கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
00:00

என் வயது 68. யானைக்கால் வியாதியால், என்னுடைய இரண்டு கால்களும், பாதங்களும் வீங்கி, வலியால் மிகவும் கஷ்டப்படுகிறேன். கால்களை மடக்கி, நீட்ட முடியவில்லை. நடக்கவும் சிரமம். இந்த வியாதி குணமடைய மருந்து இருக்கிறதா, இல்லையா? இருந்தால் விபரங்கள் கூறவும்.
கே.எம்.லட்சுமி, கிருஷ்ணகிரி

பொதுவாக, யானைக்கால் பாதிப்பிற்கு, ஹெட்ரஸான் (Hetrazan), போனோசைட் போர்ட் (Bonocide forte) ஆகிய இரண்டு மாத்திரைகள் தரப்படுகின்றன. ஹெட்ரஸான் மாத்திரை (100 மி.கி.,) தினமும் மூன்று மாத்திரைகள் (காலை, பகல், இரவு) சாப்பிட வேண்டும். 21 நாட்களுக்கு தொடர்ந்து இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால், நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்படும். சென்னை, கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில், இதற்கான தடுப்பு மாத்திரை கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் நோய் வந்த பிறகு, தடுப்பு மாத்திரையால் பயன் இல்லை.
டாக்டர் குணசேகரன்
இயக்குனர், கிங் இன்ஸ்டிடியூட், கிண்டி, சென்னை


சித்த மருத்துவத்தில் யானைக்கால் நோய்க்கு மருந்து இருக்கிறது.
இது முழுமையாக குணம் தரக்கூடியது. இதுபோன்ற தொற்று வியாதிகளுக்கு, சில வகை உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டால், தொற்றின் வீரியம் குறைந்து நல்ல பலனைத் தரும். ஆனாலும் நோய் முற்றிய நிலையில், நீங்கள் ஒரு சித்த மருத்துவரை சந்தித்து தேவையான மருத்துவ ஆலோசனைகளைப் பெற வேண்டியது அவசியம். இடைப்பட்ட காலத்தில், துவர்ப்பு, கசப்பு அதிகம் உள்ள உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வாருங்கள்.
துவர்ப்பான உணவுகள் என்றால், தேன், மாதுளை, வாழைப்பூ, பேரிக்காய், வெந்தயம் போன்றவை. கசப்பான உணவுகளுக்கு வேப்பம்பூ, கற்றாழை, குப்பைமேனி, போன்றவை. தசைகளை இறுக்கக்கூடிய தன்மை, துவர்ப்பு சுவைக்கு உண்டு என்பதால், தொடர்ந்து இதுபோன்ற உணவுகளை சாப்பிடும்போது, நோய்த் தொற்று குறைந்து, தசைகள் இறுக வாய்ப்புண்டு.
டாக்டர் பிரம்மஸ்ரீ.பி.கணேஷ்
சித்தா சிறப்பு மருத்துவர், கோவை 94431 34829


என் மகனின் வயது 12. முகம் முழுவதும் நிறைய பருக்கள் உள்ளன. சந்தனக் கட்டியை அரைத்துப் போட்டால், கட்டி அமுங்குவது போல இருக்கும். ஆனால், திரும்பவும் வந்துவிடும். எந்த நேரமும் வெயிலில் கிரிக்கெட் ஆடிக் கொண்டே இருப்பான். நான் அலுவலகம் செல்வதால், தினமும் சந்தனம் அரைத்துப் போட முடியவில்லை. பருக்களைப் போக்க, வேறு ஏதாவது வழிகள் உள்ளனவா?
பி.இந்திரா, வளசரவாக்கம், சென்னை
ஹார்மோன்கள் மாற்றத்தினால், இந்த வயதில் கட்டிகள் வரலாம். ஆனால், நீங்கள் சொல்லும் அறிகுறிகளை வைத்துப் பார்த்தால், உங்கள் மகனுக்கு, அதிக உஷ்ணத்தால் தான் இதுபோன்ற கட்டிகள் (heat balls) வருகின்றன என்று தோன்றுகிறது. நல்ல குளிர்ந்த நீரில், ஒரு நாளில் 2 அல்லது 3 முறை, முகத்தைக் கழுவி, காலமைன் அல்லது இயற்கைப் பொருட்களால் ஆன லோஷன்களை பயன்படுத்துங்கள். நீர் சத்துள்ள காய்கறிகள், பழச்சாறு நிறைய கொடுங்கள். 12 வயதுப் பையனுக்கு எல்லாம் நீங்களே செய்ய வேண்டும் என்பதில்லை. அவனையே சுயமாகச் செய்ய பழக்கப்படுத்தி விடுவது நல்லது. முகத்தில் பருக்கள் இல்லாமல் இருப்பது ஆரோக்கியம் என்பதைப் புரியவைத்தால், தானாகவே எல்லாம் செய்வான். எதற்கும் ஒரு குழந்தைகள் நல தோல் மருத்துவரிடம் காட்டுவதில் தவறில்லை.
டாக்டர் தீபா ஹரிஹரன்
குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர், சூர்யா மருத்துவமனை, சென்னை

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X