ஸ்மார்ட் போனில் மின்னஞ்சல் கையாளுதல்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

ஸ்மார்ட் போன் பயன்பாடு, புயல் வேகத்தில் இந்தியாவில் உயர்ந்து வருகிறது. இதில், அதிகமான எண்ணிக்கையிலான மொபைல் போன்களில் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. ஆண்ட்ராய்ட் போன்கள் தரும் பல வசதிகள், பயனாளர்களுக்கு எளிதானதாகவே அமைந்துள்ளன. இவற்றில், மின் அஞ்சல்களைக் கையாளும் விதம் குறித்தே பலருக்கும் சந்தேகங்கள் வருகின்றன. வாசகர்கள் பலர் அனுப்பியுள்ள அஞ்சல்களில் இதற்கான தீர்வுகளைக் கேட்டுள்ளனர். அவை குறித்து இங்கு பார்க்கலாம். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டம், மற்றும் இமெயில் கிளையண்ட் செயலிகள் மாறுகையில், நாம் அஞ்சல்களைக் கையாளுவதிலும் பல புதிய நடைமுறைகளை அறிய வேண்டியதுள்ளது. அவற்றில் சில:

குறிப்பு 1: கூகுள் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் வகையில், தனியே ஜிமெயில் அப்ளிகேஷன் ஒன்றைத் தந்துள்ளது. இதனை https://play.google.com/store/apps/details?id=com.google.android.gm என்ற வலைத்தளத்தில் இருந்து பெற்றுக் கொண்டு, பதிவு செய்து இயக்கலாம். இதன் மூலம் வழக்கமான, ஜிமெயில் அக்கவுண்ட் மட்டுமின்றி, வேறு POP மற்றும் IMAP அக்கவுண்ட்களுக்கான மின் அஞ்சல்களையும் தரவிறக்கம் செய்து பார்க்கலாம். கூடுதலாக, வேறு ஒரு செயலி தரும் மின் அஞ்சல் அக்கவுண்ட் ஒன்றைப் பதிவு செய்திட, திரையில் இடது மேல்புறம் தெரியும் மெனு ஐகானைத் தட்டவும். கிடைக்கும் கீழ் விரி மெனுவில், செட்டிங்ஸ் (Settings) தேர்ந்தெடுத்துப் பின்னர், Add Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு காட்டப்படும் வழி சென்று, உங்களுடைய POP மற்றும் IMAP அக்கவுண்ட்களுக்கான கணக்கினைப் பதியவும்.

குறிப்பு 2: உங்களுடைய ஜிமெயில் செயலியில், ஒன்றுக்கு மேற்பட்ட மின் அஞ்சல் கணக்குகளைப் பெறும் வகையில் அமைப்பு ஏற்படுத்திய பின்னர், உங்கள் கணக்குகள் அனைத்தும் காட்டப்படுவதனைக் காணலாம். அவற்றில் நீங்கள் பார்க்க விரும்பும் மின் அஞ்சல் கணக்கினைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். இதற்கும் திரையின் மேல் இடது பக்கம் உள்ள மெனு ஐகான் தேர்ந்தெடுத்து அதில் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கலாம். அனைத்து அக்கவுண்ட்களில் உள்ள மெயில்களை ஒரே நேரத்தில் பார்க்க, All Inboxes என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.

குறிப்பு 3: உங்களுக்கு அவுட்லுக் போன்ற ஒரு அஞ்சல் செயலி வேண்டுமா? உங்கள் விருப்பத்தினை நிறைவேற்ற, மைக்ரோசாப்ட் நிறுவனம், ஆண்ட்ராய்ட் இயக்கத்தில் செயல்படும் தன் 'அவுட்லுக்' செயலியின் பதிப்பு ஒன்றை இலவசமாக வெளியிட்டுள்ளது. இதனை https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.outlook என்ற முகவரியில் உள்ள இணைய தளத்தில் காணலாம்.

குறிப்பு 4: ஆண்ட்ராய்ட் ஜிமெயில் செயலியும், கூகுள் வழக்கமாகக் காட்டும் உரையாடல் தோற்றத்தைக் ("conversation view") கொண்டிருக்கும். இதில், முதல் அஞ்சல் செய்தியும், அதனை ஒட்டிப் பெறப்பட்ட அஞ்சல்களும் ஓர் உரையாடல் போலக் காட்டப்படும். இதே வகையினை, உங்கள் மற்ற மின் அஞ்சல் அக்கவுண்ட்களில் கிடைக்கும் அஞ்சல்களிலும் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விருப்பப்பட்டால், அதனைச் செயல்படுத்தலாம். எந்த பிற அஞ்சல் அக்கவுண்ட் இவ்வாறு காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ, அதன் செட்டிங்ஸ் பக்கம் செல்லவும். General Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், காட்டப்படும் Conversation View பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும்.

குறிப்பு 5: அஞ்சல் மெசேஜ் ஒன்றை முடித்துவிட்டீர்களா? இதனை உங்கள் இன்பாக்ஸிலிருந்து தனியே எடுத்து காப்பகத்தில் (archive) வைக்கலாம். இன்பாக்ஸில் உள்ள அதனைத் தொட்டு வலது அல்லது இடது பக்கமாக, ஸ்வைப் செய்திடுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட அஞ்சல்களை மொத்தமாகவும் இவ்வாறு தேர்ந்தெடுக்கலாம். ஒவ்வொரு மெசேஜ் அடுத்து உள்ள சிறிய வட்டத்தில் டேப் செய்து தேர்ந்தெடுக்கவும். பின்னர், இவ்வாறு தேர்ந்தெடுத்தவற்றை என்ன செய்திட வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அந்த செயல்பாட்டிற்கான கட்டளைக்கான பட்டன் கொண்ட தொகுப்பு திரையின் மேலாகக் கிடைக்கும்.

