கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
00:00

கேள்வி: குரோம் பிரவுசரை இணையத் தேடலுக்குப் பயன்படுத்தி வருகிறேன். சில வேளைகளில் செட்டிங்ஸ் மாற்றுவதற்காக, அதனைத் தேடி கிளிக் செய்கையில், அது ஏற்கனவே இருக்கும் பக்கத்தில், கூடுதலாக ஒரு டேப்பில் திறக்கப்படுகிறது. இதற்குப் பதிலாக, செட்டிங்ஸ் பக்கத்தினைப் புதிய விண்டோவில் திறக்குமாறு, எங்கு செட்டிங்ஸ் அமைக்கலாம்?
பேரா. ஏ.கே. ஸ்ரீனிவாஸ், கோவை.
பதில்:
மிக நல்ல கேள்வி. எதற்காக, குரோம் செட்டிங்ஸ் கூடுதலாக இன்னொரு டேப்பில் திறக்கப்பட வேண்டும்? என்ற வினா சரியானதே. நிறைய எண்ணிக்கையில் இணைய தளப் பக்கங்களைப் பல்வேறு டேப்களில் திறந்திருக்கையில், கூடுதலாக இன்னொரு டேப் தேவையில்லையே. இதற்கான செட்டிங்ஸ் அமைப்பு இல்லை. ஆனால், கீழே குறிப்பிட்டுள்ள வகையில் செயல்பட்டால், உங்கள் விருப்பம் நிறைவேறும். இதற்கு Chrome flags பக்கத்தில் உள்ள செட்டிங்ஸ் அமைப்பினைப் பயன்படுத்தலாம். குரோம் பிரவுசரில், முகவரிக் கட்டத்தில் chrome://flags/#enable-settings-window என்று டைப் செய்து என்டர் தட்டவும். இப்போது, “Show settings in a window” என்பது மஞ்சள் நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுக் காட்டப்படும். இதன் கீழ் விரி பட்டியலில் “Show settings in a window” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், இதனை அழுத்தக் கிடைக்கும் மெனுவில், Enabled என்பதைக் கிளிக் செய்திடவும். தொடர்ந்து பிரவுசர் விண்டோவின் கீழாக உள்ள “Relaunch Now” என்பதில் கிளிக் செய்திடவும்.
இதனைத் தொடர்ந்து, குரோம் பிரவுசரைத் திறந்த பின்னர், வலதுபுறம் மேலாக உள்ள மெனு கட்டத்தில் கிளிக் செய்து, Settings தேர்ந்தெடுத்தால், அது புதிய விண்டோவில் திறக்கப்படும். உங்கள் விருப்பம் நிறைவேறி இருப்பதைக் காணலாம்.

கேள்வி: வேர்டில் புதிய வாக்கியங்களைத் தொடங்குகையில், தானாகவே, ஆங்கிலத்தில் கேபிடல் லெட்டர் என்னும் பெரிய எழுத்தில் தொடங்குகிறது. நான் என் டாகுமெண்ட்களில் நிறைய டேபிள்களைப் பயன்படுத்துகிறேன். இதிலும், செல்களில் அமைக்கப்படும் சொற்களில், முதல் சொல்லின் முதல் எழுத்தை கேபிடல் எழுத்தாக அமைக்க விரும்புகிறேன். இதனை எப்படி செட் செய்வது?
எல். சவுந்தர்யா, திருப்பூர்.
பதில்:
வேர்ட் புரோகிராமில் இதற்கான செட்டிங்ஸ் அமைக்கலாம். இதனை ஓர் AutoCorrect ஆப்ஷனாக வேர்ட் கொண்டுள்ளது. முதலில், வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும்.
1. இதற்கு, நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துவதாக இருந்தால், ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழாக உள்ள Word Options என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 அல்லது பின்னர் வந்த தொகுப்புகளில், ரிப்பனில் File டேப் அழுத்தி, அடுத்து, Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. அடுத்து கிடைக்கும் திரையில், இடது பக்கம் உள்ள Proofing என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் திரையில், Auto Correct Options என்பதில் கிளிக் செய்திடுக.
