இது உங்கள் இடம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

தோழியின் சாமர்தியம்!
திருமணமான என் தோழி, ஆங்கில நர்சரி பள்ளி ஒன்றில், ஆசிரியையாக வேலைக்கு சேர்ந்தாள். அப்பள்ளியின் நிர்வாகி, அவளிடம், ஜொள்ளு விட்டதோடு நில்லாமல், அவளை கண்டதும் உருகுவது போல் நடிப்பது, கவிதை எழுதிக் கொடுப்பது, என, அட்டூழியம் செய்துள்ளார். இத்தனைக்கும், அவர், 50 வயதை தாண்டியவர்; அவரது பிள்ளைகள், கல்லூரியில் படிக்கின்றனர்.
ஒருநாள், விலையுயர்ந்த பரிசுப் பொருளைத் தந்து, அவளை மடக்கப் பார்க்க, அதை வாங்கியவள், ஏற்கனவே அவர் தந்த காதல் கடிதங்களையும் எடுத்துச் சென்று, அவர் மனைவியிடம் தந்து, விபரத்தைத் கூறி, வேலையை விட்டு, நின்று விட்டாள்.
அதன்பின், அவருக்கு என்ன நடந்திருக்கும் என்பதை சொல்லவா வேண்டும்!
'வேலையை விட்டு நிற்பது என்று முடிவெடுத்த பின், எதற்கு தேவையில்லாமல் அந்த ஆசாமியை, அவர் மனைவியிடம் போட்டுக் கொடுத்த...' என்று அவளிடம் கேட்ட போது, 'எல்லாரும் ஒதுங்குவதால் தான், இப்படிப்பட்டவர்களுக்கு குளிர் விட்டு போகிறது. இனி, அவரது பள்ளிக்கு வேலைக்கு வரும் எந்தப் பெண்ணையும், வீழ்த்த துணிய மாட்டார். நான் செய்த செயலால், தற்போது அவரது மனைவியும், அவ்வப்போது பள்ளிக்கு வர ஆரம்பித்து, வேலை செய்யும் பெண்களிடம், மனம் விட்டு பேச ஆரம்பித்துள்ளார்.
'நமக்கேன் வம்பு என்று, நானும் ஒதுங்கியிருந்தால், அடுத்து வரும் பெண்களுக்கும், அவர் அதே தொல்லையை கொடுப்பார். அதனால், தான் இவ்வாறு செய்தேன்...' என்றாள்.
அவளது துணிச்சலை வெகுவாக பாராட்டினேன்!
— பெயர், ஊர், வெளியிட விரும்பாத வாசகி.

பெண்களுக்கு துணிவை கற்றுக் கொடுங்கள்!
சமீபத்தில், எங்கள் பகுதியில், தெருமுனை விழிப்புணர்வு முகாம் ஒன்றை நடத்தினர், அறக்கட்டளையை சேர்ந்த கலைக் குழுவினர்.
அக்குழுவில், ஆறு இளம் பெண்களும், இரு ஆண்களும் இருந்தனர். அவர்கள் தெம்மாங்கு மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலமாக, பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பாலியல் கொடுமைகளை தோலுரித்து காட்டியதோடு, அதற்கான தீர்வுகளையும், தங்கள் பாட்டிலேயே விளக்கினர்.
இறுதியில், கூட்டத்திலிருந்த சில பெண்களை அழைத்து, தனியே போகும் போது, வழிப்பறி திருடர்களிடம், தங்கள் கைப்பையை பாதுகாப்பது, சங்கிலி திருடர்களிடமிருந்து தப்பிப்பது மற்றும் சபல ஆசாமிகளை, எப்படி அடையாளம் கண்டு, பாடம் புகட்டுவது என்பது பற்றி செயல்முறை விளக்கங்களும், செய்து காட்டினர்.
வேடிக்கை பார்த்த அத்தனை பெண்களுக்கும் இது துணிவையும், நம்பிக்கையும் தந்தது. பெண்கள், வீட்டில் தனியே இருந்தாலும், வெளியே எங்கு சென்றாலும், பின் தொடர்ந்து வரும் பிரச்னைகளை சமாளிக்கும் துணிவை கற்றுத் தருவது தான், அவர்களுக்கு நல்ல எதிர்காலத்திற்கான வழிகாட்டுதல்.
பெற்றோர்களே... பெண்களை பயமுறுத்தி அடக்குவதை விட, பயத்தை நீக்கி, பக்குவத்தை போதிக்கலாமே!
ஆர்.பிரவீணா, மதுரை.

