கி.பி.3003 ( அறிவியல் துப்பறியும் தொடர் ) - பூரணி - (பகுதி-21)
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 டிச
2010
00:00

இதுவரை: செயற்கைத் தீவை செயலிழக்கச் செய்துவிட்டு, விஞ்ஞானி பவிஷ்கோஷ், சிறுவன் கைலாஷுடன் வந்து கொண்டிருந்தான் ரோஷன். இவற்றை தன்னுடைய கணினியில் பார்த்துக் கொண்டிருந்தனர் தாஸ்சும், ஆசானும்.

இனி-
ரோஷனின் ஒவ்வொரு செயலையும் தன் கணினியுடன் இணைக்கப்பட்ட விசேஷ மின் திரையில் கண்காணித்துக் கொண்டிருந்த தாஸ், மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தார்.
""ஆசான் பார்த்தீர்களா? எப்படி என் ரோஷன். நான் கொடுத்த பணியை செவ்வனே செய்து வந்துகொண்டிருக்கிறான். நம் நல்ல நேரம் செயற்கை தீவினர், அவர்கள் போதை மருந்துக்கு அவர்களே மயங்கி கிடந்தனர். அதனால்தான் ரோஷனின் பணி எளிதாகியது. "" இப்போது உலகம் போற்றும் மாபெரும் விஞ்ஞானி நம் ரோஷனுடன் வந்து கொண்டிருக்கிறார். அதேபோல் வானில் ஒரு விந்தை நட்சத்திரம் கண்டு பின் அது செயற்கை தீவிற்கு உளவு கூறும் நட்சத்திரம் என்று கண்டறியக் காரணமாக இருந்த புத்திசாலி சிறுவன் கைலாஷும் விடுதலை ஆகிவிட்டான். இப்போது என் விசேஷ வேதியியல் பசையினால் அந்த செயற்கை தீவே முற்றிலும் செயலிழந்து துண்டிக்கப்பட்டு விட்டது.'' இவ்வாறு பேசிய தாஸ் உணர்ச்சிப் பெருக்குடன் ஆசானை கட்டி தழுவிக் கொண்டார். ""ஆம் தாஸ். நானும் தான் எல்லா நிகழ்வுகளையும் பார்த்தேனே. அடேயப்பா. எத்தனை பெரிய தீவு அந்த செயற்கை தீவு. அதனிடம் தான் எத்தனை நுண்ணிய மின் கருவிகள். செயற்கையாகவே பெரும் மழையையும், சூறாவளியையும் அல்லவா அவைகள் உண்டாக்கிவிட்டன. உண்மையில் தீவின் தலைவன் படு கில்லாடிதான். அய்யோ அந்த ராட்சத திமிங்கலத்தைப் பார்த்ததுமே எனக்கு உடல் நடுங்கியது. ""நல்லவேளை அது உண்மையானது அல்ல என்று நீ சொன்ன பிறகு தான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சே வந்தது. ஆனால், அந்த கில்லாடிக்கும் கில்லாடி இந்த தாஸ் என்பது அந்த முட்டாளுக்கு தெரியாமல் போயிற்றே. உன் உளவு கூறும் மின் கற்கள் என்னமாய் தன் செயலை முடித்திருக்கின்றன. அவைகளை வடிவமைத்த மாபெரும் துப்பறியும் சிங்கம் தாசுக்கு ஜே!'' என்று ஆசான் உணர்ச்சி வசப்பட்டு கூறவும், ராமன் சிரித்துவிட்டார் தாஸ். ""ஆசான். அதோ பாருங்கள். அவர்கள் வரும் படகு ஐம்பது நாட்டிகல் மைல் தொலைவில் இருக்கிறது. அவர்கள் வரும் போது நாம் அங்கிருந்து மிக மிக எச்சரிக்கையுடன் அழைத்து வர வேண்டும். காரணம், பவிஷ்கோஷ் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இப்போது என் ஒவ்வொரு செயலையும் இங்கு இருக்கும் செயற்கை தீவின் உளவாளிகள் கண்டுகொள்ள மிக ஆவலாக இருப்பர். உடனே புறப்படுங்கள்,'' என்று தாஸ் அவசரப்படுத்தினார்.
""சரி!'' என்று தலையாட்டிய ஆசான் உடனே புறப்பட தயாரானார்.
சற்று நாழியில் நாலுபுறங்களிலும் எதிரிகளை துவம்சம் செய்யும் விசேஷ ரப்பர் குண்டுகளை கொண்ட, குண்டு துளைக்காத கண்ணுக்கு புலப்படாத வண்ணம் ரேடார் பொருத்தப்பட்ட காரில் ஏறி வேகமாக "தாஸ் படகுத்துறை' நோக்கி ஆசானுடன் பயணமானார் தாஸ்.
