நெருப்புக் கோட்டை (8)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2016
00:00

சென்றவாரம்: நல்லவனை போல் நாடகமாடி இளவரசனின் உதவியாளனாக சேர்ந்தான் மொட்டைத்தலையன். ஆழமான கிணற்றில் இறங்கிய இளவரசன், தண்ணீர் குடித்த போது, திடீரென ஏணியை எடுத்துவிட்டான் மொட்டைத்தலையன். இனி-

''ஏய்... என்ன இது? ஏணியை ஏன் மேலே தூக்குறா? நான் எப்படி மேலே வருவது?'' என்று கத்தினான் இளவரசன். அவன் குரல், கிணற்று பாறைச் சுவரில் மோதி பீதியூட்டும்படி எதிரொலித்தது.
இளங்குமரனுக்கு பதிலாக, மொட்டைத் தலையனின் பயங்கரமான சிரிப்பு, பூதாகாரமாகக் கிணற்றினுள் கேட்டது.
''சாகசக்கார இளவரசே! உன் கதை இன்றோடு முடிந்தது. யாருடைய போதனையையோ கேட்டு என்னை தவிர்க்கப் பார்த்தாய். ஆனால், என் சாமர்த்தியத்தால் உன்னை என் வலையில் விழச் செய்துவிட்டேன். இப்போது சொல். நீ யார், எங்கிருந்து வருகிறாய், எங்கு போகிறாய், எதற்காகப் போகிறாய்? உண்மையைக் கூறாவிட்டால், உன் உடல் கிணற்றினுள்ளே வெறும் எலும்புக் குவியலாகத் தான் இருக்கும். அங்கிருந்து மேலே ஏறி வரவே முடியாது,'' என்று கொக்கரித்தான் கொடியவனான மொட்டைத்தலையன்.
இளவரசனுக்கு தான் எத்தகைய ஆபத்தில் சிக்கிக் கொண்டோம் என்பதை உணர்ந்த போது தலை சுற்றியது. உதவி வேண்டிக் கத்தினாலும் உபயோகமில்லை என்பதை புரிந்துகொண்டான். இனி, இவனிடமிருந்து தப்பும் வழியைத்தான் பார்க்க வேண்டும் என்ற முடிவோடு, தன்னைபற்றிய எல்லா விஷயங்களையும் கூறினான்.
இளவரசன் கூறியதைக் கேட்ட மொட்டைத் தலையன், ''உண்மையைக் கூறி, உபத்திரவத்திலிருந்து தப்பினாய். உன்னைப் பற்றிய எல்லா விவரமும் எனக்குத் தெரியும். நிஜத்தைக் கூறுகிறாயா, ஏமாற்ற நினைக்கிறாயா என்பதை அறியவே கேட்டேன்.
''உன் நல்ல காலம்; பொய் சொல்லாமல் உண்மையையே கூறினாய். பொய் கூறி இருந்தால் இங்குள்ள பெரும் பாறையைப் புரட்டி, இக்கிணற்றை மூடி, உன்னை அதனுள் சமாதி வைத்துவிட்டுப் போயிருப்பேன். ஆனாலும், இந்த நிலையிலும், உன் உயிர் என் கையில்தான் உள்ளது. நான் கூறுகிறபடி நடந்தால் உயிர் பிழைக்கலாம். என்ன சொல்கிறாய்?'' என்றான் மொட்டையன்.
''என்ன செய்ய வேண்டும்?'' என்று கிணற்றினுள் இருந்து வேதனையோடு கேட்டான் இளங்குமரன்.
''சூரியனின் கதகதப்பை மீண்டும் அனுபவிக்க ஆசைப்பட்டால், கதிரவனின் கதிரினிலே களிப்படைய விருப்பமானால், தொடர்ந்து இவ்வுலகில் வாழ விரும்பினால், உன் வாளின் மீது சத்தியம் செய்து தரவேண்டும், நான் கூறுகிறபடி நடப்பதாக... உன்னை கொல்ல நான் விரும்பவில்லை. என்ன சொல்கிறாய்?''
