எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements
எக்ஸெல் டிப்ஸ்...
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

10 அக்
2016
00:00

ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்புஎம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.
இந்த ஆப்ஜெக்ட்களை எப்படி இணைப்பது எனவும், அவற்றில் வண்ணம் அமைப்பது எனவும் இங்கு பார்க்கலாம்.
1. எந்த ஆப்ஜெக்ட்டை மாற்றி அமைக்க வேண்டுமோ, அதனை முதலில் தேர்ந்தெடுக்கவும்.
2. ட்ராயிங் (Drawing)டூல்பாரில், Fill Color அருகே உள்ள, கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் ஒரு கலர் மெனுவினைக் காட்டும்.
3. இந்த கலர் மெனுவில், Fill Effects என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் Fill Effects டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இந்த டயலாக் பாக்ஸில் உள்ள டூல்ஸ்களைப் பயன்படுத்தி, ஆப்ஜெக்ட்டில் பில் செய்திடுகையில் எப்ப்படிப்பட்ட வகையில் வண்ணம் இருக்க வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம்.

அவை பின்வருமாறு:
Gradient: ஆப்ஜெக்ட்டின் பல்வேறு பகுதிகளில் நிரப்பப்பட்ட வண்ணத்தின் ஆழம் எந்த அளவில் இருக்க வேண்டும் என்பதனை வரையறை செய்திட, இந்த டேப்பினைப் பயன்படுத்தலாம். நாம் விரும்பும் வகையில் அமைத்திட, இந்த டூலைப் பயன்படுத்தலாம்.

Texture: ஆப்ஜெக்டின் மேற்புறப் பூச்சுக்கு வண்ணம் தீட்ட இந்த டேப்பினைப் பயன்படுத்தவும். இதில் marble, fabric, மற்றும் wood
எனப் பல வகைகள் தரப்பட்டுள்ளதைப் பார்க்கலாம்.

Pattern: நீங்கள் எந்த வண்ணம் தேர்ந்தெடுத்து அமைத்தாலும், பல வகை அமைப்புகளில், அவற்றை அமைத்திட இந்த டேப் உதவுகிறது.இந்த அமைப்புகளில் பல விண்டோஸ் டெஸ்க்டாப் போல அமைகிறது.

Picture: இந்த டேப் மூலம், உங்கள் ஆப்ஜெக்டின் பகுதியை நிரப்ப உதவும் படம் ஒன்றை எடுக்கலாம். நீங்கள் பயன்படுத்தும் படத்தைப் பொறுத்து, பல புதிய, எதிர்பாராத, ஆர்வமூட்டும் விளைவுகளை இதில் ஏற்படுத்தலாம்.

ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க் ஷீட் பயன்படுத்தஎக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான சுருக்கு வழி ஒன்று எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் தரப்பட்டுள்ளது. ஒர்க் ஷீட் மாற விருப்பப்படுகையில், Ctrl+F6 கீகளை அழுத்தவும். இந்த கீகளை அழுத்துகையில், ஒர்க் புக்குகளின் டேப்கள் வரிசையாகத் தேர்ந்தெடுக்கப்படுவதனைப் பார்க்கலாம். ஐந்து ஒர்க்புக்குகள் திறந்திருந்தால், ஐந்தாவது ஒர்க் ஷீட் செல்ல, ஐந்து முறை Ctrl+F6 கீகளை அழுத்த வேண்டும்.

டேட்டாவிற்கேற்ற பார்மட்
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில், செல்களில் உள்ள டேட்டாவிற்கேற்ப பார்மட் செய்வதற்கு, ரிப்பனில் உள்ள டூல்களைத் தேடி, பின்னர் மெனு பெற்று பார்மட் செய்ய வேண்டியதுள்ளது. செல்களில் எண்கள், கரன்சி, நேரம் ஆகியவற்றை அமைக்கையில் இந்த தேவை எல்லாருக்கும் ஏற்படும்.
ஆனால், பலர், இதனால் நேரம் அதிகமாகிறது என்று எண்ணுகின்றனர். நேரத்தை வீணடிக்கக் கூடாது என்பதற்காகவே, எக்ஸெல் சில ஷார்ட் கட் கீகளைத் தருகிறது. அவற்றை கீழே காணலாம்.
Ctrl+Shift+~ பொதுவான பார்மட்
Ctrl+Shift+! எண்களுக்கான பார்மட்: இரண்டு டெசிமல் இடங்களும், ஆயிரம் தொகைக்கான கமாவும் கிடைக்கும்.
Ctrl+Shift+$ கரன்சிக்கான பார்மட் கிடைக்கும். இரண்டு டெசிமல் இடங்களும், நெகடிவ் தொகை எனில், அடைப்புக் குறிகளும் கிடைக்கும்.
Ctrl+Shift+# தேதி அமைப்ப தற் கான பார்மட்
Ctrl+Shift+@ நேரத்திற்கான பார்மட். நிமிடங்கள் காட்டப்படுவதுடன் முற்பகல் மற்றும் பிற்பகலும் (am/pm) அமைக்கலாம்.
Ctrl+Shift+% சதவீதத்திற்கான பார்மட். டெசிமல் இடம் கிடைக்காது.

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X