அவர்கள் சென்ற சில நாழியில் ரோஷனின் படகு வந்தது. நீர் மூழ்கி படகாக வந்த அந்த படகு இப்போது மெல்ல மெல்ல மேல் நோக்கி வர ஆரம்பிக்கவும், தாசும், ஆசானும் ரெடியாக கைகளில் மாலைகளை வைத்து காத்திருந்தனர். படகு துறையின் மேல் படகு வந்து நிற்கவும் தாஸ் உற்சாகத்துடன், "வெல்கம் மிஸ்டர் பவிஷ்கோஷ்' என்று கூறி அவரை கைத்தாங்கலாக அழைத்து வந்தார். உடனே ஆசான், ""அகில உலகம் போற்றும் இந்திய விஞ்ஞானிக்கு அறிவியல் ஆசானின் வரவேற்புகளும் வாழ்த்துக்களும்''! என்று கூறி அவர் கைகளை குலுக்கி பின் மாலையை அணிவித்தார். உடனே தாஸ் மாலை போடும் போது அதை தான் ஏற்காமல் கையில் வாங்கி, அந்த மாலையை ரோஷன் கழுத்தில் போட்டார் பவிஷ்கோஷ்.
""நீங்கள்தானே உலகம் பாராட்டும் துப்பறியும் சிங்கம் தாஸ்!'' என்று பவிஷ்கோஷ் கேட்க, தாஸ் சிரித்தபடி, ""அப்படி இல்லை. நான் வெறும் தாஸ் தான்!'' என்றார் பணிவுடன்.
""மிஸ்டர் தாஸ், உங்கள் பையன் அபார திறமை உள்ளவன். அரை மணித்துளியில் அந்த செயற்கை தீவையே முடக்கி விட்டான். அவனுக்கு இணையாக இருந்து ஊக்கம் கொடுத்த பிரசன்னாவின் தைரியத்தையும் பாராட்டியே தீர வேண்டும். ""அதைபோல் தாய் நாட்டுக்கு உதவிய காரணத்துக்காக செயற்கை தீவினரால் கடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டானே, அந்த மாவீரன் கைலாஷும் போற்றப்பட வேண்டியவன். நல்லவேளையாக அவனும் மீட்கப்பட்டு விட்டான். இந்த வீர சிறுவர்களால் இந்த கிழவன் தப்பித்து விட்டான்.
""இனி இந்த பவிஷ்கோஷ் அந்த தீவை அழிக்கும் வரை ஓய மாட்டான். ஆம் தாஸ். அந்த செயற்கை தீவினர் இப்போது போதை மருந்தால் மயங்கி கிடக்கின்றனர். அது ஏழு நாளைக்கு வேலை செய்யுமாம். நமக்கு இன்னும் சில நாட்களே அவகாசம் இருக்கின்றன. அறத்குள் நாம் அவர்களை அழிக்கும் வழியை உடனே ஆராய வேண்டும். அவர்கள் மீண்டும் செயல்பட ஆரம்பித்தால் அது நமது குறிக்கோளை அடைய சற்று காலதாமதமாகிவிடும் என்று அஞ்சுகிறேன்,'' என்றார் பவிஷ்கோஷ். ""கவலை வேண்டாம். தங்களை அவர்கள் கடத்த இருந்த காரணமே தங்களிடம் செயற்கை தீவை அழிக்கும் ஒரு வரைபடம் இருந்ததால்தானே. எனவே, அந்த வரைபடத்தை இங்கேயே இப்போதே நிஜமாக்கிவிடுங்கள். அதற்கான அத்தனை வசதிகளும் என் உளவுக்கூடத்திலேயே இருக்கிறது. தாங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம். நானும் என் மகன் ரோஷனுமே சிறு ரக ஏவுகணைகளை என் ராக்கெட் தளத்தில் இருந்தே விட்டு உளவு பார்த்து பல குற்றவாளிகளை கண்டறிந்திருக்கிறோம்.
""இப்போது நம் அருகில் அறிவியல் ஆசானும் இருக்கிறார். உடனே ஏற்பாடு செய்யுங்கள். எப்படி இருந்தாலும் அந்த ஏவுகணை உருவாக ஒரு வாரம் ஆகலாம். அதற்குள் அந்த செயற்கை தீவினர் செயல்பட்டாலும் நமக்கு பெருமைதான். இப்போது நம் வலிமையையும் அவர்கள் அறிந்திருப்பர். என் இருப்பிடத்தில் வந்துவிட்டால் பின் யாராலும் அதை உளவு பார்க்கவோ அழிக்கவோ முடியாதபடி என் உளவுத்தளம் அமைந்திருக்கிறது. எனக்கு பிரான்ஸ் நாட்டு பாதுகாப்பும் உண்டு. என் செயல்களை எந்த ரேடாரும் கண்டுபிடிக்க முடியாது. பிறகு ஏன் கவலை?'' காரில் பயணித்த அனைவரும் உளவுத்தளம் வந்தனர்.
