என்ன முழுசா யூஸ் பண்ணுங்கப்பா! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements
என்ன முழுசா யூஸ் பண்ணுங்கப்பா!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
Advertisement
 

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

'நூறு புறா, நூறு மணி நேரத்தில், 100 மூட்டை அரிசி சேர்த்தால், 10 புறா, 10 மணி நேரத்தில் எத்தனை மூட்டை அரிசி சேர்க்கும்...' இந்தக் கேள்வியை உங்களிடம் நான் கேட்டால், உடனே என்ன செய்வீங்க?
கால்குலேட்டரை எடுத்து, விடையை கண்டுபிடிப்பீங்க தானே! இது போன்ற பல புதிர்களையும், பல விஷயங்களையும் நினைவில் வைத்துக் கொள்ள, நமது மூளை முழுமையாக செயல்பட வேண்டும். அப்போ, யாரோட மூளையும் முழுமையா செயல்படுவதில்லையா? என்று தானே கேட்குறீங்க...
நமக்கு வலது, இடது என இரு பக்க மூளை உள்ளன. இதற்கிடையில் நடுபக்க மூளை எனும் பகுதி, வலது, இடது மூளைக்கு இணைப்பு பாலமாக உள்ளது. ஆக்ஸிஜன் அதிகம் கிடைத்தால், மூளையின் செயல்கள் சுறுசுறுப்படையும் இருந்தாலும், இடது பக்க மூளையின் செயல்களே சுறுசுறுப்படையும். வலது பக்க மூளையின் பணிகளான, பேச்சுத் திறன், எழுத்துத் திறன், கற்பனைத்திறன் சற்றே தோய்வாகவே இருக்கும். யாரும் வலது பக்க மூளையை பயன்படுத்துவதில்லை. இவ்வாறு பயன்படுத்தினால் மூளையின் செல்களிலுள்ள சோர்வு மறைந்து, புத்துணர்ச்சியுடன் மூளை செயல்படத் துவங்கும்.
வலது, இடது என மூளை செயல்திறன் இருந்தால் பல மடங்கு திறமை அதிகரிக்கும். இதை எப்படி செயல் படுத்துவது? யார் உதவுவார்கள் என்றால், 'மிட் ப்ரைன் ட்ரெய்னர்ஸ்' தான் உங்களுக்கு, 'ஹெல்ப்' பண்ண முடியும்.
அதாவது, நடுபக்க மூளை. குறிப்பாக, தகவல் பரிமாற்றத்துக்கு உதவுவது. வலது, இடது மூளையை சரிசமமாக செயல்பட வைக்கும். இதற்கு நடுபக்க மூளையை தூண்டிவிட வேண்டும். நிறைய சாதனையாளர்கள், ஆல்பர்ட் ஐன்ஸ்டின், ஏ.பி. ஜெ. அப்துல்கலாம் போன்றவர்கள், புதுப் புதுப் விஷயங்களை கண்டறிய காரணமாக இருந்தது இரு பக்க மூளையையும் பயன்படுத்தியதுதான்.
இந்த நடுபக்க மூளைதான் பார்வை, கேட்பது, தூக்கம், எழுவது, உடல்சூடு, உடலின் இயக்கு விசை மற்றும் இயங்கு விசை போன்றவற்றிக்கு உதவுகிறது. எனவே, நடு பக்க மூளையை தூண்டிவிடுவதன் மூலம், சரியான தகவல் பரிமாற்றம் செய்ய மூளை மற்றும் இதர உறுப்புகளுக்கு உதவுகிறது. பிறகு புதிது புதிதாக மூளை யோசிக்க ஆரம்பிக்கும். இதற்கு சிறப்பான பயிற்சி தேவை. இதற்கான பயிற்சியை தான் ஜி.ஆ.அருண் சேஷாய் மற்றும் சி.எஸ்.ஈஷ்வர் பிரசாத் தருகின்றனர். குழந்தைகளின் உலகமே புதிரானது. இன்றைக்கு பிடிக்கும் விளையாட்டு பொம்மை, நாளை பிடிக்காமல் போகும். காரணம், யாருக்கும் தெரியாது. இதுபோல, அவர்கள் உலகத்தில் நிறைய நல்ல விஷயங்கள் இருந்தாலும், எதிர்மறையான விஷயங்களும் இருக்கின்றன. சில குழந்தைகளுக்கு சரியான கவனிப்பு திறன் இருக்காது. தன்னம்பிக்கை, கூர்மையான பார்வைத்திறன், ஆர்வம், இருக்காது. மூளை, சரியான தகவல்களை மற்ற உறுப்புகளுக்கு கட்டளையிடாது.
