கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

05 செப்
2016
00:00

கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு மாறினேன். மாறிய பின்னர், என் யாஹூ மெயில் பக்கத்தில், நிறைய விளம்பரங்கள் வருகின்றன. முன்பு இது போல் வந்ததில்லை. விண்டோஸ் 10 தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதனை எப்படி சரி செய்திடலாம்?
எஸ். நிரஞ்சன், தாராபுரம்.
பதில்:
விண்டோஸ் 10 உங்கள் யாஹூ மெயில், ஜிமெயில், அவுட்லுக் டாட் காம் போன்றவற்றில் எந்த மாற்றமும் செய்திடவில்லை. நீங்கள் கூறியிருப்பது போல, விளம்பரங்கள் வருவது, ஒரு வேளை பிரவுசர் மாற்றத்தால் ஏற்பட்டிருக்கலாம். நீங்கள் ஏற்கனவே பயன்படுத்திய பிரவுசரை விட்டுவிட்டு எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கலாம். இதற்கு முன் பயன்படுத்திய பிரவுசர், விளம்பரங்களைத் தடுக்கும் Ad Block எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை இன்ஸ்டால் செய்யப்பட்டு இயங்கியிருக்கும். தற்போது பயன்படுத்தும் பிரவுசரில் அது இல்லை என்றால், நிச்சயம் விளம்பரங்கள் காட்டப்படும். அவற்றை நீங்கள் விரும்பவில்லை என்றால், அந்த பிரவுசருக்கான Ad Block எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம். அல்லது ஏற்கனவே பயன்படுத்திய பிரவுசரில் பதிக்கப்பட்டிருந்த இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை நீங்கள் நீக்கியிருக்கலாம். ஏனென்றால், வணிக ரீதியான சில இணைய தளங்கள், நாம் விளம்பரங்களைத் தடுக்கும் இந்த வகை புரோகிராம்களை நீக்கினால் தான், பக்கங்களைக் காட்டுவேன் என அடம் பிடிக்கும். அதற்கான ஒரு லிங்க் கொடுக்கும். அதில் கிளிக் செய்தால், தானே அந்த புரோகிராமினை நீக்கிவிடும். அது போன்ற ஒரு தருணத்தில் நீங்களே நீக்கி இருக்கலாம். எனவே, மீண்டும் “அட் பிளாக்” செயலியை நிறுவி விட்டால், விளம்பரங்கள் வராது.

கேள்வி: வேர்டில் அமைக்கப்பட்ட டாகுமெண்ட்டில், டெக்ஸ்ட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களை, அனைத்தும் சிறிய மற்றும் பெரிய எழுத்துக்களில் அமைக்க, ரிப்பனில் எதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? அது போன்ற அமைப்பு உள்ளதா?
இல. சஞ்சீவி பழனியப்பன், பள்ளத்தூர்.
பதில்:
முதலில், டாகுமெண்ட்டில், மாற்றப்பட வேண்டிய சொற்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். பின்னர், ரிப்பனில் ஹோம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். அங்கே, Font என்ற பிரிவில், Aa என்று இருப்பதில் உள்ள சிறிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். கீழாக மெனு ஒன்று கிடைக்கும். இதில் Sentence Case, lower case, UPPER CASE, Capitalize each word, TOGGLE CASE, எனப் பிரிவுகள் காட்டப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொற்கள் எப்படி மாற்றப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதற்கான பிரிவில் கிளிக் செய்தால், அதன்படி மாற்றப்படும்.
இதனை இன்னொரு வழியாக கீ போர்ட் வழியாகவும் மேற்கொள்ளலாம். டெக்ஸ்ட் தேர்ந்தெடுத்த பின்னர், Alt+H அழுத்தினால், ஹோம் டேப் இயக்கப்படும். அதன் பின்னர், “7” ஐ அழுத்தவும். இங்கு மேலே காட்டப்பட்ட ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் எழுத்துகள் காட்டப்படும். அவை “S” for Sentence case, “l” (a lowercase L) for lowercase, “U” for UPPERCASE, “C” for Capitalize Each Word, or “t” for tOGGLE CASE என இருக்கும். நமக்கு வேண்டியதைத் தேர்ந்
தெடுக்கலாம்.
இன்னோரு டிப்ஸ் தரட்டுமா! சொற்களைத் தேர்ந்தெடுத்து ஷிப்ட்+F3 கீகளை அழுத்தினால், lower case, UPPER CASE மற்றும் Sentence Case என மாறிவரும். உங்களுக்குத் தேவையானது கிடைத்தவுடன், கீகளை விட்டுவிடலாம்.

