இன்டெக்ஸ் நிறுவனம், தற்போது இந்தியாவில் மொபைல் போன் பிரிவில், ரிலையன்ஸ் ஜியோ ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தன் அகுவா எஸ் 7 ஸ்மார்ட் போனை வடிவமைத்து வெளியிட்டுள்ளது. 4ஜி அலைவரிசையில் செயல்படுவதுடன், VoLTE சப்போர்ட் வசதியும் தருகிறது. இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 9,499 மட்டுமே.
இதன் சிறப்பு வசதிகளாக, இதில் தரப்பட்டுள்ள விரல் ரேகை சென்சார் மற்றும் 3 ஜி.பி. ராம் மெமரியைக் குறிப்பிடலாம். குவாட் கோர் மீடியா டெக் MT6735 ப்ராசசர் இதில் இயங்குகிறது. இதன் திரை 5 அங்குல அளவில், 720p HD டிஸ்பிளே கொண்டுள்ளது. பிக்ஸெல் அடர்த்தி 720 x 1280 ஆக உள்ளது. Asahi's Dragontrail கண்ணாடியால் இது பாதுகாக்கப்படுகிறது. இதன் பின்புறக் கேமரா, 13 மெகா பிக்ஸெல் திறனுடன் 5P லென்ஸ் கொண்டதாக அமைந்துள்ளது. முன்புறமாக, 5 எம்.பி. திறனுடன் கூடிய கேமரா இணைக்கப்பட்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் மெமரி 16 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 64 ஜி.பி. வரை உயர்த்தலாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஆண்ட்ராய்ட் 6.0. மார்ஷ் மலாய் ஆகும். பேட்டரி 3,000 mAh திறன் கொண்டுள்ளது. இந்தியாவில் அனைத்து மொபைல் போன் விற்பனை நிலையங்களிலும் இது கிடைக்கிறது.