இளஸ்... மனஸ்... (30)
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

அன்புள்ள ஜெனி ஆன்டிக்கு, என் பெயர்.... ----- வயது 12. எல்லாருக்கும் ஆறுதல் கூறும் நீங்கள், என் பிரச்னைக்கு வழி சொல்லுங்க ஆன்டி.
எங்கள் குடும்பத்தில் பெற்றோர், நான் மற்றும் எட்டு வயது தம்பி உள்ளனர். ஏழாம் வகுப்பு படிக்கிறேன். அப்பா குடிப்பதால், அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்படுகிறது. இதனால், எங்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்படுகிறது.
ஹாஸ்டலுக்கு சென்று படிக்கலாம் என்றாலும், அம்மாவை விட்டுச் செல்ல மனமில்லை. எங்கள் குடும்பச் சிக்கலைத் தீர்க்க வழிதெரியாமல், தவிக்கிறோம். இந்த உலகில் அன்பாக வாழும் குடும்பங்களை பார்க்கும் போது, எங்களுக்கு ஏக்கமாக உள்ளது. தயவு செய்து எங்க குடும்பத்தை காப்பாற்றுங்க ஆன்டி!

அன்பு மகனே... குடிகார அப்பாக்கள் என்ன மாதிரி கலாட்டா செய்வர். அதனால், குழந்தைகளாகிய உங்கள் உள்ளம், எவ்வளவு பாதிக்கப்படும் என்பது எனக்குப் புரியுது கண்ணா. அழாதீங்க...
உங்கம்மா ஒத்துழைத்தால், இந்த பிரச்னையில் இருந்து உங்கள் குடும்பம் விடுதலை அடைய முடியும். அப்புறம், நீங்களும் உங்க, 'டாடி' கூட கொஞ்சலாம். 'ஹேப்பி பேமிலி லிஸ்ட்'ல உங்க குடும்பமும் வந்துடும். சரியா... கண்ண தொடச்சிக்கிட்டு கொஞ்சம் சிரிங்க பார்க்கலாம்.
இது உங்கம்மாவுக்கு...
அன்பு சகோதரி, உங்களது, 12 மற்றும் 8 வயது பிள்ளைகள், எனக்கு கடிதம் எழுதுகின்றனர் என்றால், அவர்களது மன வேதனை எவ்வளவு பெரியது என்பதை யோசித்துப் பாருங்க. அதை விட உங்கள் வேதனை மிக மிக அதிகம் என்பது எனக்குத் தெரியும்.
இன்னும் எத்தனை நாளுக்குத்தான் இப்படி கஷ்டப்பட போறீங்க, என்று யோசித்து பாருங்கள். உங்க பிள்ளைகளுக்காகவாது உங்க கணவரை திருத்த வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு இல்லையா? உங்களைப் போன்ற தாய்மார்களின் கதறல்களை போக்க வேண்டும் என்பதற்காகத்தான், தமிழக அரசு, 2 கோடியே 45 லட்சம் ரூபாய் செலவு செய்து, போதை மாற்று சிகிச்சை மையங்களை, காஞ்சிபுரம், கடலூர், மாவட்டங்களில் ஆரம்பித்துள்ளனர். திருப்பூரிலும் ஆரம்பிக்க உள்ளனர். இதன் தலைமை அதிகாரியின் பெயர் கோபிநாத்; போன் நம்பர்: 099625-97793
இவரை தொடர்பு கொள்ளுங்கள். எல்லா உதவிகளையும் செய்து கொடுப்பார்.
உங்கள் கணவரிடம், 'போதை மாற்று மையத்துக்கு வாங்க போகலாம்!' என்று சொன்னால் வரமாட்டார். எனவே, ஏதாவது ஐடியா பண்ணி உங்கள் கணவரை இந்த மையத்துக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்த மையங்களுக்கு, 'போன்' செய்தால் அவர்களே வந்து, உங்கள் கணவரை வாகனத்தில் தூக்கிச் செல்வர்.
அவரது நிலமையை பொறுத்து ஓரிரு மாதத்தில் குணமாக்கி அனுப்புவர். திரும்பவும் வந்து ஒருமுறை, இருமுறை குடிக்க முயற்சிப்பார் உங்கள் கணவர். அவரது உடல் ஒத்துக்கொள்ளாமல் போகும். அதிலே பயந்து போய் திரும்ப பாட்டில் பக்கம் போக மாட்டார். அதன்பின், பாட்டிலை கண்டாலே, 'உவ்வே! என்ன நாத்தம்... சீ... இதை எப்படித்தான் குடிக்கிறார்களோ...' என்று சொல்லி ஓடுவார். நாளடைவில் குடியை மறந்து நல்ல தந்தையாக, கணவனாக நடந்து கொள்வார்.
பெண்கள் நினைத்தால் சாதிக்க முடியாதது ஒன்றுமே இல்லை. வீட்டுக்கு வீடு குடிகார குடிமகன்களுக்கு இப்படி ஒரு, 'ட்ரீட்மென்ட்' டை மனைவியர் கொடுக்க ஆரம்பித்தால் போதும்... அவ்வளவு குடிமகன்களும் பொட்டிப் பாம்பாக மாறுவதுடன், பொண்டாட்டி தாசன்களாகவும் மாறி விடுவார்.
உங்கள் பிள்ளைகளும் நிம்மதியாக இருப்பர். அதுக்கப்புறம் பாருங்க, 'டாஸ்மாக்' 'ஈ' ஓட்டிக்கிட்டு தன்னால மூடப்படும். நீங்கள் போராட வேண்டிய அவசியமே இல்லை.
இப்படி எத்தனையோ வழிகள் இருக்கும்போது, அதை முயற்சி செய்யாமல், உங்கள் வாழ்க்கை, தினம் தினம் நரகமாக இருக்க வேண்டுமா என்ன என்று, சற்று யோசித்துப் பாருங்கள்.
இந்த மையம் தூரமாக உள்ளது என நினைத்தால், உங்கள் ஊர் அவினாசி ரோடிலேயே, 'மைன்ட் விஷன் நியுரோ சைக்யாட்டிரிக் டி அடிக் ஷன் சென்டர்' வைத்துள்ளனர். அங்கே டாக்டர். வெங்கடேஷ் குமார். தொ.பே.எண்.98656-85050 தொடர்பு கொள்ளுங்கள். சிறுவர்மலர் இதழ் மூலம் வந்தேன் என்று சொல்லுங்க... உங்கள் கணவரை மீட்டெடுப்பதற்கான எல்லா உதவிகளையும் அவர் செய்வார்.
சகோதரியே... தயவு செய்து ஒரு தீர்க்கமான முடிவெடுத்து உங்க கணவரை காப்பாற்றுங்கள்... அதன்பிறகு உங்கள் கணவரே உங்களை கை எடுத்து கும்பிடுவார். 'என் வாழ்க்கையை காப்பாற்றிய தெய்வம்டி நீ' என்று சொல்லுவார்.
அரசாங்கம், கோடிக்கணக்கில் பணத்தை செலவு செய்து, இத்தகைய மையங்களை ஆரம்பித்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்தி குடியை கெடுக்கும் குடிமகன்களுக்கு கொடுங்க ஒரு, 'ஷாக் ட்ரீட்மென்ட்!'
அதன்பின், 'ஏ...ஏ...ய்... ஊ...ய்...' என்ற சப்தம் எல்லாம் அடங்கிப் போகும்!
வாழ்த்துக்களுடன்,
ஜெனிபர் பிரேம்.

Advertisement

 



வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X