எந்த விழாவுக்கு என்ன புடவை...
சமீபத்தில், என் தோழியை சந்திக்க, அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். சந்தித்து, நீண்ட நாட்கள் ஆகிவிட்டதால், ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது, எங்கள் பேச்சு புடவைகளின் மீது திரும்பிய போது, தான் வாங்கிய புதுப்புடவையை காட்ட பீரோவை திறந்தாள். அதில் அடுக்கி வைத்திருந்த ஒவ்வொரு புடவைக்கும் நடுவே, அது, எங்கு, எந்த தேதியில், எந்த நிகழ்வுக்காக வாங்கப்பட்டது என்ற குறிப்பு சீட்டு இருந்தது. ஆச்சரியத்தோடு அவளை பார்த்தேன்.
'இதில் பெரும் பகுதி, உற்றார், உறவினர், நட்பு வட்டங்கள், திருமணம், காது குத்தல், பிறந்த நாள் மற்றும் மணநாள் ஆகிய நிகழ்வுகளின் போது, எனக்கு, பரிசாக வழங்கியவை. எந்த உறவினர் வீட்டுக்கு விஜயம் செய்தாலும், அவர்கள், பரிசாக அளித்த ஆடையை, இந்த குறிப்புகள் மூலம் தேர்ந்தெடுத்து, அணிந்து செல்வேன். 'இது, நீங்கள் பரிசாக கொடுத்தது...' என்று சொன்னவுடன், அவர்கள், அதை ஒரு மரியாதையாக கருதி, சந்தோஷப்படுவர்...' என்று விளக்கினாள். தற்போது, நானும், அதுபோல் குறிப்புகள் எழுத ஆரம்பித்து விட்டேன்.
— ஆர்.லதா, சென்னை.

மனைவிக்காக...
சமீபத்தில் ஒருநாள், திடீரென விடுப்பில் சென்றார், என் அலுவலக நண்பர். லீவ் ரிஜிஸ்டரில், எந்த காரணமும் பதியப்படவில்லை. மேலதிகாரியை கேட்ட போது, 'உடல் நிலை சரியில்லையாம்; போனில் தகவல் சொன்னார்...' என்றார்.
உடனே, நண்பரின் மொபைலுக்கு தொடர்பு கொண்டு கேட்டதற்கு, நண்பர் கூலாக, 'அதெல்லாம் ஒண்ணுமில்ல; எங்களோடது கூட்டுக் குடும்பம்ன்னு உனக்கு தான் தெரியுமே... எங்க அண்ணனும், அண்ணியும் ஒரு கல்யாணத்துக்கு போயிருக்காங்க. அம்மா, உறவினர் வீட்டுக்கும், பிள்ளைகள் ஸ்கூலுக்கும் போயாச்சு. என் மனைவி மட்டும், வீட்டில இருக்கிறதால, நானும் லீவு போட்டுட்டேன்...' என்றார்.
விஷயத்தை புரிந்து, சிரித்தேன். அதற்கு நண்பர், 'கூட்டுக் குடும்பத்தால் பந்தம், பாசம்ன்னு எவ்வளவோ வசதியும், பாதுகாப்பும் இருந்தாலும், தனிமை கிடைக்காது. என்னோட மனைவிக்குன்னு ஏதாவது ஆசை, ஏக்கம் இருக்குமில்ல. அதை, அவங்க, நம்மகிட்ட சொல்லலன்னாலும், இதுபோன்ற தனிமையை பயன்படுத்தி, அதை நிறைவேற்றுவது கணவனோட கடமை.
'என்ன தான் தனிக்குடித்தனத்தில் நிறையவே தனிமை கிடைத்தாலும், கூட்டுக் குடும்பத்தில் கிடைக்கும் இதுபோன்ற தனிமை ரொம்ப இனிமையானது...' என்ற போது, நண்பரின் தாம்பத்ய இலக்கணத்தைப் புரிந்து, மகிழ்ந்தேன்.
— எல்.லட்சுமணன், மதுரை.

