குரோம் பிரவுசருக்கான பயன் குறிப்புகள்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஆக
2016
00:00

விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள தளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல வசதிகளையும் அனுபவிக்கலாம். இந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல் பயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை மிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு காணலாம்.

டேப்களை பின் செய்திடுக
குரோம் பிரவுசரில் பல இணைய தளங்களைத் திறந்து இயங்கிக் கொண்டிருக்கையில், எந்த இணைய தளம், எந்த டேப்பில் திறக்கப்பட்டுள்ளது என்பதை அறிவது சற்று சிரமமான வேலையாக இருக்கும். இந்த சிக்கலிலிருந்து விடுபட, முக்கியமான இணைய தளம் உள்ள டேப்பில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், 'Pin Tab' என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இது ஒரு ஐகானாக மாற்றப்படும். எடுத்துக் காட்டாக, ஜிமெயில் டேப் உள்ள இடத்தில், கூகுள் ஐகான் காட்டப்பட்டால், அதனைத் தேர்ந்தெடுப்பது எளிதுதானே. இதனை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வர, அதே ஐகானில், ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், Unpin Tab என்பதைத் தேர்ந்தெடுத்தால் போதும்.

ஐகானுடன் புக்மார்க்
குரோம் பிரவுசரில், நாம் அதிகம் விரும்பிப் பயன்படுத்தும் இணைய தளங்களின் முகவரிகளை நாம் குறித்து வைத்துக் கொள்கிறோம். இவை 'Bookmark' என்ற வகையில் பட்டியலாக அடுக்கப்பட்டு நமக்குக் கிடைக்கின்றன. இணைய தள முகவரிகளை அமைப்பதற்குப் பதிலாக, இந்தப் பட்டியலில், குறிப்பிட்ட இணைய தளம் குறித்த குறிப்பைத் தேடி கிளிக் செய்து பெறலாம். இந்தக் குறிப்பு டெக்ஸ்ட்டில் அமைக்கப்படுவதால், அவற்றை தேடிப் பெறுவதில் சிறிது நேரம் ஆகலாம். முந்தைய குறிப்பில் சொல்லப்பட்டது போல, இவற்றையும் ஐகான் கொண்டு அடையாளப் படுத்தலாம். இதற்கு, குறிப்பிட்ட புக் மார்க் கட்டத்தில் உள்ள நட்சத்திர அடையாளத்தில் கிளிக் செய்திடவும். அல்லது CTRL + D அழுத்தி, குறிப்பில் உள்ள டெக்ஸ்ட்டை நீக்கவும். தொடர்ந்து “Finished” பட்டனில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட புக்மார்க், அதற்கான ஐகானுடன் சேவ் செய்யப்படும். உங்களுக்கும் அதனை அடையாளம் கொண்டு பெறுவது எளிதானதாகவும், நேரம் மிச்சப்படுத்தும் வசதியாகவும் அமையும்.

பி.டி.எப். கோப்பின் பாஸ்வேர்ட் நீக்க
இணையத்திலிருந்து அல்லது நண்பர்களிடமிருந்து, அரசு அலுவலகத்திலிருந்து, பாஸ்வேர்ட் இணைந்த ஒரு பி.டி.எப். வடிவில் உள்ள கோப்பு ஒன்றைப் பெறுகிறீர்கள். முதல் முறை பாஸ்வேர்ட் நினைவில் இருக்கும். திறந்து பயன்படுத்துவோம். பின்னர், சில நாட்கள் கழித்துத் திறந்து படிக்க எண்ணுகையில், பாஸ்வேர்ட் சரியாக நினைவில் இருக்காது. அதனைப் பயன்படுத்தினால் மட்டுமே, நாம் அந்த கோப்பினைத் திறந்து பார்க்க இயலும், இந்தச் சூழ்நிலையில், அந்தக் கோப்புடன் இணைந்த பாஸ்வேர்டினை, குரோம் பிரவுசர் உதவியுடன் நீக்கி, பாஸ்வேர்ட் இல்லாமலேயே படிக்க இயலும் வகையில் மாற்ற முடியும். இதற்கு, பாஸ்வேர்ட் மூலம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கோப்பினை இழுத்து வந்து, குரோம் பிரவுசரில் விடவும். பாஸ்வேர்ட் கொடுத்து அதனைத் திறக்கவும். இனி, CTRL+P அழுத்தவும். உடன் பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அடுத்து, “Destination” என்பதன் கீழ் உள்ள, Change என்பதில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து “Local Destination” என்பதில் “Save as PDF” என்பதில் கிளிக் செய்திடவும். இனி, இந்த கோப்பிற்கு பாஸ்வேர்ட் தேவை இருக்காது. இதனை நீங்கள் மற்றவர்களுடன், பாஸ்வேர்ட் இல்லாமலேயே, பகிர்ந்து கொள்ளலாம்.

