கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

கேள்வி: என் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 இயங்குகிறது. இது ஒரு பழைய கம்ப்யூட்டர். இந்த கம்ப்யூட்டரில், விண்டோஸ் 10 அப்கிரேட் செய்திடச் சொல்லி எந்த பாப் அப் செய்தியும் வரவில்லை. இது எதனால்? என்னிடம் இருப்பது, நான் பணம் செலுத்தி வாங்கிய ஒரிஜினல் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் சிஸ்டமாகும். ஒரு வேளை இது திருட்டு நகலோ என எனக்குச் சந்தேகம் வருகிறது. ஜூலை 29க்குள் நான் விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு, இலவசமாக அப்கிரேட் செய்திட வேண்டும். அன்பு கூர்ந்து முன்னுரிமை கொடுத்து எனக்கு டிப்ஸ் தரவும்.
டி. கனகராஜ், கோவை.
பதில்:
நிச்சயமாக அது திருட்டு நகலாக இருக்க முடியாது. பாப் அப் வராததற்குக் காரணம், உங்களுடைய விண்டோஸ் 7 சிஸ்டம் மைக்ரோசாப்ட் கொடுத்த அனைத்து அப்டேட் பைல்களையும் கொண்டு அப்கிரேட் செய்திடாமல் இருக்கலாம். எனவே, Upgrade History சென்று அதனைச் சரி பார்க்கவும். இன்னும் அப்கிரேட் செய்திட வேண்டிய பைல் இருப்பின், அதனைக் கொண்டு அப்கிரேட் செய்திடவும். அதன் பின்னரும், விண்டோஸ் 10 செய்தி கிடைக்கவில்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் ஹார்ட்வேர், விண்டோஸ் 10 ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு உயர்வானதாக இல்லை என்ற காரணமாக இருக்கலாம். அப்படி இருந்தால், உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் திறனை உயர்த்த வேண்டும். அல்லது, புதிய கம்ப்யூட்டரில் தான் நீங்கள் விண்டோஸ் 10 பதிந்து இயக்க வேண்டும். இதனை அறிந்து கொள்ள, மைக்ரோசாப்ட் அல்லது உங்கள் கம்ப்யூட்டரை வடிவமைத்துக் கொடுத்த நிறுவனத்தின் இணைய தளம் சென்று பார்க்க வேண்டும்.
அனைத்து பைல்களும் அப்கிரேட் செய்து, உங்கள் கம்ப்யூட்டர் தயார் நிலைக்கு வந்த பின்னர், விண்டோஸ் 10 அப்கிரேட் செய்வதற்கு, உங்களைத் தயார் செய்து கொண்டு, https://www.microsoft.com/en-us/software-download/windows10/ என்ற முகவரியில் உள்ள மைக்ரோசாப்ட் இணையப் பக்கம் சென்று, விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட, உங்கள் இசைவினை ஒரு கிளிக் மூலம் தந்துவிட்டால், உங்கள் கம்ப்யூட்டர் தானாகவே விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தன்னை உயர்த்திக் கொள்ளும்.

கேள்வி: நிறுவனம் ஒன்று எனக்கு அனுப்பிய கடிதத்தில், நான் டைப் செய்து கொடுக்கும் டாகுமெண்ட் “Fill justification” செய்யப்பட்டு இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. லெப்ட், ரைட், மற்றும் சென்டர் ஜஸ்டிபிகேஷன் குறித்து தெரியும். பில் ஜஸ்டிபிகேஷன் என்பது என்னவென்று தெரியவில்லை. அதற்கான டிப்ஸ் தரவும்.
என். மெர்சி ராணி, தூத்துக்குடி.
