இணையம் காணும் வெள்ளி விழா
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
00:00

“நம் வாழ்க்கை இனி இணையம் இல்லாமல் இயங்க முடியாது” என்ற நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஒட்டு மொத்த மனித இனத்தின் அறிவைத் தேக்கி வைத்திருக்கும் இடமாக இன்று இணையம் உயர்ந்திருக்கிறது.
இணையம் ~~ இங்கு தான் நாம் பார்க்காமலேயே அதிக மக்களைச் சந்திக்கிறோம், உரையாடுகிறோம்; நேரில் சந்திக்காத மனிதர்களை எல்லாம், நம் உறவாகக் கொண்டு அன்பு செலுத்துகிறோம்; நம் எண்ணங்களை இந்த உலகு அறியத் தருகிறோம்; நம் உணவை, நமக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறோம்; நம் தொழிலை, சேவையை மேற்கொள்கிறோம்; நம் வருமானத்தை நிர்வகிக்கிறோம். இதில் தான் வசிக்கிறோம்; இதனையே சுவாசிக்கிறோம். இந்த அளவிற்கு நம்மைக் கட்டிப்போட்டு, அதன் உலகத்தில் இழுத்துப் போட்டு, நம் வாழ்க்கைக்கு ஒரு புதிய பரிமாணத்தை வழங்கிய இணையம், 1991ல் செயல்படத் தொடங்கி, சென்ற ஆகஸ்ட் 6 அன்று, தன் துடிப்புள்ள உயிரோட்டத்தில் 25 ஆண்டு கண்டுள்ளது. வெள்ளிவிழா காணும் இதனை நமக்குத் தந்த டிம் பெர்னர்ஸ் லீ மற்றும் அவரைத் தொடர்ந்து செயல்பட்ட அனைத்து இணைய வல்லுநர்களுக்கும் நாம் நன்றி செலுத்தக் கடன் பட்டிருக்கிறோம்.
“கல்வி சார்ந்த தகவல்கள் அனைத்தும், அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்க வேண்டும்” என்ற உன்னத நோக்கத்தின் ஒரு விடையாகத்தான் இணையம் தோன்றியது. முதல் இணைய தளத்தையும் அதனைத் தேடி அறிய பிரவுசரையும் தந்தவர் டிம் பெர்னர்ஸ் லீ. URL, HTML, மற்றும் HTTP போன்ற பெயர்
களுக்கெல்லாம் பிரம்மா அவரே. தொடக்கத்தில் இணையம், யார் வேண்டுமானாலும் மேம்படுத்தக் கூடிய தகவல் மையமாகவும், அனைவரும் தங்களுக்குத் தேவையான தகவலைத் தேடி எடுத்துக் கொள்ளக் கூடிய தகவல் களஞ்சியமாகவும் தான் வடிவமைக்கப்பட்டது. இந்த நோக்கத்துடன் 1989ல் பணியாற்றத் தொடங்கி, 1990ஆம் ஆண்டு இதனை வடிவமைத்து சோதனை செய்திட்டார் பெர்னர்ஸ் லீ. தகவல் மையமாக அமைந்தாலும், அங்கு அந்த தகவல் உள்ளது என எப்படி அறிவது? என்ற கேள்வி, அதன் அடுத்த பரிமாணத்தை அமைத்தது.
இந்தக் கேள்விக்கான விடையை, முதலில் உருவான இணைய நிறுவனங்களில் ஒன்றான யாஹூ தந்தது. ஸ்டான் போர்டு பல்கலையின் மாணவரான ஜெர்ரி யங் மற்றும் தொழில் நுட்ப வல்லுநரான டேவிட் பைலோ இணைந்து, இணைய தளங்களின் பட்டியலை உருவாக்கினார்கள். வகை வகையாக இணைய தளங்களைப் பிரித்துக் காட்டினார்கள். இணையத்தின் டைரக்டரியாக அவர்கள் உருவாக்கிய பட்டியல் இருந்தது. அதன் பின்னர், டிஜிட்டல் எக்விப்மெண்ட் கார்ப்பரேசன் (DEC), அல்டா விஸ்டா (Alta Vista) என்ற தேடல் பொறியைத் தந்தது. ஹாட்பாட் (Hot Bot) என்னும் தேடல் சாதனம் அதனைத் தொடர்ந்தது. இன்று கூகுள் தேடல் சாதனத்தின் இமாலய சேவையை அறியாத மக்களே இல்லை எனலாம்.
