இதப்படிங்க முதல்ல...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

விஜய்யுடன் மீண்டும் மோகன்லால்!
தெலுங்கில், ஜூனியர் என்.டி.ஆருடன், ஜனதா கேரேஜ் என்ற படத்தில் நடித்தார், மோகன்லால். அப்படம், 100 கோடி ரூபாய் வரை வசூலாகியது. தற்போது, அப்படத்தை தமிழில், விஜய் நடிப்பில், ரீ - மேக் செய்யும் முயற்சி நடக்கிறது. அத்துடன், ஏற்கனவே, விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடித்துள்ள மோகன்லால், இப்படத்திலும், அவருடன் இணைந்து நடிக்கிறார்.
சினிமா பொன்னையா

கூடு விட்டு கூடு பாயும் நடிகர்கள்!
தனி ஒருவன் படத்தில், எதிரும் புதிருமான வேடத்தில் நடித்த அரவிந்த்சாமி மற்றும் ஜெயம்ரவி இருவரும், போகன் படத்தில், உயிருக்கு உயிரான நண்பர்களாக நடிக்கின்றனர். மேலும், கூடு விட்டு கூடு பாயும் கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாதியில், ஜெயம்ரவியின் உடம்புக்குள் அரவிந்த்சாமியின் உயிரும், பிற்பாதியில் அரவிந்த்சாமியின் உடம்புக்குள் ஜெயம்ரவியின் உயிரும் புகுந்து கொள்வது போன்ற, ஒரு வித்தியாசமான, 'கான்செப்ட்'டில் இப்படம் தயாராகி வருகிறது.
சி.பொ.,

கதையின் நாயகியாக கோவை சரளா!
கே.பாக்யராஜின், முந்தானை முடிச்சு படத்தில் அறிமுகமானவர் கோவை சரளா. இதுவரை, 700 படங்களில் நடித்து விட்ட அவர், காமெடி வேடங்களில், கொங்கு தமிழில் பேசி, தனக்கென ஒரு அடையாளத்தை வைத்திருந்ததுடன், சதிலீலாவதி படத்தில், கமலுக்கு ஜோடியாகவும் நடித்தார். தற்போது, சசிகுமார் தயாரித்து, நடிக்கும் படத்தில், கதையின் நாயகியாக நடிக்கிறார். இப்படம், முழுக்க கிராமத்து காமெடி கதையில் உருவாகிறது. வரும் விதி எங்கு இருந்தாலும் வரும்!
எலீசா

தமிழுக்கு வரும் திலீப்குமாரின் பேத்தி!
ஒரு காலத்தில், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தவர், திலீப்குமார். இவரது பேத்தி சாயிஷா சைகல், தமிழில் ஜெயம்ரவி நடிக்கும் புதிய படத்தில் இறக்குமதியாகிறார். இந்தி நடிகையாக இருந்த போதும், தெலுங்கில், அகில் என்ற படத்தில் அறிமுகமான இவர், பின், பாலிவுட்டில், அஜய்தேவ்கானுடன் ஒரு படத்தில் நடித்து, தற்போது, கோலிவுட்டுக்கு வந்துள்ளார். மேலும், இப்படத்தில் கவர்ச்சி புயலாக களமிறங்கப் போவதாக கூறி, கோலிவுட் நடிகைகள் வயிற்றில், புளியை கரைத்துள்ளார். ஆகும் காலம் வந்தால், தேங்காய்க்கு இளநீர் போல் சேரும்!
எலீசா

சாதனை பட்டியலில் சிவகார்த்திகேயன்!
சமீபத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்காக, 'லயன்ஸ் கிளப்' நடத்திய ஒரு நிகழ்ச்சியில், வாழ்க்கையில் போராடி சாதனை புரிந்த அப்துல் கலாம் மற்றும் கிரண்பேடி ஆகியோரை பற்றிய குறும் படத்தை ஒளிபரப்பினர். மேலும், அந்நிகழ்ச்சியில் இறுதியாக, நடிகர் சிவகார்த்திகேயன், 'டிவி' சேனலில், தொகுப்பாளராக இருந்து, இன்றைக்கு, சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகராக சாதித்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், குறும்படம் திரையிடப்பட்டது.
— சினிமா பொன்னையா

கறுப்பு பூனை!
பால் நடிகையை, விவாகரத்து செய்யும் இயக்குனரின் தரப்பு, நடிகையை, 'பீல்ட் அவுட்' செய்து விட மெனக்கெட்டனர். ஆனால், சில முன்னணி நடிகர் மற்றும் இயக்குனர்களை, நடிகை, கெட்டியாக பிடித்துள்ளதால், அவர்களது முயற்சி, 'ஒர்க் அவுட்'டாகவில்லை. இதனால், நடிகையை, 'தமிழகதை விட்டே துரத்தி விடுவோம்...' என்று சூளுரைத்து வந்த இயக்குனர் தரப்பினர், தற்போது, சோர்ந்து விட்டனர். இச்சேதியறிந்த நடிகை, 'என்னையாவது, வீழ்த்துவதாவது...' என்று, எகத்தாளமாக சிரிக்கிறார்.

மங்காத்தா பட இயக்குனர், தன் முதல் படத்தின், இரண்டாம் பாகத்தை, தற்போது இயக்கியிருக்கிறார். ஆனால், அவரது முதல் படத்தில் அறிமுகமான இரண்டெழுத்து நடிகரை, இப்படத்தில், 'டம்மி' பீசாக்கி விட்டார். அதனால், அப்படத்தின், 'ப்ரமோஷன்' நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர், 'இனிமேல் அந்த இயக்குனரின் எந்த படத்திலும் நடிக்க மாட்டேன்...' என்று தன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சினி துளிகள்
* வடசென்னை படத்தில், கவர்ச்சி வேடத்தில் நடிக்கிறார், அமலாபால்.
* பாகுபலி இரண்டாம் பாகத்தில், இரண்டு இறுதிக் காட்சிகளை படமாக்குகிறார், ராஜமவுலி.
* தற்போது, எனக்கு வாய்த்த அடிமைகள் மற்றும் பலூன் போன்ற படங்களில் நடித்து வருகிறார், ஜெய்.

அவ்ளோதான்!

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X