கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

19 செப்
2016
00:00

கேள்வி: ஸ்மார்ட் போன்கள் குறித்து எழுதுகையில், சென்சார்களுடன் Gyroscope என்னும் சொல்லைப் பயன்படுத்துகிறீர்கள். இது எதனைக் குறிக்கிறது? கேமரா அல்லது காம்பஸ் போல இதுவும் ஒரு சாதனமா? இதன் பயன் என்ன?
கா. செயச் சந்திரன், பழனி.
பதில்:
தயக்கமில்லாமல் கேள்வி கேட்டமைக்கு நன்றி. கைரோஸ்கோப் (gyroscope) என்பது கேமரா போல ஒரு சாதனம் இல்லை. இது ஒரு தொழில் நுட்பத்தின் பெயர். ஓர் அசைவு எந்தக் கோணத்தில் ஏற்படுகிறது என்பதைப் பல முனைகளிலிருந்து கண்காணித்து, அதற்கேற்ப தன் செயல்பாட்டினை வகுத்துச் செயல்படுத்தும் தொழில் நுட்பம் இது. ஸ்மார்ட் போன் மட்டுமின்றி, டேப்ளட் பி.சி. மற்றும் சில சாதனங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
முதலில் சாதனம் ஒன்று எந்த நிலையில் இயங்குகிறது என்பதனை இது கண்டறிகிறது. எடுத்துக் காட்டாக, வயர்லெஸ் மவுஸ், புளுடூத் தொழில் நுட்பத்தில் இயங்குகையில், இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. அக்ஸிலரோமீட்டருடன் இது செயல்படுகையில், ஓர் அசைவின் ஆறு திசைகள் இதன் மூலம் கண்டறியப்படுகின்றன. இடது, வலது, மேல், கீழ் மற்றும் முன்பாக, பின்புறமாக என ஆறு நிலைகள் அறியப்படுகின்றன. நம் கரங்களின் அசைவுகளுக்கேற்ப செயல்பாடுகளை மேற்கொள்ளவும் இது பயன்படுகிறது. முதலில், இந்த தொழில் நுட்பம் ஐபோன் 4ல் பயன்படுத்தப்பட்டது. தொடக்கத்தில் MEM எனப்படும் (micro-electro-mechanical-systems) கைராஸ்கோப் பயன்படுத்தப்பட்டது. தற்போது இதன் இடத்தில், மிகச் சிறிய அளவில் வடிவமைக்கப்படும் ஆப்டிகல் கைராஸ்கோப் பயன்படுத்தப்படுகிறது. இதனை ஒரு குண்டூசியின் தலையளவு இடத்தில் வைத்து இயக்கலாம். மருத்துவ துறையில், உடல் உள்ளாக வைக்கப்படும் சாதனங்களில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் தானாக வந்து இன்ஸ்டால் ஆகியிருக்கும், தேவையற்ற புரோகிராம்களை எப்படி நீக்கலாம்? தேவையற்ற இடத்தையும், ப்ராசசர் செயல் திறனையும் இவை எடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, நீக்க விரும்புகிறேன்.
என். சுந்தரராஜன், விருதுநகர்.
பதில்
: விண்டோஸ் ஐகானில் கிளிக் செய்து, செட்டிங்ஸ் ஐகானில் கிளிக் செய்திடவும். இப்போது செட்டிங்ஸ் விண்டோ கிடைக்கும். இந்த சிஸ்டம் விண்டோவில், System என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு Apps and Features என்பதில் கிளிக் செய்திடவும். வலது பிரிவில், சிஸ்டத்துடன் இணைந்து இன்ஸ்டால் செய்யப்பட்ட அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பார்க்கலாம். இதில் கிளிக் செய்தால், Move and Uninstall என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் Uninstall என்பதில் கிளிக் செய்திடவும். அப்ளிகேஷன் நீக்கப்படும். இந்த ஆப்ஷன் சில அப்ளிகேஷன்களுக்குத் தரப்பட மாட்டாது. ஏனென்றால், விண்டோஸ் இயங்க சில அப்ளிகேஷன்கள் தேவை என விண்டோஸ் முடிவு செய்து, அவற்றை நீக்கவிடாமல் செய்திட, இந்த ஆப்ஷன் தரப்படவில்லை. எனவே, அது போன்ற அப்ளிகேஷன்களை விட்டு வைக்கவும்.

