விண்டோஸ் 10: அறிமுகத் திரைகளை அழகாக அமைக்க
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

விண்டோஸ் 10 இயக்க முறைமை, இதுவரை விண்டோஸ் இயக்கங்கள் தந்த அறிமுகத் திரைகளை (Lock and Sign in screens) புதுமுறையில் தந்துள்ளது. சிலர் இவை திரும்ப திரும்ப காட்டிய திரைகளையே காட்டி வருகின்றன. எனவே, இவற்றை நிறுத்திவிட்டேன் என்று கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவ்வாறு செயல்படத் தேவையே இல்லை. இவற்றை நாம் விரும்பும் வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.

லாக் ஸ்கிரீனில் கார்டனா: சென்ற ஆகஸ்ட் 02ல் வெளியிட்ட விண்டோஸ் மேம்படுத்தலில், கார்டனா செயலியில் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன. இப்போது, கார்டனா உங்களுடைய தனிநபர் தகவல்களைப் படித்து, உங்கள் நிகழ்ச்சிகளுக்கான நாளை நிச்சயிக்கலாம். உங்கள் கம்ப்யூட்டரில் லாக் இன் செய்திடாமலேயே, இந்த செயல்பாடை மேற்கொள்ளலாம். லாக் ஸ்கிரீனில், கார்டனா செயலியை அமைத்திட, கீழே கொடுத்துள்ளபடி செயல்படவும். முதலில் கார்டனாவைச் செயல்படுத்தவும். பின்னர், Settings > Lock screen > Use Cortana even when my device is locked எனச் செல்லவும். இதன் மூலம், உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கும்போதும், அடிப்படை செயல்களை (சீதோஷ்ண நிலை அறிதல் போன்றவை) மேற்கொள்ள முடியும். உங்களால் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட நிகழ்வுகளை அறிந்து தகவல் அளிக்கும் பணியினை கார்டனா மேற்கொள்ள வேண்டும் எனில், Let Cortana access my calendar, email, messages, and Power BI data when my device is locked என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

லாக் ஸ்கிரீன் பின்னணி: லாக் ஸ்கிரீனின் பின்புறத்தில் காட்சி எப்படி இருக்க வேண்டும் என நீங்கள் தீர்மானிக்கலாம். இதற்கு மூன்று ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. முதலாவதாக, நீங்கள் தேர்ந்தெடுக்கும் படத்தை அமைக்கலாம். ஸ்லைட் ஷோ ஒன்றை உருவாக்கி பதியலாம். அல்லது, விண்டோஸ் ஸ்பாட் லைட் இயக்கலாம். மூன்றாவதாகத் தரப்பட்டதை இயக்கினால், பிங் தேடல் தளத்திலிருந்து, அதிக பிக்ஸெல் அடர்த்தி கொண்ட போட்டோக்கள் பெறப்பட்டு காட்டப்படும். நீங்கள் எந்த படத்தினை அதிகம் விரும்புகிறீர்கள் என ஸ்பாட் லைட் கணித்துக் கொண்டே இருக்கும். அதற்கேற்ப படங்கள் காட்டப்படும். ஏதேனும் ஒன்றை நீங்கள் விரும்பவில்லை என்றால், அதைப் போன்ற படங்கள் காட்டப்பட மாட்டாது. ஸ்பாட் லைட் (Spotlight) செயலியை இயக்க, முதலில் செட்டிங்ஸ் மெனு செல்லவும். பின்னர், Personalization > Lock screen > Background என்று சென்று, Windows spotlight என்பதைத் தேர்ந்தெடுத்து இயக்கவும்.

