கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

12 செப்
2016
00:00

கேள்வி: நான் டி.டி.பி. மையம் ஒன்று இயக்கி வருகிறேன். இதில் ஆய்வுக் கட்டுரைகள், திட்டக் கட்டுரைகள் டைப் செய்திடுகையில், ஹெடர், புட்டரில் பக்க எண்களை ஒவ்வொருவரும் ஒரு மாதிரி கேட்கிறார்கள். வேர்ட் புரோகிராமில், இதனை எப்படி செட் செய்வது என டிப்ஸ் தரவும்.
என். கோகிலம், கோவை.
பதில்:
வேர்ட் பக்க எண்களை ஹெடர் மற்றும் புட்டரில் அமைக்கப் பல வழிகளைத் தருகிறது. வேர்ட் அனுமதிக்கும் பக்க எண்களின் வகைகள்: அரபிக் …1,23. முன்னால் சிறிய ஹைபனுடன் -1,-2,-3.ரோமன் எழுத்துகள் பெரிய எழுத்தில் I, II, III. சிறிய எழுத்தில் i, ii, iii, எழுத்து வகையில் பெரிய எழுத்துகளுடன் A, B, C.. மற்றும் a, b, c.
நீங்கள் அமைக்கும் பக்க எண்களின் பார்மட்டை மாற்ற கீழே குறித்துள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. எந்த பக்கத்திற்கான பக்க எண்ணை மாற்ற வேண்டுமோ, அந்த பக்கத்தில் கர்சரைக் கொண்டு வைக்கவும்.
2. பின்னர், View மெனுவில், Header and Footer, என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Header and footer டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
3. இங்கு Format Page Number ஐகான் மீது கிளிக் செய்திடவும். இப்போது Page Number Format டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
4. இதில், எந்த எண் வகை வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. அடுத்து, ஓகே கிளிக் செய்திடவும்.
6. பின் ஹெடர் புட்டர் டயலாக் பாக்ஸில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டம் இனி இலவசமாக அப்கிரேட் செய்திடக் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விலை குறித்து எழுதுகையில், டாலர் கணக்கில் 119 டாலர் என எழுதுகிறீர்கள். இந்தியாவில் உள்ள கம்ப்யூட்டர் கடைகளில், விண்டோஸ் 10 தொகுப்பினை வாங்குகையில் எவ்வளவு தொகை கொடுக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லையா? அறிவித்திருந்தல், எவ்வளவு செலுத்த வேண்டும்?
என். மேகலா, திருப்பூர்.
பதில்
: நல்ல கேள்வி. இப்போது விண்டோஸ் சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டரை நீங்கள் வாங்கினால், அதில் விண்டோஸ் 10 சிஸ்டம் மட்டுமே, ஆப்பரேட்டிங் சிஸ்டமாகப் பதிந்து தரப்படும். விண்டோஸ் ஹோம் சிஸ்டத்திற்கு நீங்கள் ரூ. 8,999 செலுத்த வேண்டும். உயர் நிலையில், விண்டோஸ் 10 புரபஷனல் எனில், ரூ. 14,999 செலுத்த வேண்டும். அமேஸான் இந்தியா இணைய தளத்தில் இந்த விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நம் ஊர் கடைகளில், சற்றேறக் குறைய இருக்கலாம்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கடந்த மூன்று மாதங்களாகப் பழகி வருகிறேன். டைல்ஸ்களால் எந்த வசதியும் இல்லை. அவை அனைத்தையும் எடுத்துவிட்டு, பழையபடி ஸ்டார்ட் மெனுவினை அமைக்க, செட்டிங்ஸ் பிரிவில் இடம் இருப்பதாகத் தெரியவில்லை. வழி இருந்தால் குறிப்பு தரவும்.
என். ஷண்முகம், திண்டுக்கல்.
பதில்:
சிஸ்டம் செட்டிங்ஸ் எல்லாம் செல்ல வேண்டாம். ஒவ்வொரு டைல் மீதும் ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் கிடைக்கும் பட்டியலில், “Unpin from Start” என்பதில் கிளிக் செய்திடவும். இப்படியே அனைத்து டைல்களையும் நீக்கிவிடலாம். பின்னர், ஸ்டார் மெனு முன்பு இருந்தது போல, நெட்டுவாக்கில் அமைக்கலாம். அதன் வலது மூலையில், மவுஸின் கர்சரை வைத்து இழுத்து அமைக்க வேண்டும். இதன் மூலம் டைல்களுக்கான பிரிவு, முழுமையாக நீக்கப்படும். இங்கு பழையபடி, அப்ளிகேஷன் புரோகிராம்கள் மட்டும் அணி வகுத்து கிடைக்கும்.

