அந்துமணி பதில்கள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

ஜி.எஸ்.சந்திரசேகரன், பொள்ளாச்சி: கட்சிக்காரர்கள் சுவரில் கிறுக்காமல் பாதுக்காக்க ஒரு யோசனை கூறுங்களேன்...
'எங்கள் சுவரில் விளம்பரம் எழுதும் கட்சிக்கு ஓட்டு கிடையாது...' என, சுவரில் அறிவிப்பு செய்து பாருங்களேன்!

கே.வந்தனா, வருஷநாடு: போலீஸ் வேலையில் சேர கிராமப் பெண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராமே.. நகரப் பெண்கள் ஆர்வம் காட்டாதது எதனால்?
கிராமப் பெண்களிடம் உள்ள முன்னேற வேண்டும் என்ற வேகமும், ஆர்வமும் நகரப் பெண்களிடம் கிடையாது. அவர்களுக்கு பிரச்னையே இல்லாத, 9:00 - 6:00 மணி நேர வேலை, அதுவும், 'ஏசி' காற்றுடன் கிடைத்தால் திருப்தி அடைந்து விடுவர். இன்று சினிமாவில் தொடங்கி, ஒவ்வொரு துறையிலும் முன்னேறிய, புகழ் பெற்ற, பெற்றுவரும் பெண்களின் லிஸ்ட் ஒன்று போடுங்கள்... கிராமப்புற பெண்கள் தான், 'டாப் ஸ்கோரர்' ஆக இருப்பர்.

எல்.எம்.கனகப்பிரியா, கடலூர்: பெண்களை கிண்டல் செய்யும் போது, ஜாடையாக கண்ணடிப்பது, நாக்கால் உதட்டை தடவுவது இன்னும் என்னென்னவோ செய்கின்றனர், ஆண்கள். பெண்களும் ஜாடையாக பதிலடி கொடுக்க ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்களேன்...
பெண்களும், ஆண்களுக்கு சமமாக பதிலடி கொடுக்கத் தானே செய்கின்றனர். உதட்டை சுளிப்பது, தோள் பட்டையில் நாடியை இடித்துக் கொள்வது, காறி உமிழ்வது போன்ற இத்யாதிகள்... என்னிடம் கேட்டால், ஆண்களின் இந்த ஜாடைகளை, 'ஸ்போர்ட்டிவ்' ஆக எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது அதை கண்டுகொண்டதாகவே காட்டிக் கொள்ளாதீர்கள். பதிலடி கொடுக்கிறேன் பேர்வழி என்று பெண்களும் ஆரம்பித்தால், 'ஆப்போசிட்' பார்ட்டிக்கு குஷி பிறந்து விடும்; அப்புறம் வம்பு தான்!

ஆர்.சென்றாயபெருமாள், வீரபாண்டி: பட்டதாரிகளுக்கே வேலை இல்லாத இக்காலத்தில், எங்களைப் போன்று படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா... இப்படியே சென்றால், இளைஞர்களின் நிலை?
காலை, 7:30 மணிக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தேன் அப்போது, சிறு கும்பல் ஒன்று சாலையை அடைத்திருந்தது; அங்கிருந்த வீடுகளின் மாடிகளில் எல்லாம் ஜனங்களின் தலைகள். இக்காட்சியை கண்டு, சைக்கிளை விட்டு இறங்கி, கலாட்டாவா, கல் எறியா என நோக்கினேன்; இரண்டும் இல்லை. ஓட்டை சைக்கிள் ஒன்றில், வித்தை காட்டியவாறு இருந்தான், இளைஞன் ஒருவன். அரைமணி நேரத்தில், 200 ரூபாய் வசூல். பின் பேச்சு கொடுத்தப் போது, ஆசாமி, பி.ஏ., பாஸ் செய்தவர் என தெரிய வந்தது. சமுதாயம் மற்றும் அரசு வேலை கொடுக்கும் என்பதை மறந்து விடுங்கள்; சுய காலில் நிற்க தயார் செய்து கொள்ளுங்கள்!

