சாம்சங் காலக்ஸி ஜே 2 ப்ரோ | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
சாம்சங் காலக்ஸி ஜே 2 ப்ரோ
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

01 ஆக
2016
00:00

சாம்சங் நிறுவனம் தன் காலக்ஸி ஸ்மார்ட் போன்களின், ப்ரோ பதிப்பினை, அண்மைக் காலங்களில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர், இந்தியாவிற்கு மட்டும் என காலக்ஸி ஜே 2 ப்ரோ அறிமுகமாகியுள்ளது. இதன் சிறப்பம்சங்கள்: இதன் ஸ்டோரேஜ் திறன் இரு மடங்காக, 16 ஜி.பி. ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ராம் மெமரி 2 ஜி.பி. இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 142.4 x 71.1 x 8 மிமீ. இதில் இரண்டு சிம்களை இயக்கலாம்.
இதன் திரை 5 அங்குல அளவில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு Super AMOLED கெபாசிடிவ் டச் ஸ்கிரீனாகும். மல்ட்டி டச் வசதி கொண்டது. 720 x 1280 பிக்ஸெல் அடர்த்தி உடையது. போனின் பின்புறத்தில், Smart Glow நோட்டிபிகேஷன் வளையம் ஒன்று இயங்குகிறது. இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0.1 மார்ஷ்மலாய். இதன் சிப்செட் Spreadtrum SC8830. இதில் 1.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட்கோர் கோர்டெக்ஸ் ஏ 7 சி.பி.யு.
உள்ளது. இதனுடன் Mali-400MP2 ஜி.பி.யு. இணைந்துள்ளது. இதன் பரிமாணம் 142.4 X 71.1 X 8.0 மிமீ.
இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை 128 ஜி.பி. வரை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு அதிகப்படுத்தலாம். ஆட்டோ போகஸ், எல்.இ.டி. ப்ளாஷ் உடன் 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. ஜியோ டேக்கிங், முகம் உணர்ந்து காட்டுதல், டச் போகஸ், பனோரமிக் வியூ ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. விநாடிக்கு 30 பிரேம் விடியோ பதிவு திறன் கொண்டுள்ளது.
முன்புறக் கேமரா 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. எம்.பி.3 பிளேயர் உள்ளது. எப்.எம். ரேடியோ இயங்குகிறது. 3,5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளது. நெட்வொர்க் இணைப்பிற்கு வை பி, ஜி.பி.எஸ்., புளுடூத், ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ். மின் அஞ்சல், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. எம்.பி.3 மற்றும் எம்.பி. 4 பிளேயர்கள் இயங்குகின்றன. போட்டோ மற்றும் விடியோ எடிட்டர் மற்றும் டாகுமென்ட் வியூவர்கள் தரப்பட்டுள்ளன. இதன் லித்தியம் அயன் பேட்டரி 2,600 mAh திறன் கொண்டதாக உள்ளது.
இதன் அதிக பட்ச விலை ரூ. 9,890. ஸ்நாப் டீல் வர்த்தக இணைய தளத்தில் கிடைக்கிறது.

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X