''நிபந்தனையை கூறு, அதன் பிறகு வாக்களிக்கிறேன்!'' என்றான் இளங்குமரன்.
''இந்த வினாடியிலிருந்து நீ என் அடிமை. நான் எது கூறினாலும் அதன்படி நடக்க வேண்டும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் குதிக்கும்படி கூறினாலும், மறுப்பு கூறாமல் குதிக்க வேண்டும். இனி நானே கந்தர்வபுரி இளவரசன் இளங்குமரன்; நீ சாகும்வரை என் அடிமையாகவே என் கட்டளைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழ வேண்டும்.
''நம்மிடையே நிகழ்ந்ததை எந்த நேரத்திலும், யாரிடத்திலும் வெளியிடக்கூடாது. மீறினால், அந்த வினாடியே உன்னைக் கொன்றுவிடுவேன். ஆனால், நீ அப்படிச் செய்ய மாட்டாய். உண்மையைக் கூறிய நீ சத்தியத்துக்கும் கட்டுப்பட்டே நடப்பாய் என்று தெரியும்.
''மரகதபுரி சக்கரவர்த்திக்கு உன்னைத் தெரியாது. அவர் உன்னையோ உன் சகோதரர்களையோ பார்த்ததே இல்லை. ஆகவே, நான் நீயாக அவரிடம் போய் நிற்பதில் சிரமம் ஏதுமில்லை. ஆனால், உன் தந்தை கொடுத்திருக்கிறாரே, தம் அண்ணனுக்கு அறிமுகக் கடிதம், அதை நீ என்னிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.
''இந்த வினாடி முதல் நான் கந்தர்வபுரி இளவரசன் இளங்குமரன்; நீ என் அடிமை பாண்டியன். இதற்கெல்லாம் இணங்கி உன் வாளிலே சத்தியம் செய்து தந்தால் ஏணியைக் கிணற்றினுள் இறக்குகிறேன். இல்லாவிடில், பாறையைப் புரட்டி கிணற்றை மூடி, உன்னைச் சமாதி வைத்துவிட்டுப் போய்விடுவேன்,'' என்று முழங்கினான் மொட்டைத் தலையன்.
பரிதாபமான நிலையில் சிக்கிய இளவரசன் இளங்குமரனுக்கு, மொட்டைத் தலையனின் நிபந்தனையை ஏற்பதைத் தவிர, வேறு வழி ஏதுமில்லை. அக்கொடியவனின் குரூரமான செயல்களுக்கு இணங்குவதாகச் சத்தியம் செய்து கொடுப்பதைத் தவிர, உயிர் பிழைக்க வேறு மார்க்கம் இல்லை. தன் மாயக் குதிரை மின்னல் வீரன் கூடவா மொட்டைத் தலையனின் மோசடியைப் பார்த்து பேசாதிருக்கிறது. தன் விதியை, துரதிர்ஷ்டத்தை எண்ணி நொந்தபடி, அக்கொடியவனுக்கு அடிமையாவதாக வாக்களித்தான்.
மாயக் குதிரை மின்னல் வீரனுக்கு, மன்னர் ரகசியமாக ஆணையிட்டிருப்பது, பாவம் அவனுக்கு எப்படித் தெரியும்? பேரபாயம் விளையும்போது மட்டுமே மின்னல் வீரன் இளவரசனுக்கு உதவ வேண்டும் என்பது கந்தர்வபுரி மன்னர் எஜமானின் கட்டளையாயிற்றே!
இளவரசன் சம்மதித்ததும் கிணற்றினுள் ஏணி இறக்கப்பட்டது. இளவரசன் மேலே வந்தான். கிணற்றினுள் இறங்கும்போது கழற்றி வைத்திருந்த உடைவாள் இப்போது மொட்டைத்தலையன் கையிலிருந்தது. அதை இளவரசன் முன் நீட்டினான். இளவரசனும் அவ்வாளின்மீது கை வைத்துச் சத்தியம் செய்து கொடுத்தான்.
