ஆகஸ்ட் 2 ஆம் நாள், மைக்ரோசாப்ட், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்கிரேட் பைலை வெளியிட்டது. வேறு எந்த கம்ப்யூட்டர் இதழும் இது குறித்த தகவல்களைத் தராத நிலையில், மிகவும் விரிவாகவும், தெளிவாகவும், அதன் வசதிகள் குறித்தும் தகவல்களைத் தந்த கம்ப்யூட்டர் மலர் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகளும் நன்றியும். அப்கிரேட் பிரச்னையை உண்டாக்கிவிடுமோ என்ற அச்சத்தை உங்கள் கட்டுரை போக்கியது.
டாக்டர் மு. தனசேகரன், மதுரை.
எந்த ஒரு சாதனத்தையும் முறையாகப் பராமரிக்க வேண்டும் என்பதனை நெத்தியடியாய் விளக்கும் கட்டுரை அருமையாகவும், பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது. இதனைப் படித்த பின்னர், என் வீட்டில் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோர், அதில் காட்டப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கம்ப்யூட்டரைப் பராமரிக்கத் தொடங்கிவிட்டனர். நன்றி.
எம். சகாதேவன், திருநெல்வேலி.
டிபிராக் செய்வது என்றால் என்ன என்றும், எதற்கு என்றும் புரியாமல் இருந்தேன். மிகவும் எளிமையாக அதனைப் புரிய வைத்தமைக்கு நன்றி. நீங்கள் தந்துள்ள எடுத்துக் காட்டு அருமை.
எஸ். கே. சிவராஜன், பொள்ளாச்சி.
இணைய வரலாறு கட்டுரை அடுத்து நாம் என்ன செய்திட வேண்டும், அரசு இதற்கு எப்படி ஊக்கம் அளிக்க வேண்டும் என்பதனை நன்றாக விளக்குகிறது. கிராமப் புற மக்களுக்கு இணையத்தைக் கொண்டு செல்வதே, நாம் இந்தியாவில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணி என்பது நன்றாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
எம். சுப்பையா முத்துக் குமார், பண்ருட்டி.
விண்டோஸ் 10 மேம்படுத்தியது மட்டுமின்றி, தொடர்ந்து பல டெக்னிக்கலான செயல்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டியது அத்தியாவசியமாகிறது. இனி, கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து ஓரளவாவது தெரிந்திருந்தால் மட்டுமே, கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தலாம் என்பது உறுதி. இந்த நிலையில் உங்களுடைய விளக்கங்கள் நிறைந்த கட்டுரை வாசகர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
பேரா. இஸ்ரவேல், தூத்துக்குடி.
எட்ஜ் பிரவுசர் நீங்கள் குறிப்பிட்டுள்ளது போல, மேம்படுத்தலுக்குப் பின் பல புதிய வசதிகளையும் மாற்றங்களையும் கொண்டதாக உள்ளது. குறிப்பு தந்தமைக்கு நன்றி.
என். காதர் மொஹிதீன், புதுச்சேரி.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்கேற்ற வகையில், டிஜிட்டல் உலகிற்கு அதிகம் அறிமுகமாகாதவர்களுக்கும் எளிய ஒன்றாக அமைந்திருப்பதாலேயே, மக்களால் ஒதுக்கப்படாமல் உள்ளது. அதிகம் பயன்படுத்தப்படும் சிஸ்டமாகவும் இயங்குகிறது. உங்கள் கட்டுரைத் தலைப்பு குறிப்பிடுவது போல, ஆண்ட்ராய்ட் ஓர் அரசாளும் சிஸ்டம் தான்.
தே. பழமலை, காரைக்குடி.
ஹார்ட் டிஸ்க் சோதனை எதையாவது மேற்கொண்டால், பிரச்னை ஏற்படுமோ என்று எண்ணி, இதுவரை நான் எந்த சோதனையையும் செய்ததில்லை. உங்கள் கம்ப்யூட்டர் பராமரிப்பு குறித்த கட்டுரையில் தந்த குறிப்பு என் பயத்தைப் போக்கி, ஹார்ட் டிஸ்க்கை டிபிராக் செய்திட
உதவியது.
எம். ராஜரத்தினம், சிவகாசி.