3. வேர்ட் Auto Correct டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் AutoCorrect என்னும் டேப் திறந்திருப்பதை உறுதி செய்து கொள்க.
4. இங்கு Capitalize First Letter of Table Cells என்று இருப்பதில் உள்ள செக் பாக்ஸில், டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். அடுத்து ஆட்டோ கரெக்ட் மற்றும் வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸ்களை, ஓகே அழுத்தி வெளியே வரவும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தினைப் பதிந்து இயக்கி வருகிறேன். தற்போது ஆகஸ்ட் 02ல், விண்டோஸ் 10 ஓராண்டு நிறைவு அப்டேட் வர இருப்பதாகத் தெரிந்து கொண்டேன். இதனை எப்படி என் கம்ப்யூட்டரில் அமைப்பது? இதனால், சிக்கல்கள் வருமா? வந்தால் என்ன செய்வது?
ஆ. வெண்ணிலா, சேலம்.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், தானாக அப்டேட் செய்வது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதை நீங்களாக மாற்றி இருந்தால், நீங்களாக அப்டேட் செய்திட வேண்டியதிருக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் அப்டேட் தானாகச் செயல்படும்படி அமைத்து, இணைய இணைப்பும் இருந்தால், தானாகவே அப்டேட் செய்யப்படும். பின்னர், இன்ஸ்டால் செய்திடுகையில், உங்கள் அனுமதி கேட்டு செயல்படுத்தப்படும். இல்லை எனில், நீங்களாகவும் இதனை அப்டேட் செய்திடலாம். இந்த இதழில் இது குறித்து விரிவான கட்டுரை ஒன்று தரப்பட்டுள்ளது. நாமாக அப்டேட் செய்திட, Settings > Updates & Security > Windows Update என்று செல்லவும். Windows Update பகுதியில், Check for Updates என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின்னர், டவுண்லோட் செய்திடவும், இன்ஸ்டால் செய்திடவும், இறுதியாக ரீ ஸ்டார்ட் செய்திடவும் உங்கள் அனுமதி கேட்கும். அவசியம் இதனை மேற்கொள்ளவும். மேலே சொன்ன கட்டுரையில், இதற்கான வழிமுறைகள் தரப்பட்டுள்ளன.

கேள்வி: டாகுமெண்ட்களில் அமைக்கும் டேபிள்களில் சில செல்களில், அவற்றின் தரப்படும் டேட்டாவின் தன்மைக்கேற்ப, அல்லது டெக்ஸ்ட்டின் நிலைக்கேற்ப வண்ணத்தில் கட்டம் அமைக்க விரும்புகிறேன். அதற்கான வழிகள் என்ன?
சா. ஜனார்தன் ஸ்ரீதர், திருப்பூர்.
பதில்:
வேர்ட் இதற்கான எளிய வழிகளைக் கொண்டுள்ளது. முதலில், நீங்கள் அமைத்துள்ள டேபிளில், எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டைச் சுற்றி வண்ணக் கட்டம் அமைக்க வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர், ஹோம் ரிப்பனில், பாராகிராப் (Paragraph) பிரிவில், இறுதியாகக் கொடுத்துள்ள Bottom Border என்ற டூலில் கொடுத்துள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் மெனுவில் இறுதியாக Borders and Shading என்று இருப்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Borders and Shading டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் Borders என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் பலவகை பார்டர் கோடுகள் கொண்ட கட்டங்கள், உங்கள் விருப்பத் தேர்வுக்காகத் தரப்பட்டிருக்கும். நீங்கள் விரும்பும் பார்டர் கட்டத்தினைத் தேர்ந்தெடுக்கவும். பார்டர் கோடுகளின் அளவு எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுக்கலாம். அடுத்து Color என்பதில் கிளிக் செய்தால், பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம். அதன் பின்னர், இந்த தேர்வினை டேபிள் முழுவதும் அமைக்க வேண்டுமா அல்லது குறிப்பிட்ட செல் மட்டும் அமைக்க வேண்டுமா என்பதனை Apply To என்பதன் கீழ் தேர்ந்தெடுத்து, பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இப்போது நீங்கள் குறிப்பிட்ட செல்லில் உள்ள டெக்ஸ்ட், தேர்ந்தெடுக்கப்பட்ட வண்ண பார்டரில் அமைந்திருக்கும்.