இன்றைக்கு, நிறைய அம்மாக்களின் புலம்பல்களே இதுதான். 'என் குழந்தை மிஸ் சொல்லித் தருவதை அப்படியே சொல்றா; ஆனால், டெஸ்ட் பேப்பரில் எழுத மாட்றா...' என்பதுதான். இத்தோடு விட்டால் பரவாயில்லை. அந்தக் குழந்தையை அடித்து கொடுமைபடுத்துகின்றனர்.
'ஏன் எழுத மாட்ற... அவ பாரு எப்படி எழுதுறா... எனக்கு வந்து பொறந்திருக்கியே' என்று சொல்லி தன்னுடைய கோபத்தை எல்லாம் குழந்தையின் மீது கொட்டுகின்றனர். ஆனால், உண்மை என்ன தெரியுமா? குழந்தையின் மூளை, மனதில் எடுத்துக் கொள்ளும் விஷயங்களை எழுதும்படி கைக்கு மூளை கட்டளையிட வேண்டும். அப்போது தான் கை எழுதும். மூளைக்கும், கைக்கும்மான தொடர்பில் பிரச்னை இருந்தால், மூளை சொல்லாமல் கை எழுதாது. இதனால்தான் உங்கள் குழந்தைகள் மனப்பாடமாகச் சொல்வதை எழுத முடியவில்லை. இப்படிப்பட்ட குழந்தைகளுக்காகவே விசேஷித்த பயற்சி அளிக்கின்றனர், 'மிட் பிரைன் மென்டார்ஸ்' இரண்டு பக்க மூளையை செயல்பட வைப்பதின் நிமித்தம், உங்கள் குழந்தைகளை புத்திசாலிகளாக்குகின்றனர்.
இதற்கு, 'மிட் ப்ரைன்' நிறுவனம் பல பயிற்சி வகுப்புகளை எடுக்கின்றனர். உதாரணம், ஐஸ் பிரேக்கிங், நிறங்களை கண்டுபிடிப்பது, தகவல் பரிமாற்ற விளையாட்டு, பார்வைத்திறன் விளையாட்டு, புதிர் கேள்வி போன்றவை. எந்த விளையாட்டும் நிரந்தரமானது அல்ல; குழந்தைகளின் வயதைக் கொண்டு விளையாட்டு முறை மாற்றியமைக்கப்படுகிறது.
இதில் யோகா, தியானம் கூட உண்டு. இதனால் குழந்தைகளுக்கு என்ன பயன் என்றால், சுயமாக ஒரு விஷயத்தை கற்றுக் கொள்கின்றனர்; தன்னம்பிக்கை கிடைக்கப் பெறுகின்றனர்; எதிர்மறையான எண்ணங்கள் மறக்க கடிக்கப்படுகின்றன; 'டி.வி', கைபேசி மீதிருக்கும் ஆர்வம் குறைகிறது; நடத்தையில் மாறுதல் ஏற்படுகிறது; எல்லா செயல்களிலும் ஈடுபாடு ஏற்படுகிறது; மன அழுத்தம் குறைகிறது; அதே நேரத்தில் பெற்றவர்களும் பயன் அடைகின்றனர்.
குழந்தைகளிடம் ஏற்படும் முன்னேற்றம் காரணமாக, அவர்கள் பற்றிய மன அழுத்தம் பெற்றோருக்கு குறைகிறது.
இதற்கான பயிற்சி காலம் மூன்று மாதம் மட்டுமே. 6 முதல் 15 வயது குழந்தைகளுக்கு மட்டுமே ஆனது இப்பயிற்சி. பயன்படுத்திக் கொள்ளுங்கள்: தொடர்புக்கு அலைபேசி எண்: 98840-00452.
-அனுப்ரியா

Advertisement

 We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X