பதில்:
நீங்கள் வேர்ட் எந்த தொகுப்பு பயன்படுத்துகிறீர்கள் எனக் குறிப்பிட்டிருக்கலாம். அதன் ஹோம் ரிப்பனில் சென்றால், நான்கு வகையான ஜஸ்டிபிகேஷனுக்கான ஐகான்கள் தரப்பட்டிருப்பதனைக் காணலாம். Fill Justification வகையை மேற்கொள்கையில், பாரா ஒன்றில் உள்ள அனைத்து வரிகளும், இடது மற்றும் வலது பக்கங்களில், மார்ஜின் அளவிற்கு நீட்டிக்கப்பட்டிருக்கும். அதற்காக, சொற்கள் மற்றும் எழுத்துகள் இடையே, இடைவெளிகள் உருவாக்கப்பட்டு அமைக்கப்படும். வேர்ட் தொகுப்பில், இந்த நான்கு வகை ஜஸ்டிபிகேஷன் செயல்பாடுகளை, paragraph alignment என அழைக்கின்றனர். அந்த வகையில், பாரா ஒன்று, இடது அல்லது வலது மார்ஜின் ஓரத்திற்கேற்ப அமைக்கப்படலாம். அல்லது இரு மார்ஜின்களுக்கிடையே, நடுவாக அமைக்கப்படலாம். நான்காவதாக, இரண்டு மார்ஜின் ஓரங்கள் வரை வரிகள் அமையும்படியும் அமைக்கப்படலாம்.

கேள்வி: என் நண்பர் எனக்கு அனுப்பும் டாகுமெண்ட்களில், சில பாராக்களில், அதன் முதல் எழுத்து மட்டும், பெரியதாக, உள்ளாகவும், சிலவற்றில் வெளியாகவும் அமைந்து பார்ப்பதற்கு அழகாக உள்ளது. முதல் எழுத்தை மட்டும் தனியே தேர்ந்தெடுத்து அமைத்தால், அந்த வரியின் அமைப்பு கெடுகிறது. இதனை எப்படி அமைப்பது? என டிப்ஸ் தரவும்.
எஸ். சுந்தர் ராஜ், மணப்பாறை.
பதில்:
வேர்டில் இதனை Drop cap என அழைக்கின்றனர். முதல் எழுத்தை மட்டும் தனியே எடுத்து பெரியதாக அமைத்தால், அந்த வரி மற்றவற்றிலிருந்து வித்தியாசமாக வேறுபட்டுத்தான் தெரியும். ட்ராப் கேப் டூல் மூலம் அமைத்தால், சரியாக இருக்கும். எந்த பாராவில் இது போல அமைக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்து, கர்சரை அதன் உள்ளாக நிறுத்தவும். பின்னர், Insert ரிப்பனில், Text குரூப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Drop Cap என்ற ஒரு டூல் காட்டப்படும். இதனைக் கிளிக் செய்து தேர்ந்தெடுத்தால், ஒரு மெனு கிடைக்கும். இரண்டு வகையான ட்ராப் கேப் அமைப்பதற்கான வழிகள் இருக்கும். இதில் கர்சரைக் கொண்டு சென்றாலே, அது எப்படி அமைக்கப்படும் என்பதற்கான முன் மாதிரி கிடைக்கும். அதனைப் பார்த்து, உங்களுக்கு எப்படி அமைய வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுத்தால், கர்சர் உள்ள பாராவில், முதல் எழுத்து பெரியதாக அமைக்கப்படும். வரிகள் அமைப்பிலும் மாறுபாடு ஏற்படாது.

கேள்வி: பேஸ்புக் பக்கத்தில் என் அக்கவுண்ட்டில், நான் பதித்த விடியோ பைல்கள் என்னிடம் இல்லை. மேலும், பேஸ்புக் செயலியே சில வேளைகளில், என்னப் பற்றிய விடியோ பைல்களை உருவாக்கியது. அது என் அக்கவுண்ட் பக்கத்தில் உள்ளது. இவற்றை பேக் அப் எடுத்து, என் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்திட விரும்புகிறேன். அதற்கு வழிகள் உண்டா? இருப்பின் டிப்ஸ் தரவும்.
என். சுகிர்த மலர், சேலம்.