கேள்வி: அப்ளிகேஷன் புரோகிராம்களுக்கு ஷார்ட் கட் உருவாக்கி, விரைவாக அவற்றை இயக்குவது போல, இணைய தளம் ஒன்றுக்கு, ஷார்ட் கட் உருவாக்கி, பிரவுசரைத் திறக்க்கும் வேலை இல்லாமல், அந்த தளத்தினைத் திறக்க இயலுமா? அதற்கான வழிகள் என்ன?
என். கார்த்திகா, நெய்வேலி.
பதில்:
நல்ல கேள்வி. ஒரு சிலர், குறிப்பிட்ட இணைய தளம் ஒன்றைத் திறந்து வைத்துக் கொண்டுதான், தங்கள் அலுவலகப் பணியினைத் தொடங்குவார்கள். ஒரு குறிப்பிட்ட இணைய தளம் என்றால், பிரவுசர் திறக்கப்படுகையில், குறிப்பிட்ட இணைய தள முகவரியை அதன் செட்டிங்ஸ் அமைப்பில் தந்துவிட்டால், பிரவுசர் திறக்கப்படுகையில், அந்த இணையதளம் திறக்கப்பட்டு இயக்கப்படும். ஆனால், வேறு பல இணைய தளங்கள் தேவை என்றால், அவற்றிற்கு ஷார்ட் கட் அமைப்பதே சிறந்த வழியாகும். இதற்குக் கீழ்க்குறித்துள்ள முறையில் செயல்படவும். இந்த செயல்முறையினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர், குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களில் செயல்படுத்தலாம். இதனை மேற்கொள்கையில், உங்கள் பிரவுசர் விண்டோ மற்றும் டெஸ்க்டாப் தெரியும்படி அமைக்க வேண்டும்.
உங்களுடைய பிரவுசரின் முகவரி கட்டத்தில், முகவரியை அடுத்து ஒரு சிறிய ஐகான் தரப்பட்டிருக்கும். இது சில பிரவுசர்களில் வேறு இடத்தில் இருக்கலாம். குறிப்பிட்ட தளம் சென்ற பின்னர், அந்த ஐகானில் கிளிக் செய்து, அப்படியே இழுத்து வந்து, டெஸ்க்டாப் திரையில் விட்டுவிடவும். உடனே, அதற்கான ஷார்ட்கட் ஐகான் உருவாக்கப்படும். அடுத்த முறை, இதில் டபுள் கிளிக் செய்தால், உங்களின் மாறா நிலையில் உள்ள பிரவுசர் திறக்கப்பட்டு, இந்த இணைய தளம் கிடைக்கும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்திற்கு மாறச் சொல்லி கிடைக்கும் பாப் அப் செய்தியில் கிளிக் செய்து, சிஸ்டம் அப்கிரேட் செய்திடலாமா? அல்லது மைக்ரோசாப்ட் இணைய தளம் சென்று, தேடி, அதில் உள்ள அப்கிரேட் பட்டன் மூலம் விண் 10 பெறலாமா? இதில் எது பாதுகாப்பானது? நான் ஏற்கனவே என் கம்ப்யூட்டரில் உருவாக்கி வைத்துள்ள பைல்களுக்குச் சேதம் விளைவிக்கப்படுமா?
என். தெய்வசுந்தரம், பெருங்களத்தூர்.
