பத்து கேள்விகள் பளிச் பதில்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2016
00:00

புரோஸ்டேட் சுரப்பி என்றால் என்ன?
ஆண்களின் சிறுநீர்ப் பையை ஒட்டியவாறு, சிறுநீர்ப்பாதையின் அருகில் இருக்கும், 20 முதல் 25 கிராம் எடையுள்ள சுரப்பி.புரோஸ்டேட் சுரப்பியில்,

கட்டி ஏற்பட காரணம் என்ன?
டெஸ்டோஸ்டிரோன் (Testosterone) என்னும் ஹார்மோன் சுரப்பு, 40 வயதுக்கு மேல் அதிகரிப்பதால், வீக்கமடைந்து புரோஸ்டேட் சுரப்பியில் பாதிப்பு ஏற்படுகிறது.

புரோஸ்டேட் சுரப்பியில் கட்டி இருப்பதற்கான அறிகுறிகள் என்னென்ன?
சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது, அடிக்கடி சிறுநீர் வரும் உணர்வு, சிறுநீர் வராமல் அடைத்துக் கொள்வது, சிறுநீர்த் தொற்று, சிறுநீர்ப்பையில் கல் உருவாவது, போன்றவை.புரோஸ்டேட் சுரப்பி கோளாறுகளை

கண்டறியும் பரிசோதனைகள் என்னென்ன?
மல வாய் பரிசோதனை (DRE), அல்ட்ரா சவுண்ட், சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் உள்ளன. புரோஸ்டேட் அளவு, வடிவத்தை இதில் அறியலாம். புற்றுநோய் காரணமாக, புரோஸ்டேட் சுரப்பி உயிரணுக்கள் (PSA}அதிக அளவில் புரதத்தை உற்பத்தி செய்கின்றனவா என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.

இப்பாதிப்பு யாருக்கெல்லாம் வரும்?
40 வயதிற்கு குறைவான ஆண்களில் அரிதாகவும், 60 வயது ஆண்களுக்கு, 50 சதவீதமும், 70 முதல், 80 வயது ஆண்களுக்கு, அதிக அளவிலும், இப்பாதிப்பு ஏற்படலாம்.

புரோஸ்டேட் சுரப்பியில் இருக்கும் கட்டியின் தன்மையை அறிவது எப்படி?
மல வாய் பரிசோதனை (DRE), ஸ்கேன் மற்றும் ரத்தப் பரிசோதனைகள் மூலம் அறியலாம்.

சிகிச்சைகள் என்னென்ன?
புரோஸ்டேட் சுரப்பியின் வளர்ச்சி, ஆரம்ப கட்டத்தில் இருந்தால், மருந்துகளே போதுமானது. மருந்துகள் பயனளிக்காத, 10 சதவீதம் நோயாளிகளுக்கு, எண்டோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவைச் சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம்.

இப்பிரச்னையால், சிறுநீர் கழிப்பதில் ஏன் சிரமம் ஏற்படுகிறது?
சிறுநீர் செல்லும் குழாயை ஒட்டியவாறு புரோஸ்டேட் சுரப்பி உள்ளது. வயது அதிகரிக்கும் ஆண்களுக்கு, புரோஸ்டேட் சுரப்பி சிறுநீர்ப் பாதையை அழுத்துவதால், சிறுநீர் ஓட்டம் குறைகிறது.

இதனால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
சிறுநீரகப் பாதை தொற்று, சிறுநீர் வருவதை கட்டுப்படுத்த இயலாதநிலை உட்பட சிறுநீரகங்கள் தொடர்பான அனைத்துப் பிரச்னைகளும் ஏற்படும்.

புரோஸ்டேட் சுரப்பியில் கட்டியை திறந்த நிலை அறுவைச் சிகிச்சையின் மூலம் அகற்றலாமா?
70 முதல் 300 கிராம் வரை உள்ள பெரிய கட்டிகளையும் ஹோல்மியம் லேசர் சிகிச்சை (Holep) மூலம் அகற்ற முடிகிறது. இது எண்டோஸ்கோபி எனப்படும் நுண்துளை அறுவைச் சிகிச்சை ஆகும். இதன் மூலம், ரத்த விரயமும் குறைவாக இருக்கும்.

டாக்டர் எம்.ஜீவகன்

சிறுநீரக அறுவைச் சிகிச்சை சிறப்பு நிபுணர்,
காவேரி மருத்துவமனை,
சென்னை.

98844 39056

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X