ஹாய்... ஹாய்... ஆங்கிலம் பேசி அசத்திக் கொண்டிருக்கும் என் அருமை மாணவர்களே... உங்களது ஆர்வம் என்னை மிகவும் உற்சாகப்படுத்துகிறது... பாதிபேர் ஆங்கிலத்தில் உரையாட ஆரம்பித்து விட்டீர்கள். ஒரே, 'Happy feelings' ஆ இருக்கு எனக்கு.
சரி... இன்று, Past perfect பற்றி பார்க்கப்போறோம்.
Present perfect எந்த இடத்தில் பயன்படுத்துகிறோம்னு சொல்லுங்க பார்ப்போம்.
ஒரு செயல் சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்திருந்தால், அந்த இடத்தில் உபயோகிக்க வேண்டும் வர்ஷி மிஸ்...
குட்... குட்... சூப்பர்! இப்போ, Past perfect என்றால் கடந்த கால முற்றுபெற்ற நிலை என்று அர்த்தம்.
அதாவது, இரண்டு கடந்த கால செயல்களைப் பற்றி பேசும்போது, முதலில் நடைபெற்ற கடந்த காலச் செயலை குறிப்பிட, Past perfect ஐ பயன்படுத்த வேண்டும். இதை நல்லா ஞாபகம் வச்சிக்கோங்க... என்ன தலை சுத்துதா?
Subject + had + past participle இந்த முறையில் தான் வாக்கியம் அமைப்போம்.
உதாரணம்: When i reached the station, the train had gone.
இந்த வாக்கியத்தில், நான் ரயில் நிலையத்திற்குப் போய் சேர்ந்தபோது, ரயில் போய் விட்டிருந்தது.
இதில், ரயில் போய்விட்டது என்பது முதலில் நடைபெற்ற செயல். எனவே, இச்செயலை, past participleல் சொல்ல வேண்டும். இரண்டாவது நடைபெற்ற செயலை Simple pastல் சொல்ல வேண்டும். இப்போ புரியுதா?
By the time the doctor arrived, the patient had died.
மருத்துவர் வந்து சேர்ந்தபோது, நோயாளி இறந்து விட்டிருந்தார். இதில் நோயாளி இறந்தது முதலில் நடைபெற்ற செயல். எனவே, Patient had died என்றும், இரண்டாவது நடைபெற்ற செயலை, Simple pastல் By the time the doctor arrived என்றும் சொல்கிறோம். இப்போ புரியுதா?
ரைட்! அத்துடன் இன்னொன்றையும் ஞாபகம் வச்சிக்கோங்க!
Past perfect வாக்கியங்கள் அமைக்கும்போது சில, Conjunction களை பயன்படுத்த வேண்டியிருக்கும். அதாவது இணைப்புச் சொற்களை பயன்படுத்தி, இரண்டு வாக்கியங்களை ஒன்றாக அமைக்க வேண்டும். சரியா! உதாரணம்:
When, While - போது
as soon as - உடனே
If - ஆல்
Because - ஏனெனில்
Unless - இல்லேன்னா
As - ஆதலில்
ஒரு சில உதாரணங்கள் தருகிறேன். அதைப் படித்து, எழுதிப் பார்த்து பழகுங்கள்.
1. I had met him.
நான் அவனைப் பார்த்திருந்தேன்.
2. He had registered a case.
அவன் ஒரு வழக்கு பதிவு செய்திருந்தான்.
3. I had tasted that soup.
நான் அந்த சூப்பை ருசி பார்த்திருந்தேன்.
4. It had rained there.
அங்கு மழை பெய்திருந்தது.
5. Ravi had called me.
ரவி என்னை அழைத்திருந்தான்.
6. They had invited him.
அவர்கள் அவனை அழைத்திருந்தனர்.
7. Leela had spoken at the meeting.
லீலா கூட்டத்தில் பேசியிருந்தாள்.
8. He had written many letters.
அவன் நிறைய கடிதங்கள் எழுதியிருந்தான்.
9. He had beaten me.
அவன் என்னை அடித்திருந்தான்.
10. Madu had submitted the application.
மது விண்ணப்பம் கொடுத்திருந்தான்.
சரி இவற்றை வைத்து வாக்கியங்களை எப்படி அமைப்பது என்று அடுத்த வாரம் பார்ப்போமா? அதுவரை இந்தப் பாடங்களை நன்றாக மனதில் ஏற்றிக் கொள்ளுங்கள்.
Until then,
bye, bye, Varshitha miss.