யாஹு நிறுவனம் கை மாறுகிறது
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

பல்வேறு வசதிகளை வழங்கும் இணையற்ற இணையக் கோட்டையாக இயங்கி வரும் யாஹூ டாட் காம் தளமும் நிறுவனமும் கை மாறுகின்றன. பலர் இதனை வாங்கிட மேற்கொண்ட முயற்சிகளில், தற்போடு வெரிஸான் (Verizon) வெற்றி பெற்றுள்ளது. யாஹூ நிறுவனத்தின் காப்பு உரிமைகள் இல்லாமல், மற்றவற்றைப் பெற 500 கோடி டாலர் வரை தயாராக வெரிஸான் இருப்பதாக முதலில் தகவல்கள் வந்தன. தற்போது 483 கோடி டாலர் என இறுதி விலை முடிவாகியுள்ளது.
இதில் யாஹூ நிறுவனத்தின் அசையா சொத்துகளும் உள்ளடங்கியவை என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பட்சத்தில், அசையா சொத்துகளின் மதிப்பு மிக அதிகமாக இருக்கும் என்றும், நிச்சயமாய் இவற்றை வாங்கி இருக்கும் நிறுவனத்திற்கு மிகப் பெரிய லாபம் என்றும் பரவலாக கருத்து எழுந்துள்ளது. இணைய உலகில் ஒரு பெரிய சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது. ஆனால், அதனைக் காட்டிலும் ஒரு பெரிய சகாப்தம் உருவாகும் என்ற நம்பிக்கை வலுப்பட்டுள்ளது.
யாஹூ நிறுவனத்தின் Yahoo Mail, Fantasy Sports, photo storage site Flickr and Yahoo search, ஆகிய பிரிவுகளுடன், அதன் விளம்பர யுக்தியும் வெரிஸான் நிறுவனத்திற்குச் சொந்தமாகிறது.
ஏற்கனவே, வெரிஸான் நிறுவனம், அமெரிக்காவில் வெற்றிகரமாக இயங்கி வரும் A.O.L. (America Online) நிறுவனத்தை 440 கோடி டாலர் கொடுத்து வாங்கியது. AOL நிறுவனம், உலக அளவில், மிகப் பெரும் ஊடக நிறுவனமாக இயங்கி வருகிறது. The Huffington Post, TechCrunch மற்றும் Engadget ஆகிய இணைய தகவல் ஊடகங்கள் இதற்குச் சொந்தமானவை. தகவல் தொகுப்புகளைத் தயாரிப்பது, அவை சார்ந்த சேவைகளை உலகளாவிய ஊடகங்களுக்கு அளிப்பது போன்றவற்றில், ஏ.ஓ.எல். நிறுவனம் முதல் இடத்தில் இயங்கி வருகிறது.
தற்போது, வெரிஸான், ஏ.ஓ.எல். மற்றும் யாஹு அனைத்தும் இணைவதால், வெரிஸான் தலைமையின் கீழ், யாஹூ மற்றும் ஏ.ஓ.எல் நிறுவனப் பிரிவுகள் இணைந்து, பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு, டிஜிட்டல் விளம்பர உலகில் சரியான போட்டியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கூகுள் மற்றும் பேஸ்புக் இரண்டும், டிஜிட்டல் விளம்பர உலகில் 43% பங்கினைக் கொண்டுள்ளன. யாஹூ 15% பங்கைக் கொண்டு, ஏழாவது இடத்தில் உள்ளது.