டி.ஷீலாதேவி, குரோம்பேட்டை: என் தோழியின் வீட்டிற்கு செல்லும் போது, அவள் கணவரின் பார்வையே சரியில்லையே... என்ன செய்வது?
தோழியிடம் கூறி, அவர் வாழ்க்கையில் புயலை ஏற்படுத்தி, நிம்மதியை, அமைதியை கெடுத்து விடாதீர்கள். தோழியின் கணவர் இல்லாத நேரங்களை நாசூக்காக தோழியிடம் இருந்து தெரிந்து, அந்த நேரத்தில் தோழியின் வீட்டிற்கு செல்லுங்கள் அல்லது தோழியை உங்கள் வீட்டிற்கு வரவழைத்து அளவளாவுங்கள்!

என்.மணிவண்ணன், மயிலாடுதுறை: தரம் குறைந்த பொருட்களை உற்பத்தி செய்து, கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளை கட்டுப்படுத்த முடியாதா?
சட்டங்களில் ஏகப்பட்ட ஓட்டைகள்... முழுமையாக கட்டுப்படுத்துவது இயலாது; உபயோகிப்பவர்கள் புறக்கணித்தால் வழிக்கு வருவர்.

என்.முரளிதரன், தேவதானப்பட்டி: மெரீனா கடற்கரை, உலகில் இரண்டாவது அழகான கடற்கரையா?
இரண்டாவது நீளமான கடற்கரை; அழகில்... நேரில் வந்து லட்சணத்தை பாருங்கள்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ramasamy - chingola,ஜாம்பியா
03-அக்-201614:27:08 IST Report Abuse
ramasamy அந்துமணியின் யோசனை படி சுவரில் அறிவிப்பு செய்தால் மாற்று கட்சியின் படத்தை சுவரில் வரைந்து விடுவார்கள். என் வோட்டை ஏற்கனவே முடிவு செய்து விட்டேன் என் சுவரில் கிறுக்காமல் உதவி செய் நண்பா என்று அன்பாக அறிவிப்பு செய்யலாம். அல்லது நமது சுவரில் நாமே தினம் ஒரு திருக்குறளோ அல்லது அந்த தெரு பற்றிய செய்தியோ எழுதி வைக்க ஆரம்பித்தால் நல்ல ஒரு சேவையும் ஆகும். எல்லாருக்கும் உதவியாகவும் இருக்கும். உதாரணமாக பயனுள்ள தொலைபேசி எண்களை எழுதி வைக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Manian - Chennai,இந்தியா
02-அக்-201623:38:19 IST Report Abuse
Manian பட்டதாரிகளுக்கே வேலை இல்லாத இக்காலத்தில், எங்களைப் போன்று படித்துக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளதா... இப்படியே சென்றால், இளைஞர்களின் நிலை? ஏட்டுப் படிப்பு வேறு, வேலே செய்யும் திறமை வேறு. அனுபவ கல்வி, வழிகாட்டி, செயல்திறன் பெருக்கல்,போன்ற திறமை இல்லாதவர்கள் உடல் உழைப்பாளிகளாகவே உலகம் எங்கும் உள்ளார்கள். 5 வருட பழைய கேள்விதாள்களின் பதிலை மனப்பாடம் செய்து வாங்கிய டிகிரி, அவர்கள் குறுகியகால நினைவுத் திறனை மட்டுமே காட்டும். அவர்கள் என்றுமே கூலி வேலைக்கு்தான் போகமுடியும். ஐஐடி,ஐஐஎம் மில் படித்தவர்கள் சிந்தனை திறன்,செயல் திறனால் எப்போதுமே அதிக சம்பள்துடன் உலகெங்கும் வேலை பார்கிறார்களேமாணவர் அரசியல் கட்சி, சினிமா சிந்தை, கிரிகெட் பைத்தியங்களின் செயல்திறன் விலை போவதில்லை. ஜாதி-மதம்-இட ஒதுக்கீட்டினால் மட்டும் திறமைகள் வருவதில்லை.பின் ஓட்டுக்கு துட்டு வாங்கும் வேலை, அரசியல் வியாதிகளின் தொண்டர் குழாம் வேலைதான் கிடைக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X