நான் வாழப் பிறந்தவள்; நடனத்தால் ஆளப்பிறந்தவள்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

ஏஞ்சலின் செரில், பதினைந்து வயதாகிறது. 11ம் வகுப்பு படிக்கிறார்; படிப்பில் படுசுட்டி.
கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்த அமிர்தராஜ் - ஜீவா தம்பதியினரின் ஒரே மகள். திருமணமாகி கிட்டத்தட்ட, 13 ஆண்டுகளுக்குப் பின், பிறந்தவர் என்பதால் ரொம்ப சந்தோஷமாக இருந்தனர்.
உங்கள் குழந்தைக்கு உலகிலேயே மிக அபூர்வமாக வெகு சிலருக்கு மட்டுமே இருக்கக்கூடிய சி.ஏ.எச்., (Congenital adrenal hyperplasia (CAH) is a group of rare inherited autosomal recessive disorders characterized by a deficiency of one of the enzymes needed to make specific hormones. CAH effects the adrenal glands located at the top of each kidney) எனும் நாளம் தொடர்பான நோய் உள்ளது. மருந்து, மாத்திரைகள், மரணத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளிப்போடுமே தவிர, இந்நோய்க்கு முழுமையான தீர்வு கிடையாது. எந்த நேரமும் மரணம் வரலாம் என்று சொல்லி, குழந்தை பிறந்த சந்தோஷத்திற்கு மருத்துவர்கள் முற்றுப்புள்ளி வைத்தனர்.

தனியார் பள்ளி ஆசிரியையான ஜீவா வழிந்த கண்ணீரை துடைத்து, மகளை வாழவைக்கும் வழியைக் கண்டறிவதில் இறங்கினார். அசராமல் மருத்துவம் பார்த்துக் கொண்டே இருக்கிறார். உணவைவிட, மருந்து மாத்திரைகள் தான் அதிகம், அதே போல எல்லா செலவுகளையும் விட, மருத்துவ செலவுகளும் அதிகம். தான் வாழும் விதம் பற்றிய விவரம் தெரிந்தும், ஏஞ்சலின் கலங்கவில்லை, வாழும் வரை தானும் சந்தோஷமாக இருந்து, மற்றவர்களையும் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்காக எடுத்துக் கொண்டது தான் நடனம்.
நாட்டிய தேவதை என்று சொல்லும் விதத்தில் பரதநாட்டியம், கிராமிய நடனம், மேற்கத்திய நடனம், பொய்க்கால் குதிரை, ஒயிலாட்டம் என்று அனைத்து வகை நடனங்களும் ஆடுவதில் வல்லவர்.
ஒரு பக்கம் நடனத்திறமை அதிகரித்துக் கொண்டே இருப்பது போல நோயின் தீவிரமும் கூடிக்கொண்டே போகிறது அடிக்கடி சுருண்டு விழுந்துவிடுவார் ஒவ்வொரு முறை சுருண்டு விழும் போதும் இது மயக்கமா? மரணமா? என பெற்றோர் துடிதுடித்து போவர்.
ஏஞ்சலின் செரிலுக்கு ஒரே ஒரு ஆசைதான், அது... நடிகரும், நடன இயக்குனரும் பாதிக்கப்பட்ட பல்வேறு ஏழை எளிய குழந்தைகளை அறக்கட்டளை வைத்து பாதுகாத்து, படிக்க வைத்து வருபவருமான ராகவா லாரன்சை சந்திக்க வேண்டும் என்பது தான்.
இவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ், படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும் மும்முரத்தில் இருந்த போதும், ஏஞ்சலினை, சென்னை அசோக்நகரில் உள்ள தனது வீட்டிற்கு வரச் சொல்லி பார்த்தார்.
இவர்களது சந்திப்பு ஒரு பக்கம் மகிழ்ச்சியாகவும் இன்னொரு பக்கம் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. ஏஞ்சலினின் பிரச்னையைப் பற்றி மிக அக்கறையாக ஏஞ்சலினிடமும், அவரது தாயார் ஜீவாவிடமும், கேட்டு தெரிந்து கொண்டார்.
'வெளிநாடு போய்வந்த பிறகு, முறைப்படி ஒரு அரைமணி நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டு இருவரும் நடனமாடலாம். அந்த நடனத்தை உலகம் முழுவதும் பார்க்கும்படி செய்யலாம், அது மட்டுமின்றி, என் அடுத்த படத்தில், உன் நடனத்தை மையப்படுத்தி ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தருகிறேன்...' என்றார். ஏஞ்சலினுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. தனது கால் சலங்கையை அவரிடம் கொடுத்து ஆசீர்வாதம் பெற்று விடைபெற்றார்.
'இந்த கணம் இறந்தாலும் மகிழ்ச்சியே...' என்றவரிடம், 'தப்பும்மா இந்த கணம் முதல் உன் வாழ்க்கை இன்னும் பிரகாசமாகியிருக்கிறது, மேலும், உற்சாகமாயிருக்கிறது. நீ வாழப் பிறந்தவள்; நடனத்தால் ஆளப் பிறந்தவள்...' என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். அவரது வாழ்த்தோடு உங்கள் வாழ்த்தும் சேரட்டும், இந்த சின்னஞ்சிறு நடனமலர் நீண்ட காலம் வாழட்டும்.
-எல்.முருகராஜ்.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X