குறிப்பு 6: குறிப்பிட்ட அஞ்சலை, காப்பகம் அனுப்பாமல், அழித்துவிட எண்ணினால், ஜிமெயில் ஸ்வைப் செய்வதனை மாற்றி செயல்படுத்தலாம். ஜிமெயிலின் மாறா நிலையை மாற்றி அமைக்க வேண்டியதுதான். Archive என்பதற்குப் பதிலாக Delete என்பதனை அமைக்க வேண்டும்.

குறிப்பு 7: பல வேளைகளில், அஞ்சல்களை முறையாக முடிப்பதற்கு முன்னர், நீங்கள் அதனை அனுப்பிவிடுவது குறித்து கவலைப் படுகிறீர்களா? கவலை வேண்டாம். ஜிமெயில் தளத்தின் கீழாக உள்ள பொதுவான செட்டிங்ஸ் பகுதியைப் பார்க்கவும். அதில் எந்த மின் அஞ்சலையும் அனுப்பும் முன்னர், உங்களிடம் உறுதி பெறும் வகையில் செயல்படுத்த, ஓர் ஆப்ஷன் தரப்பட்டிருக்கும். அஞ்சல் அனுப்புவதற்கு மட்டுமின்றி, ஓர் அஞ்சலை, காப்பகம் தள்ளவும், அழிக்கவும் கூட நம்மிடம் உறுதிப்படுத்தும் வகையில், இங்கு செட்டிங்ஸ் அமைக்கலாம். இதன் மூலம் நாம் சற்று முன் ஜாக்கிரதையாக நம் அஞ்சல்களைக் கையாளலாம்.

குறிப்பு 8: இணைய தளத்தில் கிடைக்கும் ஜிமெயில் வசதிக்கும், ஆண்ட்ராய்ட் தளத்தில் கிடைக்கும் ஜிமெயில் வசதிக்கும் இடையே வேறுபாடு உள்ள வசதி, நாம் “விடுமுறை காலம்” (automatic vacation response) அமைத்துக் கொள்வதாகும். அப்ளிகேஷன் செட்டிங்ஸ் பகுதியில், உங்கள் மின் அஞ்சல் அக்கவுண்ட்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் Vacation Responder என்பதைத் தேர்ந்தெடுத்து, அதனை இயக்கலாம். அல்லது ஏற்கனவே இயக்கப்பட்டிருந்தால், இயக்கத்தினை நிறுத்தலாம். அல்லது நம் ஆப்ஷன்களை மாற்றி அமைக்கலாம்.

போனில் உள்ள தொடர்புகள்: எந்த ஆண்ட்ராய்ட் இயக்க சாதனத்தில் நீங்கள் பட்டியல் படுத்தி வைத்துள்ள அனைத்து தொடர்பு தகவல்களும், கூகுளின் யுனிவர்சல் காண்டாக்ட் சிஸ்டத்துடன் இணைக்கப்படும். அதாவது அண்மையில் உருவாக்கப்பட்ட, Google Contacts Web app (https://contacts.google.com/preview) மூலம், அவற்றைப் பார்வையிடலாம். திருத்தி அமைக்கலாம். இங்கு திருத்தி அமைத்தால், உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனங்கள் அனைத்திலும் அது திருத்தி அமைக்கப்படும்.
நீங்கள் அடிக்கடி தொடர்பு கொள்ளும் ஒருவரின் தொடர்பினை எளிதாகக் கண்டறிய, அவரின் பெயர் அருகே உள்ள ஸ்டார் ஐகானைத் தட்டவும். இதை உங்கள் ஆண்ட்ராய்ட் சாதனத்தில் உள்ள Contacts app அல்லது கூகுள் காண்டாக்ட்ஸ் இணைய தளத்தில் மேற்கொள்ளலாம். இவ்வாறு செயல்பட்டால், அந்த குறிப்பிட்ட முகவரி, உங்கள் போனில் உள்ள அனைத்து தொடர்புகளுக்கும் முன்னதாக, முதலாவதாக அமைக்கப்படும்.
ஒரு சிலரின் தொடர்பு தகவல்களை ஒன்றுக்கு மேற்பட்டதாக அமைத்திருப்போம். இப்படிப்பட்டவற்றைப் பின் நாளில் காண்கையில், ஏன் இவ்வாறு அமைத்தோம் என்று எண்ணியவாறு, அவற்றைச் சரி செய்திடாமல், தேவையற்ற ஒன்றை நீக்காமல் வைத்திருப்போம். இப்படிப்பட்ட டூப்ளிகேட் தொடர்பு தகவல்களை, Contacts Web செயலியில் இருந்தவாறு நீக்கலாம். இந்த தளத்தில் உள்ள மெனுவில், இடது பக்கமாக, Find Duplicates என்று இருப்பதனைத் தேர்ந்தெடுக்கவும். முகவரிப் பட்டியலில் உள்ள ஒன்றுக்கு மேற்பட்ட அதே பதிவுகளைப் பட்டியலிட்டுக் காட்டி, அனைத்தையும் ஒன்றிணைக்கவா என்று உங்களின் அனுமதியைப் பெற்று, தேவையற்றவற்றை நீக்கி, ஒன்றாக அமைத்துவிடும்.
கூகுள் தன் ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் சாதனங்கள் அனைத்திலும் உள்ள அஞ்சல் மற்றும் தொடர்பு சார்ந்த தகவல்களை ஒருங்கிணைத்து, அவற்றைக் கையாளும் திறனை நமக்களிக்கிறது. இன்னும் உள்ளாகச் சென்றால், பல வசதிகளைக் காணலாம். எளிதாகப் பயன்படுத்தலாம்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X