அண்மையில் பார்த்த தளங்கள்
குரோம் பிரவுசரில், நாம் அண்மையில் பார்த்த இணைய தளப் பக்கங்களின் முகவரிகள் பட்டியலிடப்பட்டு History என்ற பிரிவில் கிடைக்கும். எனவே, ஏற்கனவே பார்த்த இணைய தளங்களைப் பார்வையிட இந்தப் பிரிவு செல்ல வேண்டும். இதற்கு Ctrl+H அழுத்தி, அந்தப் பிரிவினைத் திறந்து, நாம் பார்க்க விரும்பும் தள முகவரியைத் தேடி கிளிக் செய்திட வேண்டும். இந்த வேலைகளைக் குறைத்து, எளிதாக்க, குரோம் பிரவுசர் ஒரு வழியைத் தருகிறது. அண்மையில் திறந்து பார்த்த இணையப் பக்கங்களைக் காண குரோம் பிரவுசரின் பின்புறம் செல்வதற்கான பட்டனைத் தேர்ந்தெடுத்து அழுத்தவும். அண்மையில் பார்த்த பத்து தளங்களின் முகவரி கிடைக்கும். இதில் நீங்கள் பார்க்க வேண்டிய தளத்தின் முகவரியை எளிதாகத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து பார்க்கலாம்.

டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்து தேட
குரோம் பிரவுசரில், ஏதேனும் கட்டுரை ஒன்றைப் படிக்கையில், அதில் குறிப்பிட்ட சொற்கள் அடங்கிய டெக்ஸ்ட் ஒன்று வேறு எந்த இடங்களில் எல்லாம் உள்ளது என்று பார்க்க விருப்பப்படுவோம். இதற்கு அந்த டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, பின் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில், “Search Google for” என்பதைத் தேர்ந்தெடுப்போம். நேரத்தை மிச்சப்படுத்த, தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட்டை இழுத்து வந்து, குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் விட்டுவிட்டால், நாம் தேடிய டெக்ஸ்ட் இருக்கும் இடங்கள் காட்டப்படும்.

கணக்கிடுதல்
குரோம் பிரவுசரில், Omnibox என அழைக்கப்படும் முகவரிக் கட்டம், ஒரு கால்குலேட்டராகவும் செயல்படும். கூகுள் கால்குலேட்டரைப் பெற்று, அதில் கணக்குகளைச் செயல்படுத்தாமல், அடிப்படைக் கணக்குகளை, குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்திலேயே அமைத்து விடை பெறலாம். இதே போல, அலகுகளை மாற்றிக் காண்பதற்கும் (Unit Conversion) இதனைப் பயன்படுத்தலாம். உடன் தேடல் கட்டம் திறக்கப்பட்டு உங்களுக்கான விடைகள் கிடைக்கும்.

ஒலி வழி தேடல்
தேடல் கட்டத்தில், நாம் டெக்ஸ்ட் அமைத்துத் தேடுவோம். இதற்குப் பதிலாக, தேடல் கட்டத்தில் உள்ள மைக் ஐகானில் கிளிக் செய்து, நாம் தேட வேண்டியதைச் சரியாகக் கூறினால், பதில் கிடைக்கும். ஏதேனும் ஓர் இணைய தளத்தினைத் திறக்க வேண்டும் என்றாலும், இதில் “கேட்டுப்” பெறலாம்.

