கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தில், குறிப்பிட்ட பைல்களை, நாம் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமில் மட்டுமே இயக்கும்படி, மாறா நிலை புரோகிராமாக அமைக்கும் வழி என்ன?
என். ஷேக் முகமது, காரைக்கால்.
பதில்:
ஸ்டார்ட் மெனு செல்லவும். அல்லது தேடல் கட்டத்தில் Settings என டைப் செய்திடவும். இதில், System என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், இடது புறம் உள்ள பிரிவுகளில், Default Apps என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம் ஒவ்வொரு பைல் வகையும் தரப்பட்டு, எது மாறா நிலையில் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க ஆப்ஷன் தரப்படும். தொடர்ந்து எந்த அப்ளிகேஷன் புரோகிராமில் நீங்கள் தேர்ந்தெடுத்த பைல் வகை திறக்கப்பட வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். நீங்கள் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராம் இல்லை எனில், விண்டோஸ் ஸ்டோர் சென்று அதனைப் பெற்று இன்ஸ்டால் செய்த பின்னர், இந்த மாறா நிலை அமைப்பினை மேற்கொள்ளவும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நான் எப்போதும் முழுத் திரையையும் பயன்படுத்தி, டாகுமெண்ட்களை அமைக்கிறேன். இதற்கு ஸ்டேட்டஸ் பாரில், வலது புறமாக உள்ள சிறிய ஐகான்கள் கொண்ட வரிசையில், இதற்கான ஐகானைத் தேடி கிளிக் செய்திட வேண்டியுள்ளது. அல்லது ரிப்பனில், வியு டேப்பில் Full Screen Reading தேடி கிளிக் செய்கிறேன். இதற்குப் பதிலாக, வேர்ட் ஏதேனும் ஷார்ட் கட் கீ கொண்டுள்ளதா? நேரத்தை மிச்சபடுத்தலாமே!
எஸ். தேவிப் பிரியா, திருப்பூர்.
பதில்:
நல்ல கேள்வி. துரதிருஷ்டவசமாக வேர்ட் மாறா நிலையில், உங்கள் விருப்பதிற்கேற்ற ஷார்ட்கட் கீ ஒன்றைக் கொண்டிருக்கவில்லை. ஆனால், அதற்காக மனம் தளர வேண்டாம். நீங்களாக ஒன்றை உருவாக்கலாம். அதனை எப்படி உருவாக்குவது எனக் கீழே தருகிறேன். 1. ஆபீஸ் பட்டன் அழுத்தி, பின்னர் Word Options ல் கிளிக் செய்திடவும். வேர்ட், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் விண்டோவினைக் காட்டும். இதன் இடது பக்கத்தில் உள்ள Customize (Word 2007) அல்லது Customize Ribbon என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது வேர்ட் காட்டும் டயலாக் பாக்ஸில், கீழாக Keyboard என்றும் அதன் அருகே Customize என்றும் காட்டப்படும். இதில் Customize என்பதில் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் விண்டோவில், Categories பட்டியலில், View டேப் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Commands என்னும் பட்டியலில், ReadingModeLayout என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, கர்சரை, Press New Shortcut Key என்பதில் கொண்டு சென்று வைக்கவும். இங்கு நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஷார்ட் கட் கீகளை அழுத்தவும். எடுத்துக் காட்டாக, அவை Alt+S ஆக இருக்கலாம். அல்லது நீங்கள் விரும்பும் எந்த கீகளாகவும் இருக்கலாம். தொடர்ந்து Assign என்பதில் கிளிக் செய்த பின்னர், டயலாக் பாக்ஸ்களை மூடவும்.
இனி முழு திரை கிடைக்க, நீங்கள் ஸ்டேட்டஸ் பார் அல்லது மெனு செல்ல வேண்டியதில்லை.

கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்திற்கு மாறிவிட்டேன். தொடக்கத்தில் இதில் காட்டப்படும் திரையில் வட்டமாக வெற்றிடம் உள்ளது. இதில் நான் விரும்பும் படத்தினை அமைக்க என்ன செய்திட வேண்டும்? அதற்கான வழிகளைக் கூறவும்.
என். மாணிக்கவேல், சேலம்.
