கேள்வி - பதில்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 டிச
2010
00:00

கேள்வி: என்னிடம் விஸ்டா பிரிமியம் ஹோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இதில் மைக்ரோசாப்ட் சைட் பார் சைட்டிலிருந்து டவுண்லோட் செய்த கடிகாரத்தினைப் பயன்படுத்தி வந்தேன். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர், கடிகாரம் திடீரென இயங்காமல் நின்று விட்டது. மற்ற கடிகாரங்களைசைட் பாரில் வைத்து இயக்கிப் பார்த்த போதும் இதே முடிவுதான். செட் செய்திடும் போது நன்றாக அமைந்து, இயங்கிய சில நிமிடங்களில் நின்று விடுகிறது. சைட் பாரில் உள்ள மற்ற ஐட்டங்கள் எல்லாம் நன்றாக இயங்குகின்றன. இந்தப் பிரச்னைக்கு முடிவு சொல்லவும். - ஜே.என்.நாராயண மூர்த்தி, சென்னை
பதில்: நல்ல விரிவான கடிதம் அளித்துள்ளீர்கள். மூர்த்தி, உங்கள் பிரச்னை குறித்து இதே தொல்லையை அனுபவித்த பலரும் எங்கள் பிரிவிற்கு கடிதங்கள் எழுதி உள்ளனர். என் நண்பர் ஒருவர் என்னிடம் இது குறித்து கேட்ட போது அவரின் கம்ப்யூட்டரிலும் இதே பிரச்னை என்று சொன்னவுடன், அந்தக் கம்ப்யூட்டர் முன் சென்று அனைத்தையும் ஆய்வு செய்து பார்த்தோம். பிரச்னை ஏன் என்று தெரிய வந்தது. முதன்மைக் காரணமாக, விண்டோஸ் எக்ஸ்புளோரர் தொகுப்பு 8 ஆகும். பொதுவாக இதற்கென வழங்கப்படும் அப்டேட் பைல்கள் விஸ்டா சைட்பாரில் இயங்குபவற்றிற்குத் தொல்லை கொடுக்கின்றன. இதற்கான முதல் தீர்வு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பினை அன் இன்ஸ்டால் செய்வதுதான். எனவே இன்னொரு பிரவுசரை, பயர்பாக்ஸ், குரோம் அல்லது ஆப்பரா, இன்ஸ்டால் செய்த பின்னர் இந்த முடிவைச் செயல்படுத்தவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர் பதிப்பு 8னை நீக்க கீழ்க்குறித்தபடி செயல்படவும். Start பட்டன் அழுத்தி Control Panel தேர்ந்தெடுக்கவும். இதிலிருந்து Programs and Features விண்டோ பெறவும். பின்னர் இடது புறம் உள்ள Tasks பிரிவில் View installed updates என்பதில் கிளிக் செய்திடவும். அகர வரிசைப்படி உள்ள அப்டேட் பட்டியலில் Windows Internet Explorer 8 என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் இருமுறை கிளிக் செய்திடவும். இங்கு Are you sure you want to uninstall this update? என்ற கேள்வி கிடைக்கும். உடன் Yes என்பதில் கிளிக் செய்திடவும். இது உங்கள் பிரச்னையைத் தீர்த்துவிட்டால், மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8 ஐ, இன்ஸ்டால் செய்திடலாம். அல்லது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 சோதனை தொகுப்பினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தலாம். ஒன்றும் சரியில்லை என்றால், வேறு ஒரு பிரவுசரைப் பயன்படுத்தவும்.

கேள்வி: எக்ஸெல் ஒர்க்புக் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் சில அளவுகள் அடி, அங்குலம் என்றபடி தரப்பட்டுள்ளது. இதனை மீட்டராக பார்முலா வழியில் மாற்ற என்ன செய்திட வேன்டும். ஒவ்வொன்றாக மாற்ற வேண்டுமா? மொத்தமாக மாற்றலாமா? டேட்டா வரிசையாக பி வரிசை செல்களில் உள்ளன. - நா.ஸ்டாலின், கோவை.
பதில்: கவனமாகச் செயல்பட்டால், மொத்தமாக இதனை மாற்றலாம். இதற்கான பார்முலா CONVERT பங்சன் கொண்டு அமைக்கப்பட வேண்டும். இதனை பார்முலா என்று சொல்ல முடியாது. Column B – யில் வரிசையாக அடிக் கணக்கில் டேட்டா கொடுத்து வைத்திருக்கிறீர்கள். இதனை மீட்டர் கணக்கில் Column C யில் கொண்டு வர முயற்சிப்போம். Column B – யில் டேட்டா உள்ள செல்களைத் தேர்ந்தெடுக்கவும். இது B2 முதல் B8 வரை இருப்பதாக வைத்துக் கொள்வோம். இனி C2:C8 தேர்ந்தெடுங்கள்.
இப்போது =CONVERT(B2,”ft”,”m”) என பார்முலாவினை டைப் செய்திடவும். அடுத்து Ctrl + Enter என்ற இரு கீகளையும் அழுத்தவும். CONVERT கட்டளை மூலம் பல வகையான அலகுகளை மாற்றி அமைக்கலாம். மைல்– கி.மீ, காலன் – லிட்டர் என பல கிடைக்கின்றன. பாரன்ஹீட் – செல்சியஸ் மாற்றத்திற்கான பார்முலா இப்படி இருக்கும். =CONVERT(68, “F”, “C”) செல்சியஸ் – பாரன்ஹீட் பார்முலா =CONVERT(68, “C”, “F”) என அமையும். எக்ஸெல் ஹெல்ப் மெனு சென்று மற்றவற்றிற்கான பார்முலாக்களை அமைக்கவும். உங்களிடம் பதியப்பட்டுள்ள எக்ஸெல் CONVERT பார்முலாவினை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் Analysis ToolPak–னை உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்திடவும்.