இணையப் பக்கத்தினை பி.டி.எப். பைலாக மாற்ற
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இணையப் பக்கத்தினை, அப்படியே பி.டி.எப். வடிவில் மாற்ற, அதனைக் காப்பி செய்து, பின் பி.டி.எப். வடிவில் மாற்றித் தரும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் எல்லாம் திறந்து பயன்படுத்த வேண்டியதில்லை. குரோம் பிரவுசர் இதற்கான திறனைக் கொண்டுள்ளது. முதலில் அந்த இணையப் பக்கத்தினைத் திறந்து கொள்ளுங்கள். பின் CTRL+P அழுத்தவும். இனி, பிரிண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில், பிரிண்ட் எப்படி இருக்க வேண்டும் (Print Destination) என்பதில், “Save as PDF” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து சேவ் பட்டன் அழுத்தினால், நீங்கள் தேர்ந்தெடுத்த இணையப் பக்கம், பி.டி.எப். வடிவில் சேவ் செய்யப்படும்.
கூகுள் குரோம் பிரவுசர், ஒவ்வொரு இணைய தளப் பக்கத்தையும் பதிவு செய்து “கேஷ்” பைலாக வைத்துக் கொள்கிறது. உங்கள் இணைய இணைப்பின் வேகத்தில் பிரச்னை ஏற்பட்டு, ஓர் இணையதளப் பக்கம் திறப்பதில் அதிகமான நேரம் எடுத்துக் கொள்ளப்படுகிறது என்றால், கூகுள் சேவ் செய்து வைத்துள்ள கேஷ் பைலில் இருந்து பெற்றுப் பார்க்கலாம். இதற்கு, முகவரிக் கட்டத்தில், “cache: website” என டைப் செய்திடவும். Website என்ற இடத்தில், குறிப்பிட்ட இணைய தள முகவரியை அமைக்கவும். அந்த இணைய தளப் பக்கத்தின், அண்மைக் காலத்திய சேவ் செய்யப்பட்ட கேஷ் பைல் திறக்கப்பட்டு, அப்பக்கம் காட்டப்படும்.

பின் தொடராதே
கூகுள் குரோம் பிரவுசர் மூலம் நாம் இணைய தளங்களைப் பார்க்கையில், நம் தேடல்கள் அனைத்தையும், குரோம் பதிவு செய்து கொள்கிறது. அந்த அடிப்படையிலேயே, கூகுள் நீங்கள் பயன்படுத்தும் அனைத்து தளங்களிலும், நீங்கள் தேடும் பொருட்கள் குறித்த விளம்பரங்களை, நீங்கள் கேட்காமலேயே காட்டுகிறது. எடுத்துக் காட்டாக, ஒரு 'டி.வி.' வாங்குவதற்காக, நீங்கள் இணைய தளத்தில் தேடி இருந்தால், நீங்கள் பார்க்கும் மற்ற இணைய தளங்களின் இடையே, கூகுள் தன்னிடம் டி.வி. நிறுவனங்கள் கொடுத்த விளம்பரங்களைக் காட்டும். இதில் என்ன வேடிக்கை என்றால், நீங்கள் 'டி.வி.' வாங்கிய பின்னரும் இந்த விளம்பரங்கள் உங்கள் தேடலில் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். இதனை நிறுத்து என்று கூகுள் நிறுவனத்திடம் சொல்ல முடியாது, உங்களின் தேடல்களைப் பதிவு செய்து கொள்வதனால் தானே, இந்த விளம்பரங்கள் தொடர்ந்து காட்டப்படுகின்றன. இந்த பதிவுகளை நிறுத்திவிட்டால் வராது அல்லவா! அதற்காக குரோம் பிரவுசர் தரும் வழிகளைக் காணலாம். இதற்கு 'Do Not Track' என்னும் ஆப்ஷனை இயக்கி வைக்க வேண்டும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்ள, வலது மேல்புறம் உள்ள மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில், 'Settings' என்பதில் கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் பக்கத்தில், கீழாகச் சென்று, “Show advanced settings” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு காட்டப்படும் பிரிவுகளில், Privacy என்ற பிரிவின் கீழ், Send a 'Do Not Track' request with your browsing traffic என்பதன் அருகே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஒன்றை ஏற்படுத்தவும். பின்னர், ஓ.கே. கிளிக் செய்து வெளியேறவும்.

குறிப்புகள் எழுத
கூகுள் குரோம் பிரவுசரில், இப்போது, குறிப்புகள் எழுத தனியே எந்த ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராமினையும் பதிந்திட வேண்டியதில்லை. உங்கள் பிரவுசரின் முகவரி கட்டத்தில் data:text/html,<html contenteditable> என்று டைப் செய்து என்டர் தட்டவும். உடன், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் விண்டோ நீங்கள் எடிட் செய்திடும் வகையில் கிடைக்கும். எங்கு நீங்கள் குறிப்பு எழுத வேண்டுமோ, அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று வைத்து, எழுதலாம்.
மேலே காட்டப்பட்டுள்ள குறிப்புகள் அனைத்தும், குரோம் பிரவுசரை நாம் பயன்படுத்துகையில், விரைவாக நமக்குத் தேவையான வசதிகளைப் பெறும் வகையில் தரப்பட்டவையே. இது போன்ற பல குறிப்புகள் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கின்றன. வாசகர்கள், அவர்கள் தேவைக்கேற்ற குறிப்புகளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X