லாக் ஸ்கிரீன் செயல்பட: எப்போதும் இயக்கத்தில் லாக் ஸ்கிரீனை வைத்திட, அதில் சில செயலிகளைப் பதிந்து வைக்கலாம். இந்த வகையில் எட்டு செயலிகளை இதில் இணைக்கலாம். நாம் திரையைப் பார்த்தவுடன், இந்த செயலி காட்டும் அப்போதைய தகவலைத் தெரிந்து கொள்ளலாம். Weather, Skype, Calendar, Mail, Store மற்றும் Xbox ஆகியவையே இந்த செயலிகள். இவற்றைத் தேர்ந்தெடுக்க, செட்டிங்ஸ் மெனு திறக்கவும். பின்னர், Personalization > Lock screen > Choose an app to show detailed status அல்லது Choose apps to show quick statuses என்று செல்லவும். இதன் பின்னர், கிளிக் செய்து குறிப்பிட்ட செயலியை அமைக்கலாம். அமைத்த பின்னர், ஏதேனும் ஒன்று தேவை இல்லை எனக் கருதினால், அதற்கான பாக்ஸில் கிளிக் செய்து, அதன் நிலையை None என அமைக்க வேண்டும். நம் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள அப்ளிகேஷன்களுக்கேற்ப, மேலே குறிப்பிட்ட செயலிகள் மாறுபடலாம்.

உள் நுழைவு திரைப் பின்னணி: விண்டோஸ் 10 முதலில் அறிமுகமானபோது, விண்டோஸ் இலச்சினை கொண்ட, ஓளி வெள்ளம் காட்டும் திறக்கப்பட்ட ஜன்னல் கொண்ட, திரை காட்டப்பட்டது. தற்போது இது போய்விட்டது. இப்போது நாம் நம் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து நுழையும் திரையின் பின்னணியை மாற்ற இரு ஆப்ஷன்கள் தரப்பட்டுள்ளன. நிலையாக ஒரு வண்ணம் அல்லது லாக் ஸ்கிரீனில் காட்டப்படும் போட்டோ.
இந்த இரண்டு ஆப்ஷன்களுக்கிடையே மாற்றி மாற்றி செல்ல, முதலில் செட்டிங்ஸ் மெனு திறக்கவும். பின்னர், Personalization > Lock screen > Show lock screen background picture on the sign-in screen எனச் செல்லவும். இந்த ஆப்ஷனை இயக்காமல் விட்டுவிட்டால், திரையில் நீங்கள் தேர்ந்தெடுத்த வண்ணம் இருக்கும். இதற்கான வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்க, Personalization > Colors என்று சென்று, உங்களுக்குப் பிடித்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.

மின் அஞ்சல் முகவரியை மறைக்க: தனி நபர் தகவல்கள் காட்டப்படாமல் இருக்க, விண்டோஸ் 10 அதற்கான மேம்படுத்தல் வழியை அண்மையில் தந்துள்ளது. நுழைவுத் திரையில், நம் பெயர், போட்டோ (அமைத்திருந்தால்) ஆகியவற்றுடன், நம் மின் அஞ்சல் முகவரியும் முன்பு காட்டப்பட்டு வந்தது. தற்போது தரப்பட்டுள்ள மேம்படுத்தலில், மாறா நிலையில், மின் அஞ்சல் முகவரி மறைக்கப்பட்டுள்ளது. இது காட்டப்பட வேண்டும் என்றாலும், காட்டப்படாமல் இருக்க வேண்டும் என்றாலும் அதற்கான வழி தரப்பட்டுள்ளது. செட்டிங்ஸ் மெனு சென்று, Accounts > Sign-in options > Privacy > Show account details (e.g. email address) on sign-in screen என்று செல்லவும். இரண்டிற்குமான வழிகள் இங்கு கிடைக்கும்.

அறிவிப்புகளை நிறுத்த: கம்ப்யூட்டர் லாக் செய்யப்பட்டிருக்கும்போது, அறிவிப்புகள் (Notifications) தேவை இல்லை என எண்ணி, அவற்றை நிறுத்த எண்ணினால், நிறுத்தலாம். இதற்கு செட்டிங்ஸ் மெனு சென்று, System > Notifications & actions > Show notifications on the lock screen காட்டவும் நிறுத்தவும் செய்திடலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X