பதில்
: நல்ல கேள்வி. பேஸ்புக் தளத்தினை நம்மில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வந்தாலும், இந்த வசதி குறித்து அறிந்திருக்கவில்லை. நம் அக்கவுண்ட் பக்கத்தில் உள்ள விடியோக்களை, பேஸ்புக் உருவாக்கித் தந்த விடியோ பைல்கள் உட்பட, நாம் நம் கம்ப்யூட்டரில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கு, முதலில் உங்கள் அக்கவுண்ட் பக்கத்தை, பேஸ்புக் வலைத்தளத்தில் திறந்து கொள்ளவும். இங்கு Photos என்பதில் கிளிக் செய்திடவும். இதில் Albums என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் அதிகமான எண்ணிக்கையில் விடியோ பைல்களை அப்லோட் செய்திருந்தால், அவை தனி ஆல்பமாக இருக்கும். இல்லையேல், அங்கு காணப்படும், videos என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது, நீங்கள் பதிந்த விடியோக்களின் பக்கங்கள் காட்டப்படும். நீங்கள் தரவிறக்கம் செய்திடும் விடியோ பைல் மீது, மவுஸ் கர்சரைக் கொண்டு செல்லவும். இப்போது 'எடிட்' ஐகான் கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், கிடைக்கும் மெனுவில், Download என்பதில் கிளிக் செய்திடவும். உடன் விடியோ பைல் உங்கள் கம்ப்யூட்டரில் சேவ் செய்திட விண்டோ கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பும் போல்டரைத் தேடி எடுத்துப் பதிவு செய்திடலாம். இப்படியே நீங்கள் விரும்பும் அனைத்து விடியோக்களையும் தரவிறக்கம் செய்திடலாம்.
இன்னொரு உதிரி தகவலையும் தருகிறேன். பேஸ்புக் தளத்தில் உங்கள் கணக்கில் நீங்கள் செய்த அனைத்து பதிவுகளையும், உங்கள் கம்ப்யூட்டரில் பேக் அப் செய்து கொள்ளலாம். இதற்கு 'செட்டிங்ஸ்' (Settings) தேர்ந்தெடுத்து, கிடைக்கும் மெனுவில், General Account Settings என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பிரிவின் கீழாக இறுதியில், Download a copy of your Facebook Data என்பதில் கிளிக் செய்திடவும். நீங்கள் செய்த பதிவுகள், அப்லோட் செய்த விடியோ பைல்கள், அரட்டைக் கட்டத்தில் நண்பர்களுடன் பரிமாறிக் கொண்ட தகவல்கள் என அனைத்தையும் டவுண்லோட் செய்து கொள்ளலாம். பொதுவாக, பேஸ்புக்கில் தங்கள் அக்கவுண்ட்டை மூடத் திட்டமிடுபவர்கள், இவ்வாறு அனைத்து டேட்டாவினையும் பேக் அப் செய்து, பின்னர் மூடுவார்கள்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், நான் இணைய தளப் பக்கங்களுக்கான முகவரிகளை அமைக்கிறேன். டாகுமெண்ட்களில் எழுத்துப் பிழையினை சோதனை செய்திடுகையில், வேர்ட், இணைய தள முகவரிகளை (URL) எழுத்துப் பிழை உள்ளதாகக் காட்டுகிறது. எழுத்துப் பிழை (Spell Check) சோதனையில், இணைய தள முகவரிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் ஏதேனும் கட்டளைகள் தர முடியுமா? உதவவும்.
என். பாலாஜி கிருஷ்ண மூர்த்தி, கோவை.
பதில்:
அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தகவலைப் பதிலாகத் தர வேண்டிய கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நன்றி. வேர்டில் இதற்கான வழி வகை தரப்பட்டுள்ளது. வேர்ட் தொகுப்பில், ஆபீஸ் மெனுவில், கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில், இடது பக்கத்தில் உள்ள Proofing என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இப்போது Change how word corrects and formats your text என்ற விண்டோ கிடைக்கும். இதில் When correcting Spelling in Microsoft Office programs என்ற பிரிவின் கீழ் உள்ள Ignore internet and file addresses என்று இருக்கும் இடத்திற்கு முன்னால் உள்ள சிறிய கட்டத்தில், மவுஸ் கர்சரால் டிக் அடையாளம் ஏற்படுத்தி, இந்த டயலாக் பாக்ஸினை ஓகே அழுத்தி மூடவும். இனி, ஸ்பெல் செக் செய்திடுகையில், இணைய முகவரிகளுக்கு விலக்கு அளிக்கப்படும்.
