கேள்வி பதில்
Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2016
00:00

கேள்வி: ஸ்மார்ட் போனில் பேஸ்புக் பயன்படுத்துகிறேன். சில குழுக்களில் பங்கேற்று இருப்பதால், மற்றவர்கள் தகவல்கள் தருகையில் பெறப்படும் நோட்டிபிகேஷன் எரிச்சலைத் தருகிறது. ஒரு முக்கியமான பணியில் ஈடுபடுகையில், உறங்குகையில் இவை கிடைக்கப் பெற்றால், அது இடையூறாக உள்ளது. அதே நேரத்தில், சில முக்கிய தகவல்களுக்கு இந்த குழு தகவல்கள் தேவைப்படுகின்றன. தற்காலிகமாக தகவல்கள் பெறுவதை நிறுத்தியும், பின்னர் தேவைப்படுகையில் இயக்கியும் வைக்க முடியுமா? அதற்கான வழிகள் என்ன?
சி. கோகுல்தாஸ், சென்னை.
பதில்:
உங்களுடைய நீண்ட கடிதத்திலிருந்து, இந்த பேஸ்புக் பிரச்னையால், நீங்கள் அடையும் இடையூறு நன்றாகத் தெரிகிறது. நீங்கள் கேட்டுள்ளபடியே, தகவல்களைத் தொடர்ந்து பெறவும், தற்காலிகமாக அவற்றை நிறுத்தி வைக்கவும், பேஸ்புக் வழிகளைத் தருகிறது. கீழே அவற்றை விளக்குகிறேன்.
உங்கள் பிரவுசரில் பேஸ்புக் திறக்கவும். பின்னர் Messages என்பதில் கிளிக் செய்திடவும். அதில் குரூப் மெசேஜ் என்ற பிரிவில், நீங்கள் குறிப்பிடும் குரூப்பினைக் காணவும். இங்கு, மேலே இடது பக்கத்தில், X அடையாளம் அருகே உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு கிடைக்கும் கீழ் விரி பட்டியலில், Mute Conversation என்பதில் கிளிக் செய்திடவும். இவ்வாறு முடக்கி வைப்பதை ஒரு மணி நேரம் அல்லது நீங்களாக மீண்டும் இயக்கும் வரை எனக் கால அளவில் கொள்ளலாம். மீண்டும் இந்த உரையாடல் பக்கம் செல்கையில், அது முடக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கூறும். அங்கு உள்ள Unmute என்பதில் கிளிக் செய்தால், முடக்கி வைக்கப்பட்ட உரையாடல் உயிர்ப்பிக்கப்பட்டு, இடைப்பட்ட காலத்தில் கிடைத்த தகவல்கள் காட்டப்படும்.

கேள்வி: லேப் டாப் கம்ப்யூட்டர் ஒன்றில், விண்டோஸ் 10 பயன்படுத்துகிறேன். இது டச் ஸ்கிரீன் கொண்டது. இதனை டேப்ளட் போலப் பயன்படுத்தலாம் என்று ஒரு நூலில் படித்தேன். ஆனால், எப்படி இதனை மாற்றிப் பயன்படுத்துவது எனத் தெரியவில்லை. அதற்கான வழிகளைக் கூறவும்.
ஆர். ஜோஸப்பின் நிர்மலா, காரைக்கால்.
பதில்:
நல்ல தகவல் குறித்த கேள்வி இது. வரவேற்கிறேன். ஸ்டார்ட் கிளிக் செய்து, செட்டிங்ஸ் செல்லவும். அடுத்து, System என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது பக்கம் கொடுத்துள்ள பிரிவுகளில், கீழாக Tablet Mode என்பதில் கிளிக் செய்தால், Tablet Mode விண்டோ கிடைக்கும். இங்கு பல செட்டிங்ஸ் அமைப்பு தரப்பட்டிருக்கும். உங்கள் விருப்பத்திற்கேற்றபடி அமைக்கவும்.

கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில், நான் அண்மையில் பயன்படுத்திய அப்ளிகேஷன்கள் பட்டியலிடப்படுகின்றன. நான் பயன்படுத்திய அப்ளிகேஷன் புரோகிராம்கள் குறித்து மற்றவர்கள் தெரிந்து கொள்வதை நான் விரும்பவில்லை. இது தோன்றுவதை எப்படி தடுக்கலாம்?
ஆர். கலைவாணி ஸ்ரீதர், கோவை.
பதில்:
விண்டோஸ் 10 ஸ்டார்ட் மெனு, மாறா நிலையில், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் அப்ளிகேஷன்களை, Most Used என்ற பிரிவில் காட்டுகிறது. இதன் மூலம் நீங்கள் நேரடியாக அவற்றில் கிளிக் செய்து பெறலாம். இந்த பட்டியல் காட்டப்படக் கூடாது என நீங்கள் விரும்பினால், அதனை மாற்றலாம். கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல் முறைகளை மேற்கொள்ளவும்.
ஸ்டார்ட் கிளிக் செய்து, செட்டிங்ஸ் ஐகானில் பின்னர் கிளிக் செய்திடவும். செட்டிங்ஸ் விண்டோவில், Personalization என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், இடது பக்கம் உள்ள Start என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கிடைக்கும் விண்டோவில், பல மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில், ஸ்டார் ஸ்கிரீனின் பல பிரிவுகள் காட்டப்படும். உங்கள் விருப்பத்தினை நிறைவேற்றிக் கொள்ள, Show most used apps என்பதன் அருகே உள்ள On / Off பட்டனை, Off நிலைக்கு மாற்றவும். இனி, நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய புரோகிராம்கள், ஸ்டார்ட் மெனுவில் காட்டப்பட மாட்டாது.

கேள்வி: பல ஆண்டுகளாக அப்ளிகேஷன் சாப்ட்வேர், கேம்ஸ், டாகுமெண்ட்கள் அடங்கிய சி.டி.க்கள் பலவற்றை வைத்திருக்கிறோம். இவற்றில் சில சி.டி.க்
கள் சிலவற்றை மட்டுமே படிக்கத் தருகின்றன. அதுவும் பலமுறை சுத்தம் செய்து பயன்படுத்திய பின்னரே. இவற்றில் பதிந்து வைத்தால் நூறு ஆண்டுகள் வரை இருக்கும் என்று சொல்லப்பட்டது. 10, 15 ஆண்டுகளிலேயே கெட்டுப் போகத் தொடங்கிவிட்டன. ஏன் இப்படி? சீதோஷ்ண நிலை காரணமா? நன்றாக இருக்கும் சிலவற்றை எப்படி பாதுகாக்க வேண்டும்?
ஆர். தரணி, மானாமதுரை.
பதில்
: நூறு ஆண்டுகளா? நிச்சயம் இது அடிப்படை இல்லாத எதிர்பார்ப்புதான். நன்றாகப் பாதுகாக்கப்பட்ட டி.வி.டி. ஒன்று பத்து முதல் 12 ஆண்டுகள் வரை நன்றாக இயங்கலாம். எனவே, சற்றும் கால தாமதம் இன்றி, இயங்கும் சி.டி. அல்லது டி.வி.டி.க்களில் உள்ள பைல்களை, கம்ப்யூட்டர் ஹார்ட் ட்ரைவ், போர்ட்டபிள் ஹார்ட் ட்ரைவ் அல்லது ப்ளாஷ் ட்ரைவ்களில் மாற்றிப் பாதுகாக்கவும். இப்போது வழக்கொழிந்து போய்க் கொண்டிருக்கும் டி.வி.டி. ட்ரைவ்கள், இன்னும் ஓரிரு ஆண்டுகளில், மொத்தமாக இல்லாமல் போகலாம். தற்போது காணக் கிடைக்காத பிளாப்பி ட்ரைவ்கள் போல. இப்போதே, பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்கள் வாங்குகையில், டி.வி.டி. ட்ரைவ் என்பது கூடுதல் வசதியாகக் கருதி, அதனைப் பொருத்த தனிக் கட்டணம் வாங்குகின்றனர். எனவே, விரைவில் இந்த டி.வி.டி.க்களில் உள்ள பைல்களை, மேலே குறிப்பிட்ட வகைகளில் மாற்றிவிடவும்.

