கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

29 ஆக
2016
00:00

கேள்வி: என்னுடைய வெப் கேமரா திடீரென வேலை செய்திடவில்லை. என் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 இயங்குகிறது. அண்மையில் தரப்பட்ட ஆகஸ்ட் 02 மேம்படுத்தலையும் செயல்படுத்தி விட்டேன். ஒரு வேளை இதுவே காரணமாக இருக்குமா? அல்லது, புதியதாக ட்ரைவர் பைல் எதனையேனும் அப்டேட் செய்திட வேண்டுமா? நான் லாஜிடெக் வெப் கேமரா பயன்படுத்துகிறேன். அந்தக் கேமரா இன்னொரு கம்ப்யூட்டரில் நன்றாக வேலை செய்கிறது.
டி. நவீன் ப்ரகாஷ், சென்னை
பதில்
: இந்தப் பிரச்னை பலருக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. பலருக்கு என்றால், ஏறத்தாழ பல லட்சம் பேருக்கு மேலாக. புதியதாகத் தரப்பட்ட மேம்படுத்தல் கோப்பு, வெப் கேமராக்கள் மேற்கொள்ளும் விடியோ இமேஜ் ஸ்ட்ரீமிங் பணியைச் செம்மைப் படுத்த பல வழிகளைக் கொண்டதாக இருந்தது. ஏற்கனவே இருந்த முறையை ஒழுங்கு படுத்தி, அனைத்து வெப் கேமராக்களும் எளிதாகச் செயல்படும் வகையில் சீரமைப்பதற்கென சில வழிமுறைகள் தரப்பட்டன. ஆனால், இலக்குக்கு மாறாக, பல லட்சம் கம்ப்யூட்டர்களில் இணைக்கப்பட்ட வெப் கேமராக்களையும், சார்ந்த சாதனங்களையும் இது முடக்கிவிட்டதாகத் தெரிகிறது. குறிப்பாக Logitech C920 வெப் கேமரா பயன்படுத்தியவர்களுக்கு இந்தப் பிரச்னை அதிகம் வந்துள்ளது.
இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அதிகார பூர்வ வாடிக்கையாளர்களுக்கான குறை தீர்க்கும் வலை மனையில், இதற்கான தீர்வினை உருவாக்கப் பலரும் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் தீர்வு தரப்படும் என்றும் அறிவித்துள்ளனர். இதனைத் தீர்க்க தற்போதைக்கு ரெஜிஸ்ட்ரி பதிவுகளை மாற்றி செயல்படலாம். ஆனால், அதில் சிக்கல் வந்துவிட்டால், நிலைமை இன்னும் மோசம் ஆகிவிடும்.
எனவே, தற்போதைக்கு வேறு வெப்கேமரா அல்லது வேறு சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்களில், விடியோ சேட்டிங் போன்ற பணிகளை மேற்கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு மைக்ரோசாப்ட் இணைய தளத்தை அணுகலாம். முகவரி:
https://social.msdn.microsoft.com/Forums/windowsdesktop/en-US/9d6a8704-764f-46df-a41c-8e9d84f7f0f3/mjpg-encoded-media-type-is-not-available-for-usbuvc-webcameras-after-windows-10-version-1607-os?forum=mediafoundationdevelopment#fc5c100a-c661-43cd-9540-bb4591e3d1fe

கேள்வி: சில இணைய தளங்களுக்குச் செல்கையில், அது அரசால் தடை செய்யப்பட்டுள்ளது என்ற தலைப்பில் நீளமான செய்தி தரப்படுகிறது. தளம் கிடைப்பதில்லை. ஆனால், என் நண்பர், வேறு வகையில் அது போன்ற தளங்களைப் பார்க்கலாம் என்று சொல்கிறார். அரசு தடை செய்வதில் பலசாலியாக இல்லையா? தடை செய்த தளங்களைப் பார்த்தால் அது யார் தவறு?
என். பிரதீப் குமார், கோவை.
பதில்:
அரசால் தடை செய்யப்பட்ட தளங்களைப் பார்க்க முயற்சி செய்திடக் கூடாது. அப்படிப்பட்ட தளங்களைப் பார்த்தாலோ, அதிலிருந்து பைல்களைத் தரவிறக்கம் செய்தாலோ, அரசால் நீங்கள் கைது செய்யப்படலாம். மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 3 லட்சம் அபராதமும் விதிக்கப்படலாம். (Domain Name System) DNS-filtering என்ற தடை முறையில் தான், அரசு இந்த தளங்களுக்கு யாரும் செல்ல முடியாதபடி தடை விதித்துள்ளது. இதற்கு, டாட்டா கம்யூனிகேஷன் போன்ற தனியார் நிறுவனங்களின் துணையை நாடியுள்ளது.
இதற்கான சட்டப் பிரிவுகள் உள்ளன. அவை Copyright Act, 1957 சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகள் 63, 63-A, 65 மற்றும் 65-A ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாகவோ, வழக்கு பதிவு செய்ததாகவோ தகவல் இல்லை. அதற்காக, தடை செய்யப்பட்ட தளங்களை, தங்கள் நண்பர் கூறுவது போல, எப்படியாவது பார்க்கலாம் என்று முயற்சி செய்திடக் கூடாது. தடை செய்யப்பட்ட தளங்களில் இருந்து தள்ளியே இருங்கள்.

