அதிமேதாவி அங்குராசு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2016
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

கம்ப்யூட்டர் கவனம்!
இனியெல்லாம் கம்ப்யூட்டர்- காலமே!
விண்வெளியில் ராக்கெட் செலுத்துவது முதல், சினிமாவுக்கு டிக்கெட் எடுப்பது வரை அனைத்து பணிகளிலும் நீக்கமற நிறைந்துவிட்டது கம்ப்யூட்டர்! அதன் முன்பாக அமர்ந்துவிட்டால் மட்டும் போதாது... முறையாகக் கையாள்வது பற்றிய பொது அறிவும் அவசியம்! கம்ப்யூட்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது, நல்ல முறையில் பராமரிப்பது தொடர்பான சில ஆலோசனைகள், இங்கே இடம்பெறுகின்றன.
சிலர் வேலை வேலை என்று கம்ப்யூட்டரிலேயே ஆழ்ந்து இருப்பர். வேறு சிலர், டிவிட்டர், பேஸ்புக் என நாள் முழுக்க மூழ்கி குடும்பம், உறவு என அனைத்தையும் துறந்து கம்ப்யூட்டருக்கே அடிமையாகிவிடுவர். ஆரம்பத்திலேயே இதைக் கவனித்து நெறிமுறைப்படுத்தாவிட்டால், பலவிதமான சிக்கல்களும், தேவையற்ற மன உளைச்சல்களும் ஏற்படக்கூடும். கம்ப்யூட்டருடன் அளவோடு உறவாடி, குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்குவதே உத்தமம். ஏனெனில், கம்ப்யூட்டரை விட, நம் காலம் இருக்கும்வரை கூட இருப்பது குடும்பம்தான்.
* இனிக்க இனிக்கப் பேசினாலும், இணைய நட்புக்கு எல்லைக்கோடு அவசியம். நம்மைப் பற்றி, குடும்பத்தைப் பற்றி வெள்ளந்தியாக பேஸ்புக்கில் விவரிப்பது, சமயங்களில் வில்லங்கத்தை விளைவிக்கலாம். முகம் தெரியாமல் சாட் செய்பவர்கள், உண்மைகளைத்தான் சொல்வர் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. நட்பாகப் பழகுவதற்கு ஒரு ஐ.டி.,யும் தரக்குறைவாகப் பேசுவதற்கு ஒரு ஐ.டி.,-யும் உருவாக்கிக் கொண்டு, பிறரின் மன நிம்மதியைக் குலைக்கும் பேர்வழிகள் இணையத்தில் உண்டு. ஆர்வத்தால், நிம்மதியைத் தொலைக்காதீர்கள். இதற்கு அருகில் இருப்பவர்களை நேசிப்பது மிக நல்லதுதானே. பொழுதுபோக்கலாம்; ஆனால், வாழ்க்கையை பாழாக்கி கொள்ளக் கூடாது.
* சில கம்ப்யூட்டர்களின் இரும்புப் பகுதியைத் தொடும்போது, 'சுரீர்' என்று மெலிதான ஷாக் அடிப்பதைப் பார்த்திருப்பீர்கள். சரியான முறையில், 'எர்த்' இணைப்பு கொடுக்காததே இதற்குக் காரணம். கவனிக்காமல் விட்டுவிட்டால், மின் கசிவு ஏற்படவும், கூடுதல் மின்சாரம் உங்களது உடலில் பாயவும் நேரிடலாம். சரியான எலெக்ட்ரீஷியன் உதவியுடன் முறையாக, 'எர்த்' இணைப்பைக் கொடுப்பது அவசியம். 'லேசான ஷாக்' தானே என்று அசிரத்தையாக இருந்துவிட்டால், ஆபத்தான அளவு மின்சாரம் பாயவும் வாய்ப்பு உண்டு. சிறு செலவுகளை பாராமல், முழுமையான பாதுகாப்பில் இருக்கிறோம் என்பதை விஷயம் அறிந்தவர்கள் மூலம் உறுதி செய்திட வேண்டும்.
* தொடர்ந்து கம்ப்யூட்டர் திரையையே வெறித்து பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பலவிதமான உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பார்வைக் குறைபாடு, முதுகுவலி, தலைவலி போன்றவை, அதிக நேரம் கம்ப்யூட்டர் திரையையே உற்றுப் பார்ப்பதாலும், ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதாலும் ஏற்படுகின்றன. இடைவெளி கொடுத்து, சற்றே நடமாடி, தூரத்தில் தெரியும் மரங்களிலோ அல்லது கண்ணுக்குக் குளிர்ச்சியான காட்சிகளிலோ சற்று நேரம் கவனம் செலுத்துங்கள்; புத்துணர்ச்சி கிடைக்கும்.
