எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் வசதி
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்துத் தரப்பட்ட, முற்றிலும் புதிய பிரவுசரான 'எட்ஜ்' பிரவுசர், தொடக்கத்தில், கூடுதல் வசதிகளைத் தரும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்றுக் கொள்ளாத வகையில் வடிவமைத்துத் தரப்பட்டது. அண்மையில், ஆகஸ்ட் 2 அன்று, தரப்பட்ட விண்டோஸ் 10 மேம்படுத்தலில், எட்ஜ் பிரவுசரில் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை ஏற்று இயக்கும் வகையில் அமைக்கப்பட்டது. எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், விண்டோஸ் ஸ்டோரில் தரப்பட்டன. தொடக்கத்தில் ஒரு சில புரோகிராம்களே இருந்தாலும், தொடர்ந்து கூடுதல் எண்ணிக்கையில், இவை வழங்கப்பட்டு வருகின்றன.
விரைவில் மைக்ரோசாப்ட், குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, எட்ஜ் பிரவுசருக்கென மாற்றி அமைத்துத் தரும் டூல் ஒன்றை வெளியிட உள்ளது. இந்த இரண்டு பிரவுசர்களுக்குமான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் ஏறத்தாழ ஒரே வகையில் கட்டமைப்பினைக் கொண்டிருப்பதால், மிக எளிதாக இந்த டூல், குரோம் பிரவுசர் எக்ஸ்டன்ஷன்களை, எட்ஜ் பிரவுசருக்கு மாற்றித் தரும். அண்மையில் பயர்பாக்ஸ் பிரவுசருக்கென தரப்படும் புதிய எக்ஸ்டன்ஷன் கட்டமைப்பும் குரோம் பிரவுசரை ஒட்டியே அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை எட்ஜ் பிரவுசரில் அமைப்பது
எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, எப்படி அந்த பிரவுசரில் தரவிறக்கம் செய்து, பதிந்து இயக்குவது எனப் பார்க்கலாம். முதலில் எட்ஜ் பிரவுசரை இயக்கவும். இந்த விண்டோவின், வலது மேல் மூலையில் உள்ள மெனு பட்டனில் கிளிக் அல்லது டேப் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் “Extensions” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இந்த மெனுவில், “Extensions.” என்ற ஆப்ஷன் இல்லை என்றால், நீங்கள் இன்னும் விண்டோஸ் 10 ஆண்டுவிழா மேம்படுத்தலை, உங்கள் கம்ப்யூட்டரில் இயக்கிவைக்கவில்லை என்று பொருள்.
மேம்படுத்தலை மேற்கொண்டிருக்கும் கம்ப்யூட்டரில், Extensions பிரிவு காட்டப்படும். இதில் ஏற்கனவே, இன்ஸ்டால் செய்யப்பட்ட அனைத்து எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களும் காட்டப்படும். இங்கு கிடைக்கும் “Get Extensions From the Store” என்பதில் கிளிக் செய்தால், விண்டோஸ் ஸ்டோர், எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் அனைத்தும் உள்ள பக்கத்தினைத் திறந்து காட்டும்.
தற்போது வழங்கப்படும் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களில், Adblock, Adblock Plus, Amazon Assistant, Evernote Web Clipper, LastPass, Mouse Gestures, Office Online, OneNote Web Clipper, Page Analyzer, Pin It Button (for Pinterest), Reddit Enhancement Suite, Save to Pocket, and Translate for Microsoft Edge ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் கூறலாம்.
நீங்கள் கம்ப்யூட்டரில் பதிக்க விரும்பும், எட்ஜ் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை, விண்டோஸ் ஸ்டோர் காட்டும் பக்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கவும். பின் இந்த பக்கத்தில் உள்ள “Free” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். குறிப்பிட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராம், கம்ப்யூட்டருக்குத் தரவிறக்கம் செய்யப்படும். பின்னர், தானாகவே, அது கம்ப்யூட்டரில் உள்ல எட்ஜ் பிரவுசரில் பதியப்படும். வேறு புதிய பிரவுசர் எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள், விண்டோஸ் ஸ்டோரில் பதியப்பட்டுத் தரப்படுகையில், அவை தாமாகத் தரவிறக்கம் செய்யப்பட்டு, பதியப்படும்.
இனி, எட்ஜ் பிரவுசர் விண்டோவிற்கு வந்தால், உடனே, ஒரு பாப் அப் செய்திக் கட்டம் உங்களுக்குக் காட்டப்படும். அதில் இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம் தேவையா? அதனை இயக்கவா என்று கேள்வி கேட்கப்படும். குறிப்பிட்ட எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் செயல்பாடு உங்களுக்குத் தேவை எனில், “Turn it On” என்ற பட்டனில் கிளிக் செய்திடவும்.
எட்ஜ் பிரவுசரின் மெனுவில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம் காட்டப்படும். இந்த மெனுவினைத் திறந்து, அந்த பிரவுசரின் பக்கத்தில் செயல்படச் செய்திடலாம். மிக எளிதாக, ஓர் எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை இயக்க, மெனு ஐகானில் அதிக நேரம் அழுத்தி “Show Next to Address Bar” என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். தொடர்ந்து, எட்ஜ் பிரவுசரின் டூல் பாரில், மற்ற ஐகான்களுடன், இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமின் ஐகானும் காட்டப்படும். இதன் மூலம், இதில் ஒரே ஒரு கிளிக் செய்தால், இது செயல்படத் தொடங்கும்.
இதில் ரைட் கிளிக் செய்தால், இந்த புரோகிராமினை மேலும் பல வகைகளில் செயல்படுத்த, நிர்வகிக்க ஆப்ஷன்கள் கிடைக்கும். உங்களுக்கு இந்த எக்ஸ்டன்ஷன் தேவை இல்லை எனில், மெனுவில், “Uninstall” என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும்.
இந்த மெனுவில், “Options” பட்டனைக் கிளிக் செய்தால், எட்ஜ் பிரவுசர், இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமிற்கான பக்கத்தினைக் காட்டும். இதில் இந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராமினை, நீங்கள் விரும்பும் வகையில் செயல்படுத்த பல ஆப்ஷன்கள் கிடைக்கும்.
குரோம் பிரவுசருக்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களைத் தயாரித்த டெவலப்பர்களுக்கு, எட்ஜ் பிரவுசருக்கான புரோகிராம்களைத் தயாரிக்க, மைக்ரோசாப்ட் பல வழிகளைத் தந்துள்ளது. எனவே, இனி, தொடர்ந்து அதிகமான எண்ணிக்கையில், எட்ஜ் பிரவுசரில் கூடுதல் வசதிகளைத் தரக்கூடிய எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை எதிர்பார்க்கலாம்.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X