கேள்வி: என் பிரயாண விவரங்களை எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் வைத்து அமைத்தேன். அதனை வேர்ட் டேபிள் ஒன்றில் அமைக்க காப்பி /பேஸ்ட் செய்தபோது ஒரே காலத்தில் வருகிது. சரியான டேபிளாக அமைக்க என்ன செய்திட வேன்டும்? - நா. செம்மலை ராஜன், போடி.
பதில்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் எந்த செல்களை ஒட்ட வேண்டுமோ அவற்றை தேர்ந்தெடுங்கள்; பின் கண்ட்ரோல்+சி (Ctrl+ C) கொடுத்து காப்பி செய்திடுங்கள். பின் வேர்ட் டாகுமெண்ட்டில் எடிட் (Edit) மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் (Paste Special) என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அதில் கிடைக்கும் மெனுவில் Microsoft Office Excel Worksheet Object என்பதனைத் தேர்ந்தெடுத்து ஓகே செய்திடவும். மிக அழகாக டேபிள் அட்டவணைக் கட்டங்கள் போல தகவல்கள் அமைக்கப்பட்டுவிடும். இது போல பல வகைகளில் இந்த இரண்டு புரோகிராம்களும் இணைந்து செயல்படும்.

கேள்வி: நான் ஒரு வெப்சைட் ஒன்றை உருவாக்க விரும்புகிறேன். என் நண்பர் கூகுள் தரும் வசதியினைப் பயன்படுத்துமாறு கூறுகிறார். இதற்கு என்ன செய்ய வேண்டும்? எப்படி அணுக வேண்டும்? - சி. விநாயகராஜ், மேலூர்.
பதில்: வெப்சைட் தயாரிக்கப் பல இணைய தளங்கள் உதவுகின்றன. நீங்கள் கூகுள் தான் வேண்டும் என்பதால் கீழே தகவல்களைத் தருகிறேன். இதற்கு கூகுள் சைட்ஸ் என்ற இணைய தளம் செல்ல வேண்டும். http://sites.google.com என்ற முகவரியினைப் பயன்படுத்தி அந்த இணைய தளம் செல்லவும். உங்களுக்கு கூகுள் அக்கவுண்ட் இருந்தால் அதனைப் பயன்படுத்தி உள்ளே செல்லுமாறு நீங்கள் கேட்டுக் கொள்ளப்படுவீர்கள்.
அக்கவுண்ட் இல்லை என்றால் ஒன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எல்லாமே மிக எளிதுதான். தயாராகி உள்ளே சென்ற பின்னர் Create Site என்பதில் கிளிக் செய்திடுங்கள். அடுத்து நீங்கள் நிரப்புவதற்கு படிவம் ஒன்று தரப்படும். கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்திடுங்கள். இந்த வேளையில் உங்கள் சைட்டுக்கு ஒரு தலைப்பினையும் நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். இந்த இடம் தான் உங்கள் வெப்சைட்டின் யு.ஆர்.எல். ஆகும். இதன் மூலம் தான் உங்கள் வெப்சைட்டை நீங்கள் அணுக முடியும். அது http://sites.google.com/site/name என்றபடி இருக்கும். இதில் name என்ற இடத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர் இருக்கும். இப்போது மீண்டும் Create Site செல்லுங்கள். வெப்சைட் உருவாக்குவதற்கான இடத்திற்குச் செல்வீர்கள். புதிய இணையப் பக்கம் உருவாக்க வேண்டும் என்றால் Create New Page என்பதில் கிளிக் செய்திடுங்கள். ஏற்கனவே உள்ள வெப்சைட்டில் மாற்றங்கள் செய்திட வேண்டும் என்றால் Edit Page என்ற இடத்தில் கிளிக் செய்திடுங்கள். உங்கள் வெப்சைட்டினை உருவாக்கி முடித்தபின் Save கிளிக் செய்து வெளியே வாருங்கள். அவ்வளவுதான் உங்கள் இணைய வீடு தயார் ஆகிவிட்டது. இதனைக் காண உங்கள் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.