கேள்வி: என் அலுவலகத்தில், நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் நாங்கள் பணிபுரிகிறோம். அலுவலக டாகுமெண்ட்களை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில், அதற்கென அனுமதிக்கப்பட்டவர்கள் திருத்தலாம். இதில் கடைசியாக திருத்தியவரின் பெயரை டாகுமெண்ட்டில் பதியும்படி செட் செய்திட முடியுமா? இதற்கு தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் இணைக்க வேண்டுமா?
எம். ஆல்பர்ட், காரைக்குடி.
பதில்:
வேர்ட் இதற்கான வசதிகளைக் கொண்டுள்ளது. தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் தேவையில்லை. உங்கள் டாகுமெண்ட்டிலேயே, இறுதியாக சேவ் செய்தவரின் பெயரை இணைக்கும் வகையில் செட்டிங்ஸ் அமைக்க, வேர்ட் வழி தருகிறது. கீழ்க்கண்டவாறு அதற்கு செட்டிங்ஸ் அமைக்கவும்.
1. எந்த இடத்தில் பெயர் வரவேண்டும் என விரும்புகிறீர்களோ, அந்த இடத்தில் கர்சரை வைக்கவும்.
2. ரிப்பனில் Insert தேர்ந்தெடுக்கவும்.
3. தொடர்ந்து Text குரூப்பில் Quick Parts மீது கிளிக் செய்திடவும். இதனைத் தொடர்ந்து Field என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Field டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இதில் Categories பட்டியலில், Document Information என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து Field Nams பட்டியலில், Last Saved By என்பதைத் தேர்ந்தெடுகக்வும்.
6. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இனி, ஒவ்வொருமுறை டாகுமெண்ட் திருத்தப்பட்டு சேவ் செய்யப்படுகையில், அதனை மேற்கொண்டவர் பெயர் இணைக்கப்படும்.

கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், என் அலுவலக டாகுமெண்ட்களில், நான் ஆட்டோ கரெக்ட் பயன்படுத்தி, பல சுருக்கு சொற்களுக்கு, விரிவான தொடர்களை அமைக்கிறேன். இதில் With கட்டத்தில் 300க்கு மேற்பட்ட கேரக்டர்களைக் கொண்டு, சொல் தொடர்களை அமைக்க முடியவில்லை. இதனை எப்படி அதிக கேரக்டர்களை ஏற்குமாறு செட் செய்திடலாம்?
என். மஹேஸ்வரி, கோவை.
பதில்
: பலர் இந்த வசதியைப் பயன்படுத்துவது இல்லை. உங்களுக்கு இதற்காகப் பாராட்டுகள். அலுவலக டாகுமெண்ட்களில், அலுவலகப் பெயர்கள், பதவிகளை ஒட்டிய அலுவலகப் பெயர்கள் அடிக்கடி அமைக்க வேண்டியதிருக்கும். அவற்றை விரைவாக அமைக்க, ஆட்டோ கரெக்ட் சரியான சாதனம் ஆகும். ஆனால், நீங்கள் கேட்கும் அதிக பட்ச கேரக்டர்கள் அமைக்க வழி இல்லை. 300 கேரக்டர்களையும் 'With Box' ஏற்றுக் கொள்ளாது. 254 கேரக்டர்களை மட்டுமே மேற்கொள்ளும்.
ஆனால், ஒரு வழியை நான் உங்களுக்குக் கூறுகிறேன். அமைக்க வேண்டிய சொல் தொகுதியை இரண்டு அல்லது மூன்று தொகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றுக்கும் ஒரு சுருக்குச் சொல் (mnemonic) அமைத்துப் பயன்படுத்தவும். எடுத்துக் காட்டாக, Bharat Petroleum Corporation Limited (BPCL) an Indian state- controlled oil and gas company headquartered in Mumbai, Maharashtra, A central Public Sector Company of Government of India என இன்னும் பல சொற்கள் அடங்கிய நீளமான ஒரு சொற்றொடரை அடிக்கடி அமைக்க வேண்டியதிருந்தால், இதனைப் பிரித்து, BP1, BP2 எனச் சுருக்குச் சொற்கள் கொடுத்து அமைக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 இலவசமாக அப்கிரேட் செய்து கொண்டேன். விண்டோஸ் 7 முன்பு வைத்திருந்தேன். இதில் பைல் எக்ஸ்புளோரர் செயல்பாடு கூடுதல் வசதிகளுடன் அதிக பயனுள்ளதாக இருக்கிறது. ஆனால், இதில் கிடைக்கும் “Recent Files” பட்டியல் சில நேரங்களில் தேவையற்றதாக உள்ளது. இதனை நீக்கிவிட்டு, தேவைப்படும்போது மட்டும் பெற முடியுமா? அல்லது ஒரு சில பைல்களை மட்டும் நீக்க முடியுமா?
எஸ். ஜெயினுலாபுதீன், காரைக்கால்.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், பைல் எக்ஸ்புளோரர் செயலியில் கிடைக்கும் பைல் ஹிஸ்டரி மிகப் பயனுள்ளதாக இருப்பதாகவே, பல பயனாளர்கள் கருதுகின்றனர். ஒரு சிலரே, அதனை நீக்க விருப்பம் தெரிவிக்கின்றனர். இந்த பைல் ஹிஸ்டரி மூலம், நாம் அடிக்கடி பயன்படுத்தும் பைல் ஒன்றை விரைவாகத் தேர்ந்தெடுக்க முடிகிறது. இருப்பினும், உங்கள் விருப்பத்திற்கான தீர்வைப் பார்ப்போம்.
பைல் எக்ஸ்புளோரரில், File என்பதில் கிளிக் செய்திடவும். அதில், “Change folder and search options என்ற பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Folder Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில் கிடைக்கும் “Clear” என்ற பட்டனில் கிளிக் செய்தால், பைல் ஹிஸ்டரியில் உள்ள பைல் பட்டியல் உடனே நீக்கப்படும். இந்த செயல்பாட்டினை மேற்கொள்கையில், மற்ற பைல்களை நீக்கும்போது உறுதியாக நீக்க விரும்புகிறீர்களா? என்று கேட்கப்படுவது போலக் கேட்கப்படுவது இல்லை. இதனை மேற்கொண்ட பின்னர், ஓகே கிளிக் செய்து, மீண்டும் பைல் எக்ஸ்புளோரர் திரும்புங்கள். இங்கு, பைல் ஹிஸ்டரி பைல்கள் எதுவும் இல்லை என்பதை நீங்கள் கவனிக்கலாம். மீண்டும் பைல் ஹிஸ்டரி தேவை என்றால், இதே டயலாக் பாக்ஸ் பெற்று, Privacy என்ற தலைப்பின் கீழ் உள்ள இரு கட்டங்களிலும் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