தாஸ் தன் மனைவியை விட்டு, அவர்களுக்கு சிற்றுண்டியும், டீயும் கொடுக்கச் செய்தார். அவரவர் இளைப்பாறி சற்று தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டனர்.
அதேசமயம் செயற்கை தீவின் முக்கிய விஞ்ஞானி அம்ருடன் மயக்கம் தெளிந்து எழுந்தான். காரணம், தன் தீவின் பாதுகாப்பு கருதி போதை பொடியை சிறிதளவே உபயோகித்திருந்தான். மற்ற அனைவரும் நல்ல போதையில் சிக்கி மயங்கி இருப்பது கண்டு மகிழ்ந்தான். தங்கள் விஞ்ஞானிகள் குழு இம்முறை தயாரித்த போதைப் பவுடருக்கு நல்ல மதிப்பு இருக்கும் என்றும் கணித்தான். அப்போது அவன் கவனம் எங்கோ சென்றது. அது எப்படி சாத்தியம்? நாம் மனிதர்கள். அதனால் மயங்கி விழுந்தோம். அந்த நியாயம் இவனுக்கு எப்படி பொருந்தும்? அப்படி என்றால் இந்த மூன்று நாளில் ஏதோ ஒரு நிகழ்வு ஏற்பட்டிருக்கிறது. உடனே ஒரு அதிர்ச்சியுடன் எச்சரிக்கை செய்யும் இயந்திர மனிதன் இருக்கும் இடத்துக்கு வந்தான்.
அப்போது அவன் கண்ட காட்சி உறைய வைத்தது. பவிஷ்கோஷ் அறை திறக்கப்பட்டு அவர் இல்லாதது கண்டு வேகமாக அங்கும் இங்கும் ஓடினான். பின் சிறுவன் கைலாஷ் இருக்கும் இடத்துக்கு வந்தான். அந்த அறையும் திறந்தபடி இருக்க சிறுவன் கைலாசும் காணவில்லை. அது எப்படி? இவர்கள் இந்த தீவில் இருந்து தப்பி இருப்பார்களோ? முடியாது. அதுக்கு வாய்ப்பே இல்லை. நம் மயக்கத்தை பயன்படுத்தி அந்த பொல்லாத கிழவன் தான் ஏதோ சதி செய்திருக்க வேண்டும். ஆனாலும், அவர்களால் தப்ப முடியாது. ""காரணம், நம் கடல் திமிங்கலங்கள் அவர்களை விழுங்கி காவல் அறையில் உமிழ்ந்திருக்கும். ஒருவேளை அய்யோ... அம்ருடன் உடல் நடுங்கியது. இந்த இயந்திர மனிதன் செயலற்று இருப்பது போல் அந்த கடல் பாதுகாவலர்களையும் இந்த கிழவன் செயல் இழக்க செய்திருந்தால்...? சரி இருந்தாலும் அவர்கள் எப்படி தப்ப முடியும். அதற்கு படகு வேண்டாமா? எதற்கும் நம் வான் ஒற்றனை கேட்டு யாராவது தீவுக்கு வந்திருப்பார்களா என்று அதன் உளவு இயந்திரம் பிடித்திருக்கும் புகைப்படங்களை உடனே அனுப்ப உத்தரவிடுவோம் என்ற சிந்தனையுடன் வேகமாக கட்டுப்பாட்டு அறைக்கு விரைந்தான். அனைத்து இயந்திரங்களும் செயலற்று போனதால் அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. உடனே பெரும் ஆபத்து நிகழ்ந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு உடல் நடுங்க அனைவருக்கும் மயக்கம் தெளிவிக்கும் வாயுவை இயக்கினான். அதுவும் வேலை செய்யவில்லை. அப்படி என்றால் இந்த செயற்கை தீவையே முடக்கிவிட்டு அந்த கிழவன் சிறுவன் கைலாசோடு தப்பி இருக்கிறான் என்று கோபத்துடன் பற்களை கடித்தவன் வேகமாக தன் கையினாலேயே மயக்கம் தெளிவிக்கும் வாயுவை செலுத்தி முதலில் தலைவனை எழுப்பினான். ""அய்யோ இன்ப வானில் வட்டமிட்டு பறந்த என் சிறகுகள் ஒடிந்தது ஏனோ. அய்யோ நான் கீழே விழுந்து விட்டேனே,'' என்று கூறியபடி கண்களைத் திறந்தான் தலைவன்.
(— தொடரும்)

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X