* அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ந்து 2 முறை தங்கப் பதக்கம் வென்ற வீரர் யார்?
பிரிட்டனின் ஆண்டி முர்ரே, 2016 ரியோ மற்றும் 2012 லண்டன் ஒலிம்பிக்
* இடைமறித்து தகவல்களை திருட முடியாத குவாண்டம் செயற்கைக்கோளை சமீபத்தில் விண்வெளியில் ஏவிய நாடு
சீனா
* 'ஜல் தரங்' என்னும் தேசிய ஒற்றுமைக்கான நீர்வழி இயக்கத்தை துவங்கியுள்ள மாநிலம் எது?
இமாச்சல பிரதேசம்
* பி.எஸ்.ஏ., ஆஸ்திரேலியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியை வென்ற இந்திய வீராங்கனை யார்?
தீபிகா பல்லிகல்
* சில்க் சிட்டி என்னும் பட்டு நகரம் - இந்த நூலை எழுதியவர் யார்?
மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார்
* நாஸ்காம் எனும் சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பு சமீபத்தில் எங்கு தனது ஸ்டார்ட் அப் கிடங்கை துவங்கி உள்ளது?
விசாகப்பட்டினம்
* நமது கடற்படையின் கண்காணிப்புத் திறனை மேம்படுத்திட அமெரிக்காவுடன் நாம் செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி நமக்கு கிடைக்கவுள்ள மேம்பட்ட திறனுடைய போர் விமானம் எது?
போசெய்டன் 8AI
* நியுயார்க் நகரத்தில் உள்ள தமிழ் சங்கம் அளித்த 'தமிழ் ரத்னா' விருதை சமீபத்தில் பெற்றவர்
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்
* சமீபத்தில் பிரிட்டனால் ஏவப்பட்ட உலகின் மிகப் பெரிய விமானம் ஏர்லேண்டர் எந்த வாயுவை பயன்படுத்துகிறது?
ஹீலியம்