எச்.டி.சி. டிசையர் 626 ஜி ப்ளஸ் | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements
எச்.டி.சி. டிசையர் 626 ஜி ப்ளஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

26 செப்
2016
00:00

எச்.டி.சி. நிறுவனம், சில வாரங்களுக்கு முன்னால், தன் Desire 626 G Plus (White) ஸ்மார்ட் போனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் அதிக பட்ச விலை ரூ.9,990.
இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம், ஆண்ட்ராய்ட் 4.4. கிட்கேட். இதில் இரண்டு நானோ சிம்களைப் பயனப்டுத்தலாம். 1.7 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இதன் ஆக்டா கோர் ப்ராசசர் இயங்குகிறது. இதில் Mediatek MT6592 சிப்செட் தரப்பட்டுள்ளது. இதன் ஜி.பியு.
Mali-450MP4. இதன் பின்புறக் கேமரா 13 எம்.பி. திறன் உடையது. ஆட்டோ போகஸ் மற்றும் எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்தது. ஜியோ டேக்கிங், டச் போகஸ், முகம் அறிதல், விரிவான பனோரமிக் வியூ ஆகிய வசதிகள் கொண்டது. முன்புறமாக, 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா தரப்பட்டுள்ளது. எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இமெயில், புஷ் மெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எச்.டி.எம்.எல். 5 பிரவுசர் இயங்குகிறது. எம்.பி. 4 மற்றும் எம்.பி. 3 பிளேயர்கள் இயங்குகின்றன. போட்டோ மற்றும் விடியோ எடிட்டரும் தரப்பட்டுள்ளன. இது ஒரு 2ஜி மற்றும் 3ஜி போன். எப்.எம். ரேடியோ, லவுட் ஸ்பீக்கர் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளன.
இதன் ராம் மெமரி 1 ஜி.பி. இதன் ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை உயர்த்தலாம்.
இதன் பரிமாணம் 146.9 x 70.9 x 8.2 மிமீ. எடை 138 கிராம். இதன் திரை 5 அங்குல அளவில் டச் ஸ்கிரீன் திரையாக உள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 720 x 1280 பிக்ஸெல்கள்.
வெளியே எடுக்க இயலாத லித்தியம் போடியம் பேட்டரி 2000 mAh திறனுடன் தரப்பட்டுள்ளது. ஒருமுறை சார்ஜ் செய்தால், 521 மணி நேரம் மின் சக்தியைத் தேக்கி வைக்கிறது. தொடர்ந்து 22 மணி நேரம் பேசிட மின்சக்தி அளிக்கிறது. மூன்று வண்ணங்களில் வந்துள்ள இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 9,990

Advertisement

 



We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X