Advertisement
கணவனை விவாகரத்து செய்ய வழியில்லையா யுவர் ஹானர்?
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 அக்
2016
00:00

சமீபத்தில், விவாகரத்து தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் பெரும் அலையை எழுப்பி உள்ளது.
கர்நாடக தம்பதியின் விவாகரத்து தொடர்பாக, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.ஆர்.தவே, எல்.நாகேஸ்வர ராவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், 'இந்து சமூகத்தில் பிறந்த மகன், தன்னுடைய பெற்றோரை இறுதி வரை காப்பாற்ற வேண்டும்; பெற்றோரை பாதுகாப்பது அவனுக்கு பக்தியுள்ள கடமை; அவன் தான் பெற்றோரை கவனிக்க வேண்டும்; அப்படி பெற்றோருக்கு பணம் செலவழிக்க மனம் இல்லாத தன் மனைவி, தனிக்குடும்பம் செல்ல வேண்டும் என்று அவனை நிர்ப்பந்தித்தால், அவளை விவாகரத்து செய்ய, இந்து மதத்தை பின்பற்றும் கணவனுக்கு உரிமை உண்டு' என்று தீர்ப்பு அளித்துள்ளது. இது குறித்து, நம் நாயகியரிடம் கேட்டபோது...

ஆணையும், அவனுடைய பெற்றோரையும் மட்டுமே பார்க்கும் சமூகம், பெண்ணையும், அவளுடைய பெற்றோரையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. சகோதரனுடன் பிறக்காத பெண்கள், திருமணமான பின், தங்கள் பெற்றோரை பராமரிக்க படும் பாடு சொல்லி மாளாது. பிறந்த வீட்டுக்கு சென்றால், புகுந்த வீட்டில் பிரச்னை ஏற்படும் என்பதற்காக, பல ஆண்டுகளாக பெற்றோரை பார்க்காமல், பெண்கள் வடிக்கும் கண்ணீர், இந்த சமூகம் அறியாதது.
கணவன் வீட்டுக்கு, தான் சம்பாதித்த பணம் முழுவதையும் கொடுக்கும் பெண்கள், தங்கள் பெற்றோர் பணமின்றி கஷ்டப்படும் போது, பணம் கொடுத்து ஆதரிப்பதற்கு கூட சுதந்திரம் இல்லை. பெற்றோரை கவனிக்க பையனுக்கு இருக்கும் அதே பொறுப்பு, பெண்ணுக்கும் இருக்கிறது. அதை மறுக்கும் மனைவியை விவாகரத்து செய்ய, கணவனுக்கு உரிமை உள்ளது என்றால், தன்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்து, ஆளாக்கிய பெற்றோரை கவனிக்க அனுமதிக்காமல், தனிக்குடித்தனம் கோரும் கணவனை விவாகரத்து கோரும் உரிமை, பெண்களுக்கு இல்லையா யுவர் ஹானர்?
விஜயலட்சுமி, ஊடகவியலாளர், சென்னை

சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல், தர்மத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு; நிச்சயம் வரவேற்க வேண்டும். உலக நாடுகள், பண்பாடு, நாகரிகம் போன்றவற்றில் உயர்ந்தவர்களாக நம்மைப் பார்த்து, வியந்து கொண்டிருக்கும் காலத்தில், இப்படி ஒரு எதார்த்தம் இருப்பது, பெரும் வேதனை. சட்டம் வந்து தான், பெற்றோரை காக்க வேண்டிய மனநிலைக்கு இளைஞர்கள் வந்திருப்பது, தவறு. இனிமேலாவது, குழந்தை பருவத்தில் இருந்தே, அறங்களை சொல்லி வளர்ப்போம். தொடர்ச்சியான பழக்கம் தான், குணமாக மாறும். இப்போதில் இருந்தே
சொல்லிக் கொடுத்து வளர்த்தால் தான், அடுத்த தலைமுறையாவது மாற்றமடையும். அதை, பள்ளிப் பாடங்கள் மூலம் புகட்ட முடியாது; நம்முடைய வாழ்வில் இருந்தே, அதற்கான பாடத்தை கொடுக்க வேண்டும்.
ஆர்.காயத்ரி, துறைத் தலைவர், செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லுாரி, ஆவடி, சென்னை