பதில்:
உங்கள் அக்கவுண்ட் படத்தை (Account Picture) மாற்ற விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஏனென்றால், விண்டோஸ் 10 இயக்கத்தில் பலவித படங்களை நம் விருப்பத்திற்கு மாற்றி அமைக்கலாம். அக்கவுண்ட் படத்தை மாற்ற, முதலில் விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் மெனுவில் 'செட்டிங்ஸ்' தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் செட்டிங்ஸ் விண்டோவில், பல பிரிவுகள் இருக்கும். இதில், Accounts என்ற பிரிவினைக் கிளிக் செய்திடவும். இனி கிடைக்கும் அக்கவுண்ட்ஸ் விண்டோவில், உங்களுடைய பெயர், மின் அஞ்சல் முகவரி எல்லாம் தரப்பட்டிருக்கும். இதில் Your Picture என்பதில், நீங்கள் இதுவரை எந்தப் படமும் அமைக்காததால், காலியாக இருக்கும். கீழாக Browse எனத் தரப்பட்டிருக்கும். அதில் கிளிக் செய்து, கம்ப்யூட்டரில் உள்ள நீங்கள் விருப்பப் படும் படத்தினைத் தேர்ந்தெடுக்கவும். அந்தப் படமே இனி நீங்களாக மாற்றும் வரை, உங்கள் அக்கவுண்ட் படமாக அமைக்கப்பட்டுக் காட்டப்படும். உங்கள் படத்தையே புதியதாக அமைக்க வேண்டும் என்றால், Camera என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் உடன் நீல நிறத்தில் கட்டம் ஒன்றைக் காட்டி, கம்ப்யூட்டரில் உள்ள கேமரா மூலம் உங்கள் படத்தைக் காட்டும். படம் எப்படித் தோன்ற வேண்டுமோ, அதன்படி முகத்தை அழகாக வைத்து கிளிக் செய்தால், அப்போது போட்டோ எடுக்கப்பட்டு, அதுவே அக்கவுண்ட் படமாக வைக்கப்படும்.

கேள்வி: டாகுமெண்ட்டில் ஏதேனும் டெக்ஸ்ட் அல்லது படம் ஒன்றினை பேஸ்ட் செய்தால், இறுதி வரியில் ஒரு சிறிய ஐகான் காட்டப்படுகிறது. எஸ்கேப் அல்லது வேறு கீகளை அழுத்தி, டாகுமெண்ட்டைத் தொடர்ந்தால், அது மறைந்துவிடுகிறது. இது என்ன படம்? நாம் காப்பி மற்றும் பேஸ்ட் செய்வதை உள்ளாகக் குறித்துக் கொடுக்கிறதா?
என். ராஜரத்தினம், காங்கேயம்.
பதில்:
இந்த சின்ன ஐகான், நாம் வெட்டி அல்லது காப்பி செய்து ஒட்டுவதனை வழி நடத்தத் தரப்படும் சின்ன மெனுவாகும். அடுத்த முறை இவ்வாறு டெக்ஸ்ட் ஒன்றினைப் பேஸ்ட் செய்கையில், அந்த ஐகானில் கிளிக் செய்திடுங்கள். மெனு கிடைக்கும். இது நாம் விரும்பும் வகையில் ஒட்டப்படும் டெக்ஸ்ட்டை அமைக்க வழி தருகிறது. நாம் காப்பி செய்திடும் டெக்ஸ்ட்டுக்கும், ஒட்டப்படும் டாகுமெண்ட்டிற்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்கும். நீங்கள் ஒட்டிவிட்டு மேற்கொள்ளும் சரி செய்திடும் பணியை, இந்த ஐகான் மூலம் நிறைவேற்றிக் கொள்ளலாம்.
ஒட்டிய பின்னர், அந்த ஐகான் மீது கிளிக் செய்திடவும். இதில் பாப் அப் செய்யப்பட்டு ஒரு செய்திக் கட்டம் காட்டப்படும். அதில் ஒரு சிறிய பட்டியல் இருக்கும். இதில் மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். அவை: Keep Source Formatting, Match destination Formatting மற்றும் Keep Text only. நீங்கள் விரும்பியபடி அமைய, இரண்டாவது ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒட்டப்பட டெக்ஸ்ட் ஏற்கனவே உள்ள டெக்ஸ்ட்டின் ஸ்டைலை ஏற்றுக் கொண்டு தன்னை மாற்றிக் கொள்ளும். இந்தக் கட்டத்தில் இறுதியாக 'Set Default Paste' என்ற பிரிவும் இருக்கும். இதில் கிளிக் செய்தால், வேர்ட் நாம் பேஸ்ட் செய்வதை எப்படி பேஸ்ட் செய்திட வேண்டும் என மாறா நிலையில் அமைக்க செட் செய்திடும் டயலாக் பாக்ஸைக் காட்டும். அதில் நமக்கேற்ப மாற்றங்களை அமைக்கலாம். இந்த பாக்ஸை Word Options கிளிக் செய்து, Advanced என்ற பிரிவில் கிளிக் செய்தால் பெறலாம். இதில் இரண்டாவது பிரிவாக, Copy, Cut and Paste என்று இருக்கும் பிரிவில், இதற்கான ஆப்ஷன்கள் நிறைய தரப்பட்டிருக்கும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில் டேபிள்களை அமைக்கையில், நெட்டு வரிசைக் கட்டங்களில் தகவல்களை அமைக்கையில், அவை விரிவடைந்து கொடுக்கின்றன. இந்த நெட்டு வரிசைகளை விரிவடையாமல் அமைக்க என்ன செய்திட வேண்டும்? அதற்கான செட்டிங்ஸ் பொதுவாக அனைத்திற்குமாக அமைக்க முடியுமா?
