அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2016
00:00

அன்புள்ள அம்மாவிற்கு —
என் வயது, 24; முதுகலை பட்டதாரி. தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிகிறேன். நடுத்தர விவசாய குடும்பத்தைச் சார்ந்தவள். அன்புமிகுந்த பொற்றோர், பாசமான அக்கா என்று சந்தோஷமான குடும்பத்தை கடவுள் எனக்கு தந்துள்ளார். என் அக்காவிற்கு திருமணம் ஆகி, மகிழ்ச்சியுடன் நிறைவாக வாழ்கிறாள். எங்கள் குடும்பத்தில் பணத்திற்கு குறைவிருந்தாலும், பாசத்திற்கு குறைவில்லை. ஆனால், இப்போது எனக்கு நானே எமனாக இருக்கிறேன்.
சிறு வயதிலிருந்து எனக்கு இதய கோளாறு உள்ளது; அதற்காக சிகிச்சையும் பெற்று வருகிறேன். இதயத் துடிப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மூச்சுத் திணறல் ஏற்படும். இதய வால்வில், சிறு பிளவு இருப்பதாகவும், இதய துடிப்பு, 60 மட்டும் இருப்பதாகவும், சில சமயம், இதயத் துடிப்பு அதிகரிக்க மன அழுத்தமே காரணம் எனக் கூறி, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தி விடலாம் என்று கூறினார், உள்ளுர் இருதய மருத்துவர்.
இந்நிலையில், நான், கல்லூரியில் படிக்கும் போது, ஒருவரை காதலித்தேன்; இருவரும் தூரத்து சொந்தம். யாரிடமும் பேசாத என் குணத்தை அறிந்தே, அவர், என்னை காதலிப்பதாக கூறினார். ஆரம்பத்தில் மறுத்தாலும், வயதிற்கேற்ற சபலத்தால், நானும் காதலித்தேன். அவர், என்னை விட ஆறு மாதம் மூத்தவர். நான் காதலிப்பது, என் அம்மா மற்றும் அக்காவுக்கு மட்டும் தெரியும். ஆரம்பத்தில் இதை ஏற்க சங்கடப்பட்டாலும், பின், இருவரும் ஒப்புக் கொண்டனர். ஆனாலும், ஜாதக நம்பிக்கையுள்ள என் அம்மா. எனக்கும், என் காதலருக்கும் பொருத்தம் பார்த்தார். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டால், திருமணமான மூன்று ஆண்டுகளில் கணவனை இழக்க நேரிடும். மேலும், என் ஜாதகத்தில், எனக்கு இரண்டாவது மாங்கல்யமே நிலைக்கும் என்றும் கூறியுள்ளனர்.
எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு; ஆனால், ஜாதகத்தில் நம்பிக்கையில்லை என்றாலும், போகப் போக பயம் வந்துவிட்டது. அவ்வாறு நடந்து விடுமோ என்ற பயத்தில், தினமும் சாகிறேன்; கோவிலுக்கு சென்று, பரிகாரம் செய்கிறேன்.
எனக்குள்ள பிரச்னை, என் காதலருக்கும் தெரியும். ஜாதக விஷயத்தைப் பற்றி அவரிடம் கூறிய போது, 'இதை ஏன் நம்புகிறாய், கடவுளை நம்பு; நாம் நன்றாக வாழ்வோம்...' என்று கூறி, என்னை தேற்றினார். தற்போது, என் வீட்டில், உறவுக்கார மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க, முடிவு செய்து உள்ளனர்.
'என்னால், என் காதலரை தவிர்த்து, வேறு ஒருவரை மணப்பதை நினைத்துக் கூட பார்க்க முடியாது...' என்று என் அம்மா மற்றும் சகோதரியிடம் கூறினேன். அதற்கு அவர்கள், 'ஜாதகம் ஒத்து வரவில்லை; உன்னால், அந்த பையனின் வாழ்க்கை அழியும்...' என்றனர். நான் அழுத போது, 'ஏன் அழுகிறாய்... விதிப்படி நடப்பது நடக்கட்டும். உனக்கு, அவ்வாறு தான் வாழ்க்கை அமையும் என்றால், அவ்வாறே அமையட்டும்...' என்று என்னை தேற்றினர்.
ஆனால், என் காதலருக்கு திருமண வயதில் ஒரு தங்கை இருப்பதால், மூன்று ஆண்டுகளாவது காத்திருக்க வேண்டும். அதற்கு நான் தயாராக இருந்தாலும், என் பெற்றோர் விடமாட்டார்கள்.
மேலும், என் காதலர் வீட்டில் என் இதயக் கோளாறு மற்றும் ஜாதக விஷயம் தெரிந்தால், என்னை மறுத்து விடுவார்களோ என்ற பயமும் ஏற்படுகிறது. இதை அவரிடம் கூறிய போது, 'ஓடிப் போய் திருமணம் செய்து கொள்வோம்...' என்கிறார். ஆனால், அதில் எனக்கு விருப்பமில்லை. இரு வீட்டின் சம்மதத்தோடு, பெற்றோரின் ஆசியோடு, மணம் புரிந்து நன்றாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.
இதற்கிடையில், இதுவரை உள்ளூரில் சிகிச்சை பெற்ற வந்த நான், தற்போது, நகரத்தில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளேன். அவர்கள் அறுவைச் சிகிச்சை செய்யக் கூறியுள்ளனர்.