கேள்வி: என்னுடைய மவுஸ் பாய்ண்ட்டர் கர்சர் பல வேளைகளில் எங்கிருக்கிறது என்று கண்டறிவது சிரமமாக உள்ளது. இதனை வேறாகவோ அல்லது பெரியதாகவோ மாற்ற முடியுமா? - கே.எல். ஸ்நேகா, தாம்பரம்.
பதில்: நீங்கள் குறிப்பிடுவது மவுஸ் பாய்ண்ட்டர் என்று எண்ணுகிறேன். Start /Settings/Control Panel/Mouse எனச் செல்லவும். இங்கு Pointers டேபில் கிளிக் செய்திடவும். மேல் பிரிவில் புதிய பாய்ண்ட்டர் ஒன்றை கீழ் விரியும் மெனுவில் இருந்து தேர்ந்தெடுக்கவும். அதன் பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். உங்களுடைய கம்ப்யூட்டரில் இது போன்ற வேறு மவுஸ் பாய்ண்டர் ஸ்கீம் கிடைக்கவில்லை என்றால் http://support.microsoft.com/default.aspx?scid=kb;ENUS;q154500 என்ற தளத்திற்குச் செல்லவும். இந்த தளத்திலிருந்து எட்டு வெவ்வேறு மவுஸ் பாய்ண்டருக்கான திட்டத்தினை டவுண்லோட் செய்து கொள்ளலாம்.

கேள்வி: என் பிரவுசரில் காட்டப்படும் இணையப் பக்கங்களின் எழுத்துக்கள் மற்றும் படங்கள் பெரிதாகக் காட்டப்படும் வகையில் செட்டிங்ஸ் அமைப்பது எப்படி? நான் எக்ஸ்பி மற்றும் ஆப்பரா பயன்படுத்தி வருகிறேன். இதற்காக பிரவுசரை மாற்ற வேண்டுமா? - ஆர். ஜான் சுந்தர், புதுச்சேரி.
பதில்: எந்த இணைய பிரவுசராக இருந்தாலும், கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு ஸ்குரோல் வீலைச் சுழற்றவும். சுழற்றும் திசைக்கேற்ப வெப் சைட்டின் எழுத்துக்கள் சிறியதாகவோ பெரியதாகவோ மாறுவதைப் பார்க்கலாம். நீங்கள் ஆப்பரா பிரவுசர் பயன்படுத்துபவராக இருந்தால் இந்த ட்ரிக் மேற்கொள்கையில் படங்களும் பெரிது அல்லது சிறிதாவதைப் பார்க்கலாம்.

கேள்வி: பேஜ்மேக்கர் பதிப்பு 7 தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். என் டி.டி.பி. பணிகளுக்கு இது போதுமானது ஆகும். பல வேளைகளில் டூல்ஸ் கட்டம் காணாமல் போய்விடுகிறது. இதனை எப்படி கொண்டு வருவது? சில வேளைகளில் பேஜ் மேக்கரை மூடித் திறந்தால் கிடைக்கிறது. - டி. கார்த்திக் ராஜ், மதுரை.
பதில்: நீங்கள் இதனை மறைத்துவிடும்படி சில கீகளை அழுத்துகிறீர்கள் என்று நினைக்கிறேன். மெனு பாரில் விண்டோ கிளிக் செய்து கிடைக்கும் பிரிவுகளில் Show Tools என்பதில் கிளிக் செய்திடவும். இதே போல பலர் எழுத்து மற்றும் டெக்ஸ்ட் கண்ட்ரோல் செய்திடும் பாக்ஸையும் அடிக்கடி காணடித்துவிடுவார்கள். அவர்கள் இதே மெனுவில் Show control pallete என்பதைக் கிளிக் செய்திட வேண்டும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Akshaya - Coimbatore,இந்தியா
28-டிச-201011:54:02 IST Report Abuse
Akshaya கார்த்திக்ராஜின் கேள்விக்கு வாசகர் அஸ்வத்தாமாவின் பதில் நல்ல பயனுள்ளதாக இருந்தது. Tab key யை Press செய்தாலே Tool bar கிடைத்துவிட்டது. இது மிகவும் Easy ஆக உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
Divyasri - சென்னை,இந்தியா
28-டிச-201010:33:39 IST Report Abuse
Divyasri மதுரை கார்த்திக்ராஜின் கேள்விக்கு பதில் அளித்திருந்த அஸ்வத்தாமாவின் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அவர் சொன்னபடி செய்து பார்த்தேன். மிகவும் ஈஸியாகவும், ஆச்சர்யமாகவும் இருந்தது. அஸ்வத்தாமாவிற்கு எனது நன்றி.
Rate this:
Share this comment
Cancel
aswathama - மதுரை,இந்தியா
27-டிச-201012:59:55 IST Report Abuse
aswathama மதுரை, கார்த்திக்ராஜ் கேட்ட கேள்விக்கு இன்னொரு பதிலும் இருக்கிறது. அதாவது Tab key யை பிரஸ் செய்தாலே டூல்பார் கிடைத்து விடும். இதனை Photoshop, PageMaker இரண்டிலும் பயன்படுத்தலாம். செய்து பார்க்கவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X