கேள்வி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், சில சொற்களை வலது ஓரத்தில் அமைக்கையில், அவை அடுத்த வரியில் பிரிந்து நிற்கின்றன. இவற்றிற்கு ஹைபன் என்னும் இடைக்கோடு பயன்படுத்துகிறேன். ஆனால், மீண்டும் எடிட் செய்கையில், இந்த சொல் உள்ளாக முழுமையாக வந்தாலும், நான் கொடுத்த ஹைபன் இடம் பெறுகிறது. இது பார்க்க, படிக்கச் சரியாக இல்லை. இதனைக் கண்டறிந்து எப்படி சரி செய்வது?
கா. சத்தீஷ் குமார், தென்காசி.
பதில்:
நாமாகக் கொடுக்கும் ஹைபன் இது போல டாகுமெண்ட்டை எடிட் செய்த பின்னர் தேவையற்ற இடத்தில் அமர்ந்து கொண்டு டாகுமெண்ட் அழகைக் கெடுக்கும். இதற்காக, வேர்ட் optional hyphen என்ற ஒன்றைக் கொண்டுள்ளது. இது ஒரு ஸ்பெஷல் கேரக்டர். இதனை டாகுமெண்ட்டில், தேவைப்படும் இடத்தில் நீங்கள் அமைக்கலாம். ஹைபன் அமைத்த சொல், எடிட் செய்த பின்னர், முழுமையாக ஒரு வரிக்குள்ளாகவே அமையும் பட்சத்தில், இந்த optional hyphen எடுக்கப்பட்டுவிடும். டாகுமெண்ட்டில் ஹைபன் தேவையற்ற ஒன்றாக அமையாது. Optional hyphen உருவாக்க கண்ட்ரோல் + ஹைபன் (Ctrl+- (Ctrl and the hyphen or dash key)) கீகளை அழுத்த வேண்டும். இந்த வகை ஹைபன், டாகுமெண்ட் ஓரத்தில் அமர்ந்தால் ஒழிய, காட்டப்பட மாட்டாது. ஆனால், இந்த Optional Hyphen எங்கெல்லாம் அமைக்கப்பட்டுள்ளது என்று பார்க்க வேண்டுமானால், கீழ்க்காணும் அமைப்பு வழிகளை இயக்கி வைக்கவும்.
1. வேர்ட் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸைத் திறக்கவும். வேர்ட் 2007ல், ஆபீஸ் பட்டன் அழுத்தி, கீழாகக் கிடைக்கும் Word Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் 2010 எனில், ரிப்பனில் File டேப் அழுத்தி, பின்னர் Word Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Display என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கீழ் பகுதியில் உள்ள Optional Hyphens என்பதற்கு அருகே உள்ள பாக்ஸில் டிக் செய்திடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: நான் குரோம் பிரவுசரைப் பயன்படுத்தி வருகிறேன். என் சிஸ்டம் விண்டோஸ் 10. இந்த பிரவுசரில் நான் பார்க்கும் வெப்சைட் விபரங்களைப் பதிவு செய்திடாமல் இருக்க எங்கு எந்த செட்டிங் அமைக்க வேண்டும். இன் காக்னிடோ இயக்காமல் வேறு செட்டிங் வழி உள்ளதா? என்னைப் பற்றிய டேட்டா கூகுள் நிறுவனத்திற்கு குரோம் அனுப்பக் கூடாது. இதுவே என் நோக்கம்.
த. கமலேஸ்வரன், திருப்பூர்.
பதில்:
தாராளமாக இந்த தடையை விதிக்கலாம். இதற்கு Do Not Track என்ற ஆப்ஷனை இயக்க வேண்டும். பிரவுசரின் வலது மேல் மூலையில் உள்ள மெனு பட்டனில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Settings என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்தப் பக்கத்தின் கீழாகச் சென்று “Show advanced settings” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். Privacy என்பதன் கீழ், Send a 'Do Not Track' request with your browsing traffic என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். சேவ் செய்து வெளியேறவும். இனி நீங்கள் பார்க்கும் தளங்கள், தேடும் விஷயங்கள் குறித்த தகவல்கள் கூகுள் சர்வருக்கு அனுப்பப்பட மாட்டாது.