இதில் இணைய முகவரி மட்டுமின்றி, பைல் முகவரிகளும் விலக்கு பெறும். இங்கு பைல் முகவரி என்பது எடுத்துக் காட்டாக, D:/Users/Bose/Dinamalar/CMalar/Aug_1.pdf என இருக்கலாம். இத்தகைய முகவரிகளும் விலக்கு பெறும்.
இவ்வாறு அமைத்தவுடன், வேர்ட் உங்கள் டாகுமெண்ட்டில், இணைய முகவரிகளையும், கம்ப்யூட்டரில் பைல் இருக்கும் இடத்தைக் காட்டு முகவரிகளையும் சோதனை செய்திடாது. இதே போல மற்ற ஆபீஸ் புரோகிராம்களிலும், பைல் மற்றும் இணைய முகவரிகளுக்கு விலக்கு பெற, அந்த அந்த புரோகிராம்களில் சென்று செட்டிங்ஸ் அமைப்பில் டிக் அடையாளம் ஏற்படுத்த வேண்டும். வேர்டில் மேற்கொண்ட இந்த அமைப்பு, எக்ஸெல், பவர்பாய்ண்ட் போன்றவற்றில் ஏற்படுத்தப்பட மாட்டாது. நீங்களாக, ஒவ்வொரு புரோகிராம்களிலும் ஏற்படுத்த வேண்டும்.

கேள்வி: இணைய இணைப்பினை பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவில் வழங்கி வருகின்றன. ஒவ்வொன்றும் ஒருவகை கட்டண அமைப்பினையும், இணைப்பு வகையினையும் கொண்டிருக்கின்றன. மொத்தம் எத்தனை பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்? எத்தனை நிறுவனங்கள் வழங்கி வருகின்றன என்று உறுதியான தகவல்கள் கிடைக்குமா? எனக்கு ஒரு ப்ராஜக்ட் எழுதுவதற்குத் தேவையாய் உள்ளது.
ஆர். நாகராஜன், ஸ்ரீவில்லிபுத்தூர்.
பதில்:
இணைய இணைப்பினை நாள் தோறும் புதியதாகப் பலர் பெற்று வருகின்றனர். இதனை வழங்கும் நிறுவனங்களும், புதிய கட்டண விகிதங்களையும், டேட்டா திட்டங்களையும் அறிவித்து வருகின்றன. எனவே, உறுதியான தகவல் என ஒரு நாள் குறித்துச் சொன்னால், அது தேவையானவர்களைச் சென்றடைகையில் குறைவாகவே இருக்கும். இருப்பினும், உங்கள் ப்ராஜக்ட் திட்டத்தில் அதிகார பூர்வ தகவல்களைத் தர கீழே சில தகவல்களைத் தருகிறேன். இந்த தகவல்கள் பாராளுமன்றத்தில் தகவல் தொடர்புத் துறைக்கான அமைச்சரால் வெளியிடப்பட்டவை. சென்ற மார்ச் இறுதி வரையிலான காலத்தில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 34,26,54,750. இணைய இணைப்பு வழங்கும் சேவை நிறுவனங்கள் 138. இவற்றில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 9 கோடியே 5 லட்சத்து 30 ஆயிரம் சந்தாதாரர்களைக் கொண்டு முதல் இடத்தில் உள்ளது. அடுத்ததாக, வோடபோன் 6 கோடியே 75 லட்சத்து 509 ஆயிரம் பேரைக் கொண்டுள்ளது. ஐடியா செல்லுலர் 4 கோடியே 40 லட்சத்து 30 ஆயிரம் பேர்களைக் கொண்டுள்ளது. ரிலையன்ஸ் 3.9 கோடி, பி.எஸ்.என்.எல். 3.4 கோடி, ஏர்செல் 2.24 கோடி, டாட்டா 2.1 கோடி மற்றும் டெலிநார் 1.3 கோடி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளன.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X