இந்த வினாடி முதல், நான் உன் அடிமை. நீ கந்தர்வபுரி இளவரசன் இளங்குமரன் என்று தன் உடைகளையும், உடைமைகளையும், ஆயுதங்களையும், பணமுடிப்பையும் மொட்டைத் தலையனிடம் ஒப்படைத்தான். அவன் ஆடைகளை வாங்கி தான் அணிந்து, அடிமை பாண்டியன் ஆனான். ஆனால், அவன் தந்தையின் கரடி வேஷ உடை மட்டும் மூட்டையாக குதிரையின் சேணத்தோடு முடிந்து தொங்கியது. மொட்டைத்தலையன் அதைப்பற்றிக் கேட்கவில்லை; இளவரசனும் அதை ஒப்படைக்கவில்லை.
சத்தியப் பிரமாணம் பெற்றதும், போலி அரச குமாரனான, மொட்டைத்தலையன் தன் குதிரை மீது தாவி ஏறி அமர்ந்தான்.
''உன் தொத்தல் குதிரையில் ஏறிக் கொள். என்னைத் தொடர்ந்து வா!'' என்று கூறி மொட்டைத்தலையை நிமிர்த்திக் கொண்டு முன்னால் சென்றான். குனிந்த தலையுடன் விதியை நொந்தபடி பின் தொடர்ந்தான் இளவரசன்.
மலைகளையும், குன்றுகளையும் அடர்ந்த கானங்களையும், வயல்வெளிகளையும் பழத் தோட்டங்களையும், பட்டி தொட்டிகளையும், நாடு நகரங்களையும் கடந்து, முடிவாக மரகதபுரியை அடைந்தனர்.
கோட்டை வாசல் காவல் அதிகாரியிடம் தன் வரவைச் சக்கரவர்த்தியிடம் தெரிவிக்குமாறு கூறி, அருகிலுள்ள பயணிகள் விடுதியில் தங்கினான் போலி இளவரசனான மொட்டைத்தலையன். தன் தம்பி மகனின் வரவை வெகு நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த மாமன்னர் மகேந்திரவர்மர் மகிழ்ந்தார்.
கந்தர்வபுரி இளவரசனை வரவேற்கக் கோலாகலமான ஏற்பாடுசெய்யும்படி ஆணையிட்டார். அரண்மனை விழாக்கோலம் பூண்டது. கொலு மண்படத்தில் உயர் அதிகாரிகளெல்லாம் கூடி இருந்தனர். அத்தாணி மண்டபத்திலிருந்து, அந்தப்புரத்துப் பெண்டிதர் அனைவரும் கூடியிருந்தனர். தங்கள் வருங்காலச் சக்கரவர்த்தியாகப் போகும் இளவரசனைக் கண்டு மகிழ. அவர்களில் மகேந்திரரின் அழகே வடிவான மூன்று பெண்களும் இருந்தனர். தாங்கள் பார்த்திராத சித்தப்பாவின் செல்லப்பிள்ளையை காண ஆசை ஆசையாக காத்திருந்தனர்.
மொட்டைத் தலையன் நகர விதிகளிலே ஊர்வலமாக அழைத்து வரப்பட்டான். தன் மொழு மொழு பளபள தலையை இங்கும், அங்கும் திருப்பி, கூட்டத்தினரையும் கோலாகலங்களையும் கர்வத்துடன் கண்காணித்தபடி சென்றான். அவன் பின்னால் இளவரசன் குனிந்த தலையோடு வந்து கொண்டிருந்தான்.
அரச உடையிலுள்ள அவலட்சணமான மொட்டைத் தலையனைக் கண்டு, கூட்டமே அதிசயித்தது. 'இவனா இளவரசன்? இந்த மொழுமொழு தலையனா நம் வருங்காலச் சக்கரவர்த்தி? இவனா... இவனா... இவனா?' என்று ஏளனமாகச் சிரித்தனர்.
தொடரும்...

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X