கேள்வி: என்னுடைய டாகுமெண்ட்களில், நான் டெக்ஸ்ட் பாக்ஸ் அடிக்கடி பயன்படுத்துகிறேன். இந்த டெக்ஸ்ட் பாக்ஸ் அமைந்தவுடன், வேர்ட் அதனைச் சுற்றித் தானாக, பார்டர் ஒன்றை அமைக்கிறது. இது ஒரு சில வேளைகளில் மட்டுமே நன்றாகத் தோன்றுகிறது. சில வேளைகளில், இது டாகுமெண்ட்டில் சொல்லப்படும் விஷயங்களுடன் ஒத்துப் போவதில்லை. எனவே, அந்த பார்டரை நீக்க விரும்புகிறேன். தானாக வேர்ட் அமைக்கும் இந்த பார்டரை எப்படி நீக்குவது?
கே.மாலினி, கோயமுத்தூர்.
பதில்
: நல்ல தேவை தான். கீழ்க்காணும் வழிகளில் சென்று இதனை மேற்கொள்ளலாம்.
1. குறிப்பிட்ட டெக்ஸ்ட் பாக்ஸில் இருக்கும் பார்டரில் கிளிக் செய்திடவும். அல்லது டெக்ஸ்ட் பாக்ஸ் உள்ளாக, கர்சரை நிறுத்தவும். நீங்கள் டெக்ஸ்ட் பாக்ஸில் கிளிக் செய்தால், பாக்ஸின் விளிம்புகளில் ஹேண்டில்கள் தோற்றமளிக்கும்.
2. Format மெனுவிலிருந்து, Text Box ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Format Text Box டயலாக் பாக்ஸைக் காட்டும்.
3. இதில் Colors and Lines என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
4. இங்கு Color என்பதன் கீழ் கிடைக்கும் மெனுவில், No line என்பதைக் கிளிக் செய்திடவும். பார்டர் அழிந்துவிடும்.

கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இலவசமாகத் தரப்படும் என்று அறிவித்து, ஓராண்டு கால அவகாசத்தினை மைக்ரோசாப்ட் தந்தது. கெடு முடிந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இப்போது என்ன சாதனை ஏற்பட்டுவிட்டது? அனைத்து கம்ப்யூட்டர்களிலும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டமா உள்ளது? நாங்கள் பலர் இன்னும் விண்டோஸ் 7 தான் பயன்படுத்தி வருகிறோம்.
ஆர். ரங்கராஜன், பட்டுக்கோட்டை.
பதில்
: நல்ல கேள்வி. சென்ற ஆகஸ்ட் மாதத்தில், விண்டோஸ் 10 இலவசமாகக் கிடைக்கவில்லை என்றாலும், விண்டோஸ் 10 பயன்பாடு திடீரென உயர்ந்துள்ளது. விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சந்தையில், விண்டோஸ் 10 தற்போது 22.99% பங்கிற்கு உயர்ந்துள்ளது. இது முந்தைய மாதத்தைக் காட்டிலும் 1.86% கூடுதலாகும். மற்ற விண்டோஸ் பதிப்புகள் பயன்பாடு அனைத்தும் குறைந்துள்ளன - விண்டோஸ் 7 தவிர. விண்டோஸ் 7, 0.25% உயர்ந்து 47.25% ஐ எட்டியது. (உங்களுக்கு சந்தோஷமா!) விண்டோஸ் 8.1 சிறிதளவு உயர்ந்தாலும், விண்டோஸ் 8 மிகக் குறைந்தது. விண்டோஸ் எக்ஸ்பி 9.36%க்குக் குறைந்துள்ளது. விஸ்டா 1.05%க்கு கீழாக வந்துவிட்டது. லினக்ஸ் சிஸ்டமும் 0.22% குறைந்து 2.11%க்கு வந்தது.
விண்டோஸ் 10 சிஸ்டத்தில் பல புதிய மாற்றங்களை மைக்ரோசாப்ட் கொண்டு வந்துள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்வதிலும் புதிய வழிகளைக் கையாண்டு வருகிறது. எனவே தான், பயனாளர்களை, கடந்த ஓராண்டாக, விண்டோஸ் 10க்கு மாறச் சொன்னது. ஆனால், பலர் இன்னும் தங்களுக்கு விண்டோஸ் 7 சிஸ்டம் போதும் என்றே தொடர்கின்றனர். இவர்கள் பின் நாளில், தங்கள் கம்ப்யூட்டர்களின் ஹார்ட்வேர் பிரிவையும் உயர்த்தி, விண்டோஸ் 10க்கு மாறுவார்கள் என்பது உறுதி என மைக்ரோசாப்ட் கருதுகிறது. 2017 மத்தியில், நூறு கோடி சாதனங்களில் விண்டோஸ் 10 என்று தான் ஏற்படுத்திய இலக்கில், மைக்ரோசாப்ட் சற்று பின் வாங்கியிருந்தாலும், விண்டோஸ் 10 சிஸ்டம், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு வெற்றி தான் என நிரூபிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி: இணையப் பக்கங்களில் குறிப்பு எழுதி சேவ் செய்து வைக்கலாம் என்று படித்தேன். இதனை எப்படி அமைப்பது என விளக்கமாகப் பதில் தரவும். நான் விண்டோஸ் 7 மற்றும் குரோம் பிரவுசர் பயன்படுத்துகிறேன்.
எஸ்.ஆர். கார்த்திக், தூத்துக்குடி.
பதில்:
நாம் பார்க்கும் இணையதளங்களில் குறிப்பு எழுதும் வசதி, எட்ஜ் பிரவுசரில் மட்டுமே கிடைக்கிறது. அதனைப் பயன்படுத்த உங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 10 மற்றும் எட்ஜ் பிரவுசர் இருக்க வேண்டும். எட்ஜ் பிரவுசரில், வலதுபுறம் மேலாக Web Note என்ற டூல் தரப்பட்டுள்ளது. இதில் கிளிக் செய்தால், இடதுபுறம் அதற்கான மெனு கட்டம் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் குறிப்புகள் எழுதலாம். குறிப்பிட்ட தகவலை வெட்டி தனிப் பகுதியாக அமைக்கலாம். மார்க்கர் பேனா போல வண்ணம் தீட்டி, தகவலை ஹைலைட் செய்திடலாம்.

