ஜியோனி நிறுவனம், இரு வாரங்களுக்கு முன், தன்னுடைய ஸ்மார்ட் போன் Gionee S6s ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 17,999. இதன் சிறப்பம்சங்கள் பின்வருமாறு. இதன் திரை 1920 x 1080 பிக்ஸெல் அடர்த்தியுடன், 5.5 அங்குல அளவில், 2.5 டி அளவிலான வளைவான கிளாஸ் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 1.3 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும், ஆக்டா கோர் Mediatek MT6753 ப்ராசசர், Mali T-720 ஜி.பி.யு.வுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் ராம் மெமரி 3 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 32 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு, 128 ஜி.பி. வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மலாய். இதனுடன் அமிகோ இன்டர்பேஸ் செயலியும் இயங்குகிறது.
இதில் இரண்டு சிம்களை இயக்கலாம். மைக்ரோ மற்றும் நானோ சிம்களைப் பயன்படுத்தலாம். பின்புறமாக, எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 13 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. முன்புறமாக அதே ப்ளாஷ் கொண்ட 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. விரல் ரேகை சென்சார் உள்ளது. இதன் பரிமாணம் 154.5 x 75.6 x 8.27 மிமீ. நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0 மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 3,150 mAh திறன் கொண்டதாக உள்ளது.
மூன்று வண்ணங்களில் இந்த மாடல் ஸ்மார்ட் போன் விற்பனைக்கு வந்துள்ளது. அமேஸான் டாட் இன் வர்த்தக தளத்திலும் மற்றும் அனைத்து மொபைல் போன் விற்பனைக் கடைகளிலும் கிடைக்கிறது.