கேள்வி: விண்டோஸ் விஸ்டாவில் இருந்ததைப் போல, தூய்மையான வெண்மை நிறத்தில் பின்னணியை, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைக்க முடியுமா?
ஆர். தனஞ்செயன், திருப்பூர்.
பதில்
: அமைக்கலாம். ஓரிரு வழிகள் இதற்கு உள்ளன. முதலில், தேடல் கட்டத்தில், “Desktop background” என்று டைப் செய்திடவும். கிடைக்கும் பதில்களில், “Choose background, slideshow or solid color” என்பதில் கிளிக் செய்திடவும். பின்னர், Themes என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர் கிடைக்கும் பிரிவுகளில், Theme Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில், High Contrast White என்பதனை உங்கள் விருப்பமாகத் தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், உங்கள் டெஸ்க்டாப், நீங்கள் விரும்பியபடி தோற்றமளிக்கும்.
இன்னொரு வழியும் உள்ளது. நீங்கள் விரும்பும் வெண்மை நிறத்தில் போட்டோ அல்லது படம் ஒன்றை MS Paint புரோகிராமில் தயார் செய்திடவும். இதனை 1920 x 1080 என்ற பிக்ஸெல் அடர்த்தி உள்ளதாக மாற்றி அமைத்துக் கொள்ளவும். மீண்டும் background settings சென்று, அதில் Picture என்பதை அங்கு கிடைக்கும் கீழ் விரி மெனுவில் தேர்ந்தெடுக்கவும். இங்கு solid color, slideshow அல்லது picture ஆகிய மூன்று ஆப்ஷன்கள் காட்டப்படும். பின்னர், Browse என்பதில் கிளிக் செய்து, நீங்கள் தயார் செய்த இமேஜ் பைலைத் தேர்ந்தெடுக்கவும். இந்த இமேஜை உங்கள் டெஸ்க் டாப் பின்னணியாக அமைக்கவும்.

கேள்வி: பேஸ்புக் தளத்தில், தற்போது அடிக்கடி நண்பர்கள் வேண்டுகோள்களாக, தவறான நபர்களிடமிருந்து, தெரிந்த நண்பர்களின் பெயரில் கிடைப்பதாகப் பலர் கூறுகின்றனர். இது போல வரும் ஒவ்வொரு நண்பரின் வேண்டுகோளையும் எப்படி சரி பார்ப்பது என்று தெரியவில்லை. இந்த நட்பு வேண்டுகோளினை ஒத்துக் கொள்வதால், கம்ப்யூட்டரின் செயல்பாட்டிற்கு பாதிப்பு உடனடியாக ஏற்படுமா?
ஆர். வின்சென்ட், மதுரை.
பதில்:
இது போன்ற வேண்டுகோள்களை ஒத்துக் கொள்வது உடனடியாக ஆபத்தானவையாக இருக்காது. மின் அஞ்சல்களின் வழியே இணைப்பாக வரும் வைரஸ் போன்றவை அல்ல இந்த 'நண்பர்கள் வேண்டுகோள்'. இது போன்ற தெரிந்த வழியில் வரும் தவறான நண்பர்கள், உங்கள் உற்ற நண்பர்கள் போல பதிவுகள் போடுவார்கள். பின், சில நாட்கள் கழித்து, ஏதேனும் லிங்க் ஒன்றை அனுப்புவார்கள். அதில் கிளிக் செய்திடுமாறு அறிவுறுத்தப்படுவீர்கள். ஏதோ, உங்களுக்கு அனுகூலம் கிடைக்கும் சில வசதிகள் அதன் வழியாகக் கிடைக்கும் என்ற ரீதியில் நட்பான, அன்பான அறிவுரை இருக்கும். கிளிக் செய்தால், வைரஸ் புரோகிராம்கள் போல, கெடுதல் விளைவிக்கும் செயலிகள் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்கும். பின்னர், உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டு உங்களிடம் பணம் கேட்கப்படும். அல்லது, ஏதேனும் ஒரு பொருள் விளம்பரத்திற்கான லிங்க் ஆக இது இருக்கலாம்.
தெரிந்த நண்பர்களின் பெயரில் வரும் போலிகள் நிச்சயம் உங்களுக்குக் கெடுதல் விளைவிப்பவர்களாகவே இருப்பார்கள். எனவே, தெரிந்த உங்கள் நண்பர் குறித்த தகவல்களுடன் இந்த புதிய தொடர்பினை ஒப்பிட்டு, மோசமான நபரை அறியலாம். அல்லது தெரிந்த நபரின் போன், அஞ்சல் முகவரி இருப்பின், அவற்றின் மூலம் தொடர்பு கொண்டு நம்பகத் தன்மையை உறுதிப்படுத்தலாம். சிறிது சந்தேகம் ஏற்பட்டாலும், உடனே Unfriend செய்வதுதான் உடனடி தீர்வாகும்.

கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் கிடைத்த எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்துகிறேன். இதில் இணையத்தில் இருந்து டவுண்லோட் செய்யப்பட்ட பி.டி.எப். பைல்களைப் படிக்க கிளிக் செய்தால், பிரவுசரிலேயே ஒரு டேப் திறக்கப்பட்டு, அதில் இந்த பி.டி.எப். பைல் திறக்கப்படுகிறது. இதனால், நான் பயன்படுத்தும் பி.டி.எப். எக்சேஞ்ச் வியூவர் தரும் வசதிகளைப் பயன்படுத்த முடிவதில்லை. இதனை எப்படி தடுப்பது?
கே. ஷேக், காரைக்கால்.
பதில்:
தற்போது கிடைக்கும் எட்ஜ் பிரவுசரில், பி.டி.எப். பைல்களைப் படிக்கும் வசதி தரப்பட்டுள்ளதால், பிரவுசர் அதனையே பயன்படுத்துகிறது. எப்போதும் மாறா நிலையில் இதுவே இயங்கும். இருப்பினும், நீங்கள் விருப்பப்படும் வகையிலும் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்த விரும்பும் தர்ட் பார்ட்டி ரீடரை மாறா நிலையில் திறந்து பயன்படுத்தும் வகையில் மாற்றி அமைக்கலாம். அதற்கான வழிகளைத் தருகிறேன்.
பைல் எக்ஸ்புளோரரில், நீங்கள் திறக்க விரும்பும் பி.டி.எப். பைலைத் தேர்ந்தெடுக்கவும். அதில் ரைட் கிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், “Open with > Choose another app” என்பதைத் தேர்ந்தெடுத்து, அதில், நீங்கள் விரும்பும், ஏற்கனவே, இன்ஸ்டால் செய்யப்பட்ட தர்ட் பார்ட்டி, பி.டி.எப். ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம். இதில் “Always use this app” என்பதனைத் தேர்ந்தெடுத்தால் தான், அதுவே நிலையான ஒன்றாக அமைக்கப்படும். இந்த மெனுவில், நீங்கள் விரும்பும் பி.டி.எப். ரீடர் புரோகிராம் காட்டப்படவில்லை என்றால், “More apps”, என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அல்லது “Look for another app in this PC” என்ற தொடர்பில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.
இன்னொரு வழியும் உள்ளது. கண்ட்ரோல் பேனல் திறக்கவும். அங்கு “Default Programs” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். தொடர்ந்து, “Associate a file type or protocol with a program” என்பதில் கிளிக் செய்திடவும். சிறிது நேரத்தில், பல பைல் வகைகள் காட்டப்படும். அந்தப் பட்டியலில் கீழாகச் சென்று, .PDF என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து, “Change program” என்ற பட்டனைத் தேர்ந்தெடுக்கவும். ஒரு பாப் அப் விண்டோ திறக்கப்பட்டு, நீங்கள் தேர்ந்தெடுக்க, அப்ளிகேஷன்கள் பட்டியல் ஒன்று தரப்படும். இந்த பட்டியலில், நீங்கள் விரும்பும் புரோகிராம் இல்லை என்றால், “More apps” என்பதில் கிளிக் செய்திடவும். இதிலும் இல்லை என்றால், see “Look for another app in this PC” என்பதில் கிளிக் செய்து, நீங்கள் விரும்பும் பி.டி.எப்.ரீடர் புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து, அதனையே மாறா நிலை (Default) புரோகிராமாக அமைக்கவும்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X