அன்புடன் அந்தரங்கம்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

அன்புள்ள அம்மாவுக்கு —
கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி, நான். 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றவள். படித்து, கலெக்டராக வேண்டும் என்பது என் ஆசை.
கல்லூரியில் சேர்ந்து, இரண்டு மாதங்களுக்கு பின், முகநூல் கணக்கு துவங்கினேன். அதில், தெரியாத நபரிடம் இருந்து அழைப்பு வரவே, அதை ஏற்று, அவரிடம் பேசினேன். அவர் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். அவர் கேட்டதும், என் தொலைபேசி எண்ணையும் கொடுத்தேன். அதுவரை, என் வகுப்பில் கூட, ஆண்களிடம் பேசாதவள், அவரிடம் முதன்முறையாக போனில் பேசினேன். ஒரு வாரத்தில், என்னை காதலிப்பதாக சொன்னார்; நானும், சரி என்றேன்.
இருவரும் ஒருநாள் சந்தித்தோம்; பின், தொலைபேசியிலும், முகநூலிலும் மட்டும் பேசினோம். அடிக்கடி, அவர் என்னிடம் சண்டையிடுவார்; நான், பொறுத்துக் கொள்வேன். பின், எனக்கு, 'இப்படி செய்வது தவறு...' என்று தோன்றியது. என் பெற்றோருக்கு தெரிந்தால், என்ன ஆகும் என்று பயந்து, அவரிடம் பேசுவதை நிறுத்தினேன்.
ஒரு மாதத்திற்கு பின், அவரே, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'ஒரு காதலியாக இல்லாவிட்டாலும், தோழியாகப் பேசு...' என்றார். நானும், அதற்கு ஒப்புக் கொண்டேன். அவர், என்னிடம் பேசும் போது, 'டி' போட்டு தான் பேசுவார். மற்ற ஆண்கள், 'டி' போட்டு பேசுவதை விரும்பாத நான், அவர் பேசும் போது, எதையும் கூறவில்லை.
பின், நான்கு மாதங்கள் பேசினேன். அவர், என்னிடம், 'என்னை திருமணம் செய்து கொள்வாயா... நீ இருந்தால், என் வாழ்க்கை நன்றாக இருக்கும்...' என்று கூறினார். அதற்கு, 'முடிவு செய்வதற்கு, இது வயது இல்லை; இனி, உங்களுடன் பேசவில்லை...' என்றேன். அவரும், 'சரி... உன்னைப் போன்ற ஒருத்தி, என் வாழ்க்கையில் வரவில்லை என்று நினைத்துக் கொள்கிறேன்; உன்னை மறப்பதற்காக, தினமும் குடிப்பேன்...' என்றார்.
அவரிடம் பேசுவதை நிறுத்திய பின் தான், அவரை பற்றிய நினைவுகள், அதிகமாக வருகின்றன. அவரை உண்மையாகவே காதலிக்கிறேனா என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் திரும்ப பேசுவது சரியா, தவறா என்று கூட, எனக்கு புரியவில்லை.
அம்மா... என் வாழ்க்கை, நல்லபடியாக இருக்க, நல்ல வழி காட்டுங்கள்!
இப்படிக்கு,
தங்கள் அன்பு மகள்.


அன்பு மகளுக்கு —
பெரும்பாலான முகநூல் காதல்கள், அர்த்தமில்லாதவை; பொய் முகங்கள் காட்டுபவை. எல்லாரும் பேசி பழகும் போது, நாமும் பழகினால் என்ன என்கிற குறுகுறுப்பு மனோபாவத்தில் ஏற்படும் இத்தகைய காதலர்கள் தான், பலரின் வாழ்க்கையையே அழித்து விடுகிறது.
கலெக்டராக வேண்டும் என்கிற லட்சியம் உள்ள நீ, முன் பின் தெரியாத ஆணிடம், நட்பு கொண்ட ஒரே வாரத்தில் காதல் வயப்படலாமா... புத்திசாலி பெண் செய்யும் வேலையா இது!