கேள்வி: என் பெர்சனல் கம்ப்யூட்டரில் பேஸ்புக் பயன்படுத்தி வருகிறேன். கடந்த ஒரு வாரமாக, என் பக்கத்தில் சென்று, Friends என்ற பிரிவிற்குச் சென்றாலும், நண்பர்களின் பிறந்த நாள் குறித்த பிரிவு கிடைக்கவில்லை. எனக்கு பிறந்த நாள் குறித்த நோட்டிபிகேஷனும் கிடைக்கவில்லை. இதனை எப்படி மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது?
எம். மகாலிங்கம், சிவகாசி.
பதில்:
ஒரு சில வாசகர்கள் இது பற்றி குறை கூறி கடிதங்களை அனுப்பியுள்ளனர். பலருக்கு இந்த பிரச்னை ஏற்படவில்லை. நீங்கள் இது குறித்து https://www.facebook.com/help/326603310765065/ என்ற முகவரியில் உங்கள் குறையைப் பதிவு செய்திடலாம். பதில் அனுப்பப்படும். அல்லது பிரச்னை என்னவென அறியப்பட்டு தீர்க்கப்படும். அல்லது பேஸ்புக்கில் உங்கள் தளத்தில் நுழைந்த பின்னர், https://www.facebook.com/events/birthdays என்ற முகவரியினை டேப் ஒன்றில் அமைத்துத் தேடவும். நிச்சயம் கிடைக்கும்.

