அழகிய ஆடை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 செப்
2016
00:00

முன்னொரு காலத்தில், கந்தர்வ நாட்டை மகிழ்வேந்தன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவர் விதவிதமாக ஆடை உடுத்துவதில் மிகுந்த ஆசையுடையவர். கஜானா பணம் முழுவதையும் புதிய ஆடைகள் வாங்குவதற்காகச் செலவிடுவார்.
ராணுவம், நாடக அரங்குகள் ஆகியவற்றைக் குறித்து அவர் எந்த அக்கறையும் காட்டவில்லை. வெளியே சவாரி சென்று, தன் புதிய ஆடைகளைக் காட்டி பெருமைப்பட்டுக்கொள்ள வேண்டும் என்பதுதான், அவரது ஒரே லட்சியம்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ஒவ்வொரு ஆடைகளை அணிந்து அழகு பார்ப்பார். வழக்கமாக, மன்னர்கள் எல்லாரும் அரச சபை அரியணையிலிருந்து அரசாட்சி செய்வர் என்றால், இவர் எப்போதும் ஆடை மாற்றும் அறையில்தான் இருப்பார்.
அரசனின் இயல்பை அறிந்த இரண்டு ஏமாற்றுக்காரர்கள், அரண்மனைக்கு வந்தனர்.
''அரசே! நாங்கள் இருவரும் தேர்ந்த நெசவாளிகள். இதுவரை யாருமே அணியாத அற்புதமான ஆடை ஒன்றை உங்களுக்காக நெய்து தரப் போகிறோம். நல்லவர்கள் கண்களுக்கு மட்டுமே அந்த ஆடை தெரியும்; மற்றவர்களுக்கு தெரியாது,'' என்று இருவரும் கதை அளந்தனர்.
முட்டாளான அரசர், அவர்கள் பேச்சை உண்மை என்று நம்பினார்.
''ஆயிரம் பொற்காசுகளைப் பெற்றுக் கொள்ளுங்கள். என் பிறந்தநாள் விழா பத்து நாட்களில் வரப் போகிறது. நீங்கள் நெய்யும் அற்புதமான ஆடையை அணிந்து தான் ஊர்வலம் செல்ல வேண்டும். விரைவில் நெய்து முடியுங்கள்,'' என்று ஆணையிட்டார்.
''அரசே! உங்கள் கட்டளைப் படி செய்து முடிக்கிறோம். நீங்கள் அந்த ஆடையை அணிந்து ஊர்வலம் செல்லுங்கள். உங்கள் பெருமை உலகம் எங்கும் பரவும்.'' என்று சொல்லி விடைபெற்றனர்.
பிறந்த நாள் விழாவிற்கு இரண்டு நாட்களே இருந்தன.
அமைச்சரை அழைத்து, அந்த உடை எந்த அளவில் இருக்கிறது? நாளை தயாராகி விடுமா? என்று பார்த்து வாருங்கள்,'' என்றார் அரசர்.
அமைச்சர் வருவதை அறிந்தனர் ஏமாற்றுக்காரர்கள். இருவரும், வெறும் தறியில் அமர்ந்து கடுமையாக வேலை செய்வது போல் நடித்தனர்.
இதைப் பார்த்த அமைச்சருக்கு ஒன்றும் புரியவில்லை; திகைத்து நின்றார்.
அப்போதுதான் அவரைப் பார்ப்பது போல அவர்கள் இருவரும் எழுந்தனர்.
''அமைச்சரே! மான் பாய்வது போல அழகாக இருக்கிறதே. சரிகை வேலைப்பாட்டை பார்த்தீர்களா? மயில் தோகை விரித்து ஆடுவதைப் போன்ற இந்தக் காட்சி எப்படி உள்ளது?'' என்ற வெறும் தறியை காண்பித்து கேட்டனர்.
'எனக்கு ஒன்றும் தெரியவில்லை. இதைச் சொன்னால் நான் கெட்டவன் ஆகிவிடுவேன். அமைச்சர் பதவி போய் விடுமே' என்று நினைத்தார்.
''ஆஹா! மிகவும் அருமை! இந்த அழகிய ஆடையை அணிவதற்கு, நம் அரசர் கொடுத்து வைத்திருக்க வேண்டும். எப்படியும் நீங்கள் நாளைக்குள் நெய்து முடித்து விட வேண்டும்,'' என்று கூறி விடைபெற்றார் அமைச்சர்.
அரசனிடம் வந்த அமைச்சர், ''என் வாழ்நாளிலேயே இவ்வளவு அழகான ஆடையைப் பார்த்தது இல்லை. நாளைக்குள் தைத்து முடித்து விடுவதாகச் சொல்லி இருக்கின்றனர்,'' என்றார்.