கடந்த சில மாதங்களாக, செய்தித்தாள்களில் வரும் செய்திகளை கவனித்தாயா... முகநூல் நட்பு, இரு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது. லாவகமாக கையாளாவிட்டால், கையை கிழித்து, ரத்தம் சொட்ட வைத்து விடும். பெண்கள் முகநூலில், தங்களது புகைப்படம் மற்றும் மொபைல் எண்ணை தெரியப்படுத்துவது மிகவும் தவறு. நட்பு கோரிக்கை வந்தால், நன்கு தெரிந்தவர்களை தவிர மற்றவர்களை ஏற்கக் கூடாது.
முகநூலில் பழகும் போதே சண்டையிடுபவன், மணந்து கொண்டால், அடித்து அதகளப்படுத்தி விடுவான். சொந்தக் காசில், சூனியம் வைக்கப் போகிறாயா... தற்போது, பெற்றோருக்கு பயந்து, உன் காதலுக்கு தற்காலிக 'புல் ஸ்டாப்' வைத்துள்ளதை நிரந்தரமாக்கு.
'காதலியாக இல்லாவிட்டாலும், தோழியாகவாவது பழகு...' என்பது ஆண்கள், பெண்களுக்கு வீசும் சாமர்த்திய தூண்டில். 'உன்னை மறப்பதற்காக குடிப்பேன்...' என்பது, எமோஷனல் பிளாக் மெயில்!
வேலியில் போன ஓணானை எடுத்து, மடியில் போட்டுக் கொண்டாய்; பின், ஓணானை, மீண்டும் வேலிக்கே துரத்தினாய். ஓணானும் வேலி திரும்பி விட்டது; இனி, ஓணானை நினையாதே!
உன் ஐ.ஏ.எஸ்., கனவை நிஜமாக்க, படிப்பில் முழுக் கவனத்தை திருப்பு. எதிர்கால கலெக்டர் பெண்ணுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (12)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
black - Jeddah,சவுதி அரேபியா
08-அக்-201600:56:14 IST Report Abuse
black ஒரு வாரத்துல காதலிச்சவன் ஒரு மாசத்துல உன்ன திருப்பி அனுப்பிடுவான்.திரும்பி வரதுக்கு சரினா மறுபடி காதலி.உன் வாழ்க்கை எப்டி போனாலும் அம்மா அப்பா கவலை பட மாட்டாங்கனா காதலி.ஒரு ஆம்பளையா சொல்ரேன் இந்த வயசுல காதலை சுத்தமா நம்பாத.நம்புர வயசும் அறிவும் வரும் அது வரை உள்ள வேலைய பாரு.வாழ்க்கைல கஷ்டபட கூடாதுனா மனசு கஷ்ட படுரத பெருசா நினைக்காத.காலம் மாறுனா எல்லாம் மாறும் அதுவரை சமாளிக்கிறதுலதான் நம்ம எதிர்காலம் இருக்கு.உன் வாழ்க்கை நல்லபடியா அமைய வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
05-அக்-201618:06:50 IST Report Abuse
Krishna Sreenivasan ஆதி அம்மாடி சீலை மீது முள்ளு விழுந்தாலும் முள்ளின் மீது சீலை விழுந்தாலும் கேடு சேலைக்குத்தான் தெரியுமா. எவனையும் நம்பாதே. படிப்புதான் முக்கியம். முதலில் உன் facebook கணக்கை மூடு. பி நம்பரையும் மாற்று , படிப்பிலே கவனம் செலுத்து மேலுக்குவரவம் இதெல்லாம் தேவையே இல்லே. அவன் கிளைக்கி கிளை பறந்ததுன்னே இருப்பான் நீதான் ஏமாந்து நிக்கோணும் உன் எதிர்காலமும் அவுட்
Rate this:
Share this comment
Cancel
pandian subbiah - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03-அக்-201622:18:19 IST Report Abuse
pandian subbiah நீ எதுக்கு அந்த நாய் குடிக்கிறது பத்தி கவலை படுற. நீ உன்னோட படிப்பை பாரு. அந்த நாய் பத்தி நெனப்பா மறந்துட்டு. உங்க வீட்டுல உன் மேல எவ்வளவு நம்பிக்கை வச்சிருப்பாங்க உன் பெற்றோர் அத முதல்ல நிறைவேற்று. இந்த வயசுல வர்ற காதல் எல்லாமே அழிவில் தன முடியும். வீட்டுக்கு ஒரு பொறுப்புள்ள பொண்ண இருக்க பாரு. பெத்தவங்க பாவத்தை வாங்காத.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X