அன்பு நிலைக்கட்டும்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

அக்., 2 நவராத்திரி ஆரம்பம்

அம்பாளை, முப்பெரும் தேவியராகக் கருதி வழிபடும் விழாவே நவராத்திரி. இது, பெண்களுக்கான விழா.
கல்வி, செல்வம் மற்றும் ஆற்றல் எனும் முப்பெரும் சக்திகளையும், முப்பெரும் தேவியராக காட்டுகின்றன, நம் புராணங்கள். இவர்கள், நம் இல்லத்தில் நிலைத்திருக்க, பெண்களின் பங்களிப்பு முக்கியமானது.
குடும்பத்தலைவர் பணிக்கு செல்கிறார், தொழில் செய்து, சம்பாதிக்கிறார்; ஆனால், அவரது சம்பாத்தியத்தை, நிர்வாகம் செய்வதில் பெரும் பங்கு, இல்லத்தரசிகளுக்கே இருக்கிறது. பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, குடும்பத்தின் பெரும்பங்கு பிரச்னைகளை, பெண்களே சுமக்கின்றனர். இதனால், அவர்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது.
மிகுந்த செல்வச் செழிப்பு மிக்க பணக்காரர் ஒருவரின் கனவில் வந்த லட்சுமி தாயார், 'மகனே... நீ செய்த பூர்வ புண்ணியம் காரணமகவே, இதுவரை உன் வீட்டில் தங்கினேன். அந்த புண்ணியம் தீர்ந்து விட்டது; எனவே, நான், இவ்வீட்டை விட்டுப் போகிறேன்; என்னை வழியனுப்பிவை. அதற்கு முன்னதாக, நாளை மாலை உனக்கு நான் காட்சியளிப்பேன்; அப்போது நீ விரும்பும் வரத்தைக் கேட்கலாம்...' என்றாள்.
தூக்கத்திலிருந்து விழித்த பணக்காரர், இக்கனவைப் பற்றி, மனைவி, இரு மகன்கள், மருமகள்களிடம் கூறினார். உடனே, பணக்காரரின் மனைவி, 'லட்சுமி தேவி வரம் தருவதாக கூறியிருக்கிறாள் அல்லவா... நீங்கள், 1,000 கிலோ தங்கம் கேளுங்கள்...' என்றாள். மூத்த மகனோ, 'தங்கம் மட்டும் போதாது; வைரம், வைடூரியமும் கேளுங்கள்...' என்றான். இளைய மகன், 'அப்பா... காலம் முழுவதும் சாப்பாட்டுக்கு பிரச்னை வரக்கூடாது என்று கேட்டு விடுங்கள்; அதற்குத் தானே இந்தப் பாடுபடுகிறோம்...' என்றான்.
அப்போது, இளைய மருமகள், 'மாமா... அவர்கள் சொல்வது எல்லாம், தற்காலிக இன்பத்தையே தரும்; மேலும், லட்சுமி சென்று விட்டால், இவையாவும் அவளோடு போய்விடும். அதனால், இக்குடும்பத்தில் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என்றும் அன்பு மாறாமல், ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்க வேண்டும்; ஒற்றுமையாக திகழ வேண்டும் எனக் கேளுங்கள். குடும்ப ஒற்றுமை இருந்தால், எவ்வளவு பெரிய கஷ்டத்தையும் சமாளித்து விடலாம்...' என்று யோசனை சொன்னாள்.
பணக்காரருக்கும் அதுவே சரியென்று பட்டது. மறுநாள் லட்சுமியிடம், சின்ன மருமகள் சொன்னபடியே வரம் கேட்டார்.
உடனே, லட்சுமிதாயார், 'செல்வந்தனே... இந்த வரத்தை கேட்டதன் மூலம், நீ, என்னை இங்கேயே கட்டிப் போட்டு விட்டாய். அன்பிருக்கும் இடத்தை விட்டு, என்னால் அசைய முடியாது; அதனால், அங்கே செல்வமும் நிலைத்திருக்கும்; செல்வம் உள்ளவர்கள் முயற்சித்தால், கல்வி கை கூடும்; கல்வியும், செல்வமும் மனிதனுக்கு பெரும் ஆற்றலை கொடுக்கும். ஆக, கலைமகளும், மலைமகளும் என்னோடு வாசம் செய்வர்...' என்று சொல்லி மறைந்தாள்.
நம் வீட்டிலும் அன்பும், செல்வமும் நிலைத்திருக்க, முப்பெரும் தேவியரை வணங்குவோம்!

தி.செல்லப்பா

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X