அம்மா... நான் அவருக்காக காத்திருப்பதைப் பற்றி ஊர் என்ன பேசும் என்று வருத்தப்படும் என் அம்மாவுக்கும், ஜாதகத்தை நம்பலாமா, ஜாதகத்தால் உயிர் வாழ்வதை நிர்ணயிக்க முடியுமா என்ற என் குழப்பத்தையும், என் அன்பான வாழ்க்கை எனக்கு நீடிக்க வேண்டும் என்று ஏங்கி, வேதனையில் சாகும் எனக்கு, உங்களின் ஆசீர்வாதத்தோடு பதில் தாருங்கள்.
இப்படிக்கு,
உங்கள் பதிலுக்காக காத்திருக்கும் மகள்.


அன்புள்ள மகளுக்கு —
எனக்கு தெரிந்த பெண் ஒருத்தி, பிறவியிலேயே இதய கோளாறு உடையவள்; அவளது பிரச்னை தெரிந்தும், அவளை மணந்தார் ஒருவர். அவர்களுக்கு இரு பையன்கள்; அவர்களை படிக்க வைத்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்து விட்டாள். இப்போது, 60 வயதை தாண்டி, கணவருடன் சந்தோஷமாக வாழ்கிறாள்.
இறைவன் அருள் இருந்தால், எந்த மருத்துவ பிரச்னையையும் வெல்லலாம். நம்பிக்கையுடன், மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை சாப்பிடு. இதுவரை, 'அறுவை சிகிச்சை இல்லாமல், மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தி விடலாம்...' என்றும், 'அறுவை சிகிச்சை கட்டாயம்...' என்றும் இரு மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், மூன்றாவதாக, இன்னொரு இதய மருத்துவரிடம் ஆலோசனை கேள்.
இதய நோயும், ஜாதக குறைபாடும், உன் காதலை சீர்குலைத்து விடுமோ என்ற மனப் பதற்றத்தை, ஒதுக்கு.
'நான் ஜாதகத்தை நம்பவில்லை; இதய நோயும் குணமாகிவிடும். நான், என் காதலனையே மணந்து கொள்வேன். என்னை, என் போக்கில் வாழ விடுங்கள்...' என்று உன் வீட்டில் ஆணித்தரமாக தெரிவித்து விடு.
நீ, உன் வீட்டில் பேசுவதை போல, உன் காதலனை அவனது வீட்டில் பேசச் சொல்.
உங்களின் அன்பான திருமண வாழ்க்கையைப் பார்த்து, ஊரே வியக்க வேண்டும். அந்த சந்தோஷமே, உன்னை நூறு ஆண்டுகள் வாழ வைக்கும்; உன்னுடைய மனக்குழப்பங்கள் எல்லாம் தலைதெறிக்க ஓடிவிடும்.
உன்னை சுற்றியுள்ள உறவுகள் யாரிடமும் குற்றம் கண்டுபிடிக்காத நல்ல மனம் உனக்கு இருக்கிறது. நீ தொட்டதெல்லாம் துலங்கும்; இறக்கைகள் இல்லாத தேவதை நீ! உங்களிருவரின் திருமணம் வெற்றி பெற, இதயப்பூர்வமான வாழ்த்துகள்.
என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naresh kumar k m - tamil nadu,இந்தியா
07-செப்-201617:54:56 IST Report Abuse
naresh kumar k m அருமை சகோதரி, உன் கறைகள் பிரச்னைகள் தீர்ந்து நீ நாள் வாழ்வு பெற இறைவனை வேண்டுகிறேன். உனக்கு என் ஆசிர்வாதம், இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
John Webb - Chennai,இந்தியா
07-செப்-201603:24:46 IST Report Abuse
John Webb பயத்தை போக்க வாழை மரத்துடன் முதல் திருமணத்தை நடத்துங்கள். அதன் பின் இரண்டாம் திருமணமாக உங்கள் காதலருடன் திருமணத்தை நடத்துங்கள். சமயத்தில் மூட நம்பிக்கையிலும் நண்மை இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Prabaharan - nagercoil,இந்தியா
06-செப்-201618:31:32 IST Report Abuse
Prabaharan ஜாதகம் சிலரது பிழைப்புக்காக வைத்திருக்கும் நடைமுறை. கடவுளைத்தவிர யாராலும் ஏதும் மாற்ற முடியாது. அடுத்தவர் விதியை ஜாதகம் சொல்லுமானால் கடவுள் எதற்கு. காக்கை உட்கார பணம் பழம் விழுந்த கதையாக சில விஷயங்கள் ஒத்து போகலாம் . அதை வைத்து இவர்கள் ஊரை ஏமாற்றுகிறார்கள் ஜாதகம் பார்த்து நடந்த கல்யாணங்கள் விவாகரத்தில் முடியவில்லையா?
Rate this:
Share this comment
Kundalakesi - Coimbatore,இந்தியா
08-செப்-201613:38:41 IST Report Abuse
Kundalakesiநானும் ஜாதகத்தை மூட நம்பிக்கை என நினைத்தேன். என் நண்பன் திருமணதிற்கு நான் கூறிய பெண்ணை திருமணம் செய்தான். ஜாதகத்தில் இருவருக்கும் பொருத்தம் இல்லை, மற்றும் அந்த பெண் வேறு தொடர்பு வைத்து கொள்ள வாய்ப்பு உள்ளது என ஜோதிடர் கூறினார். இது மூட நம்பிக்கை என கருதியே திருமணம் நடந்தது. 10 வைத்து நாளில், அந்த பெண் வேறு ஒருவனுடன் இருந்த அந்தரங்க கட்சியினை என் நண்பன் கண்டான். போதுமா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X