கேள்வி: நான் என் அலுவலகத்தில் உள்ள கம்ப்யூட்டரில், என் பேஸ்புக் தளத்தினைப் பார்வையிடுவேன். வழக்கமாக அதனை லாக் அவுட் செய்துவிட்டு வந்தாலும், சில வேளைகளில், அவசரத்தில் லாக் அவுட் செய்வதில்லை. இதனால், எப்போதும், அங்கு லாக் அவுட் செய்தேனா? என்ற சந்தேகம் உருவாகிறது. வீட்டில் உள்ள கம்ப்யூட்டரை, நான் மட்டுமே இயக்குவதால், பேஸ்புக் லாக் அவுட் செய்வதில்லை. அலுவலகக் கம்ப்யூட்டரில் லாக் அவுட் செய்யப்பட்டுள்ளதா என எப்படி அறிவது?
என். ஜெயப்பிரகாஷ், கோவை.
பதில்:
நீங்கள் பேஸ்புக் தளத்தில் லாக் இன் செய்வதனை, பேஸ்புக் சர்வர் குறித்து வைத்துக் கொண்டே இருக்கும். எனவே, வேறு ஒரு கம்ப்யூட்டர் வழியாக, உங்கள் பேஸ்புக் தளத்தில் நீங்கள் லாக் இன் செய்தாலும், மற்றவர்கள் உங்கள் பாஸ்வேர்டினைத் தெரிந்து பயன்படுத்தி லாக் இன் செய்தாலும், அது தன் நினைவில் பதிவுகளாக வைத்திருக்கும். இந்த பதிவுகளைக் கொண்டு, வேறு ஒருவர் உங்கள் கணக்கு உள்ள தளத்தில், லாக் இன் செய்துள்ளார்களா என்று கண்டறியலாம். அதனை லாக் அவுட் செய்திடலாம். இதற்கான வசதியை பேஸ்புக் தருகிறது. உங்களுடைய அக்கவுண்ட் தற்சமயம் எங்கு லாக் இன் ஆகியுள்ளது என்று கண்டறிய, ஒரு பிரவுசர் வழியாக, பேஸ்புக் தளம் சென்று, உங்கள் அக்கவுண்ட் பக்கத்திற்குள் செல்லுங்கள்.
கிடைக்கும் விண்டோவில், இடது பக்கப் பிரிவில் உள்ள “Security” என்பதில் கிளிக் செய்திடவும். 'செக்யூரிட்டி செட்டிங்ஸ்' பக்கத்தில், “Where You're Logged In” என்று இருக்குமிடத்தில் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் பிரிவை மேலும் விரிக்கலாம். இப்போது, நீங்கள் லாக் இன் செய்துள்ள இடங்கள் எல்லாம் காட்டப்படும். வழக்கத்திற்கு மாறான, இடம் ஏதாவது காட்டப்பட்டால், End Activity என்பதில் கிளிக் செய்தால், அனைத்து கம்ப்யூட்டர்களில் திறக்கப்பட்ட உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் மூடப்படும். உங்கள் பாஸ்வேர்டினை யாரேனும் திருடிவிட்டதாகத் தெரிந்தால், உடனே உங்கள் பக்கம் சென்று பாஸ்வேர்டை மாற்றவும். இது போல, அடிக்கடி சோதனை செய்வது உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டின் ரகசியத் தன்மையைப் பாதுகாக்கும்.
இது மட்டுமின்றி, உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட்டில் உள்ள பதிவுகள் குறித்து பலவகை முடிவுகளை இந்த செக்யூரிட்டி தளத்தில் எடுக்கலாம். உங்கள் பேஸ்புக் தளத்தில் உள்ள அனைத்து பதிவுகளையும், தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நண்பர்களுக்கும் மட்டுமானதாக மாற்றலாம். உங்கள் நண்பர்களை விலக்கி விடாமல் (Unfriend) அவர்கள் உங்கள் பக்கத்தில் பதிவிடுவதை தடுக்கலாம். உங்கள் டைம் லைனில் உள்ள பதிவுகளை ஆய்வு செய்து, குறிப்பிட்டவற்றை நீக்கலாம். குறிப்பிட்ட சில நபர்களுக்கு மட்டும், உங்கள் பதிவுகளைப் பார்க்கும் சுதந்திரத்தை வழங்கலாம். பேஸ்புக் தளத்துடனான உங்கள் உறவினை முடக்கி விடலாம்.

