செல்வம் கொழி்கும் 'கோகோ பீத்'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2016
00:00

இயற்கை விவசாய ஆர்வலர் களுக்கு வரப்பிரசாதமாக 'கோகோ பீத்' எனும் தென்னை நார் கழிவு உள்ளது. பராமரிப்பு செலவு குறைவு; லாபம் அதிகம் என்ற அடிப்படையில் பெரும் பாலான விவசாயிகள் கோகோ பீத் விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மதுரை வாடிப்பட்டி சர்வோதயா சங்க நிர்வாகி சுந்தரராஜன், 'கோகோ பீத்' தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தென்னை நார் கேக்குகள் தயாரித்து விற்பனை செய்து சாதித்து வருகிறார்.
அவர் கூறியதாவது: தென்னை மட்டையிலிருந்து கிடைக்கும் கழிவு 'கோகோ பீத்' தயாரிப்புக்கு மூலப்பொருள். இக்கழிவை சலித்து பின் தண்ணீர் தெளித்து வெயிலில் உலரவைக்க வேண்டும். உலர்ந்த கழிவுகளை சேகரித்து 'ஹைட்ராலிக்' மெஷின் மூலம் தேவையான வடிவத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர். 14 கிராம் அளவிலிருந்து 5 கிலோ அளவிலான சதுர வடிவ கட்டிகளாக தயாரிக்கின்றனர். இயற்கை விவசாயம் செய்வோருக்கு, 'கோகோ பீத்' வரப்பிரசாதம். விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் மார்க்கெட்டிங் செய்வது எளிது.
மண் போன்ற பொருட்களை விமானத்தில் கொண்டு செல்ல தடை உள்ளது. தென்னை கழிவில் தயாரிக்கும் கேக்குகளை கொண்டு செல்ல தடை இல்லை. இதனால் உள்நாடு, வெளிநாடுகளுக்கு 'கோகோ பீத்' அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
30 கிராம் அளவில் உள்ள கேக்கில் நீர் ஊற்றினால் அது நீரை உறிஞ்சி தக்க வைத்து கொள்ளும். நீர் உறிஞ்சிய 'கோகோ பீத்'தை எடையிட்டால் 300 கிராம் அளவை காட்டும். இது வீடுகளின் மாடிதோட்டம் நர்சரி கார்டன், நாற்றுகளை உருவாக்க பயன்படும். மண்ணுக்கு பதிலாக 'கோகோ பீத்' மட்டும் போதும். தாவரங்கள் சத்தான முறையில் நன்கு வளரும். இரண்டு ஆண்டுகள் செடிகளை வளர்க்க பயன்படும்.
பின் தானாகவே மக்கி உரமாகிவிடும். அதற்கு பிறகு மகசூலை கணக்கிட்டால் சராசரியாக கிடைத்த மகசூலைவிட ஒரு மடங்கு கூடுதலாக கிடைக்கும். மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இந்த கேக்குகள் செடிவளர்க்க, புல்தரை அமைக்க அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மண்ணை பயன்படுத்தி விவசாயம் செய்யும் போது நோய் தாக்குதல் இருக்கும். 'கோகோ பீத்' விவசாயத்தில் நோய் தாக்குதல் குறைவு என்பதால் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். தொழில் நுட்ப ஆலோசனைக்கு 99769 17062 ல் ஹலோ சொல்லலாம்.
- ஆர்.ராஜா, மதுரை.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X