* ஒருமுறை, 'ஆன்டி வைரஸ்' நிறுவிவிட்டால் அது எல்லா வைரஸ்களையும் தவிர்த்துவிடாது. அவ்வப்போது, 'அப்டேட்' செய்து கொண்டே இருக்க வேண்டும். காரணம், புதுப் புது வைரஸ்களை உற்பத்தி செய்து கொண்டே இருக்கின்றனர். பெரும்பாலான வைரஸ்களை உற்பத்தி செய்வதே சில, 'ஆன்டி வைரஸ்' நிறுவனங்கள்தான் என்ற பேச்சும் உண்டு. வைரஸ் தடுப்புக்காக, ஒன்றுக்கு மேற்பட்ட ஆன்டி வைரஸ்களை நிறுவக்கூடாது. தரமான நிறுவனத்தின், 'ஆன்டி வைரஸ்' மென்பொருளையே நிறுவுங்கள். வைரஸ் ஏதேனும் புகுந்திருக்கிறதா என்று தினசரி உங்கள் கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்யுங்கள்.
* பலரும் கம்ப்யூட்டரை அணைப்பதை மின்விளக்கை அணைப்பதைப் போலச் செய்வர். பலவிதமான பிரச்னைகளுக்கும் இது முக்கியமான காரணம் ஆகிவிடும். ஒவ்வொரு விண்டோவையும் முறையாக, 'க்ளோஸ்' செய்துவிட்டு, பின்னரே கம்ப்யூட்டரின் திரையையும், சி.பி.யூ.,வையும் அணைக்க வேண்டும். இல்லை என்றால் கம்ப்யூட்டரின் மூளை குழம்பி, அடுத்த முறை, 'ஆன்' செய்யும்போது பலவிதமான பிரச்னைகளையும் கொடுக்கும்.
* கம்ப்யூட்டரின் அருகில் உண்பதோ, அருந்துவதோ கூடாது. சுத்தம் செய்யும் திரவங்களை நேரடியாக கம்ப்யூட்டர் மீது பீய்ச்ச வேண்டாம். சுத்தமான துணியில் தெளித்து, பிறகு கம்ப்யூட்டரைத் துடைக்கவும். வேக்குவம் கிளீனர் மூலம் வெளிப்புறத்தை சுத்தம் செய்யலாம். ஆனால், உட்பகுதியில் பயன்படுத்த வேண்டாம். சுத்தம் செய்யும்போது கம்ப்யூட்டரை அணைத்துவிடவும்.
* பல சமயங்களில் மிக முக்கியமான கோப்புகளை, 'சி டிரைவ்' என்னும் பகுதியில் சேமித்து வைத்திருப்பர். தவிர்க்க முடியாத காரணங்களால் கம்ப்யூட்டரை, 'பார்மட்' செய்யும்போது, இவை அழிந்து போகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. எனவே, வேறு டிரைவ்களிலும், 'பேக் அப்'பாக முக்கியமான கோப்புகளைச் சேமித்து வையுங்கள். நிச்சயம் இது உங்களுக்கு உதவும்.
* பொது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும்போது, உபயோகித்து முடித்தவுடன் முறையாக, 'லாக் அவுட்' செய்யுங்கள். மற்றவர்கள் உங்களது, ஐ.டி.,-யில் விஷமம் செய்வதை தவிர்க்கும். கம்ப்யூட்டரை விட்டு விலகிய பிறகு கைகளை சுத்தமாகக் கழுவுவது முக்கியம். மௌஸிலும், கீ-போர்டிலும் எக்கச்சக்கமான கிருமிகள் இருக்கக் கூடும். இதனால், நோய்த் தொற்று ஏற்படலாம். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களில் எவரும் உங்களது, யூசர் ஐ.டி., 'பாஸ்வேர்டு' போன்றவற்றை கவனிக்கவில்லை என்பதை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.
* படிக்கும்போது வெளிச்சம் நமக்குப் பின்புறத்தில் இருந்து வருவது நல்லதல்லவா? ஆனால், கம்ப்யூட்டரில் பணிபுரியும் போது வெளிச்சம் நமக்கு முன்புறம் இருந்து வருமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுதான் கண்ணுக்கு சிரமம் தராமல் இருக்கும். மேலும், ரேடியேஷனைத் தவிர்க்கும் திரையையும் மானிட்டருக்குப் பொருத்தலாம். திரையின் வெளிச்ச அளவு மற்றும் வண்ணங்களின் அடர்த்தி ஆகியவையும் தேவையான அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் உயரம் மற்றும் மேஜையின் உயரம் ஆகியவற்றைக் கவனத்தில் வைத்து, அதற்கேற்ற உயரம் உடைய நாற்காலிகளைத் தேர்வு செய்யுங்கள்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X