சின்னச்சின்ன செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 டிச
2010
00:00

மாந்தோப்பில் களைக்கட்டுப்பாடு - அடர்நடவு முறையில் நடப்பட்ட மாந்தோப்பில் ஆட்களை / கருவிகளைக்கொண்டு மண்ணின் மேல்பகுதிகளை உழுது அல்லது ரசாயனக் களைக்கொல்லிகளைக் கொண்டு என மூன்று வழிகளில் களைகளைக் கட்டுப்படுத்தலாம். கருவிகளைக் கொண்டு உழும்போது எடை குறைவான பவர்டில்லர் அல்லது மினி டிராக்டரைக் கொண்டு உழுது களையைக் கட்டுப்படுத்துவது அவசியம். இல்லையெனில் மண் இறுகி மண்ணின் வேர்வளர்ச்சி பாதிக்கப்படும். தவிர மாமரத்திற்கு பாரகுவாட், அட்ரவீன், கிளைபோசேட் போன்ற களைக் கொல்லிகளையும் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தலாம். நீர்வழி உரம் அளித்தல்: நீர்வழி உரம் அளிக்கும்போது முதல் வருடம் மாஞ்செடி ஒன்றுக்கு வருடத்திற்கு 100:50:100 கிராம் தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து வாரம் ஒரு முறை பகிர்ந்து அளிக்க வேண்டும். இரண்டு வயது மரத்திற்கு 200:100:200 கிராம் அளவிலும், 3 வயது மரத்திற்கு 400:200:400 கிராம்; 5 வயது மரத்திற்கு 500:200:500 கிராம் என்ற அளவில் அளிப்பது நல்ல விளைச்சலுக்கு வழிவகுக்கும்.

பசுமைக்குடில் தொழில்நுட்பம்: நிலத்தில் சமமான பகுதியில் பசுமைக்குடில் அமைத்து அதில் பாகர் என்று சொல்லும் புகைமூட்டம் போன்று நீர் தெளிக்கிற அமைப்பை அமைத்துக் கொள்ள வேண்டும். பசுமைக்குடில் இருக்கும் தரைதளத்தின் மண்ணை பயன்படுத்தி 4 அடி அகலத்தில் ஒன்றரை அடி உயரத்திற்கு பாத்தி அமைக்க வேண்டும். பாத்திபோட நீளத்தை நம் குடிலின் அளவுக்கு ஏற்றவாறு கூட்டி குறைத்துக் கொள்ளலாம். பாத்தி அமைத்தபின் பிளாஸ்டிக் ஷீட்டை வைத்து அதை மூடிவிட வேண்டும். அதன் மேல்தான் நாற்று உற்பத்தி செய்யும் குழித்தட்டை வைக்க வேண்டும். ஒரு தட்டில் 98 குழிகள் இருக்கும். 100 அடி நீளத்திற்கு பாத்தி அமைத்தால் அதில் 100 தட்டுகளை வைக்க முடியும். தட்டுகளில் உள்ள குழிகளில் ஊட்டமேற்றிய தேங்காய் நாரை நிரப்ப வேண்டும். ஒரு தட்டுக்கு ஒரு கிலோ நார் தேவைப்படும். ஒவ்வொரு குழியிலும் ஒரு விதையை விதைக்க வேண்டும். தினமும் பாகர் மூலம் 10 நிமிடம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். களைகள் வந்தால் எடுக்க வேண்டும். வேறு பராமரிப்பு எதுவும் தேவைப்படாது. பசுமைக் குடிலுக்குள் ஒரே மாதிரியான வெப்பநிலை பராமரிக்கப்படுவதால் எல்லா நாற்றுகளும் ஒரே அளவில் முளைத்துவரும். பூச்சிகள், பூஞ்சாண தாக்குதல் எல்லாம் இல்லாமல் இருக்கும். தக்காளி நாற்று 22 நாளில் உற்பத்தியாகிவிடும். காலிபிளவர் நாற்று 25 நாட்களிலும், மிளகாய், பப்பாளி நாற்றுகள் 40 நாட்களிலும் உற்பத்தியாகும். பப்பாளி நாற்றுக்கு குழித்தட்டு போதாது. அதற்கு மட்டும் பெரிய அளவில் இருக்கும் பிளாஸ்டிக் டம்ளர்களைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான தொழில்நுட்பம் நிழல்வலைப் பசுமைக் குடிலும், பாகர் அமைப்பும்தான். இதன்மூலம் எந்த நாற்றுக்களையும் உருவாக்க முடியும். இந்த குடிலுக்கு பயன்படுத்தும் வலை 3 வருடத்திற்குத்தான் தாங்கும். அதன்பின் புதியதாக மாற்றவேண்டும். 40 நாட்களுக்குள் சராசரியாக 5 லட்சம் என்னும் கணக்கில் வருடத்திற்கு 45 லட்சம் நாற்றுக்கள் உற்பத்தி செய்ய முடியும். ஒரு நாற்றுக்கு சராசரியாக 7 பைசா லாபம் கிடைக்கும். 17 சென்ட் நிலத்தில் வருடத்திற்கு சராசரியாக 3 லட்சம் வரை லாபம் கிடைக்கும் என்று கூறுபவர் திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகேயுள்ள குங்குமப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வேலுச்சாமி.
தொடர்புக்கு: 99439 55505 (தகவல்: பசுமை விகடன், 25.12.10) -டாக்டர் கு.சௌந்தரபாண்டியன்

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X