ஒரு சில சொற்களை அமைத்து, தேவையான தேடல் சாதனத்தில் கொடுத்து, உலகின் அனைத்து இணைய சர்வர்களை உள்ளடக்கிய உலக வைய விரிவலை (World Wide Web) யிலிருந்து தேவைக்கதிகமாகவே தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியத்தை, இணைய வல்லுநர்கள் அளித்து வருகின்றனர். 'வெப்' என அழைக்கப்படும் வைய விரிவலையும் இணையமும் ஒன்றல்ல. இணையம் என்பது, வைய விரிவலையைத் தாங்கிப் பிடிக்கும் கட்டமைப்பாகும். கேபிள்கள், கம்ப்யூட்டர்கள், சர்வர்கள் மற்றும் அவை சார்ந்த அனைத்தும் இணைந்த கட்டமைப்பே இணையமாகும். பல நெட்வொர்க்குகள் இணைந்த நெட்வொர்க் தான் இணையம்.
இன்று ஏறத்தாழ நூற்றுப் பத்து கோடி இணைய தளங்கள் இயங்குகின்றன. 340 கோடி மக்கள் தினந்தோறும் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நிமிடத்திலும், பல கோடி கணக்கில் தகவல்கள் அனுப்பப் படுகின்றன. பல கோடி படங்கள் பரிமாறிக் கொள்ளப் படுகின்றன. குறைந்தது 1.5 கோடி டாலர் மதிப்பில் வர்த்தகம் மேற்கொள்ளப்படுகிறது.
இன்று இணையத்தில் அதிக ஆதிக்கம் செலுத்துவது, சமூக வலைத் தளங்களே. அடுத்தபடியாக தேடல் பொறிகளும், வர்த்தக தளங்களும் உள்ளன. நிலையாக இணைய தளங்கள் இருந்த நிலை மாறி, இன்று நம்மோடு பேசி உறவு கொள்ளும் இணைய தளங்கள் உயிர்த் துடிப்புடன் இயங்குகின்றன. ஆங்கிலம் மட்டுமே இணைய மொழியாக இருந்த நிலை மாறி, உலகின் அனைத்து மொழிகளும் இணையத்தின் மொழிகளாக மக்களுடன் பேசிக் கொண்டிருக்கின்றன. வெறும் தகவல் தளங்களாகத் தொடங்கி, இன்று படங்கள், காணொளிப் படங்கள், நகரும் வரைவுகள் கொண்ட தளங்களாக இணையம் இயங்குகிறது. இணையம் கம்ப்யூட்டரிலிருந்து சற்று விலகிச் சென்று, பல மொபைல் சாதனங்கள் வழியாக மக்களைச் சென்று அடைகிறது.
“எங்கும் எதிலும் இணையம்” (internet of things) என்ற தாரக மந்திரத்தை ஒலிக்கச் செய்து, புதிய இலக்கினை நோக்கி இணையம் சென்று கொண்டிருக்கிறது. நாம் நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் அனைத்து பொருட்களும், இணையத்தில் இணைக்கப்பட்டு, நம் வாழ்வினை சிக்கலற்றதாக மாற்றும் வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் இணையத்தை அணுகும் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளிலேயே இணையத்தின் புதிய சகாப்தம் எழுதப்பட இருக்கிறது. இத்தனைக்கும் வித்திட்ட டிம் பெர்னர்ஸ் லீக்கு நன்றி கூறுவோம். அவரைத் தொடர்ந்து இந்த வைய விரி வலையை, மக்களின் ராஜபாட்டையாக்கிய இணைய வல்லுநர்கள் அனைவரின் உழைப்பையும் நம் சந்ததிக்குப் புரிய வைப்போம்.

