விண்டோஸ் 10 மேம்படுத்தலுக்குப் பின்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2016
00:00

மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு, சென்ற ஆகஸ்ட் 02 அன்று, பெரிய அளவில் அப்கிரேட் செய்திடும் வகையில் பைல்களைத் தந்தது. சென்ற இதழில் இந்த மேம்படுத்தல் மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சில வாசகர்கள் அதனைப் பின்பற்றி மேம்படுத்தலை மேற்கொண்டதாக எழுதியுள்ளனர். சிலர், இதனால் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். இவர்களுக்கான வழிப்படுத்தும் வகையிலான சில தகவல்களை இங்கு தருகிறேன்.
ஆகஸ்ட் 02 மேம்படுத்தலை மேற்கொண்ட ஒவ்வொருவரும், தங்கள் கம்ப்யூட்டரில் கீழே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
1. விண்டோஸ் 10 உங்களுடைய சில சாட்ப்வேர் அப்ளிகேஷன்களை செயல் இழக்கச் செய்திடுக்கும். எனவே, உங்களுடைய சாப்ட்வேர் அனைத்தும் நன்றாகச் செயல்படுகின்றனவா என்று ஒருமுறை சோதித்துப் பார்க்கவும். குறிப்பாக, பாதுகாப்பு தரும் சாப்ட்வேர் அப்ளிகேஷன் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் தொடர்ந்து நன்றாக, முன்பு போல இயங்குகின்றனவா என்று பார்க்கவும். சில கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 10 மாறா நிலையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்ட புரோகிராம்களை மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, நீங்கள் பயன்படுத்தும் பிரவுசருக்குப் பதிலாக, எட்ஜ் பிரவுசரை மாறா நிலையில் இயங்கும் பிரவுசராக அமைத்திருக்கலாம். இதில் எது உங்களுக்குத் தேவை என்று பார்த்து அதனை மாறா நிலையில் அமைத்துக் கொள்ள வேண்டும். இப்படியே, அனைத்து சாப்ட்வேர் செயலிகளையும் சோதனை செய்திடவும்.
2. அப்கிரேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரை வந்தடைய வேண்டும் என நீங்கள் செட் செய்ததனை, இந்த அப்கிரேட் மாற்றியுள்ளதா எனப் பார்க்கவும். நீங்கள் விரும்பினால், Windows Update Delivery Optimization என்பதைச் செயல்படாமல் வைத்திட, ஸ்லைடரை இயங்கா நிலைக்குத் தள்ள வேண்டும்.
3. விண்டோஸ் 10ல் தரப்பட்டுள்ள Notifications and Action Center ஆகியவற்றைச் சோதனை செய்திடவும். அதில் நீங்கள் முடிக்க வேண்டிய செயல்பாடுகள் இருந்தால், அவை குறித்த தகவல்களைப் பெறவும். பின்னர் அவற்றை முடிக்கவும்.
4. நீங்கள் ஏற்கனவே Windows 10 Upgrade Assistant என்னும் செயலியை அப்கிரேட் செய்வதற்கு எனப் பயன்படுத்தி இருந்தால், அதனை கண்ட்ரோல் பேனல் மூலம் இயங்கா நிலைக்குக் கொண்டு செல்லவும். அல்லது அன் இன்ஸ்டால் செய்திடலாம்.
5. மேம்படுத்தலுக்கு முன்னர், கார்டனா, ஒலி வழியாகவோ, டெக்ஸ்ட் வழியாகவோ செயல்பட்டு, தற்போது மேம்படுத்தலுக்குப் பின்னர் செயல்படுவது நிறுத்தப்பட்டுள்ளத எனப் பார்க்கவும். பலர் இது போன்ற குறையினைத் தெரிவித்துள்ளனர். அப்படி இருந்தால், அதனை இயக்க நிலைக்குக் கொண்டு வரவும்.
6. எட்ஜ் பிரவுசரை நீங்கள் அவசியம் சோதனை செய்திட வேண்டும். இந்த பெரிய அளவிலான மேம்படுத்தலில், எட்ஜ் பிரவுசரில் தான் அதிக அளவில் மாற்றங்கள் தரப்பட்டுள்ளன. எனவே, அவை அனைத்தும் சரியாக மேம்படுத்தப்பட்டுள்ளதா எனச் சோதனை செய்திடவும். குறிப்பாக, எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திட முடிகிறதா எனச் சோதனை செய்திடவும்.
7. விண்டோஸ் டிபண்டர் (Windows Defeder) செயலியின் செட்டிங்ஸ் பார்க்கவும். இதனை மாறா நிலையில், உங்கள் கம்ப்யூட்டருக்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாக இதனைப் பயன்படுத்தி இருந்தால், அமைப்பு நிலைகள் மாற்றப்பட்டு மேம்படுத்தப்பட்டுள்ளதா எனப் பார்க்கவும். வேறு ஒரு நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருந்தால், Limited Periodic Scanning என்பதனை இயக்கி வைத்திட வேண்டும்.
8. விண்டோஸ் 10 மேம்படுத்தலுக்குப் பின்னர், அதிகமான எண்ணிக்கையில் பைல்களை நீக்க வேண்டி இருந்தால், Disk Clean Up டூல் மூலம் அவற்றைத் தேடி அறியலாம். இந்த டூலில், ரைட் கிளிக் செய்து, Run as Admiistrator என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Previous Windows installation என்ற ஓர் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தவுடன், டிஸ்க் கிளீன் அப் டூல், Windows.old என்ற போல்டரை நீக்கும். மேலும் $Windows.~BT folder என்ற போல்டரையும் நீக்கும்.
9. விண்டோஸ் அப்டேட் செய்திட்ட பின்னர், நீங்களாக லாக் இன் செய்த பின்னரே, கம்ப்யூட்டர் இயக்கப்பட வேண்டும் என்ற ஆப்ஷன் இயங்கா நிலையில் அமைக்கப்பட்டிருந்தால், அதனை இயக்கி வைக்கவும். இது அடுத்து அப்டேட் செய்திடுகையில் உங்களுக்கு உதவும். Use my sign in info to automatically finish setting up my device after an update என்ற இடத்தில், இதனை இயக்கவும்.
10. ஒரு சில வாசகர்கள், தங்கள் சிஸ்டம் ரெஸ்டோர், இந்த மேம்படுத்தலுக்குப் பின் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருப்பதனைச் சோதனை செய்து, அதனை இயக்கி வைத்திட வேண்டும். ஏனென்றால், சிஸ்டம் கிராஷ் ஆனால், இது நமக்குப் பெரும் அளவில் கை கொடுக்கும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X