1994 ஆம் ஆண்டில், ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த Jerry Yang and David Filo ஆகிய இரு எலக்ட்ரிக்கல் பொறியியல் மாணவர்களால், யாஹூ தொடங்கப்பட்டது. 1995 ஆம் ஆண்டில், "Jerry and David's Guide to the World Wide Web," என்ற பெயரில் முதலில் இது அழைக்கப்பட்டது. YAHOO என்பதை, Yet Another Hierarchically Organized Oracle என்று விரிப்பார்கள். யாஹூ, அப்போது, இணையத்திற்கான ஒரு டைரக்டரி போலத்தான் செயல்பட்டது. யாஹூ என்ற பெயருக்குப் பின்னால், ஓர் ஆச்சரியக் குறி இருக்கும். ஏனென்றால், யாஹூ என்ற பெயரில் ஏற்கனவே BBQ sauce தயாரிக்கும் நிறுவனம் ஒன்று இயங்கி வந்தது. அதிலிருந்து வேறுபடுத்திக் காட்ட இந்த ஆச்சரியக் குறி இணைக்கப்பட்டது.
அனைத்து தரப்பின மக்களுக்கும், இணையம் என்றால் என்ன, அதில் எந்த எந்த நிறுவனங்கள் குறித்து தகவல்கள் கிடைக்கின்றன, எப்படி பிரவுஸ் செய்து அவற்றைப் பெறுவது போன்ற தகவல்களைத் தந்தது. செய்தி, விளையாட்டு மற்றும் பொழுது போக்கு அம்சங்களைத் தருவதில் முன்னணி இடத்தை யாஹூ இன்றும் கொண்டுள்ளது.
இணைய நிறுவனங்களின் மதிப்பு உலக அளவில் மிக உயர்ந்து நின்ற 2000 ஆவது ஆண்டில், யாஹூ நிறுவனத்தின் மதிப்பு, 12,500 கோடி டாலர் என்ற அளவில் கருதப்பட்டது. 2002ல், கூகுள் நிறுவனத்தை, யாஹூ 300 கோடி டாலருக்கு வாங்கிக் கொள்ள அழைப்பு விடுத்தது. அதனை கூகுள் முற்றிலுமாக நிராகரித்தது. 2008 ஆம் ஆண்டில், மைக்ரோசாப்ட் நிறுவனம், யாஹூ நிறுவனத்தை, 4,460 கோடி டாலருக்கு வாங்கிக் கொள்ள முன்வந்ததனை, யாஹூ நிராகரித்தது. அப்போதைய யாஹூ நிறுவனப் பங்கு ஒன்றின் பங்குச் சந்தை விலைக்கு 62% கூடுதலாகப் பணம் தர மைக்ரோசாப்ட் அறிவிப்பினை வெளியிட்டது. அது, இணையம் மற்றும் விளம்பரச் சந்தையை கூகுள் முழுமையாகக் கைப்பற்றிய நேரம்.
அதனால், மைக்ரோசாப்ட் எப்படியாவது யாஹூ நிறுவனத்தை வாங்கிக் கொள்ள முயற்சித்து, பெரிய தொகையினை அளிப்பதாகக் கூறியது. ஆனால், யாஹூ நல்லதொரு சந்தர்ப்பத்தினை நழுவவிட்டது. 2013ல், வலைமனை நிறுவனமான Tumblr நிறுவனத்தை, 110 கோடி டாலர் கொடுத்து யாஹூ வாங்கியது. 2015 ஆம் ஆண்டில், யாஹூ நிறுவனத்தின் நஷ்டம் 440 கோடி டாலர் எனக் கணக்கிடப்பட்டது. 2016ல், வெரிஸான் நிறுவனம் 483 டாலர் கொடுத்து வாங்குகிறது.
கூகுள் மற்றும் பேஸ்புக் ஆகிய இரண்டு நிறுவனங்களூம், டிஜிட்டல் உலகின் அனைத்து பிரிவுகளிலும் தங்கள் ஆளுமையை அமைத்ததால், யாஹூ நிறுவனத்தின் புகழும் பிரபலமும் படிப்படியாகச் சரிந்தது.
இணையம் இப்போது மொபைல் போன்களிலேயே பயன்படுத்தப்படும் இந்த நாளில், ஏறத்தாழ 11.26 கோடி சந்தாதாரர்களைக் கொண்டு, தகவல் தொலை தொடர்பு நிறுவனமாக, மொபைல் சேவை வழங்கும் வெரிஸான், யாஹூ செயல்பாட்டினை மிக நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X