உறவுகள் அறிமுகம்!
பொதுவாக, திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் சொந்த பந்தங்களும், நெருங்கிய நண்பர்களின் குடும்பங்களும் மட்டுமே கலந்து கொள்வர். இந்நிகழ்ச்சியில் இரு வீட்டார் சார்பில், யார் யார் கலந்து கொண்டனர் என்பது, சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டுமே தெரியும்; மற்றவர்களுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
ஆனால், சமீபத்தில், என் உறவினர் வீட்டு நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், இரு வீட்டாரும் தாம்பூலம் மாற்றிய பின், மாப்பிள்ளை வீட்டார் சார்பில், தங்களின் உறவினர் மற்றும் நண்பர்களை குடும்பத்துடன் மேடையில் ஒரு அணியில் நிற்க கேட்டுக் கொண்டனர்.
அனைவரும் அவரவர் குடும்பத்தினருடன் வந்து நிற்க, மணமகனின் தந்தை, ஒவ்வொருத்தரையும் அறிமுகப்படுத்தி, அவர் பெயர், வகிக்கும் பதவி, அவருக்கும், தனக்கும் உள்ள உறவு முறையை எடுத்துக் கூறினார். இதோபோல் மணப் பெண்ணின் குடும்பத்தினரும் தங்கள் சொந்த பந்தம், நண்பர்களை அறிமுகப்படுத்தினர்.
இதன் மூலம், இருவீட்டாரும் தங்களுடைய உறவினர் மற்றும் நண்பர்களை பெருமைய அடைய வைத்ததுடன், இருதரப்பு உறவினர்களையும் அறிந்து கொள்ள முடிந்தது.
திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நடத்த உள்ளவர்கள், இதைப் பின்பற்றலாமே!
— எம்.பாலசுப்ரமணியன், திண்டுக்கல்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
05-அக்-201618:11:59 IST Report Abuse
Krishna Sreenivasan எங்கள் வீட்டுலே நாங்கள் 8 பேரு இருக்கோம். யாருமே கபாலி பார்க்கலே. எந்த பாலியுமே பார்ப்பதே இல்லே. ஒன்னும் குறையே இல்லே. நிம்மதியா இருக்கோம்.
Rate this:
Share this comment
Cancel
மீனா தேவராஜன் - singapore,சிங்கப்பூர்
04-அக்-201607:25:18 IST Report Abuse
மீனா தேவராஜன் நான் ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன். என் எதிரில் 10 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனும் அவன் தாத்தாவும் அமர்ந்திருந்தார்கள். சிறுவன் தாத்தாவிடம் 'தாத்தா, நான் கபாலி படமே பார்க்கவில்லை, படத்துக்குப் போகலாமா? ' என்றான் அதற்கு தாத்தா' போகலாம்தான் ஆனால் தாத்தாவுக்கு கால் வலி கிட்டதட்ட மூன்று மணி நேரம் தியேட்டரில் எப்படி நான் உட்கார்ந்து இருப்பேன்? 'என்று அவனைக்கேட்டார். அவனும் தலையை ஆட்டியவாறு முடியாதுதான், அப்பாவும் அம்மாவும் எப்பவும் வேலை வேலை ன்னுபோயிகிட்டே இருக்காங்கா. நான் எப்படிப் பார்க்கிறது?' என்று அவன் எதிர் கேள்வி கேட்டான் அதற்குத் தாத்தா ' ஆமாம் அவங்களாளேயும் முடியாது. நான் சொல்றேன், உன்னை அழைச்சுகிட்டு போக சொல்லி என்றார். அதற்கு அந்த பையன், உலகமே கபாலி பார்த்திருஞ்ஞு, நாம இரண்டு பேருந்தான் பார்க்கவில்லை' என்று கவலையாகச் சொன்னான். அதற்கு தாத்தா உலகமே என்றால் என்ன? நீ யாரை உலகம் என்று சொல்கிறாய்? என்று கேட்டார். அவன் அளித்த பதில் என்னைச் சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தது. அவன் என் பள்ளியிலே என் தமிழ் கிளாஸ்தான் என் உலகம். அவர்கள் எல்லாரும் பார்த்துவிட்டார்கள். நான்தான் இன்னும் பார்க்கவில்லை' என்று அவன் குறைப்பட்டுக்கொண்டான். அவன் துருப்பும் அலைபாயும் கண்களும் என் மனதில் பதிந்து விட்டன. நாம் எவ்வாட்டாரத்தில் பழகுகிறோமோ அதுதான் நம் உலகம். இது நடந்தது சிங்கப்பூர் பேருந்து ஒன்றில்
Rate this:
Share this comment
Cancel
manivannan - chennai,இந்தியா
03-அக்-201616:29:48 IST Report Abuse
manivannan தம்பி கதிரழகன், ஏம்பா கொஞ்சம் மிகையாகவே இருக்கட்டுமே, நல்லது செய்யறவங்களை உற்சாகப்படுத்த மிகைப்படுத்தி பாராட்டுவது தவறாப்பா :>) ?
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
03-அக்-201620:57:04 IST Report Abuse
கதிரழகன், SSLCதப்பே இல்லீங்க. நம்ம நாட்டுல வாய் விட்டு பாராட்டுறவுக கம்மி. ரொம்ப அதிகமா சொன்னா கேலி/முகத்துதி ன்னு நெனச்சுடுவாக. ஆயினாலதான் கொஞ்சம் அளவோட செஞ்சா பொருத்தமா இருக்குமேன்னு நெனச்சேன். வேற ஒண்ணுமில்ல....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X