கேள்வி: நீங்கள் இணையம் குறித்து புள்ளி விபரங்கள் தரும்போதெல்லாம், சீனாவில் கம்ப்யூட்டர் மற்றும் இணையம் பயன்படுத்துபவர்கள், உலகிலேயே அதிகம் எனக் குறிப்பிடுகிறீர்கள். இது எதனால் ஏற்படுகிறது? ஏன் சீனா முதல் இடத்தில் உள்ளது?
கா. நரேஷ், சிதம்பரம்.
பதில்:
சீனா பரப்பளவில் பெரிய நாடு. மக்கள் தொகையிலும் முதல் இடத்தில் உள்ள நாடு. அங்கு இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இந்தியா தவிர்த்து, மற்ற எந்த ஒரு நாட்டின் ஜனத்தொகையைக் காட்டிலும் அதிகமாகும். டிஜிட்டல் சாதனங்கள், துணை சாதனங்கள், குறிப்பாக மொபைல் போன்கள் ஆகியவற்றைத் தயாரிப்பது அங்கும், சீனாவின் அண்டை நாடுகளிலும், குடிசைத் தொழில் போலப் பரவி உள்ளது. சீனாவில், இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பாலானவர்கள், மொபைல் போன் வழியாகத்தான் இணையத்தை அணுகுகின்றனர். இணையம் வழி வர்த்தகம் எளிமையாக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, சீன மொழியில் இணையப் பயன்பாடு மக்களுக்குக் கிடைப்பதால், இணைய வழி வர்த்தகம் அங்கு எளிமையாக்கப்பட்டு மக்கள் அதனையே பயன்படுத்துகின்றனர். இந்தியாவும் இதே போன்ற ஒரு நிலைக்கு உயர்ந்து வருகிறது.
ஆனால், சீன மக்களில் 52.2% பேர் தான் (இந்தியாவில் 19%) இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில் 88.5% மக்கள் இணையம் பயன்படுத்துகின்றனர். (இணையப் பயனாளர்கள் 28,69,42,362. மக்கள் தொகை 32,41,18,878) ஜூலை மாதக் கணக்குப்படி, சீனாவின் மக்கள் தொகை 1,38,23,23,332. இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 72,14,34,547. உலக அளவில் இணையம் பயன்படுத்துவோரில் 21.1% பேர் சீனாவில் உள்ளனர். உலக அளவில் இணையப் பயனாளர் எண்ணிக்கை 3,42,49,71,237.
சீனாவில் பல இணைய தளங்களைப் பார்க்க, தேடல் இஞ்சின்களைப் பயன்படுத்த, செய்தி தளங்களைப் பார்க்க தடை உண்டு.
இது தொடர்பான வேறு சில தகவல்களையும் தருகிறேன். நீங்கள் சிந்திக்கின்ற வேளையில் இணையம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரிய வேண்டுமா? காண்க: http://www.internetlivestats.com/internet-users/ மற்றும் http://www.internetlivestats.com/watch/internet-users/. நீங்கள் பார்க்கும்போதே, அதிகரிக்கும் இணையப் பயனாளர் எண்ணிக்கை தொடர்ந்து இந்த தளத்தில் காட்டப்படும். உலக அளவில், 46.1%க்கும் மேற்பட்ட மக்கள் இன்று இணையம் பயன்படுத்துகின்றனர். இது, 1995ல், 1% ஆக இருந்தது.
இதனை எழுதுகையில், இணைய தளங்களின் எண்ணிக்கை 1,07,94,71,301 ஆக இருந்தது. இந்த எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்து கொண்டேயுள்ளது.

Advertisement

 Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X