பதில்:
பாப் அப் செய்திக் கட்டம் என்று நீங்கள் சொல்வது, டாஸ்க் பாரில் கிடைக்கும் விண்டோஸ் அப்கிரேட் நோட்டிபிகேஷன் தான் என நினைக்கிறேன். இதுதான் மிகவும் பாதுகாப்பான சிறந்த வழி. உங்கள் பிரவுசரில் காட்டப்படும் வேறு எந்த அப்கிரேட் பட்டன் மீதும் கிளிக் செய்திட வேண்டாம். பாப் அப் கட்டத்தில் காட்டப்படும் விண்டோஸ் ஐகானில் கிளிக் செய்தால், உடன் நீங்கள் அப்கிரேட் செய்வதற்காக, மைக்ரோசாப்ட் தன் தளத்தில் உருவாக்கியுள்ள பக்கத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கு, அப்கிரேட் தொடங்கவா? என்று கேட்கப்படும். அந்த நேரத்தில் நீங்கள் தயார் என்றால், உடனே அதில் கிளிக் செய்து அப்கிரேட் பணியை மேற்கொள்ளலாம். அல்லது பின் ஒரு நேரத்தில் மேற்கொள்ள என்ற பட்டனை அழுத்தி ஒத்தி போடலாம். இதன் வழி அப்கிரேட் செய்யப்படுகையில், உங்கள் கம்ப்யூட்டரில் எந்த பைலும் கெட்டுப் போகாது. நீக்கப்பட மாட்டாது. இருப்பினும், மிக முக்கியமான, அன்றாட பணிக்குத் தேவையான, அண்மையில் உருவாக்கப்பட்ட பைல்களுக்கு பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்வது நலம்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களில் அமைக்கும் டேபிள்களில், அதன் செல்களில் உள்ளீடு செய்த டேட்டாவின் மதிப்பு மாறுகையில், படுக்கை வரிசையை அப்படியே இடம் மாற்றி அமைக்க வேண்டியதுள்ளது. இதனைச் சரியாக அமைக்க முடியவில்லை. புதிதாக வரிசை அமைத்து, உள்ளீடு செய்து, பின்னர் பழைய வரிசையை நீக்க வேண்டியதுள்ளது. எளிதாக, படுக்கை வரிசைகளை முன்னும் பின்னும் நகர்த்துவது எப்படி? இதற்கான வழி எங்குள்ளது?
என். காமராஜ், தென்காசி.
பதில்
: வேர்டில் இதற்கான வழிகள் எளிமையானவையாகவே தரப்பட்டுள்ளன. கிளிப் போர்ட் வழியாக இதனை மேற்கொள்வது ஒரு வழி. வேறு ஒரு வழியும் உள்ளது. இரண்டையும் தருகிறேன்.
1. எந்த படுக்கை வரிசையை நகர்த்த வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
2. பின் Ctrl+X அழுத்துங்கள். அல்லது ஹோம் ரிப்பனில், Cut டூல் மீது கிளிக் செய்திடுங்கள். இது, வரிசையை அப்படியே கிளிப் போர்டுக்குக் கொண்டு செல்லும்.
3. அடுத்து, இந்த வரிசையை எந்த வரிசையின் முன்பாக வைத்திட வேண்டுமோ, அந்த வரிசையில் கர்சரை வைத்திடவும்.
4. இப்போது Ctrl+V அழுத்தவும். அல்லது ஹோம் ரிப்பனில் Paste டூல் மீது அழுத்தவும். நீக்கப்பட்ட வரிசை அங்கு ஒட்டப்படும்.
இன்னொரு எளிய வழி தருகிறேன். நகர்த்த வேண்டிய வரிசையில், எந்த செல்லிலாவது கர்சரை அமைக்கவும். அடுத்து Shift+Alt அழுத்தியவாறே அம்புக் குறி கீகளை முன்னும் பின்னும் நகர்த்தி, எங்கு அந்த வரிசையை அமைக்க வேண்டுமோ, அங்கு கீகளை விட்டுவிடவும். வரிசை நகர்ந்துவிடும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X