அதிமேதாவி அங்குராசு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 அக்
2016
00:00

வாழ்வின் ஒவ்வொரு நொடியையும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!

உலோக பறவையின் வயிற்றில் பெட்டி!
2br@@விமானம் என்பது மனித கனாக்களில் ஒன்று. விமானம் தொடர்பான அதி முக்கிய தகவல்கள் என்பது, பாதுகாப்பு சம்பந்தப்பட்டவை.
மிகத் தொலைவிலிருந்து பார்த்தால் தெரியும் வண்ணம், 'கறுப்புப் பெட்டி' என்பது ஆரஞ்சு நிறத்தில் தான் இருக்கும். கூடவே, 'யாரும் திறக்கக் கூடாது' என்ற எச்சரிக்கையும் பதியப்பட்டிருக்கும். பறக்கும் விமானத்தின், 100க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளை, சில வினாடிக்கு ஒரு முறை பதிவு செய்யும், பிளாக் பாக்ஸ்.
இறக்கை, வால் பகுதி, எரிபொருள் அளவு, பறக்கும் உயரம் போன்ற பல தகவல்கள் பதிவாகும். கறுப்புப் பெட்டிக்கு உள்ளே இருக்கும் மின்னணு சாதனம், இவை எல்லாவற்றையும், 'டிஜிட்டல்' சங்கேத முறையில் பதிவு செய்யும். அதனால்தான் விமானத் துறையினர், இதை, 'பிளைட் டேட்டா ரெக்கார்டர்' என கூறுகின்றனர்.
பதிவான தகவல்களை உரியவர்கள் அன்றி, வேறு யாரும் திறக்க முயன்றால், அதுவும் பதிவாகும். பெரிய மின்கலன், இருப்பிடத்தை தெரிவிக்க உதவும் சமிக்ஞை ஆன்டெனா, அதிக வெப்பம், மித மிஞ்சிய குளிர், கடலடி நீர் அழுத்தம், பாறைமேல் மோதுவது போன்ற பலவற்றையும் தாங்கும் விதத்தில், பல அடுக்கு உலோக பாதுகாப்பு கவசத்திற்குள், பதிவு சாதனத்தை வைத்திருப்பர்.
விமானிகளின் கடைசி இரண்டு மணி நேர ரேடியோ உரையாடல்களை பதிவு செய்ய, 'காக்பிட் வாய்ஸ் ரெக்கார்டர்' என்ற, விமானிகள் அறை உரையாடல் பதிவு சாதனம், தனியே இருக்கும். பல விபத்துகளில், விமானத்தின் வால் பகுதி தப்பிப்பதால், கறுப்புப் பெட்டி அங்கே தான் வைக்கப்பட்டிருக்கும். கண்டம் விட்டு கண்டம் செல்லும் விமானங்கள் விபத்துக்குள்ளானால், கடலில் தான் அதிகம் விழுகின்றன. ஆஸ்திரேலிய விஞ்ஞானி, டேவிட் வாரன், 1953ல் கறுப்புப் பெட்டியை உருவாக்கினார். ஆனால், அதற்கு முன்பும் விமான தகவல் பதிவு சாதனங்கள் இருந்தன. அவற்றை ஒருமுறைதான் பதிவு செய்ய முடியும்.
வாரன், காந்த பதிவு முறையை கொண்டு வந்ததால், ஒவ்வொரு பயணத்தின் போதும், பழைய தகவல் அழிக்கப்பட்டு, புதியவை பதியப்படும். அதாவது விபத்து நடக்கும் வரை.
அதன் உள் வேலைப்பாடுகள் பற்றி யாருக்கும் தெரியாதததாலும், ஒளி புகாமலிருக்க உள்ளே கறுப்பு வண்ணம் பூசி, இறுக்கமாக மூடப்பட்டு இருப்பதால் இதற்கு, 'பிளாக் பாக்ஸ்' என்ற பெயர் வந்திருக்கலாம். இது, பிரபலமாவதற்கு ஊடகங்களும் ஒரு காரணம். கறுப்புப் பெட்டியால், பல விமான விபத்துக்களின், உண்மைக் காரணங்கள் தெரிய வந்திருக்கிறது. ஆனால், இன்னும் அது ரேடியோ யுகத்திலேயே இருப்பதால், பலர் அதை மேம்படுத்த வேண்டும் என்று வாதிடுகின்றனர். கறுப்புப் பெட்டியை விட, விமானத்தில் இருக்கும் பயணிகளிடம் அதிநவீன சாதனங்கள் இருப்பதை, விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எறும்புன்னா எகத்தாளமா?