கேள்வி: என் வி.எல்.சி. பிளேயரில் விடியோ படங்கள் திடீரென, விடியோ மற்றும் ஆடியோ வேகம் குறைந்து மெதுவாக இயங்குகின்றன. இது கேட்கும் அனுபவத்தை சிதைக்கிறது. இதனைச் சரி செய்திட கூகுளில் தேடிய போது, வியூ சென்று ஸ்டேட்டஸ் பார் டிக் செய்து பெற்றுச் சரி செய்திடும் வழியை மேற்கொள்ள குறிப்பு உள்ளது. ஆனால், வியூ கிளிக் செய்தால், அது போல ஸ்டேட்டஸ் பார் என்ற பிரிவே இல்லை. இதற்கான வழி என்ன?
என். கோகுல கிருஷ்ணன், காரைக்கால்.
பதில்
: நீங்கள் பதிந்து இயக்கும் வி.எல்.சி. பிளேயரின் பதிப்பு எண் குறித்து எதுவும் கூறவில்லை. வியூ மெனுவில் ஸ்டேட்டஸ் பார் கிடைக்கவில்லை என்றால், உங்கள் வி.எல்.சி. பிளேயரில் ஸ்டேட்டஸ் பார் காட்டப்படுகிறது என்று பொருள். அதன் வலது ஓரத்தில், வால்யூம் காட்டப்படும் முக்கோணம் அருகே சிறிய கட்டத்தில், சதவீத குறியீட்டுடன் எண் ஒன்று சிறிய கட்டத்தில் இருக்கும். இதன் அருகே, கர்சரைக் கொண்டு சென்றால், Current playback speed is ….. Click to Adjust என்று இருக்கும். இதனைக் கிளிக் செய்திடவும். நெட்டு வாக்கில், ஒரு ஸ்லைடர் கிடைக்கும். இதனை அட்ஜஸ்ட் செய்வதன் மூலம், விடியோ, ஆடியோ பைல்கள் இயக்கப்படும் வேகத்தினைச் சரி செய்திடலாம். விடியோ பைல் ஒன்றை இயக்கியவாறே இதனை மேற்கொள்ளவும். உங்களுக்குச் சரியெனத் தோன்றும் வேகம் கிடைத்தவுடன், ஸ்லைடரை விட்டுவிடவும். இனி, நீங்கள் விரும்பியபடி இசையை ரசிக்கலாம்.

கேள்வி: பைல் எக்ஸ்புளோரரைத் திறந்து பைல்களின் பட்டியலைக் காண்கையில், ஒவ்வொரு டைரக்டரியிலும் ஒரு விதமாகக் காட்டப்படுகிறது. எந்த போல்டரைத் திறந்தாலும், நாம் விரும்பும் வகையில் காட்டப்பட வேண்டுமாய் எப்படி அமைப்பது?
கே. ஆர். ஜினிதா, கோவை.
பதில்:
இதில் பைல் எக்ஸ்புளோரரின் தவறு எதுவும் இல்லை. எப்படி செட் செய்யப்பட்டதோ அப்படியே காட்டப்படும். எக்ஸ்புளோரர் செட்டிங்ஸ் அமைக்கையில், ஒவ்வொரு போல்டரும் ஒருவிதமாகக் காட்டப்படும். வியூ மெனுவில் பல ஆப்ஷன்கள் உள்ளன. ஆனால் உங்களைப் போல பலரும், ஒரு குறிப்பிட்ட வியூவினையே விரும்புவார்கள். இதனையே அனைத்து போல்டர்களும் காட்ட வேண்டும் எனவும் விருப்பப்படுவார்கள். இதில் தவறேதும் இல்லை. அப்போதுதான் ஒரே மாதிரியான பணி நிலை கிடைக்கும். இதற்கு போல்டர் ஒன்றைத் திறந்து Organize என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதன் பின் Folder and search options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு வியூ டேப்பிற்குச் சென்று மேலாக உள்ள Apply to folders என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். இனி இதுதான் உங்களின் மாறா நிலையில் உள்ள (Default) போல்டராக அமைந்துவிடும்.