கேள்வி: என்னுடைய வேர்ட் டாகுமெண்ட்களில், அதிக எண்ணிக்கையில் டெக்ஸ்ட் பாக்ஸ் பயன்படுத்துகிறேன். இது எப்போதும் செவ்வக வடிவிலேயே கிடைக்கிறது. இதனை, இதன் ஓரங்களில் வளைவாக அமைத்து, அழகாக அமைக்க என்ன செய்திட வேண்டும். இந்த பாக்ஸை பார்மட் செய்திட முடியவில்லை. இதற்கான வழி தரவும்.
என். கார்த்திகேயன், கும்பகோணம்.

பதில்: வேர்ட் செயலியில், டெக்ஸ்ட் பாக்ஸ்களை உங்கள் விருப்பப்படி பெற்றுக் கொண்டு அமைக்கப் பல வழிகள் தரப்பட்டுள்ளன. முந்தைய பதிப்புகளில், டெக்ஸ்ட் பாக்ஸ் மற்றும் ஷேப் என்ற இரண்டுக்கும் அதிக வேறுபாடு இருந்தது. இப்போது வேறுபாடு மிக மிகக் குறைவாகவே உள்ளது. எனவே, டெக்ஸ்ட் பாக்ஸ் தேவை என்றால், அதனை வரைந்து அமைக்க வேண்டாம். Shapes டூல் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வகையில், அழகான பாக்ஸை அமைக்கலாம்.எனவே, டெக்ஸ்ட் பாக்ஸை அமைத்துவிட்டு, அதனை மாற்ற எண்ணினால், கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. உங்கள் டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுக்கவும்.
2. ரிப்பனில் Format டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். (இந்த டேப், டெக்ஸ்ட் பாக்ஸைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே காட்டப்படும்)
3. இங்கு கிடைக்கும் Insert Shapes குரூப்பில், Edit Shape டூலில் கிளிக் செய்திடவும். வேர்ட் இங்கு உங்களுக்குச் சில ஆப்ஷன்கள் தரும்.
4. Change Shape என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பலவகையான ஷேப்களைத் தரும்.
5. இங்கு நீங்கள் விரும்பும், மூலையில் வளைவான ஓரங்கள் கொண்ட செவ்வகக் கட்டம் இருக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
6. வேர்ட் மிகச் சிரத்தையாக, உங்கள் டெக்ஸ்ட் பாக்ஸை, வளைவுகள் கொண்டதாக அமைக்கும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X