எறும்பு என்றவுடன், சுறுசுறுப்புதான் ஞாபகம் வரும். சும்மா ஜுஜுபி கணக்கா, அதை காலி பண்ணிடலாம்னு நினைப்பு வரும்.
அட... இந்த எறும்புங்க தொல்லை தாங்கலையே... எப்படி மூடி வச்சாலும், சர்க்கரை டப்பாவுக்குள்ள புகுந்து, படுத்தி எடுக்குதுங்க. அதுவும், 10வது மாடி வரைக்கும் எப்படி தான் அதுங்களால ஏறி வர முடியுதோ...
இப்படியெல்லாம் தினம் தினம் கரித்து கொட்டிக் கொண்டுதானே இருக்கிறீர்கள்!
நம்மைப் போல நகரங்களையும், சமூகத்தையும் நிர்மாணிக்கும் திறனுடையவை இந்த எறும்புகள்.
அதிகாரிகள், ஏவலர்கள், விவசாயிகள், பொறியாளர்கள், ஆசிரியர்கள் என, எறும்பு களின் காலனியில், பல சமூக அடுக்குகள் உண்டு. நம்மைப் போலவே, உபகரணங் களைப் பயன்படுத்த தெரிந்தவை. எறும்பு களை உற்றுக் கவனித்தால், குச்சி வடிவில் இருக்கும் சிறிய துரும்புகளை, உபகரணங் களாகப் பயன்படுத்துவதை பார்க்க முடியும். அவற்றுக்கு மருத்துவமும் தெரியும் என்று சொன்னால், பலருக்கு ஆச்சர்யமாக இருக்கும். அத்துடன் அவற்றுக்கு சிந்திக்கவும், திட்டமிட்டு வேலை செய்யவும் தெரியும்.
'ஆன்டினி, அக்ரோமிர்மெக்ஸ்' போன்ற, சிலவகை எறும்புகள் விவசாயம் செய்து சாப்பிடுகின்றன. இப்படி ஒன்று இரண்டு அல்ல, 200 வகை எறும்புகளுக்கு விவசாயம் செய்ய தெரியும். இவ்வகை எறும்புகளை, 'லீப் கட்டர்கள்' என்று குறிப்பிடுவர். இலைகளின் மேற்பரப்பில் இருக்கும் மெழுகு போன்ற பகுதியை அகற்றிவிட்டு, இலையை நன்றாக மென்று, மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சான் தோட்டத்தில் புதைக்கின்றன.
அப்படி புதைக்கப்பட்ட இலைகளில் இருக்கும் எறும்புகளின் எச்சில், ஒரு வேதியியல் மாற்றத்தை நிகழ்த்துகிறது. இதன் காரணமாக, இலைகளில் இருக்கும் புரதமும், கார்போஹைட்ரேட்டும் தனித்தனியாக பிரிந்து, 'கான்கிலிடியா' எனப்படும் பூஞ்சான் உணவு உற்பத்தியாகிறது.
அதாவது, சராசரியாக ஆண்டு ஒன்றுக்கு, 470 கிலோ அளவுக்கு ஒரு காலனியில் பூஞ்சான் மகசூல் செய்யப்படுகிறது என்று கணக்கிட்டுள்ளனர். எறும்புகளை பொறுத்தவரை, இது ஒரு மகத்தான மகசூல் இல்லையா?
இலைகளை சின்னச் சின்ன துண்டுகளாக கத்தரிக்கும். சக்தி குறைந்த எறும்புகள் அவற்றை மென்று, மண்ணில் புதைக்கும். இப்படி வேலைகளைத் தங்களின் திறமைக்கும், சக்திக்கும் தகுந்த மாதிரி பிரித்து செய்யும். இந்த உணவு தயாரிக்கும் வேலையின்போது, பலதரப்பட்ட நுணுக்கங்களை பயன்படுத்துகின்றன. நாம் விவசாயத்தில் பயன்படுத்தும் களையெடுத்தல், பூச்சிமருந்து தெளித்தல், போன்ற யுக்திகளையும் கையாளுகின்றன. பாலைத் தயிராக்கும் யுக்திக்கு, சமமான ஒரு யுக்தியை எறும்புகளும் பயன்படுத்துகின்றன.
உணவுக்காக, மனிதர்கள் ஆடு, மாடு வளர்ப்பதைப் போல, எறும்புகளும், கால்நடைகளை வளர்க்கின்றன. இவற்றின் கால்நடை, 'ஆப்பிட்ஸ்' என்ற ஒருவகை பூச்சிகள். மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது மாதிரி, எறும்புகள் இந்தப் பூச்சிகளை, ஒரு சில செடிகளில் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கின்றன.
பின், தங்களுக்கு தேவைப்படும்போது, அந்த பூச்சிகளின் வயிற்றில் சேர்ந்திருக்கும் இலைகளின் சாற்றை, பூச்சிகளின் வயிற்றை அழுத்தி, வாய் வழியாக கறந்து விடுகின்றன. எல்லா எறும்புகளும் இப்படிப்பட்ட வேலைகளில் ஈடுபடுவதில்லை. எறும்புகளின் சமூகத்திலும், மாடு மேய்ப்பதற்கென்று தனியாக இருக்கும் ஓரினம் தான், பூச்சிகளின் வயிற்றில் இருந்து தாவரச் சாற்றை சேகரித்து, தங்கள் காலனியில் இருக்கும் மற்ற உறுப்பினர்களுக்கு வினியோகம் செய்கின்றன.
மேலே குறிப்பிட்ட, 'ஆக்ரோமிர்மெக்ஸ்' வகை எறும்புகளின் காலனி, அதாவது புற்று, 30 மீட்டர் ஆழத்துக்கும், 100 மீட்டர் அகலத்துக்கும் கூட இருக்கும். இதுபோன்ற ஒரு காலனியில், 80 லட்சம் எறும்புகள் கூட இருக்கும்.
அட்ரா சக்க... இந்த, 'மினிஸ்'கள் பண்ற அட்டகாசத்தை பார்த்தீர்களா?