கேள்வி: கூகுள் நிறுவனம் இலவசமாக பிரவுசர் தருவதன் மூலம், நம்மைப் பற்றிய தகவல்களை எடுத்துக் கொள்கிறது என்று பலர் குற்றம் சாட்டும் வகையில் கூறுகிறார்களே. நம்மிடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்துக் கொண்டு கூகுள் அப்படி என்னதான் செய்கிறது?
என். சரண்யா, நெய்வேலி.
பதில்:
இது குறித்துச் சிறிய கட்டுரை எழுதலாமா என்று எண்ணிக் கொண்டிருந்த போது, உங்களின் நியாயமான கடிதம் வந்துள்ளது. இங்கேயே அது குறித்துச் சுருக்கமாக விளக்கம் தருகிறேன். கூகுள் இலவச சேவைகள் தந்து அவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்களிடமிருந்து தகவல்களைத் திரட்டுகிறது. அவற்றை விளம்பரதாரர்களுக்கு வகைப்படுத்தி வழங்கி, விற்பனை செய்து, பல கோடி டாலர்களை வருமானமாக ஈட்டுகிறது. இவ்வளவு எளிமையாக சொன்னால் எப்படி என்கிறீர்களா? மேலே குறிப்பிட்ட செயல்பாட்டினை பல நிலைகளாகப் பார்க்கலாம்.
கூகுளின் விளம்பரங்கள் (Google Ads) பயன்படுத்தப்படும் இணைய தளங்களை நீங்கள் பார்க்கும்போது, அவற்றில் காட்டப்படும் பொருட்கள் அல்லது சாதனங்களை நீங்கள் பயன்படுத்தினால், உங்கள் பிரவுசர், அந்த இணையப் பக்கத்தின் முகவரியை, உங்களின் ஐ.பி. முகவரி மற்றும் பிற தகவல்களை கூகுள் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கும். உங்கள் கம்ப்யூட்டரில் இது சார்ந்த குக்கிகள் பிரவுசரால் பதியப்படும். அல்லது ஏற்கனவே இந்த குக்கிகள் இருந்தால், அவற்றைப் படிக்கும். நீங்கள் அப்ளிகேஷன் ஒன்றைப் பயன்படுத்தும்போது, அந்த அப்ளிகேஷன் பெயர் அனுப்பப்படும். அத்துடன், மற்ற தளங்களில் எந்த அப்ளிகேஷன்கள் உங்களுக்குக் காட்டப்பட்டன் என்ற தகவலும் செல்லும். சரி, இந்த தகவல்களைக் கொண்டு கூகுள் என்ன செய்கிறது?
விளம்பரங்களை இன்னும் சிறப்பாக அமைக்கிறது. விளம்பரங்கள் எப்படி செயல்படுகின்றன என்று அறிக்கை தயாரிக்கப்பட்டு விளம்பரதாரர்கள் மற்றும் விளம்பரங்களைக் கொண்டுள்ள இணையதளங்களுக்கு அனுப்புகிறது. இணைய தளங்களில் பதிப்பவர்களுக்கு பணம் அனுப்புகிறது. Google Analytics மூலம் இந்த தகவல்கள் ஆய்வு செய்யப்பட்டு, இணைய தளங்களைப் பார்ப்பவர்களின் நாட்டம் எதில் உள்ளது என்று அறிவிக்கிறது. ஏமாற்றுபவர்களைக் கண்டறிந்து, பயனாளர்களையும் விளம்பர தாரர்களையும் பாதுகாக்கிறது.

கேள்வி: எக்ஸ்டர்னல் 3.5” பிளாப்பி ட்ரைவ் ஒன்றை யு.எஸ்.பி.போர்ட்டில் இணைத்து பயன்படுத்தி வந்தேன். இப்போது என் கம்ப்யூட்டரை விண்டோஸ் 10க்கு அப்டேட் செய்துவிட்டேன். இதில் பிளாப்பி வேலை செய்திடுமா? பயன்படுத்தினால், ஏதேனும் பிரச்னை வரும் என்று இதுவரை பயன்படுத்தவில்லை. பயன்படுத்த என்ன செய்திட வேண்டும் என அறிவுரை தரவும்.
என். நார்மன், நாகர்கோவில்.
பதில்:
விண்டோஸ் 10 சிஸ்டத்தின் கொண்டு வரப்பட்டுள்ள மிகப் பெரிய மாற்றம், அதில் பிளாப்பி ட்ரைவ் இயங்குவதற்கான வழிமுறைகள் (ட்ரைவர்கள்) தரப்படாததுதான். இது குறித்து, விண்டோஸ் 10 சோதனைப் பதிப்பாக இருந்த போதே, கம்ப்யூட்டர் மலரில் எழுதி இருந்தோம். இதற்கான
வழி, நீங்கள் பயன்படுத்தும் எக்ஸ்டர்னல் ட்ரைவ் தயாரித்த நிறுவனத்திடம் உள்ளது. அந்த நிறுவனத்தின் இணைய தளப் பக்கம் சென்று, இந்த பிளாப்பி ட்ரைவ் சாதனம் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் இயங்க ட்ரைவர் பைலைத் தயார் செய்து, இணைய தளத்தில் பதிந்து வைத்துள்ளதா எனப் பார்க்கவும். இருந்தால், அதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்து, பின்னர் இயக்கிப் பார்க்கவும். இல்லையேல், வேறு வழி இல்லை. பயன்படுத்துவதை மறந்து
விடவும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X