நவராத்திரி டிப்ஸ்!
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

02 அக்
2016
00:00

நவராத்திரி என்பது, பிறந்த வீடு தேடி வரும் பெண்ணான அம்பாளை, வரவேற்று கொண்டாடும் வைபவம் என்பதால், இவ்விழாவின் போது வீட்டில், மாவிலை தோரணம் கட்டுவது அவசியம்.
இந்த ஒன்பது நாளும், தேவி, நம் வீட்டில் இருப்பதால், வீட்டில் இரைச்சல், சண்டை மற்றும் அழுகைச் சத்தம் கூடாது; இனிய சங்கீதமும், அம்பாள் துதிகளும் தான், இருக்க வேண்டும்.
மேலும், இந்நாட்களில், யாருக்கும் பணமோ, நகையோ கடன் கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
* தற்போது, பல வண்ணங்களில், விலை மலிந்த பேப்பர் தட்டுக்கள் கிடைக்கின்றன. அவற்றை, நட்சத்திரம், மலர்களின் இதழ்கள் மற்றும் நாம் விரும்பும் டிசைன்களில் வெட்டி, கொலு வைக்கும் அறையில் தொங்க விடலாம்.
* சின்னச் சின்ன ஸ்லோகங்களை எழுதி அல்லது பிரின்ட் எடுத்து பெரிய பேப்பர் தட்டுக்களில் ஒட்டி கொலு அறையில், ஆங்காங்கே வைக்கலாம். இது, பார்க்க வித்தியாசமாக இருப்பதுடன், கொலுவிற்கு வருவோர், அதில் என்ன எழுதியுள்ளனர் என்று ஆர்வமாக படிப்பர்.
* சுண்டல்களை பிளாஸ்டிக் கவர் மற்றும் பேப்பரில் சுற்றிக் கொடுப்பதை தவிர்த்து, முடிந்த வரை, தொன்னை அல்லது வாழையிலையில் வைத்துக் கொடுங்கள்.
* ஒரு நோட்டு புத்தகத்தில், கொலுவுக்கு வருவோரின் பெயர், முகவரி, மொபைல் எண் மற்றும் இ - மெயில் முகவரி போன்றவற்றை வாங்கிக் கொண்டால், அடுத்த ஆண்டு, மறவாமல் அவர்களை கூப்பிட உதவும்.
* தற்போது, பலருக்கும் மூட்டு வலி உள்ளதால், பொம்மைகள் வைத்துள்ள அறையில், இரண்டு நாற்காலிகளை போட்டால், வயதானவர்கள் உட்கார, உதவியாக இருக்கும்.
* வெற்றிலை பாக்கு கொடுக்கும் போது, வாங்குவோரை மரப்பலகை அல்லது விரிப்பில் உட்கார வைத்து, அமர்ந்தவாறு கொடுப்பதே சிறந்தது. நின்று கொண்டே கொடுப்பதை தவிருங்கள்.
* பிளாஸ்டிக் பைகளுக்கு பதில், சின்ன துணிப்பை அல்லது நார் அல்லது சணல் பைகளை தரலாம்.
* மட்டை உரிக்காத முழு தேங்காய் கொடுப்பது நல்லது தான்; ஆனால், அதை உரிக்க சிரமப்படுவர். அதனால், மட்டை உரித்த தேங்காய் கொடுக்கலாம்.
* வீட்டிற்கு வரும் இளம் பெண்களுக்கு, பூச்செடிகளை அளிக்கலாம்.
* வீட்டில் எப்போதும் கல்கண்டு வைத்திருப்பது நல்லது. சில நேரங்களில், சுண்டல் காலியானால், அவசரத்திற்கு இது கை கொடுக்கும்.
* கொலுவை பார்க்க வருவோருக்கு, ஸ்லோக புத்தகங்கள் அல்லது பொன்மொழி புத்தகங்களை, கொடுக்கலாம்.
* வீட்டிற்கு வருவோரை, உங்கள் வீட்டினர் அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அவசியம். தற்போது, பலர், அழைப்பு மணியை அடித்ததும், தங்களது அறைக்குள் சென்று, ஒளிந்து கொள்கினறனர் இப்பழக்கத்தை, இளையோர் தவிர்க்க வேண்டும்.
* நவராத்திரி கொலு முடிந்ததும், 'அவ்வளவு தான்... இனி அடுத்த ஆண்டு பார்த்துக் கொள்வோம்...' என்பது போல, பொம்மைகளை அலட்சியமாக ஏறக் கட்டக் கூடாது. ஒவ்வொரு பொம்மையையும் பிரியத்துடன் எடுத்து, 'அடுத்த ஆண்டும் வாருங்கள்...' என மானசீகமாய் விடை கொடுத்து, நேர்த்தியாய் பேப்பரில் சுற்றி வைக்க வேண்டும்.

Advertisement

 



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vasumathi - Sydney,ஆஸ்திரேலியா
03-அக்-201615:43:31 IST Report Abuse
vasumathi இப்பவும் லேட் இல்லை. கொஞ்சமா மூணு படி வச்சி , கலசம் குத்து விளக்கு வைத்து ஆரம்பிங்க, அவருக்கு பிடித்த பொம்மையை கீழ் படியில் வையுங்க. அம்மி நகரும் .
Rate this:
Share this comment
Cancel
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
03-அக்-201603:53:56 IST Report Abuse
Krishna Sreenivasan எங்கள் வீட்டுலே கொலு வைக்கிறேன். 62 வருஷமா. எனக்கு அவ்ளோ இஷ்டம். ஆனால் என் கணவருக்கு எரிச்சல் தான் வருது. விடவே முடியலே. நானும் என் மருமகளும் அவ்ளோ ஆசையா செய்வோம். இந்தாண்டு ஆரம்பம் முதலே பிடுங்கல் ஆரம்பமாச்சு , அதற்கு ஏத்தாப்புலே நெருங்கிய உறவு இறந்துட்டதால் கொலு வைக்க முடியலே. இப்படியும் மனிதர்கள் என்று மனதுக்கு கஷ்டமா இருக்கு. தினம் தினம் நாம் நமது பிரெண்ட்ஸ் உறவுகளை மீட் பண்றதே இந்த 10 நாட்களில் தான். என்ஜாய் பண்றோம். அடுத்து மீட் பண்றதே நெக்ஸ்ட் தசராலே தான். இது எதனால் இந்த புருஷாளுக்கு புரியலே , என் தந்தை எல்லாம் அவ்ளோ ஆர்வம் காட்டுவர் ஹெல்ப் ம் பண்ணுவாங்க ,இது தான் வருத்தம் தருது . நான் தாம்பூலம் வாங்கப்போகும் வீடுகள்லே ஜென்ட்ஸ் ஆல்சோ ஹெல்பிங் தேர் மனைவிகள் , இவா ஹெல்ப் பண்ணவேண்டாம் குறைஞ்சது குற்றம் சொல்லாமல் பிடுங்காமல் இருக்கலாமே
Rate this:
Share this comment
Ajaykumar - Rajapalayam,சிங்கப்பூர்
03-அக்-201612:51:46 IST Report Abuse
Ajaykumarபுரியவைங்க இல்லேன்னா கண்டுக்காதிங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X