அடுத்த நாள் மற்ற அமைச்சர்களை அழைத்து, ''நீங்கள் அந்த ஆடையைப் பார்த்து வாருங்கள்,'' என்று அனுப்பினார் அரசர்.
ஏமாற்றுக்காரர்கள் இருவரும், வெறும் தறியில் ஆடை நெய்வதாக நடித்தனர்.வந்த அமைச்சர்களின் கண்களுக்கும் ஒன்றும் தெரியவில்லை.
'தெரியவில்லை என்றால் கெட்டவன் என்று நினைத்து விடப் போகின்றனர்' என்று ஒவ்வொருவரும் நினைத்தனர். அந்த ஆடையைப் புகழ்ந்தனர்.
அரசனிடம் திரும்பிய அமைச்சர்கள் அந்த ஆடையை, ஆஹா ஓகோ, என்று புகழ்ந்து பேசினர்.
இதைக் கேட்டதும், அரசனால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை.
அமைச்சர்களுடன் ஏமாற்றுக்காரர்களின் இருப்பிடம் சென்றான்.
அங்கே அவன் கண்களுக்கு வெறும் தறிதான் காட்சி அளித்தது. அவர்களோ பரபரப்பாக வேலை செய்வது போல நடித்துக் கொண்டிருந்தனர்.
'இங்கே ஆடை ஒன்றும் நெய்யப்பட வில்லையே. அமைச்சர்களுக்கு அழகாகக் காட்சி அளித்த ஆடை, நமக்கு மட்டும் தெரியவில்லையே... அரசனாக இருக்க நான் தகுதி இல்லாதவனா?' என்று நினைத்தார்.
அவர்களைப் பார்த்து, ''எதிர்பார்த்ததை விட மிக அழகாக இருக்கிறது அந்த ஆடை. நீங்கள் தைத்து முடித்தவுடன் மேலும் ஆயிரம் பொற்காசுகள் தருகிறேன்,'' என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அரசனின் பிறந்த நாள் விழா ஊர்வலம் தொடங்கும் நேரம் வந்தது.
ஏமாற்றுக்காரர்கள் இருவரும், ஏதோ உடையைச் சுமந்து வருவது போன்று வந்தனர். அரசன் அணிந்திருந்த உடைகளை எல்லாம் கழற்றினர். வெறுங்கையால் அரசனுக்கு உடை உடுத்துவது போன்று நடித்தனர்.
பிறகு அவர்கள், அரசரை அருகில் இருந்து பார்த்தனர்; சிறிது தொலைவில் நின்றும் கவனித்தனர்.
உடை அழகில் தங்களை மறந்தவர்கள் போல, ''ஆ! என்ன அற்புதமான உடை! அரசருக்குக் கச்சிதமாகப் பொருந்தி இருக்கிறது. இவரின் அழகைக் காண ஆயிரம் கண்கள் வேண்டும்,'' என்று அளந்தனர்.
மகிழ்ந்த அரசன் தான் சொன்னபடி மேலும் ஆயிரம் பொற்காசுகள் பரிசு கொடுத்தான்.
ஏமாற்றுக்காரர்கள் அரசனிடமிருந்து விடைபெற்றனர். அந்நாட்டை விட்டுப் புறப்பட்டனர்.
ஊர்வலம் துவங்கியது. அரசன் அப்படியே தேரில் ஏறி அமர்ந்தான்.
மக்களுக்கு அரசர் நிர்வாணமாகப் போவது தெரிந்தது. மற்றவர்கள் தன்னைத் தகுதி இல்லாதவன் என்று நினைத்துக் கொள்வார்களோ? என்று நினைத்து பயந்தனர்.
''அரசரின் உடையைப் பார்த்தீர்களா? எவ்வளவு அழகு!'' என்று ஒருவருக்கு ஒருவர் கதை அளந்தனர்.
கூட்டத்தில் இருந்த ஐந்து வயது சிறுவன், ''என்னப்பா? அரசர் நிர்வாணமாக ஊர்வலம் வருகிறார்,'' என்று உரத்த குரலில் சொன்னான்.
சின்னஞ் சிறுவனிடம் தகுதிக் குறைவு ஏது? அரசர் நிர்வாணமாகத்தான் வருகிறார் என்று எல்லாரும் முணுமுணுக்கத் துவங்கினர்.
சிறிது நேரத்தில், அதுவே பெரிய கூச்சலானது.
அவமானம் அடைந்த அரசர் அதன் பிறகு வெளியே தலை காட்டவே இல்லை. உடை மாற்றும் அறை பக்கமும் போகவும் இல்லை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X