* உலகில் மிகச் சிறந்த சாப்ட்வேர் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கினாலும், இன்னும் 86.4 கோடி இந்தியர்கள், இணைய இணைப்பின்றியே வாழ்கிறார்கள். 27% ஆண்கள் இணையத்தைப் பயன்படுத்தும்போது, 17% பெண்களே இணையத்தில் இணைகின்றனர். பெண்களுக்கு இணையம் பாதுகாப்பானது அல்ல என்ற கருத்து, இங்கு நிலவி வருகிறது. மொபைல் போன் பயன்படுத்தும் பெண்கள், சமுதாயத்தோடு ஒட்டிச் செல்லாதவர்கள் என்றும் பலர் கருதுகின்றனர்.
* இந்தியாவில் இணையப் பயன்பாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2000 ஆம் ஆண்டில், 105.34,81,072 மக்களில் 0.5% பேர் (55,57,455) மட்டுமே இணையத்தை அணுகிப் பயன்படுத்த முடிந்தது. 2012 ஆம் ஆண்டில், மொத்த ஜனத்தொகையில் (126,35,89,639) 12.6% பேர் (15,89,60,346) இணையத்தைப் பயன்படுத்தி வந்தனர். இன்று, 2016 ஜூலை 1 அன்று எடுத்த கணக்கின்படி, மொத்த ஜனத்தொகையில் (132,68,01,576) 34,8% பேர் (46,21,24,989) பயன்படுத்தி வருகின்றனர்.
* இந்தியாவில் இணைய சேவை, 15 ஆகஸ்ட் 1995 அன்று, வி.எஸ்.என்.எல். நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. அப்போது பொதுத்துறை நிறுவனமாக இருந்த விதேஷ் சஞ்சார் நிகாம் நிறுவனம் (Videsh Sanchar Nigam Limited (VSNL)) இதனை வழங்கியது. அதற்கென Gateway Internet Access Service (GIAS) என்றொரு பிரிவினை இந்நிறுவனம் அமைத்து, இணைய இணைப்பினை வழங்கியது. ஆறு மாதத்தில் 10 ஆயிரம் பேர் இணைப்பு பெற்றனர். 1995, ஜூலை 31ல், மொபைல் போன் சேவை தொடங்கப்பட்டது.
* இந்தியாவில் இணைய இணைப்பு வழங்குவதற்கான ஆயத்தப் பணிகள் 1986 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. முதலில் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டும் இணைய இணைப்பு பெற Educational Research Network (ERNET) என்ற நெட்வொர்க் அமைக்கப்பட்டது. இந்திய அரசின் எலக்ட்ரானிக்ஸ் துறையும் (Department of Electronics (DOE)) ஐக்கிய நாடுகள் சபையின், நாடுகளின் வளர்ச்சிக்கான United Nations Development Program (UNDP) துறையும் இணைந்து இந்த முயற்சிகளை மேற்கொண்டன.
* பின்னர், 1988ல், அரசின் தேசிய தகவல் மையம் (National Informatics Centre) அரசின் பல்வேறு துறைகளுக்கிடையேயான தகவல் பரிமாற்றத்திற்கென NICNet என்னும் நெட்வொர்க்கினை ஏற்படுத்திச் செயல்படுத்தியது.
* இணைய இணைப்பை ஏற்படுத்தித் தருவதில் வி.எஸ்.என்.எல். தலைவர் கனகசபாபதி பாண்டியன், அந்நிறுவனத்தின் தொழில் நுட்ப இயக்குநர் பி.கே.சிங்கால் மற்றும் அமிதாப் குமார் ஆகியோர் முக்கிய பங்காற்றினர்.
* தொடக்கத்தில் விநாடிக்கு 9.6 கிலோ பிட்ஸ் என்ற அளவில் தொடங்கிய இணைய இணைப்பு வேகம், பின்னாளில் மிக வேகமாக வளர்ந்து தற்போது மெகா பிட்ஸ் என்ற அளவை எட்டியுள்ளது. லீஸ்டு லைன் எனப்படும் தனிப்பட்ட சர்வர் இணைப்பு தற்போது குறைந்த கட்டணத்தில் நொடிக்கு கிகா பிட்ஸ் வேகத்தில் கிடைக்கிறது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X