கேள்வி: சரியாக இணைய முகவரியை அமைத்துத் தேடுகையிலும் கூட, “Server Not found” என்ற பிழைச் செய்தி வருகிறது. நான் முகவரி அமைத்ததைப் பலமுறை சரி பார்த்த பின்னரே, இதனை எழுதுகிறேன். இந்த பிழை எதனால் ஏற்படுகிறது? விளக்கம் தந்து வழி காட்டவும்.
எஸ். மோகன்தாஸ், திருச்சி.
பதில்:
“Server not found” என பிரவுசரில் பிழைச் செய்தி வந்தால், உங்கள் பிரவுசர் நீங்கள் அமைத்த முகவரியில், இணையதளம் எதனையும் காணவில்லை என்பதே பொருள். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். நீங்கள் முகவரியைச் சரியாகத்தான் அமைத்தேன் என்று எழுதியுள்ளீர்கள். சரியாகத்தான் உள்ளது என எதை வைத்துக் கூறுகிறீர்கள்? எனவே, நீங்கள் முகவரியைத் தவறாக அமைத்திருக்கலாம். அல்லது, சரியாக முகவரி அமைத்து, இல்லாத ஓர் இணைய தளத்தினை அணுக நீங்கள் முயற்சிக்கலாம். இணைய இணைப்பில், உங்கள் பிரவுசருக்கு அடுத்த நிலையில் இயங்கும், இணைய சேவை தரும் நிறுவனத்தின் டி.என்.எஸ். சர்வர் இயங்காமல் இருக்கலாம். அல்லது உங்கள் கம்ப்யூட்டரில் அமைக்கப்பட்டுள்ள பயர்வால், இதனைத் தவறாகப் புரிந்து கொண்டு, இந்த பிழைச் செய்தியைத் தரலாம். இங்கு சொல்லப்பட்ட ஒவ்வொன்றையும் தனித்தனியே மனதில் கொண்டு சோதனை செய்து பார்க்கவும். சரியாகிவிடும். அல்லது இன்னொரு பிரவுசர் மூலம் முயற்சிக்கவும்.

கேள்வி: கூகுள் தேடலில், intext என்ற கட்டளைச் சொல் எதற்குப் பயன்படுகிறது? இது எந்த வகை பில்டராகப் பயன்படுகிறது? எடுத்துக் காட்டுகளுடன் விளக்கம் அளிக்குமாறு வேண்டுகிறேன். நன்றி.
ஆர். மோகனா உலகநாதன், திருப்பூர்.
பதில்:
குறிப்பிட்ட சொல் உள்ள இணையப் பக்கங்களை மட்டும் தேடி, அவை இருக்கும் இணையப் பக்கங்கள் குறித்த தகவல்களை மட்டும் பெற இந்த Intext கட்டளைச் சொல் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக் காட்டாக, soup recipes என்பது குறித்த தகவல்களைத் தேடிப் பெறுகையில், நமக்கு 'chicken' என்ற சொல் பயன்படுத்தப்படும் தளங்கள் மட்டும் தேடிப் பெற, soup recipes intext:chicken என்று கட்டளை கொடுக்க வேண்டும். கூகுள், chicken என்ற சொல் உள்ள, soup recipes குறித்த இணையப் பக்கங்களை மட்டும் காட்டும்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X