நகரங்களில் மட்டுமல்ல, கிராமங்களில் கூட கணவர் பெற்றோரை பராமரிப்பதில்லை. குடும்ப அமைப்பு முறை சிதைந்ததன் நீட்சியாகவே இதை பார்க்க வேண்டும். அதுவும், இரண்டு, மூன்று சகோதரர்களுடன் பிறந்த கணவன் இருந்தால், அவருடைய பெற்றோரை, நாள் கணக்கிட்டு பராமரிக்கும் மோசமான சூழல் வளர்ந்து வருகிறது. இதற்கு அவர்களை மட்டும் குறை சொல்வதற்கில்லை; மாறி வரும் வாழ்க்கை முறையும் அதற்கு காரணம். கணவனின் பெற்றோரை கவனிக்க வேண்டும் என்று மனைவிக்கு உத்தரவிட, மாற்று ஏற்பாடுகளே இல்லையா என்று கேட்கலாம். ஆனால், அடிப்படையே தகர்ந்து போவது மாதிரியான தீர்ப்பு வழங்குவதே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வாக இருக்க முடியும். நீதிமன்றமும் அதை தான் செய்திருக்கிறது.
டி.சுபா, சமூக செயல்பாட்டாளர், சென்னை

பெண்களின் உலகத்தில் இருந்து, இந்த தீர்ப்பை பார்த்தால், இதன் வேறொரு கோணம் தெரிய வாய்ப்புண்டு. இது, ஆணாதிக்க சமூகம், தன்னுடைய அனைத்து செயல்களுக்கும் ஒத்து வராத பெண்களை, விவாகரத்து செய்ய வலுவான காரணங்களை தேடிக் கொண்டிருப்பர்.
அதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக அமைந்து விடும். பெண்கள் ஒன்றும் வில்லிகள் அல்ல. ஏதோ ஒரு சில இடங்களில், பெண்கள் அப்படி நடந்து கொள்வர் என்பதற்காக, ஒட்டுமொத்த பெண்களுக்கும் இப்படி ஒரு தீர்ப்பு வழங்கி இருக்கக் கூடாது. அப்பாக்கள் என்றாலே, பெண்களுக்கு அவ்வளவு பிடிக்கும். இதில் தோழியின் அப்பாவாக இருந்தால் என்ன, கணவனின் அப்பாவாக இருந்தால் என்ன? எனவே, அவர்களை கொடூரமானவர்களாக பார்ப்பதை நிறுத்துங்கள். அப்படி செய்வதற்கு பதிலாக, இதற்கென்று, தனி ஆலோசனை மையம்
அமைக்கலாம். இதன் மூலம், குடும்பத்தில் உள்ள மனஸ்தாபங்கள் தீருவதுடன், பொய்யான காரணங்களுக்காக விவாகரத்து கோரியிருந்தால், உண்மை வெளியே வருவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.
ஜே.எம்.சார்வி சானு, பேராசிரியை, வேலுார்

Advertisement

 வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishna Sreenivasan - singapore,சிங்கப்பூர்
24-அக்-201610:23:43 IST Report Abuse
Krishna Sreenivasan இப்படியும் இருக்காங்க பெத்தவா கட்டின மனைவி க்கும் தேவைகள் உண்டு என்றே தெரிஞ்சும் தெரியாததுபோல் நடக்கும் அப்பா அம்மாக்கள் உண்டு அமனைவி என்று வந்துட்டாள் புகுந்தவீட்டுக்கு கொத்தடிமையாயா , இப்போதுப்பரவா இல்லே பிள்ளைகள் பஞ்சம் பிழைக்க வெளிநாடு போயிடறாங்க அமணிவியுடன் ஆனால் குடபோவும் பொண்ணுகள் ஓகே போகாமல் இன்லாஸ் குடவே இருக்கும் பெண்களை கேவலமா நடத்தும் இன்லஸ் கூட இருக்காங்களே மாமனார் என்ற கிழம் இருக்கே சரியான பொல்லாது மறுமவளை அவ்ளோ கேவலமா நடத்தும் குணம் உண்டு , இந்தமாதிரி பொறுக்கிகளை அட்ஜஸ்ட் செய்யணும்னு என்ன தலைவிதி . ஆபிரிஸ் பொரபொண்ணுகளுக்கு ஆபீபீசிலேயும் தொல்லை வீட்டுக்குவந்தாலும் தொல்லை வாழாத ஒரு வாழ்க்கைக்கு விடிவே இல்லாமல் வாழும் பொண்ணுகளுக்கு இந்த நீதிபதிகளின் தீர்ப்பு தான் என்ன , புகுந்த வீட்டுவரும்போது லக்ஷம் கணவனுகளோட வரும் பொண்ணுக்கு எதுவுமே இல்லேன்னா எதுக்கு வாழனும் என்று தற்கொலைக்கே கூட போவுதுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X