டி.பெர்னாண்டோ, சாயர்புரம்.
பதில்:
டேபிள்களில் உள்ள நெட்டு வரிசைகளில் (Column) டேட்டாவினை இடுகையில், அவை விரிவடைந்து கொடுப்பது பொதுவான தன்மை ஆகும். ஆனால், அதே நேரத்தில், அவை விரிவடையாமல், நாம் அமைத்துள்ள அகலத்திலேயே இருக்கும்படியாகவும் அமைக்கலாம். கீழே கொடுத்துள்ள குறிப்புகளின்படி அமைக்கவும்.
1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. டேபிள் குரூப்பில், Properties என்னும் ஆப்ஷனை கிளிக் செய்திடவும். வேர்ட், டேபிள் ப்ராப்பர்ட்டீஸ் (Table Properties) என்னும் டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Column என்னும் டேப் காட்டப்பட வேண்டும்.
5. அடுத்து Preferred Width என்பதைப் பயன்படுத்தி, நெட்டு வரிசையின் அகலத்தை, நீங்கள் எண்ணுகிறபடி அமைக்கவும்.
6. அடுத்த நெட்டு வரிசையினைத் தேர்ந்தெடுக்க, Previous Column அல்லது Next Column பட்டன்களில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும்.
7. மாற்ற வேண்டிய அனைத்து நெட்டு வரிசைகளிலும் மேற்படி செயல்பாட்டினை மேற்கொள்ள மேலே 5 மற்றும் 6 நிலைகளில் கூறப்பட்டுள்ளவற்றை மேற்கொள்ளவும்.
8. முடித்த பின்னர், ஓகே கிளிக் செய்து ப்ராப்பர்ட்டீஸ் டயலாக் பாக்ஸை மூடவும்.

கேள்வி: ஜிமெயில் அஞ்சல் அமைக்கும் கட்டத்தினைப் பெரியதாக அமைப்பது எப்படி? சிறிய கட்டத்திலேயே பல ஆண்டுகளாக மெசேஜ் அமைத்து வந்தாலும், பல வேளைகளில் அது போதுமானதாக இல்லை. சில வரிகளைச் சரியாகக் கவனித்து அமைக்க முடிவதில்லை. ஜிமெயில் செட்டிங்ஸ் சென்று பார்த்த போது, இந்தக் கட்டம் பெரிதாக்க எந்த வழியும் காட்டப்படவில்லை. எனக்கு இதற்கு வழி காட்டவும்.
என். ராஜேஸ்வரி, சேலம்.
பதில்:
இதற்கு செட்டிங்ஸ் விண்டோ எல்லாம் செல்ல வேண்டியதில்லை. உங்களுக்குக் கிடைக்கும் சிறிய கட்டத்தினை நன்கு கவனியுங்கள். இதுவும் வழக்கமாக நாம் சந்திக்கும் விண்டோ போன்றதுதான். வழக்கமான விண்டோவினை மினிமைஸ் மற்றும் விரிவு படுத்திப் பெரிதாக்குவது போல, இதனையும் மினிமைஸ் செய்து வைக்கலாம்; நீங்கள் விரும்புவது போல பெரிதாகவும் அமைக்கலாம். கட்டத்தின் வலது மேல் மூலையில் தரப்பட்டுள்ள மூன்று குறியீடுகளில் மவுஸின் கர்சரைக் கொண்டு சென்றால், Minimize, Full Screen, Close என மூன்று வகைகள் காட்டப்படுவதனைப் பார்க்கலாம். உங்களுக்கு முழுத்திரையில் மெசேஜ் எழுத விண்டோ தேவை என்றால், நடுவில் உள்ள கோட்டில் கிளிக் செய்தால் போதும். சரி, எப்போதும் உங்களுக்கு நியு மெசேஜ் விண்டோ பெரிதாக, முழுத் திரையில் வேண்டும் என விரும்பினால், அதே மெசேஜ் விண்டோவில், வலது பக்கம் கீழாகப் பார்க்கவும். சிறியதாக ஒரு தலைகீழ் அம்புக் குறி இருக்கும். இதில் கிளிக் செய்தால், ஒரு மெனு கிடைக்கும். அதில் முதலாவதாக, Default to Full Screen என்று ஒரு பிரிவு இருக்கும். இதில் கிளிக் செய்தால், எப்போதும் உங்கள் மெசேஜ் விண்டோ முழுத் திரையில் அமைக்கப்படும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X