Problem Steps Recorder டூலை இயக்கத் தொடங்கும். இது இயங்கியவுடன், நாம் மேற்கொள்ளும் செயல்பாடுகள் அனைத்தும், டெஸ்க்டாப்பில் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு முறை மவுஸால் கிளிக் செய்திடும்போதும், டெஸ்க்டாப் திரை, ஸ்கிரீன் ஷாட் ஆகப் பதிவு செய்யப்படும். இவை அனைத்தும் “problem steps” என்றபடி வரிசையாக, தானாகவே பதிவு செய்யப்படும். பதிவு செய்த்து போதும் என்று அதை நிறுத்தினால், பைலை ZIP file ஆக, சேவ் செய்திடும்படி நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள். அதே போல் பதிவு செய்திடலாம். பின்னர், தேவைப்படுகையில், இதனை விரித்து, ஸ்கிரீன் ஷாட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து, எப்போது பிரச்னை ஏற்பட்டது என்று அறியலாம். அல்லது, பிரச்னைகளை அறிந்து தீர்க்கக் கூடிய தொழில் நுட்பவியலாளருக்கு, இந்த பைலை அனுப்பலாம். அவர் அதனை விரித்துப் பார்த்து, பிரச்னையை உணர்ந்து கொண்டு, அதற்கான தீர்வினைத் தருவார். இப்படி ஒரு டூல் உள்ளது என, பல தொழில் நுட்ப வல்லுநர்களுக்கே தெரியாது.

கேள்வி: புதியதாக லேப்டாப் கம்ப்யூட்டர் ஒன்றினைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளேன். இதில் உள்ள வேர்ட் புரோகிராமில், டாகுமெண்ட்களை டைப் செய்திடுகையில், இரட்டைக் கோடு (is equal to அடையாளம்) போட்டு கோடு போட்டால், உடன் அது அழுத்தமான கோடாக மாறுகிறது. முந்தைய கம்ப்யூட்டரில், வேர்டில் இது போல இல்லை. இது எந்த செட் அப்பினால் ஏற்படுகிறது. இதனை மாற்றி அமைக்க என்ன தேடியும் வழி கிடைக்கவில்லை. உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
எஸ். பழமலை, காரைக்குடி.

பதில்: உங்கள் கம்ப்யூட்டரில், வேர்ட் தொகுப்பில் உங்களால் அல்லது பதியப்படும்போதோ ஏற்படுத்தப்பட்ட “பார்மட்டிங் செட்டிங்ஸ்” அமைப்பு தான் இதற்குக் காரணம். நாம் நீண்ட படுக்கைக் கோட்டினை டைப் செய்திட ஏற்படும் காலத்தை இது குறைக்கிறது. இது நல்லதுதான். ஆனால், உங்களைப் போன்றவர்கள், இந்தக் கோடு ஏற்படக் கூடாது. சமநிலையைக் குறிக்கு இரு சிறிய கோடு நான்கு அல்லது ஐந்து டைப் செய்தாலும், அவை அப்படியே இடம் பெற வேண்டும் என எண்ணுபவர்கள், அதற்கான செட்டிங்ஸ் அமைப்பில் மாறுதல்களை ஏற்படுத்தினால் போதும். அதற்கான செயல்முறைகளைக் கீழே தருகிறேன்.
முதலில் ஆபீஸ் பட்டன் அழுத்தி Word Options கிளிக் செய்திடவும். இது வேர்ட் ஆப்ஷன்ஸ் விண்டோவினைத் திறக்கும். இதில் இடது பக்கம் உள்ளவற்றில் Proofing என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் Auto Correct Options என்னும் விண்டோவினைத் திறக்கவும். இப்போது கிடைக்கும் Auto Correct விண்டோவில், Apply as you type என்ற பிரிவில் உள்ள Border Lines என்பதன் முன் உள்ள சிறிய கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு, அனைத்திற்கும் ஓகே அழுத்தி வெளியேறவும். இனி, நீங்கள் அமைத்த சம அடையாளக் குறி (=) எத்தனை இருந்தாலும், அது நீளமான கோடாக மாறாது.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X