ரொம்ப வெயிட்டா! வெயிட்ட எ மினிட்!

வேறெதுக்கு வெயிட் பண்ணனும்?


வெயிட்டை குறைக்க சில டிப்ஸை வாசிக்கத்தான்!
* காலை உணவு மிகவும் முக்கியம்; தவிர்க்கக் கூடாது.
* காலையில் எழுந்ததும், ஒரு டம்ளர் நீரில், 2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, 1 தேக்கரண்டி தேன், சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்கவும்.
* இஞ்சி, மிளகு, லவங்கப் பட்டை போன்றவை மிகவும் சிறந்தவை.
* இஞ்சி போட்ட டீயை தினமும், 2 முறை குடிக்கலாம்.
* உணவருந்திய பின், வெந்நீர் குடித்தால் வயிற்றில் கொழுப்பு சேராது.
* பச்சை காய்கறிகள், கலோரி குறைவான, ஆனால், அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் உள்ள உணவு பொருள்களை உண்ண வேண்டும்.
* காலையில் எழுந்ததும், 10 கறிவேப்பிலையை மென்று சாப்பிட வேண்டும்.
* உணவு உண்ணும் முன், ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட வேண்டும். இது அதிக உணவு எடுத்து கொள்வதை தடுக்கும்.
* காலை, மாலை வேளைகளில், 30 நிமிட நடை பயிற்சி செய்தால், தொடையில் உள்ள தேவையற்ற கொழுப்பு கரையும்.
என்றென்றும் அன்புடன், அங்குராசு.

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
22-அக்-201617:10:34 IST Report Abuse
A.George Alphonse All informations are wonderful and praise worthy.Very interesting to read the works of ants and the wonderful creation of such tiny creatures by God.All people who are walking morning and evening to reduce the big stomach and huge bodies must read the tips for good health.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X